Logo

GK Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

பொதுஅறிவு குறுந்தகவல்கள் வகைகள்
பொதுஅறிவு குறுந்தகவல்கள்
 • ரஸ்கின் பாண்ட் இந்தியாவில் குழந்தைகள் இலக்கியத்தில் பங்காற்றியவர்களில் மிகவும் முக்கியமானவர் எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட். பிரிட்டிஷ் நாட்டின் வழி வந்தவரான ரஸ்கின், இதுவரை ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ளார். இவரது பிறந்த நாளான இன்று இவரைப் பற்றிய சில துணுக்குகள்: 1. இந்தியாவின் வில்லியம் வேர்ட்ஸ்வர்த் என்றழைக்கப்படுவது, ரஸ்கின் பாண்ட்தான். 2. இவரது முதல் நாவலான The Room on the Roof வெளியானபோது இவரது வயது, 21. 3. Edith Clarke மற்றும் Aubrey Bond ஆகிய தம்பதியருக்குப் பிறந்த ரஸ்கின் பாண்ட், தனது நான்கு வயதில் பெற்றோரின் விவாகரத்தைக் காண்கிறார். அதன் பிறகு, இவருடைய அம்மா ஓர் இந்தியரை மணக்கிறார். 4. 1950ஆம் ஆண்டு, 16 வயதில், ரஸ்கின் பாண்ட் தன் முதல் சிறுகதையான 'Untouchable'ஐ எழுதினார். 5. சிறு வயதில் இவருக்கு ஒரு tap dancer ஆக வேண்டும் என்பது ஆசையாக இருந்திருக்கிறது. 6. சிறு வயதில் இவருக்கு மிகவும் பிடித்தமான கதைப் புத்தகம்: Ali in Wonderland: And Other Tall Tales. 7. மழை பெய்தால் இவர் மிகவும் சோம்பேறித்தனமாக உணர்வதுடன், முணுமுணுத்துக் கொண்டே இருப்பாராம். 8. இவரது "Susana's seven husbands" என்ற நாவல் அடிப்படையில் எடுக்கப்பட்ட "7 khoon maaf” என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். 9. 1992ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது; 1999ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது; 2014இல் பத்ம பூஷண் ஆகிய விருதுகளை இவருக்குக் கொடுத்து கவுரவித்திருக்கிறது இந்திய அரசு.
 • வேலு நாச்சியார்: சிவகங்கை பகுதியைச் சேர்ந்தவர் இராணி வேலுநாச்சியார். பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய நிறுவனத்திற்கு எதிராக போர் புரிந்தவர் வீர மங்கை வேலுநாச்சியார். இவர்தான் இந்தியாவின் முதல் பெண் விடுதலை போராட்ட வீரராவார்.
 • குயிலி: பெண் விடுதலை போராளியான குயிலி, ஆங்கிலேயருக்கு எதிராக போர் புரிந்த வேலுநாச்சியாரின் மெய்காப்பாளராகவும் அவரது பெண்கள் படையின் படைத்தளபதியாகவும் பணியாற்றினார். இவர்தான் உலகின் முதல் தற்கொலைப்படை போராளி.
 • ஜெயலலிதா: தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா, தனது ஆளுமை திறமையால் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார். கலைத்துறையைச் சேர்ந்த இவர், தனது நடிப்புத் திறமையாலும் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். தமிழகத்தில் 6 முறை முதல்வர் பதவி வகித்த ஒரே தலைவரும் இவர்தான்.
 • ஸ்ரீதேவி: கலைத்துறையைச் சேர்ந்த நடிகை ஸ்ரீதேவி, சிவகாசியைச் சேர்ந்தவர். முதலில் தமிழ் படங்களில் தனது பயணத்தை தொடங்கி, பின் தனது வளர்ச்சியால் பல மொழிகளில் நடித்து, இந்தியாவின் முதல் பெண் சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றார். கலைத்துறையில் அவர் செய்த சாதனைகளுக்காக அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
 • நன்னம்மாள்: கோவையைச் சேர்ந்த 98 வயது மூதாட்டி நன்னம்மாள். தள்ளாடும் வயதிலும், கை கால்களை வளைத்து யோகாசனம் செய்யும் இவருக்கு, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து பெருமைப்படுத்தி உள்ளது.
 • விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்: காமராஜ் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புற கலைகள் மற்றும் கலாச்சாரத் துறையில் பேராசிரியராக பணியாற்றியவர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன். நாட்டுப்புற கலைகளுக்கு இவர் ஆற்றிய பங்களிப்பின் காரணமாக மத்திய அரசு இவருக்கு பதமஸ்ரீ விருதளித்து கௌரவப்படுத்தியுள்ளது.
 • இந்திரா நூயி: குளிர்பானத் துறையில் உலக அளவில் சாதனைப் படைத்து வரும் பெண்மணி இந்திரா நூயி. பெப்சி நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருக்கும் இவரின் முழுப் பெயர் இந்திரா கிருஷ்ணமூர்த்தி. சென்னையில் பிறந்த இவர், சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் பயின்றவர். பல கோடி கணக்கில் வர்த்தகம் செய்யும் இவருக்கு இந்திய அரசு பத்மபூஷன் விருது அளித்து பெருமைப்படுத்தியுள்ளது.
 • நோபல் பரிசு வாங்கிய சாதனையாளர்கள் இயற்பியல் துறை 1. மேரி கியூரி - 1903 2. மரியா கோபெர்ட் மேயர் - 1963 வேதியியல் துறை 1. மேரி கியூரி - 1911 2. ஐரின் ஜோலியட் கியூரி - 1935 3. டோரோதி குரோபுட் ஹாட்கின் - 1964 மருத்துவம் 1. கெர்டி கோரி - 1947 2. ரோசலின் யாலோ - 1977 3. பர்பாரா மெக்கிலின்டாக் - 1983 4. ரிட்டா லேவி மோன்டல்சினி - 1986 5. ஜெர்ட்ருட் பி.எலியன் - 1988 6. கிரிஸ்டியன் ஸ்லெய்ன்-வோல்ஹார்டு - 1995 7. லிண்டா பெக் - 2004 இலக்கியம் 1. செல்மா லெகர்லாப் - 1909 2. கிராசியா டெலிடா - 1926 3. சிக்ரிட் வுண்ட்செட் - 1928 4. பெர்ல் பக் - 1938 5. கேப்ரியலா மிஸ்ட்ரல் - 1945 6. நெலி சாக்ஸ் - 1966 7. நடின் கோர்டிமார் - 1991 8. டோனி மாரிசன் - 1993 9. விஸ்லாவா சிம்போர்ஸ்கா - 1996 10. எல்பிரிடி ஜெலினெக் - 2004 11. டோரிஸ் லெஸ்சிங் - 2007 அமைதி 1. பெர்தா வான் சுட்னர் - 1905 2. ஜேன் ஆடம்ஸ் - 1931 3. எமிலி கிரீனி பல்ச் - 1946 4. பெட்டி வில்லியம்ஸ் - 1976 5. மெய்ரிட் கோரிகன் - 1976 6. அன்னை தெரசா - 1979 7. அல்வமிர்டல் - 1982 8. ஆங் சன் சூ கீ - 1991 9. ரிகோ பெர்டா மெஞ்சு டம் - 1992 10. ஜோடி வில்லியம்ஸ் - 1997 11. சிரின் பாடி - 2003 12. வங்காரி மாதாய் - 2004
 • இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் முதன்மை பெற்ற பெண்கள் 1. முதல் காங்கிரஸ் பெண் தலைவர் - அன்னி பெசன்ட் அம்மையார். 2. ஞானபீட பரிசினைப் பெற்ற முதல் பெண் - ஆஷா பூர்ணா தேவி. 3. யு.பி.எஸ்.சி. அமைப்பின் முதல் பெண் தலைவர் - ரோஸ் மில். 4. உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - பாத்திமா பீவி (1989). 5. முதல் ஐ.பி.எஸ். பெண் அதிகாரி - கிரண்பேடி. 6. டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண் - ரஷியா சுல்தானா. 7. இந்திய முதல் பெண் ஜனாதிபதி - பிரதீபா பட்டீல். 8. உலக அழகியான முதல் இந்திய பெண் - ரீடா பெரைரா. 9. முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி - அண்ணா ராஜன் ஜார்ஜ். 10. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இந்தியப் பெண் - மிதாலி ராஜ். 11. முதல் பெண் முதல்வர் - சுதேசா கிருபளானி. 12. முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு. 13. முதல் பெண் தூதர் - விஜயலட்சுமி பண்டிட். 14. ஐ.நா.சபையின் முதல் பெண் தலைவர் - விஜயலட்சுமி பண்டிட். 15. காங்கிரசின் முதல் இந்தியப் பெண் தலைவர் - சரோஜினி நாயுடு. 16. முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி. 17. சட்டமன்ற உறுப்பினரான முதல் பெண் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. 18. முதல் பெண் மத்திய அமைச்சர் - ராஜகுமாரி அம்ரித் கவுர். 19. விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண் - கல்பனா சாவ்லா. 20. உலகத்தை கப்பலில் சுற்றி வந்த முதல் பெண் - உஜ்ஜாலா ராய். 21. முதல் பெண் கணித மேதை - சகுந்தலா தேவி. 22. முதல் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய அழகி - சுஷ்மிதா சென். 23. முதல் பெண் வக்கீல் - கர்னிலியா சொராப்ஜி. 24. ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கிய முதல் இந்தியப் பெண் - கர்ணம் மல்லேஸ்வரி (2000-வது ஆண்டில், பளுதூக்குதல் பிரிவில் வெண்கலப் பதக்கம்) 25. ஆங்கிலக் கால்வாயைக் கடந்த முதல் பெண் - ஆர்த்தி சகா. 26. நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய பெண் - அன்னை தெரசா. 27. எவரெஸ்ட் சிகரத்தில் இரண்டு முறை கால்பதித்த முதல் இந்தியப் பெண் - சந்தோஷ் யாதவ். 28. தாதாசாகேப் பால்கே விருது பெற்ற முதல் பெண் - தேவிகா ராணி. 29. புக்கர் விருது பெற்ற முதல் இந்தியப் பெண் - அருந்ததிராய். 30. பாரத ரத்னா விருது பெற்ற ஒரே சினிமா பின்னணிப் பாடகி - லதா மங்கேஷ்கர். 31. இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற பெண் நீதிபதி - அன்னா சாண்டி. 32. பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த மந்திர் ராஜ்புட், முதல் பெண் ரயில் எஞ்சின் ஓட்டுனராக ஆஸ்திரேலியா வேல்ஸ் ரயில் கார்ப்பரேஷனில் பணிபுரிந்து சாதனை படைத்தார். 33. பத்து பல்கலைக் கழகங்களில் இருந்து டாக்டர் பட்டம் பெற்ற பெண்மணி குஜராத்தைச் சேர்ந்த இலாபட். இவர் பெற்ற மற்ற உயரிய விருதுகள் மகசாசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகள். 34. இந்தியாவின் முதல் பெண் போலீஸ் டி.ஜி.பி. உத்தராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்த காஞ்சன் சௌத்ரி.
 • மும்ப், நொய்டா, கொல்கட்டா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளில் இந்திய நாணயங்கள் தயாரிக்கப்படுகின்றன.
 • இந்தியாவில் நாசிக், தேவாஸ், மைசூரு, சல்போனி ஆகிய இடங்களில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன.
 • 1. தமிழகத்தில் யாருடைய ஆட்சிக்காலத்தில் கற்கட்டடக்கலை தொடங்கியது - பல்லவர் காலத்தில் 2. ஓலைச்சுவடிகளில் இருந்த சைவத் திருமுறைகளைத் தொகுத்த மன்னன் - ராஜராஜசோழன் 3. தேவாரத்தை தொகுத்தவர் - நம்பியாண்டார் நம்பி 4. வண்ணச் சாயம் அளிக்கும் பூச்சி - கோக்கல் பூச்சி 5. ஆமைகளை பிடிப்பதற்காக பயன்படும் மீன் - ஸக்கர் மீன் 6. பிரிட்டனின் மிகப்பெரிய கலைவிருது - டர்னர் பரிசு 7. இந்தியாவில் குங்குமப்பூ அதிகம் கிடைக்கும் இடம் - காஷ்மீர் 8. தமிழகத்தில் குடைவரைக் கோயில் அமைத்த முதல் மன்னர் - முதலாம் மகேந்திர வர்மன் 9. முதன் முதலில் மிருகக்காட்சி சாலை தொடங்கப்பட்ட இடம் - பாரிஸ் 10. கறுப்பு நிறத் தந்தங்களை உடைய யானைகளை காணப்படும் நாடு - ஆப்பிரிக்கா 11. தேனீக்களை மட்டும் தின்று உயிர்வாழும் பறவை - ராக்கட் பறவை 12. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் - முண்டந்துறை 13. ஓர் மரத்தை தன் பற்களால் முறிக்க வல்ல விலங்கு - பீவர் 14. பெரும்பாலான பருப்பு வகை தாவரங்கள் உள்ள குடும்பம் - பேபேஸி 15. எளிய வகை நிலவாழ் தாவர வகை - பிரையோபைட்டுகள் 16. அகார் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது - ஜெலிடியம் 17. மின்னல் என்பது மின்சாரக் சக்திதான் என்பதை விஞ்ஞானப் பூர்வமாக நிரூபித்தவர் - பெஞ்சமின் பிராங்க்ளின் 18. நீர்மூழ்கிக் கப்பலை கண்டுபிடித்தவர் - டேவிட் புஷ்னல் 19. போலிக்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்யும் உயிரி - அமீபா 20. பொருட்களை திரவ வடிவில் உட்கொள்ளப்படுவது என்பது - எண்டோசைட்டோசிஸ் 21. மண்ணின் அமில காரத்தன்மையை கண்டறிய பயன்படும் தாவரம் - ஹைட்ராங்கியா மேக்ரோபைலா 22. உயிரியல் துப்புரவாளர் என்பது - பாக்டீரியா 23. நரம்பு செல்லின் வடிவம் - முட்டை 24. ஒரு செல் பூஞ்சைக்கு எடுத்துக்காட்டு - ஈஸ்ட் 25. எது கணையத்தில் பீட்டா செல்களால் சுரக்கப்படுகிறது - இன்சுலின் 26. புரோகேரியோட்டிக் செல்களில் காணப்படும் ரிபோசோம் வகை - 70 S 27. உயிருள்ள மற்றும் உயிரற்ற பண்புகளைப் பெற்றுள்ள நுண்ணுயிரி - வைரஸ் 28. வைரஸை சூழ்ந்துள்ள புரத உறை - காப்ஸீட் 29. தலைப்பேனை நீக்க பயன்படும் மருந்து - அசாடிராக்டின் 30. இரத்த தட்டை அணுக்கள் எதற்கு உதவுகிறது - இரத்தம் உறைதல் 31. தாவரங்களில் சைலத்தின் பணி - நீரைக் கடத்துதல் 32. முட்டைக்கோசின் அறிவியல் பெயர் - பிராசிக்கா ஓலரேசியா 33. மிக உயரமான மர வகைகள் காணப்படும் தாவரப் பிரிவு - டைகாட்டுகள் 34. அதிக வண்டல் மண் டெல்டா பகுதியில் படிகிறது. 35. சமையல் வாயுவில் அடங்கியது - பூடேன் 36. பாதரசத்தின் தாதுப்பொருள் - சின்னபார் 37. டர்பன்டை மரத்திலிருந்து கிடைப்பது - பைன் 38. ஈர்ப்பு சக்தி தூரிதப்படுத்துவது பூஜ்ஜியம் எதில் - பூமியின் மையத்தில் 39. மோனசைட் கிடைக்கும் மாநிலம் - கேரளா 40. ஹைட்ரா என்பது - கொய்லெண்டிரேட் 41. வண்ணத்துப்பூச்சி உதவுவது - மகரந்த சேர்க்கை உண்டு பண்ணுவதற்கு 42. உணவை பாதுகாக்கப் பயன்படுத்தும் பொருள் - சோடியம் பென்சோட் 43. செயற்கை மழையை உண்டுபண்ண உபயோகிக்கும் ரசாயனப் பொருள் - சில்வர் அயோடைடு 44. ஒலி அலைகள் காற்றில் - நீளமாக செல்கிறது. 45. மின்மாற்றியை அதிகரிக்கும்போது அதிகரிப்பது - மின் ஒட்டமும், மின் இயக்கும் விசையின் அளவும் 46. சூடாக்கப்பட்ட இரும்பின் மேல் நீராவியை பாய்ச்சும்போது - ஹைட்ராக்சைட் உருவாகிறது. 47. ஹைட்ரஜன் சல்பைட் வாயுவை எதன்மேல் செலுத்தி உலரவைக்கலாம் - வீரியமிக்க சல்பியூரிக் அமிலம் 48. உடலிருந்து வெப்ப நாட்டத்தை உண்டாக்கும் முக்கிய உறுப்பு - தோல் 49. திராட்சையிலிருக்கும் சர்க்கரை - குளுக்கோஸ் 50. கதிர்வீச்சுகளில் மிக்க குறைந்த ஆபத்து உடையது - குறுகிய ரேடியோ அலைகள்
 • 1. முதல் விடுதலைப் போர் நடந்த ஆண்டு - 1857 2. "Runs Ruins" ஐ எழுதியவர் - கவாஸ்கர் 3. இல்பர்ட் மசோதாவை கொண்டு வந்தவர் - ரிப்பன் பிரபு 4. முகலாய ஆட்சியின் அரசவை மொழி - பாரசீகம் 5. தேசியக்கொடியின் நீளம், அகலம் - 3:2 6. புறா சின்னம் குறிப்பது - அமைதி 7. சந்திரனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தொலைவு - 3.25,000 மைல் 8. வெள்ளை அல்லி எந்த நாட்டின் சின்னம் - கனடா 9. நீலபுத்தகம் எந்த நாட்டின் அரசாங்க புத்தகம் - இங்கிலாந்து 10. நாட்டின் கல் மைல் என்னும் சொல் எந்த வாகனத்தில் பயன்படுத்தப்படுகிறது - கப்பல்களில் 11. அன்னை தெரசாவுக்கு எதற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது - சமாதானம் 12. எந்த படைப்புக்கு இரவீந்திரநாத் தாகூர் நோபல் பரிசு பெற்றார் - கீதாஞ்சலி 13. உலக தொழிலாளர் ஸ்தாபனத்தின் (ILO) தலைமையகம் உள்ள இடம் - ஜெனிவா 14. உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தலைமைச் செயலகம் உள்ள இடம் - ரோம் 15. இந்தியாவில் மிக நீளமான அணை - ஹிராகுட் 16. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்பது - கோயமுத்தூர் 17. தேசிய கீதத்தில் சீர்கள் உள்ளன - நான்கு சீர்கள் 18. குறிஞ்சி எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் - 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை 19. விடிவெள்ளி என அழைக்கப்படும் கிரகம் - வெள்ளி 20. முதன்முதலில் அணுகுண்டு வீசப்பட்ட இடம் - ஹிரோஷிமா 21. உலகின் சர்க்கரை கிண்ணம் என அழைக்கப்படும் நாடு - கியூபா 22. சூரியக் கிரஹணம் தோன்றும் நாள் - அமாவாசை 23. "UNICEF" அமைந்துள்ள இடம் - நியூயார்க் 24. கொதிக்கும் நீரை ஒரு கண்ணாடி டம்பளரில் ஊற்றும்போது அது உடையக் காரணம் - கொதிக்கும் நீரானது அதிக அழுத்தத்தை வெளிப்படுத்துகிறது. 25. தத்துவ ஞானி சாக்ரடீஸ் எந்த நாட்டைச் சார்ந்தவர் - கிரேக்க நாடு 26. சஹாரா பாலைவனம் உள்ள கண்டம் - ஆப்பிரிக்கா 27. பத்து ரூபாய் நோட்டில் காணப்படும் கையெழுத்து - ரிசர்வ் வங்கி ஆளுநர் 28. 38-வது அட்சரேகை - கட்டா 29. ஹிஸ்டோஜன் கொள்கையை முன்மொழிந்தவர் - ஹைன்ஸ்டின் 30. குளிர்சாதனப் பெட்டியில் குளிர்ச்சியூட்ட உபயோகப்படுத்தும் திரவம் - பிரியான் 31. பாராசூட் துணி எதில் தயாரிக்கப்படுகிறது - நைலான் 32. ரப்பர் ஒட்டும்போது ரப்பரை பலப்படுத்த உபயோகப்படுத்தும் பொருள் - சல்பர் 33. குணத்தை தரக்கூடிய மரபுவழி முறையின் அடிப்படை என்று அறியப்படுவது - ஜீன் 34. ஹாலிஸ் வால் நட்சத்திரம் மறுபடியும் தென்படும் வருடம் - 2062 35. ராகேஷ்சர்மா என்ற முதல் விண்வெளி வீரர் பயணம் செய்த விண்வெளி ஓடம் - சோயஸ்-2 36. தாவர பாகங்களுக்கு இயந்திரம் போன்ற உதவியைக்கொடுக்கும் திசு - சொலான்சிமா 37. நமது உணவில் சிறிதளவு அயோடின் தேவைப்படுவது - தைராய்டு சுரப்பியின் செயலற்ற தன்மையை ஈடுசெய்ய 38. கல்லீரலில் சேகரிக்கப்படும் வைட்டமின் - கே 39. சாதாரண உண்ணியால் பரவும் நோய் - மஞ்சள் ஜூரம் 40. மனிதர்களுக்கு எந்த உறுப்பு சரிவர வேலை செய்யாவிடில் டையாலிஸிஸ் செய்யப்படுகிறது - சிறுநீரகம் 41. மிருகங்களின் முதுகில் உள்ள கோடுகள் எதனைச் சுட்டிக் காட்டுகிறது - தோலின் நிறம் சுற்றுப்புறத்தை ஒத்ததாக இருப்பதை 42. நாடித்துடிப்பை அறிவதனால் மருத்துவருக்கு தெரிவது - இருதயத்துடிப்பு 43. டார்ச்சு மின்கலத்தில் ஒரு ஜதை டர்மினல்களில் அடங்கியது - பித்தளை-கார்பன் 44. விளையாட்டு வீரருக்கு உடனடியாக சக்தியை அளிக்க உதவுவது - கார்போஹைட்ரேட் 45. எருதுகளும், கரடிகளும் என்ற தொடர் சம்மந்தப்பட்டது - பங்கு சந்தை 46. மனித உடலில் ரத்தத்தில் குளுக்கோசின் அளவை ஒரே சீராக இருக்கச் செய்வது - இன்சுலின் 47. இந்தியாவின் மிகப்பெரிய உப்பு ஏரி - சாம்பார் ஏரி 48. தொழிற்சாலைகளின் அன்னை என்று எந்த உலோகமல்லாத கனிமம் அழைக்கப்படுகிறது - நிலக்கரி 49. இந்திய விண்வெளி (ISRO) ஆராய்ச்சி நிலையம் - பெங்களூர் 50. வேகமாக வளரும் மரம் - யூகலிப்டஸ் மரம்
 • 1. கார்டியோகிராப் எதைக் கண்டுபிடிக்க உதவுகிறது - இருதய செயல்பாட்டை 2. நீர்மூழ்கி கப்பல் இயங்க காரணமான விதி - கார்டியன் டைவர் விதி 3. ஒளி மிகுந்த கிரகம் - வீனஸ் 4. தாவரங்களின் வளர்ச்சியை அளவிட உதவும் கருவி - கிரிஸ்கோகிராப் 5. கலோரி என்பது எதன் அலகு - வெப்பம் 6. டர்பன்டைன் எந்த மரத்திலிருந்து பெறப்படுகிறது - பைன் 7. நிலநடுக்கத்தைப் பற்றி படிப்பது - சீஸ்மோலஜி 8. அராக்கிஸ் ஹைபோஜியா எனும் வேர்க்கடலை தாவரம் அமைந்துள்ள தாவரக் குடும்பம் - பேபிலியோனேசி 9. புறை நோய் பாதிப்பது - கண் 10. டெல்டா எண்டோடாக்சின் எனும் நச்சு புரதத்தை உற்பத்தி செய்யும் உயிரி - பாசில்லஸ்தூரின் ஜெனிசிஸ் 11. ஊசியின் மூலமாக நோயை குணப்படுத்தும் சிகிச்சை முறை - அக்குபஞ்சர் 12. வண்டுகளையும் கம்பளிப் புழுக்களையும் எதனை பயன்படுத்தி அழிக்க முடியும் - பூஞ்சை 13. செரிகல்சர் என்பது - பட்டுபூச்சி வளர்ப்பது 14. இரட்டை மினிட் குரோமோசோம்கள் எங்கு காணப்படுகின்றன - புற்று செல்கள் 15. வைட்டமின் 'D' குறைவினால் ஏற்படும் நோய் - ரிக்கட்ஸ் 16. உயிர் வாழும் செல்களுக்கு சக்தியான இடம் - மைட்டோகானடிரியா 17. சாதாரண உப்பின் வேதியியல் பெயர் - சோடியம் குளோரைடு 18. அயோடின் மருந்து கிடைக்கும் தாவரம் - லாமினேரியா 19. ரஷ்ய விண்வெளி வீரர்களை எவ்வாறு அழைப்பர் - காஸ்மோநட்கள் 20. "SCP" என்று அழைக்கப்படும் உயிரினம் - குளோரெல்லா 21. பறவைகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் மலர் எந்த தாவரத்தில் காணப்படுகிறது - ஸ்ட்ரெலிட்ஜியா ரெஜினா 22. DDT கண்டறிந்தவர் - பால் முல்லர் 23. பக்க வேர்களைத் தோற்றுவிப்பது எது - பெரிசைக்கிள் 24. டெலிகிராபிக் குறியீடுகளை அறிமுகப்படுத்தியவர் - தாமஸ் மார்ஸ் 25. டிரான்ஸ்க்ரிப்சன் நிகழ்வைத் தூண்டும் சிக்மா காரணி எங்கு அமைந்துள்ளது - RNA பாலிமெரேஸ் 26. டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்தவர் - ஷாக்லி 27. டெர்மினலைசேஷன் எந்த நிலையில் நடைபெறும் - டயாகைனசிஸ் 28. தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் - பெயர்டு 29. எண்ணெயிலிருந்து தாவர நெய் தயாரிக்க உதவும் வாயு - ஹைட்ரஜன் 30. ரேடார் எதைக் கண்டுபிடிக்க உதவுகிறது - பறக்கும் பொருளை 31. குளோரோபில் எது நிகழ்வதற்கு உதவியாக உள்ளது - தாவரங்கள் ஒளிச்சேர்க்கை 32. ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்தவர் - பிரேகுலட் 33. புகையிலைத் தாவர வளர்ச்சிக்கு தேவையான உரம் - பொட்டாசியம் 34. ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிரிவிளைவு உண்டு இது நியூட்டனின் எந்த விதி - மூன்றாம் விதி 35. பாக்டீரியாவில் சுவாசித்தல் நடைபெறும் பாகம் - மீஸோஸோம் 36. பெளர்ணமி எப்போது ஏற்படுகிறது - நிலவு சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலிருக்கும்போது 37. அமீபா சுழிச்சலை உண்டாக்குவது - என்டமீபா 38. PV=RT என்பது - பாயில் விதி 39. நாடாப்புழுவின் தலைப்பகுதியின் பெயர் - ஸ்கோலக்ஸ் 40. மைக்காலஜி என்பது - காளான் தொடர்புடையது 41. புளித்தல் என்பது எதனால் ஏற்படுகிறது - ஈஸ்ட் 42. அமோனியா எதனுடைய ஹைட்ரஜன் கலவை - நைட்ரஜன் 43. உலகிலேயே மிக வேகமாக வளரும் தாவரம் - மூங்கில் 44. இன்சுலின் சுரப்பது - கணையம் 45. உப்பின் அளவு மிக அதிகமா இருக்கும் - சாக்கடல் 46. இயற்கை வாயுவில் முக்கியமாக உள்ளவை - மீத்தேன் 47. வெண்கடல் அமைந்துள்ள இடம் - வடரஷ்யா 48. மின்சார பல்பின் இழை எதில் செய்யப்படுகிறது - டங்ஸ்டன் 49. இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது - டார்ஜிலிங் 50. வெள்ளியின் தாது - ஆர்ஜென்டிரெட்
 • வாழை மரத்தின் குடும்பத்தைச் சேர்ந்த அபாகா எனும் தாவரத்திலிருந்து எடுக்கப்படும் இழைகள், ஜப்பானிய கரன்சி நோட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.
 • தற்போது நாம் பயன்படுத்தி வரும் லிஃப்ட்டை முதன்முதலில் கண்டுபிடித்தவர் (Elisha Otis) எலிசா ஓடிஸ். 1852ம் ஆண்டு இதனைக் கண்டுபிடித்து, 1854ம் ஆண்டில் அமெரிக்காவில் நடந்த உலக வர்த்தகக் கண்காட்சியில் வெற்றிகரமாக இயக்கிக் காட்டினார். ஓடிஸின் முதல் லிஃப்ட், நியூயார்க் காப்பர் யூனியன் பவுண்டேஷன் கட்டிடத்தில் அமைக்கப்பட்டது!
 • 92 மீட்டர் நீளத்தில் பிரிட்டன் உருவாகிக்யுள்ள ‘ஏர்லேண்டர் 10’ எனும் விமானம், வழக்கமான விமானம், ஹெலிகாப்டர், ஏர்ஷிப் எனும் மூன்று வான்வழி வாகனங்களின் கலப்பு உருவாக்கமாகும். சூப்பர் ஜம்போ விமானத்தை விட அதிகளவு எடையாக 20,000 கிலோ வரை கொண்டு செல்லும் ஆற்றல் கொண்டது
 • ஏப்ரலின் முக்கிய தினங்கள் 1 முட்டாள்கள் தினம். 2 சர்வதேச குழந்தைகள் புத்தக தினம். 2 ஆட்டிஸம் குறைபாடு விழிப்புணர்வு தினம். 5 இந்தியக் கடல் போக்குவரத்து தினம். 7 உலகப் பொது சுகாதார நாள். 10 உலக ஹோமியோபதி தினம். 18 பாரம்பரிய தினம். 22 பூமி தினம். 23 உலக புத்தக தினம். 25 மலேரியா நோய் விழிப்புணர்வு தினம். 29 உலக நடன தினம்.
 • அலிபாபா குழும நிறுவனத்தை நிறுவியவரும் நிர்வாகத் தலைவருமான ஜேக் மா 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 நிலவரப்படி 34.5 பில்லியன் டாலர்கள் சொத்துக்களோடு ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரராகத் திகழ்கிறார்.
 • உலகெங்கிலும் உயிரியல் பூங்காக்களில் உள்ள அனைத்து பாண்டா கரடிகளும் சீனாவுக்கு சொந்தமானவையே. அமெரிக்காவிலுள்ள நான்கு பூங்காக்களில் உள்ள தலா ஒரு ஜோடி பாண்டாக்களுக்காக ஆண்டுதோறும் அமெரிக்கா சீன அரசுக்கு தலா 1 மில்லியன் டாலரை குத்தகையாக அளிக்க வேண்டும்.
 • 2015 மார்ச் 9 நிலவரப்படி அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், தான் விளையாடத் தொடங்கிய 1995ம் ஆண்டிலிருந்து 66,211,528 டாலர்கள் சொத்துக்களோடு முதலிடத்தில் இருந்தார். இது ரஷ்யாவின் டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவின் சொத்து மதிப்பை விட (34,094,202) இரு மடங்கு அதிகமாகும். டென்னிஸ் விளையாட்டு வீரர்களிலேயே 89,280,550 டாலர்கள் சொத்துடைய சுவிட்சர்லாந்து நாட்டின் ரோஜர் ஃபெடரர் 17 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் போட்டிகளில் மகுடங்களைச் சூடி அதிக சொத்துள்ளவராகத் திகழ்கிறார்.
 • 2013 ஆகஸ்ட் 15ல் இலங்கையில் கொழும்பு நகரில் இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் டெஸ்ட் போட்டி நடந்தது. இதில் இலங்கை வீரர் ரங்கண ஹெரத் 31.1 ஓவர்களில் 127 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ‘இடது கை பந்து வீச்சாளர்களிலேயே டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்’ என்ற சாதனையைப் படைத்தார்.
 • மொராக்கோவில் கி.பி. 859ல் தொடங்கப்பட்ட Karueein பல்கலைக்கழகமே, உலகில் இன்னமும் தொடர்ந்து இயங்கி வரும் பழமையான உயர்கல்வி நிறுவனம்.
 • மிகப்பெரிய பவழப்பாறைத் திட்டான ‘கிரேட் பேரியர் ரீஃப்’ பகுதியில் மட்டுமே, உலகிலுள்ள மீன் இனங்களில் 10 சதவீதத்தைக் காண முடியும்.
 • சர்வதேச தொழிலாளர் கழகம் 11/04/1919 இல் அமைக்கப்பட்டது.
 • ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை 11/04/1905 இல் வெளியிட்டார்
 • இந்தியாவில் 1999ல் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் டாக்டர் கே.எம்.செரியன் முதல் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். சரியான அளவு மாற்று நுரையீரல் கிடைப்பது அரிதாக இருப்பதாலும், இதில் இணைந்துள்ள பிரச்சனைகள் காரணமாகவும் இந்தியாவில் நுரையீரல் மாற்று சிகிச்சைகள் பெரிய அளவில் நடைபெறுவதில்லை. இந்தியாவில் முதல் மஜ்ஜை (Bone Marrow) மாற்று அறுவை சிகிச்சை 1983ம் ஆண்டு மார்ச் 20ல் மும்பையிலுள்ள டாடா நினைவு மருத்துவமனையில் நடைபெற்றது.
 • உலகில் முதல் கண்விழிப்படல மாற்று சிகிச்சையை 1906ம் ஆண்டு ஆஸ்திரியா நாட்டில் டாக்டர் எட்வர்ட் கொனரெட் மேற்கொண்டார். இந்தியாவில் 1948ல் டாக்டர் ஆர்.இ.எஸ். முத்தையா என்பவர் முதல் கண் விழிப்படல மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். இந்தியாவில் முதல் கண் வங்கியை நிறுவியவர் இவர்தான். இப்போது இந்தியாவில் ஏறத்தாழ ஆண்டுதோறும் 25,000 கண் விழிப்படல மாற்று அறுவைச் சிகிச்சைகள் நடைபெறுகின்றன. உலகில் முதல் நுரையீரல் மாற்றுச் சிகிச்சையை, மிசிசிபி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜேம்ஸ் ஹார்டியும் அவரது குழுவினரும் 1963ல் அமெரிக்காவில் மேற்கொண்டனர்.
 • உலகின் முதல் சிறுநீரக மாற்று சிகிச்சையை டாக்டர் ஜோசப் மர்ரே 1954ல் அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள பீட்டர்பென்ட் பிரிகாம் மருத்துவமனையில் மேற்கொண்டார். இதற்காக இவருக்கு 1990ல் நோபல் பரிசு கிடைத்தது. இந்தியாவில் 1971ல் வேலூரிலுள்ள கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி (சி.எம்.சி.) மருத்துவமனையில் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இன்று இந்தியாவில் ஆண்டுதோறும் 5000 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.
 • உலகின் முதல் கல்லீரல் மாற்று சிகிச்சையை டாக்டர் தாமஸ் எர்ல் ஸ்டார்ஜலும் அவரது குழுவினரும் 1963ம் ஆண்டு அமெரிக்காவில் செய்தனர். டாக்டர் தாமஸ் எர்ல் ஸ்டார்ஜல், ‘நவீன உறுப்பு மாற்று சிகிச்சைகளின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். இந்தியாவில் 1998ம் ஆண்டில் டெல்லி அப்போலோ இந்திர பிரஸ்தா மருத்துவமனையில் இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்களின் குழு, 18 மாத சக்தி சஞ்சய் கந்தசாமி என்ற குழந்தைக்கு முதல் கல்லீரல் மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்தது. இன்று இந்தியாவில் ஆண்டுதோறும் 1000 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.
 • உலகின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை, டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்டு மற்றும் அவரது குழுவினரால் 1967ம் ஆண்டு டிசம்பரில் தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரில் செய்யப்பட்டது. இந்தியாவில் 1994, ஆகஸ்ட் 3ம் நாள் புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் (AIIMS-All India Institute of Medical Sciences) இதயவியல் அறுவை சிகிச்சை துறையில் வெற்றிகரமான முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. டாக்டர் பி.வேணுகோபால், கார்டியோமயோபதியால் (இதயத் தசைகளில் ஏற்படும் நோய்) பல ஆண்டுகளாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 47 வயது நோயாளிக்கு இந்த இதய மாற்று சிகிச்சை செய்தார். மூளையின் ரத்தப் போக்கினால் அந்த மருத்துவமனையிலேயே மரணமடைந்த 35 வயது பெண்ணிடமிருந்து மாற்று இதயம் பெறப்பட்டது. இந்த ஆண்டு இந்தியாவில் 75 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன.
 • முதலாவது உலக கண்காட்சி பாரிஸ் நகரில் 8/4/1867 இல் ஆர்மபமானது
 • ராஜஸ்தான் மாநிலத்தில் 'ஏரிகளின் நகரம்' என சிறப்பிக்கப்படும் உதய்பூர் மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி'பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பாலைவனமான ராஜஸ்தானில் மழைநீரை சேகரிக்கும் நகராக உதய்பூர்உள்ளது.
 • சர்வதேச சுகாதார தினம் - ஏப்ரல் 7 - உலக சுகாதார நிறுவனம் ஐ.நா.வால் 1948 ல் தொடங்கப்பட்டது.
 • மத்தியப் பிரதேசத்தின் சம்பல் நதியில் கட்டப்பட்ட அணை காந்தி சாகர். ராஜஸ்தானின் சம்பல் நதியில் கட்டப்பட்ட அணை ஜவஹர் சாகர்.
 • உலக மிதிவண்டி நகரம் என்று அழைக்கப்படும் நகரம் பெய்ஜிங் (சீனா). இந்தியாவின் மிதிவண்டி நகரம் லூதியானா (பஞ்சாப்).
 • ‘இந்திய நியூட்டன்’ என சிறப்பிக்கப்படுபவர், ஆர்யபட்டா. ‘இந்திய ஐன்ஸ்டீன்’ என சிறப்பிக்கப்படுபவர், நாகார்ஜுனா. ‘இந்திய மாக்கியவல்லி’ என்று அழைக்கப்பட்டவர் சாணக்கியர்.
 • பதவியிலிருக்கும்போது மரணமடைந்த முதல் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு. பதவியிலிருக்கும்போது மரணமடைந்த முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகீர் உசேன்.
 • ஐ.நா. பொதுச்செயலாளர் பதவியில் இருக்கும்போது அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் கோஃபி அன்னான். மரணத்துக்குப்பின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஐ.நா. பொதுச் செயலர் டாக்டர் ஹாமர்ஷோல்ட்.