Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள்
 • எம்சிசி சுப்ரமணியம் நினைவு டென்னிஸ்

  சென்னையில் நடந்த எம்சிசி சுப்ரமணியம் நினைவு டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் விஜய் சுந்தர் பிரசாத்-ஹசன் வரிசைன் ஜோடி 6-3, 6-3 என்ற நேர்செட்டில் ஜடின் தஹியா-தட்சிணேஷ்வரி சுரேஷ் ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது.
 • Reviews


 • விண்கலம்

  சந்திரனில் ஆய்வு நடத்துவதற்காக முதல் முறையாக இஸ்ரேல் தனது விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் அமெரிக்காவின் கானவெரலில் இருந்து ஸ்பேஸ் எக்ஸின் பால்கன் -9 ராக்கெட் மூலமாக நேற்று முன் தினம் இரவு விண்ணில் ஏவப்பட்டது.
 • Reviews


 • தகவல் தொழில்நுட்பம் மாநாடு

  தகவல் தொழில்நுட்பம் குறித்த 22வது உலக மாநாடு பிப்.19 அன்று ஐதராபாத்தில் தொடங்கியது. மைசூரிலிருந்து காணொலிக்காட்சி | மூலம் பிரதமர் மோடி இம்மாநாட்டை தொடங்கிவைத்து உரையாற்றினார். " உலக தகவல் தொழில்நுட்பச் சேவைகள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள இம்மாநாட்டை தேசிய மென்பொருள் சேவைகள் நிறுவனங்களின் கூட்டமைப்பும் தெலுங்கானா மாநில அரசும் இணைந்து நடத்துகின்றன.
 • Reviews


 • எதிர்கால தொழில்நுட்பம்

  செயற்கை நுண்ணறிவு, இணைய உலகம் மற்றும் எதிர்கால தொழினுட்பமான 5ஜி சேவைகளை மேம்படுத்த சோதனை மேற்கொளல் உள்ளிட்ட எதிர்கால தொழினுட்பங்களில் ஒத்துழைப்பு நல்கும் ஒப்பந்தமொன்றில், அரசுக்கு சொந்தமான BSNL தொலைத்தொடர்பு நிறுவனமும், ஜப்பானின் NTTAT அதன் இந்திய பங்குதாரரான விர்கோ கார்ப்ஸ் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன. அடுத்த தலைமுறை தொழினுட்பங்களுக்கு ஒத்துழைப்பு நல்குவது மற்றும் மென்பொருளில் இந்தியாவின் நிபுணத்துவமும், உற்பத்தியில் ஜப்பானிய நிபுணத்துவமும் ஒருங்கிணைவது எனும் இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபேவின் நோக்கத்தின் வரிசையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 • Reviews


 • வங்கி

  இந்தியாவில் வங்கி மோசடிகள் அதிகரித்து வருவதற்கான காரணங்களை கண்டறிய, இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் (Institute of Chartered Accountants of India) முன்னாள் தலைவர் Y.H. மலேகம் தலைமையில் மத்திய ரிசர்வ் வங்கி குழுவொன்றை அமைத்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 11,400 கோடி ரூபாய் மோசடியை தொடர்ந்து இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. நிலுவை கடன்கள் பல்வேறு துறைகளுக்கு பரவுவது ஏன் என்றும் நிலுவை கடன்களை சமன்செய்ய வங்கிகள் கூடுதல் தொகை ஒதுக்குவது குறித்தும் மலேகம் தலைமையிலான குழு பரிசீலிக்கும் என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பரத் தோஷி, S. ராமன், நந்தகுமார் சாராவதி ஆகியோர் இக்குழுவின் பிற உறுப்பினர்களாவர். ரிசர்வ் வங்கியின் தலைமைப் பொது மேலாளர் A.K. மிஸ்ரா, இக்குழுவின் உறுப்பினர் - செயலாளராவார்.
 • Reviews


 • சர்வதேச தாய்மொழி தினம்

  உலகம் முழுவதும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
 • Reviews


 • சித்திரை திருநாள் விருதுகள்

  தமிழ்த்தாய் விருது புவனேசுவரம் தமிழ்ச் சங்கத்துக்கும், கபிலர் விருது புலவர்மி.காசுமானுக்கும், உ.வே.சா. விருது நடன காசிநாதனுக்கும், கம்பர் விருது க. முருகேசனுக்கும், சொல்லின் செல்வன் விருது ஆவடி குமாருக்கும், ஜி.யு.போப் விருது கு.கோ. சந்திரசேகரன் நாயருக்கும், உமறுப்புலவர் விருது பேராசிரியர் சா.நசீமாபானுவுக்கும், இளங்கோவடிகள் விருது சிலம்பொலி விருது சு.செல்லப்பனுக்கும், அம்மா இலக்கிய விருது உலகநாயகி பழனிக்கும், சிங்காரவேலர் விருது பா.வீரமணிக்கும் மற்றும் 2017 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது வை. மதன் கார்க்கிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் வழங்கினார்.
 • Reviews


 • ஓமா புயல்

  பசிபிக் தீவுகளை ஓமாபுயல் மணிக்கு 185 கி.மீ. வேகத்தில் சூறாவளியாக மாறி தாக்குதலை தொடங்கிவிட்டது. தற்போது, ஆஸ்திரேலிய கடலோரப்பகுதிக்கு அப்பால் உள்ள இந்த சூறாவளிப்புயல் புது கலிடோனியா பகுதியை, அதிவேகமாக தாக்கியதில் அங்கு முழுமையானமின்தடை ஏற்பட்டது. ஏராளமான பயிர்களும், விளைநிலங்களும் நாசமானது. ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஏராளமான கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன.
 • Reviews


 • 12-ஆவது பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண் காட்சி

  பெங்களூரு எலஹங்காவில் உள்ள விமானப் படை நிலையத்தில் புதன்கிழமை 12-ஆவது பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண் காட்சியைத் தொடக்கிவைத்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது: பெங்களூரில் 12-ஆவது முறையாக பன்னாட்டு விமானத் தொழில் கண்காட்சி நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.இக்கண்காட்சியில் 20 இந்திய நிறுவனங்கள், 200 வெளிநாட்டு நிறுவனங்கள் கலந்து கொண் டுள்ளன. ஆசியாவின் மிகப்பெரிய விமானத் தொழில் கண்காட்சியாக விளங்குவது இந்தியா வுக்குப் பெருமையளிக்கிறது. விமானப் படை, ராணுவ உற்பத்தித்துறை மட்டுமல்லாது, பயணி கள் விமானத் துறையும் இந்த கண்காட்சியில் பங் காற்றியுள்ளன.இந்த கண்காட்சியின் வாயிலாக உலக அரங் கில் விமானத் தொழிலில் இந்தியாவை நிலைநி றுத்தும் முயற்சி நடைபெறுகிறது. நூறுகோடி வாய்ப்புகளின் ஓடுகளம் என்ற நோக்கத்தில் நடத்தப்படும் இக் கண்காட்சியில், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்துக்கு முக்கியத்து வம் அளிக்கப்படுகிறது.
 • Reviews


 • மண்வாசனை திட்டம்

  தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்கான 'மண்வாசனை' என்ற தமிழ்நாடு அறக்கட்டளையின் சிறப்புத் திட்டத்தை தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் தொடங்கிவைத்தார்.
 • Reviews


 • சவுதி அரேபியா மற்றும் இந்தியாவிற்கு இடையேயான ஒப்பந்தம்

  சவுதி அரேபியா பட்டத்து இளவரசரின் இந்திய வருகையின்போது கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள். 1.இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். 2 . இந்தியாவின் சுற்றுலா அமைச்சகம் மற்றும் சவுதி அரேபியாவின் சுற்றுலா மற்றும் தேசிய பாரம்பரிய சவுதி ஆணையத்தின் இடையே சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். 3 .இந்தியா மற்றும் சவுதி அரேபியா அரசின் இடையே வீட்டுவசதித் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 4 .இருநாடுகளுக்கு இடையேயான முதலீட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்திய அரசின் முதலீடு செய் இந்தியா திட்டம் மற்றும் சவுதி அரேபியாவின் முதலீட்டு ஆணையம் செயல்திட்டம் 5 .ஒலிபரப்புத் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில், இந்தியாவின் பிரசார் பாரதி மற்றும் சவுதியின் ஒலிபரப்புக்கழகம், ஒலி-ஒளி நிகழ்ச்சிகளை பரிமாறிக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
 • Reviews


 • இந்திய மருத்துவக் கவுன்சில் (திருத்த) இரண்டாம் அவசரச் சட்டம்

  பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கீழ்க்காணும் ஆலோசனைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது: “இந்திய மருத்துவக் கவுன்சில் (திருத்த) இரண்டாம் அவசரச் சட்டம், 2019” எனும் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தல் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்தை மாற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள இந்திய மருத்துவக் கவுன்சில் (திருத்த) மசோதா 2018-ல் தேவைப்படும் அதிகாரபூர்வமான திருத்தங்களைக் கொண்டு வருதல். பயன்கள்: நாட்டின் மருத்துவக் கல்வியை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புத்தன்மையையும், தரத்தையும் உறுதி செய்வதற்காக, இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம், 1956-ன் 10-ஏ பிரிவின் கீழ், மத்திய அரசின் அதிகாரங்களைக் கொண்டு, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரச் சட்டத்தில் இடம் பெற்றிருக்கும் அம்சங்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு ஈடாக நியமிக்கப்பட்டிருக்கும் கவர்னர்கள் குழு செயல்பட இந்த ஆலோசனை வழி வகுக்கிறது.
 • Reviews


 • உரிமக் கொள்கை சீர்த்திருத்தங்கள்

  உள்நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு கண்டுபிடித்தல், உற்பத்தியை அதிகரிக்க கண்டுபிடிப்பு மற்றும் உரிமக் கொள்கையில் சீர்த்திருத்தங்கள் செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
 • Reviews


 • மேக் இன் இந்தியா

  அமெரிக்காவில் போர் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனமான லாக் ஹீட் மார்டின் நிறுவனம் இந்தியாவுக்கென பிரத்யேகமாக எப் 21 விமானங்களை 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் தயாரித்து அளிக்க முடிவு செய்துள்ளது.
 • Reviews


 • சர்வதேச திரைப்பட விழா

  அறுபது நாடுகளின் 225 திரைப்படங்கள் இடம்பெறும் பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. . 11-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா இன்று (வியாழக்கிழமை) மாலை தொடங்கி 28-ம் தேதி வரை பெங்களூருவில் உள்ள ஓரியன் மாலில் நடைபெறுகிறது. மொத்தம் 8 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளைச் சேர்ந்த படங்கள் மட்டுமல்லாமல், 60 நாடுகளின் 225 திரைப்படங்களும் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளன.
 • Reviews


 • பல்கேரிய சர்வதேச குத்துச்சண்டை

  பல்கேரிய சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிகாத் ஸரீன், மீனாகுமாரி ஆகியோர் தங்கம் வென்றனர்.இக்குத்துச்சண்டைபோட்டி யின் ஒரு பகுதியாக செவ்வாய்க் கிழமை நடைபெற்ற ஆட்டங்க னில் மகளில் 51 கிலோ பிரிவில் நிகாத் ஸரீன் 5-0 என்ற புள்ளி கணக்கில் பிலிப்பைன்ஸின் ஓரிஷ் மேக்னோவை வீழ்த்தி தங்கம் வென்றார்.மகளிர் 54 கிலோ பான்டம் வெயிட் பிரிவில் மீனாகுமாரி 32 என்ற புள்ளிக்கணக்கில் பிலிப்பைன்ஸின் அட்ரா வில் வேகாஸைவீழ்த்தி தங்கம் வென் றார்.48 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி வெள்ளி வென்றார்.
 • Reviews


 • லாரஸ் விருதுகள்

  விளையாட்டுத் துறையில் சிறப்பான சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் லாரஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் விளையாட்டுத் துறையின் ஆஸ்கர் விருதுகள் என்ற பெயர் பெற்றவை.
 • Reviews


 • விளையாட்டு துறையின் ஆஸ்கார் வெற்றியாளர்கள்

  விளையாட்டுத் துறையில் சிறப்பான சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் லாரஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் விளையாட்டுத் துறையின் ஆஸ்கர் விருதுகள் என்ற பெயர் பெற்றவை.உலகின் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனை விருது டென்னிஸ் வீரர் ஜோகோவிச், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சைமன்பைல்ஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
 • Reviews


 • விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு

  தமிழகத்தில் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு , அரசு வேலை வாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை அபான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
 • Reviews


 • உணவு பாதுகாப்பு

  கே.எஃப்.சி. உணவகங்க ளில் இருந்த குடிநீரில் கிளப்சிவியா எனும் மோசமான கிருமி இருப்பதும், சோடா இயந்திரத்தில் இ கோலி கிருமி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தலைநகர் உடான் படாரில் உள்ள கே . ஃப்.சி. கிளையில் பணிபுரிந்த 4பேருக்கு, சிஜில்லா எனும் நோய்த் தொற்று இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மங்கோலியா அரசுக்கு அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். இதைத் தொடர்ந்து, மங்கோலியாவில் செயல்பட்ட அனைத்து கே.ஃப்.சி. உணவகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன.
 • Reviews


 • 112

  அனைத்து அவசர சேவைகளுக் கும் '112 என்ற ஒரே உதவி எண்ணை அழைக்கும் திட்டம் தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.காவல்துறையை தொலைபேசியில் அழைக்க எண் 100, தீ விபத் துக்கு 101, ஆம்புலன்சுக்கு 108, பெண்கள் பாதுகாப்புக்கு 1090 என்று பல சேவைகளுக்கு பல் வேறு உதவி எண்கள் உள்ளன. இதற்கு பதிலாக அனைத்து அவசர சேவைகளுக்கும் ஒரே உதவி எண்ணாக '112' என்ற எண்ணை அழைக்கும் திட்டம் ஏற்கெனவே இமாச்சலப் பிரதேசம், நாகாலாந்தில் செயல்பாட்டில் உள் ளது. இந்நிலையில், இத்திட்டம் தமிழகம், ஆந்திரா, உத்தரா கண்ட், பஞ்சாப், கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், தெலங்கானா, குஜராத், ஜம்மு காஷ்மீர் ஆகிய 11 மாநிலங் களிலும் புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் டையூ ஆகிய 5 யூனியன் பிரதேசங்களிலும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். ஸ்மார்ட் போன்களில் பவர் பட் டனை மூன்று முறை அழுத்தி னாலோ அல்லது சாதாரண போன் களில் 5 அல்லது 9 என்ற எண்ணை நீண்ட நேரத்துக்கு அழுத்தினாலோ அவசரகாலஅழைப்பு மையத்துக்கு தகவல் சென்றுவிடும். அங்கு உள்ள பயிற்சி பெற்ற ஊழியர்கள் தேவைப்படும் அவசர உதவிகளை கிடைக்க வழிவகை செய்வார்கள். அடுத்த ஆண்டுக்குள் '112 என்ற எண்ணை அழைக்கும் சேவை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தபடும்.
 • Reviews


 • அரசு ஊழியர்கள்

  மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை நேற்று (19 .02 .2019 ) வழங்கியது.
 • Reviews


 • கடலோர காவல் படை

  கடலோர காவல் படை மையத்தின் தென்பகுதி தலைமையகமாக தூத் துக்குடி கடலோர காவல் படை தரம் உயர்த்தப்பட் டுள்ளது. தூத்துக்குடியில் 22ம் தேதி நடைபெறும் விழாவில் கவர்னர் பன்வா ரிலால் புரோகித் இதனை முறைப்படி துவக்கி வைக் கிறார்.கடல்பகுதி பாதுகாப்பின் முக்கியத்துவம் கருதி இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு மண்டலத்தின் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி கடலோர காவல் படை, தனி தலைமையகமாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக கிழக்கு கடற்க ரையில் சுமார் 150 கி.மீ. தொலைவு அதிகரிக்கப் பட்டு தூத்துக்குடி கட லோர காவல் படையின் பாதுகாப்புக்குட்பட்ட கடற்கரை பகுதி 285 கி.மீ. ஆக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • ரோபோ

  இந்தியாவிலேயே முதல் முறையாக திருவனந்தபுரத்திலுள்ள(கேரளா) போலீஸ் டி.ஜி. பி. அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு உதவுவ தற்காக ரோபோ அமைக் கப்பட்டுள்ளது.
 • Reviews


 • முத்தலாக் அவசர சட்டம்

  முஸ்லிம் பெண்களின் திருமணப் பாதுகாப்புக்கான முத்தலாக் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர் களிடம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறும்போது, “முத்தலாக் அவ சரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது" என்றார்
 • Reviews


 • சர்வதேச தாய் மொழி தினம்

  முதன் முதலாக மொழிப் போர் இன்றைய வங்கதேசமான கிழக்கு பாகிஸ்தானிலிருந்துதான் தொடங்கியது. தமது தேசத்தின் மொழியாக வங்காளம் வளர வேண்டும் என்பதை முன்னிறுத்தி டாக்கா பலகலைக் கழக மாணவர்கள் கலகத்தில் ஈடுபட்டு அதிரடிக் காவலர்களின் அடக்கு முறைக்கு ஆளாகி நான்கு மாணவர்கள் உயிரிழந்தார்கள். இது நடந்தது 1952 பிப்ரவரி 21. பாரம்பரியங்களின் பாதுகாப்பு மையமான யுனெஸ்கோ பிப்ரவரி 21 ஐ சர்வதேச தாய்மொழி தினமாக 1999 இல் அறிவிக்க அது கடந்த 2000 முதல் சர்வதேசமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
 • Reviews


 • பெண் பாதுகாப்பு

  அனுமதி இன்றி செயல்படும் பெண்கள் தங்கும் விடுதிகளை பற்றி பொதுமக்கள் 181 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று சமூக நலத்துறை தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
 • Reviews


 • ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர்

  ரயில்வே வாரியத்தலைவராக இருந்த அஸ்வானி லோஹானி ஓய்வுபெற்றதையடுத்து, அந்தப் பதவியில் தெற்கு மத்திய ரயில்வேயின் பொது மேலாளரான வினோத் குமார் யாதவ், ரயில்வே அமைச்சகத்தின் கீழ் ரயில்வே வாரியத்தின் தலைவராகவும், இந்திய அரசாங்கத்தின் அலுவல் சார் தலைமைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தெற்கு மத்திய ரயில்வேயின் பொது மேலாளராக பதவிவகித்தபோது அதனை ஒரு லாபகரமான மண்டலமாக யாதவ் மாற்றினார். 2017-18 நிதியாண்டில் இம்மண்டலம் மிகச்சிறந்த நிதிச்செயல் திறனை பதிவுசெய்து, ரூ.13673 கோடி வருவாயை ஈட்டியது. 2017-18இல் அனைத்து மண்டலங்க -ளுக்கிடையில் மிக அதிக செயல்திறன் திறன் புரிந்தமைக்காக பண்டிட் கோவிந்த் வல்லப் பாண்ட் கேடயங்களை (ஆறு) அது வென்றது.1982ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்திய இரயில்வேயில் உதவிப் பொறியாளராக வினோத் பணியில் சேர்ந்தார். அவர் இந்திய ரயில்வேயில் பல முக்கியமான நிர்வாக மற்றும் மேலாண்மை பதவிகளில் இருந்துள்ளார்.
 • Reviews


 • உலக வானொலி தினம்

  இன்றைக்கு எஃப்.எம். ரேடியோக்களில் படபடவென மின்னல் வேகத்தில், மூச்சுவிடாமல் பேசுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் முன்னோடி கே.எஸ்.ராஜா. இலங்கை வானொலியின் சூப்பர்ஸ்டார் அறிவிப்பாளர் இவர்தான். 13.2.19 உலக வானொலி தினமாக கொண்டாடப்படுகிறது.
 • Reviews


 • வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

  நாட்டின் மிக அதிவேக ரயிலான இதனை டெல்லி – மும்பை ராஜ்தானி வழித்தடத்தில் அதிகாரிகள் சோதித்துப் பார்த்தனர். இந்த ரயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அண்மையில் பெயர் சூட்டினார்.இந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் வரும் 15-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கிவைத்து உரையாற்ற உள்ளார். 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயில் டெல்லி – வாரணாசி இடையே இயங்கவுள்ளது. தற்போது இந்த வழித்தடத்தில் இயங்கி வரும் சதாப்தி எக்ஸ்பிரஸ் விலக்கிக் கொள்ளப்பட உள்ளது
 • Reviews


 • PMRU

  கேரளா, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களின் விலைகளை கண்காணிக்கும் “விலை மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி பிரிவை” உருவாக்கியுள்ள முதல் மாநிலமாகும். PMRU – Price Monitoring and Research Unit.
 • Reviews


 • SOLAR

  தற்போது சோலார் மின்னுற்பத்தியில் சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா, அடுத்த ஆண்டிலும் தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் என்று சர்வதேச ஆய்வு நிறுவனமான உட் மெக்கென்ஸி தெரிவித்துள்ளது.
 • Reviews


 • NASA

  சமீபத்தில் நாசா என்ற பாடலை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த பாப் பாடகிக்கு நீல் ஆம்ஸ்ட்ராங்குடன் நிலவுக்குச் சென்ற புஸ் ஆல்ட்ரின் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ள சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதை என்னால் நம்ப முடியவில்லை என்று பாடகி தெரிவித்துள்ளார்.நாசா விஞ்ஞானிகளின் இத்தகைய பாராட்டு கிடைத்தது குறித்து தன்னால் நம்ப முடியவில்லை என்று அரியனா கிராண்டின் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இவ்வுரையாடல்களை ட்வீட்டர் வாயிலாக இணைய உலகமே கவனித்து வந்தது.
 • Reviews


 • ரஞ்சி கோப்பை

  ரஞ்சி கோப்பை தொடரில் விதர்பா அணி சாம்பியன் பட்டம் வென்றது. ரஞ்சி கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் சவுராஸ்டிரா - விதர்பா அணிகள் நாக்பூரில் விளையாடி வந்தன. இதன் முதல் இன்னிங்ஸில் விதர்பா 312 ரன்களும், சவுராஸ்டிரா 307 ரன்களும் சேர்த்தன. 5 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய விதர்பா 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஆதித்யா சர்வாதே 49, மோகித் கலே 38 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து 206 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சவுராஷ்டிரா அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 28 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்தது.ஹர்விக் தேசாய் 8, ஸ்நெல் படேல் 12, சேதேஷ்வர் புஜாரா 0,அர்பித் வசவதா 5, ஷெல்டன் ஜேக்சன் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். விஷ்வராஜ் ஜடேஜா 23,மக்வானா 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கைவசம் 5 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு மேற்கொண்டு 148 ரன்கள் தேவை என்ற நிலையில் நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய சவுராஷ்டிரா அணி 58.4 ஓவர்களில் 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.விஷ்வராஜ் ஜடேஜா 52, மக்வானா 14, மங்கட் 2, தர்மேந்திரசின் ஜடேஜா 17, ஜெயதேவ் உனத்கட் 7 ரன்களில் வெளியேறினர். சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா சர்வாதே 6 விக்கெட்களை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸிலும் அவர், 5 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். 78 ரன்கள் வித்தியாசத்தில்வெற்றிபெற்ற விதர்பா அணிசாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.
 • Reviews


 • பயிர் காப்பீடு

  பிரதான் மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2016 – 17 ஆண்டில் அதிக காப்பீட்டுத் தொகை பெற்றதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பிரதான் மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ஏப்ரல் 2016ல் தொடங்கப்பட்டது இத்திட்டத்தின் கீழ் காரிப் பயிர்களுக்கு – 2 சதவிகிதமும், ராபி பயிர்களுக்கு 1.5 சதவிகிதமும் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படுகிறது.
 • Reviews


 • கி.வீரமணி விருது

  அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் பெரியார் பன்னாட்டு மையம், ஒவ்வோர் ஆண்டும் சமூகநீதிக்காகப் பாடுபட்ட சான்றோர், போராளிகள், தலைவர்களுக்கு சமூகநீதிக்கான கி.வீரமணி விருதினை வழங்கி வருகிறது. 1996ஆம் ஆண்டு விருது வழங்குவது தொடங்கப்பட்டு, இதுவரை 2018ஆம் ஆண்டுக்கான விருது வரை மொத்தம் 10 பெருமக்களுக்கு சமூகநீதி விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் அரசமைப்புச் சட்டமன்றத்தில் (Constitution Club) உள்ள துணை சபாநாயகர் அரங்கில் 2018ஆம் ஆண்டுக்கான சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் விழா நடைபெற்றது. 2018ஆம் ஆண்டுக்கான விருது மத்திய அரசின் செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றி சமூகநீதி வழங்குவதற்கு அளப்பரிய பங்களித்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 • Reviews


 • வீர சாவர்க்கர் பன்னாட்டு விமான நிலையம்

  போர்ட் பிளேயரில் உள்ள வீர சாவர்க்கர் பன்னாட்டு விமான நிலையமானது செல்லுபடியாகும் பயண ஆவணங்களுடன் இந்தியாவிற்குள் நுழைவதற்கு | வெளியேறுவதற்கான அங்கீகாரம் பெற்ற குடிவரவு சோதனைச் சாவடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடவுச்சீட்டின் விதி 3இன் உப விதி (b) (இந்தியாவிற்குள் நுழைய) (1950) விதிகளின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஒரு யூனியன் பிரதேசமாகும். இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. அண்மையில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள மூன்று தீவுகளுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ராஸ் தீவு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு எனவும், நீல் தீவு ஷாஹீத் தீவு எனவும், ஹேவ்லாக் தீவு ஸ்வராஜ் தீவு எனவும் மறுபெயரிடப்பட்டது.
 • Reviews


 • இந்திய விளையாட்டு ஆணையத்தின் புதிய தலைமை இயக்குநர்

  இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) இயக்குநராக மூத்த இந்திய தகவல் பணி அதிகாரி நீலம் கபூர் ஜன.31 அன்று நியமிக்கப்பட்டார். 1982-ம் ஆண்டு IIS பிரிவு அதிகாரியான நீலம் கபூர், முன்னதாக கள விளம்பரங்களுக்கான இயக்குநரகத்தின் முதன்மை இயக்குநராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது நியமனத்துக்கு, மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 2019 ஜூலை 31 வரையில் அவர் அந்தப்பொறுப்பில் நீடிக்கவுள்ளார். இந்திய தகவல் பணி அதிகாரி ஒருவர் SAI இயக்குநராக நியமிக்கப்படுவது இது முதல் முறையாகும். முன்னதாக நீலம் கபூர் 2009ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியிலிருந்து போது செய்தித்தொடர்பு அமைப்பின் முதன்மை இயக்குநராக இருந்தது நினைவுகூரத்தக்கது.
 • Reviews


 • உலக தொழுநோய் தினத்தின் கருப்பொருள்

  பன்னாட்டளவில் தொழுநோயைப்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக தொழுநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மைக்கோ பாக்டீரியம் லெப்ரே எனும் பாக்டீரியாவினால் இந்நோய் உண்டாகின்றது. இவை மனித உடலில் மிகவும் மெதுவாக பெருகவல்ல தொற்றுநோயாகும். நிகழாண்டுக்கான உலக தொழுநோய் தினத்தின் கருப்பொருள் "குறைபாடுகளற்ற சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள்” என்பதாகும். குழந்தைகளில் தொழுநோயோடு தொடர்புடைய குறைபாடுகள் ஏற்படுவதை முற்றிலும் தடுப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது இந்தக் கருப்பொருள். இது மனித இனத்திற்கு தெரிந்த பழமையான நோய்களில் ஒன்றாகும்.
 • Reviews


 • 7வது இந்திய எரிசக்தி மாநாடு

  “எரிசக்தி 4.0: 2030-ம் ஆண்டை நோக்கிய எரிசக்தி மாற்று” எனும் கருப்பொருளுடன் பிப்.1 அன்று புது டெல்லியில், 7வது இந்திய எரிசக்தி மாநாடு தொடங்கியது. இந்த மாநாடு உலக எரிசக்தி கழகம், இந்தியாவால் ஏற்பாடு செய்யப்பட்டு, மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையமைச்சர் ராஜ்குமார் சிங்கால் தொடங்கிவைக்கப்பட்டது. • “எரிசக்தி 4.0” எனும் கருப்பொருளின்படி, உலகளவில் எரிசக்தி மீதான பெரும் மாற்றத்தின் பின்னணியில் அதிக முக்கியத்துவத்துடன் இந்த 7வது எரிசக்தி மாநாடு உள்ளதாக கருதப்படுகிறது. தேசிய மற்றும் பன்னாட்டளவில் கொள்கை வகுப்பாளர்களுக்கு இந்த மாநாடு ஒரு தனித்துவமான தளமாக விளங்குகிறது.
 • Reviews