Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள்
 • தேசிய மின்சக்தி நிறுவனம்

  தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனம் (NPTI), ISO 9001 மற்றும் ISO 14001 தரச்சான்று பெற்ற ஒரு தேசிய கல்வி நிறுவனமாகும். ஃபரிதாபத்தை தலைமையாகக்கொண்டு இயங்கிவரும் நடப்பு நிகழ்வுகள் இவ்வமைப்பு எரிசக்தித்துறையில் போதுமான மனித வள மேம்பாட்டை உருவாக்குவதை தலையாயக் கடமையாகக்கொண்டுள்ளது. இந்த அமைப்புக்கு தமிழ்நாட்டில் நெய்வேலியில் கிளை உள்ளது குறிப்பிடத்தக்கது.
 • Reviews


 • ஜனநாயகத்தில் சிறந்து விளங்கும் நாடுகள்

  பிரிட்டனைச்சேர்ந்த 'எக்கனாமிஸ்ட் இன்டெலிஜென்ட் யூனிட்' அமைப்பு, பன்னாட்டளவில் ஜனநாயகத்தில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இவ்வாண்டு இப்பட்டியிலில் நார்வே முதலிடத்தைப்பிடித்துள்ளது. ஐஸ்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் முறையே 2வது மற்றும் 3வது இடத்தைப் பெற்றுள்ளன.
 • Reviews


 • மிஹிர்

  இந்தியாவின் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்தும் விதமாக, 'மிஹிர்' எனும் 2.8 பெடா பிளாப்ஸ் உயர் செயல்திறன் கொண்ட கணினி அமைப்பை நொய்டாவில் மத்திய புவி அறிவியல் துறையமைச்சர் Dr. ஹர்ஷ் வர்தன் அறிமுகம் செய்துவைத்தார். " இப்புதிய ‘மிஹிர்' கணினி அமைப்பானது, நாடு முழுவதிலும் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்தும், தீவிர வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கும் மற்றும் பருவகால மாற்றங்களை நிகழ்நேர தகவல்களாக தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பன்னாட்டளவில் செயல்படும் உயர் செயல்திறன் கணிணிகளின் பட்டியலில் முதல் 500 இடங்களில் 368வது இடத்திலுள்ள இந்திய உயர் செயல்திறன் கணிணிகள், இவற்றின் வருகையால் முதல் 30 இடத்துக்கு முன்னேறும்.
 • Reviews


 • ஆசியன் கால்பந்து கோப்பை

  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆசியன் கோப்பை கால்பந்து (ஏஎஃப்சி) தொடர் நடந்தது. இதில் இந்த ஆண்டு16 அணிகளில் இருந்து 24 அணியாக அதிகரிக்கப்பட்டது. நாக் அவுட் போட்டிகளின் முடிவில், அரையிறுதிக்கு, ஈரான், ஜப்பான், கத்தார், யு.ஏ.இ., அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் ஜப்பான், கத்தார் அணிகள் ஃபைனலுக்கு முன்னேறியது. இந்நிலையில் அபுதாபியில் நடந்த ஃபைனலில், கத்தார் அணி, ஜப்பான் அணியை எதிர் கொண்டது. இதில் துவக்கம் முதல் அசத்திய கத்தார் அணிக்கு அலி (12வது நிமிடம்), ஹதீம் (27), அபிப் (83)ஆகியோர் கோல் அடித்தனர்.இதற்கு ஜப்பான் அணிக்கு மினாமினோ ஒரு கோல் மட்டும் அடித்தார். இறுதியில் கத்தார் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
 • Reviews


 • Data Privacy Day

  தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்புக்கான சிறந்த நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காகவும், அதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் ஜன.28 அன்று தரவு தனியுரிமை நாள் (Data Privacy Day) கடைப்பிடிக்கப்படுகிறது. இது மக்கள் தங்களின் தனியுரிமையை பாதுகாப்பதற்கு அதிகாரமளிக்கும் விதமாக உள்ளது.
 • Reviews


 • Zero Budget Natural Farming

  இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இமாச்சலப்பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் விலையில்லா இயற்கை வேளாண்மை திட்டத்தினை (Zero Budget Natural Farming) அறிமுகம் செய்துவைத்துள்ளார். விலையில்லா இயற்கை வேளாண் முறையில் பயிர்களை விதைப்பது முதல் அறுவடை செய்வது வரை செலவுகளற்றதாக இருக்கும். இத்திட்டமானது 2022-க்குள் விவசாய உற்பத்திகளை பெருக்கவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் நோக்கம் கொண்டுள்ளது. விலையில்லா இயற்கை வேளாண்மை என்பது எந்தவொரு செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் அல்லது வேறெந்த அந்நிய மூலக்கூறுகளும் சேர்க்கப்படாமல் பயிர்களை அதன் இயற்கையான முறையில் வளர்ப்பதாகும்.
 • Reviews


 • உலக மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்புகள்

  டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) 'உலக மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்புகள்' எனும் நூல் இன்று வெளியிடப்பட்டது. இந்நூல் ஜேஎன்யுவில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகும்.
 • Reviews


 • ICC

  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) சார்பில், 2018ம் ஆண்டிற்கான சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் கிரிக்கெட் வீராங்கனை “ஸ்மிரிதி மந்தனா” தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவர், ICC ன் சிறந்த வீராங்கனை விருது பெரும் 2வது இந்திய வீராங்கனை ஆவார்2007ல் ஜீலன் சோஸ்வாமி இவ்விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 • Reviews


 • ஜீவன் சம்பர்க் திட்டம்

  மாநிலத்திலுள்ள குறிப்பாக பாதிக்கப்பட்ட பழங்குடியினக் குழுக்களிடையே மாநில அரசின் மேம்பாடு மற்றும் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், சமீபத்தில் 'ஜீவன் சம்பர்க்' எனும் திட்டத்தை UNICEF இந்தியாவுடன் இணைந்து தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.70ஆவது குடியரசு தினத்தன்று ஆண்டுதோறும் நடக்கும் பழங்குடியின திருவிழாவான "ஆதிவாசி மேளா” நிகழ்வின்போது அவர் இதனை அறிவித்தார். திறன் மேம்பாடு, சமூகங்கள் மேம்பாடு, குழுக்களிடையே கண்டுபிடிப்பு மற்றும் ஒத்துழைப்பை அளித்தல் ஆகியவற்றில் இந்தத் திட்டம் தனது கவனத்தை செலுத்தும். நாட்டிலுள்ள மொத்த 75 பழங்குடியின சமூகங்களில், ஒடிசா மாநிலத்தின் 12 மாவட்டங்களின் தொலைதூரப் பகுதிகளில் மட்டும் 13 பாதிக்கப்பட்ட பழங்குடி இனக்குழுக்கள் வசித்துவருகின்றன.
 • Reviews


 • சர்வதேச பெரும் இன அழிப்பு நாள்

  2ஆம் உலகப்போரின்போது நிகழ்ந்த இனப்படுகொலையின் துயரத்தை நினைவுகூரும் பொருட்டு ஒவ்வோர் ஆண்டும் ஜன.27 அன்று சர்வதேச பெரும் இன அழிப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. நாசி ஆட்சியின்போது நடந்த இந்த இனப்படுகொலையில் சுமார் ஆறு மில்லியன் யூதர்கள் / ஏனையவர்கள் கொல்லப்பட்டனர்.
 • Reviews


 • எஃகு உற்பத்தி

  உலக எஃகு சங்கத்தின் அண்மைய அறிக்கையின்படி, உலக எஃகு உற்பத்தியில் 51% பங்குடன், சீனா முதலிடத்தில் உள்ளது. கச்சா எஃகு உற்பத்தியில் இந்தியா ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடம் பிடித்துள்ளது.
 • Reviews


 • புலிகள் பாதுகாப்பு மாநாடு

  புலிகள் பாதுகாப்பு மீதான 3ஆவது சர்வதேச இருப்புக் கணக்கெடுப்பு மாநாடு ஜன.28 அன்று புது தில்லியில் நடந்தது. இந்த இரண்டு நாள் மாநாட்டை, சர்வதேச, அரசுகளுக்கிடையேயான அமைப்பான உலகளாவிய புலிகள் மன்றத்துடன் (GTA) இணைந்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) நடத்தியது.இதில் வனவுயிரி கடத்தல் தடுப்பு தொடர்பான விவாதங்கள் தவிர உலகளாவிய புலிகள் மீட்புத் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து 13 நாடுகள் விவாதித்தன. 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு, இது இந்தியாவில் நடைபெறும் 2ஆவது இருப்புக் கணக்கெடுப்பு மாநாடாகும்.இம்மாநாட்டில், உலகளாவிய மற்றும் தேசிய புலிகள் மீட்புத்திட்டங்களில் உத்திசார் திருத்தங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
 • Reviews


 • உலகின் மிக நீளமான விரைவுச்சாலை

  கும்பமேளா வரலாற்றிலேயே முதல்முறையாக உத்தரப்பிரதேச மாநில அரசின் அமைச்சரவை கூட்டம் ஜன.29 அன்று பிரயாக்ராஜில் நடைபெற்றது. மாநிலத்தின் தலைநகரத்திற்கு வெளியே நடைபெறும் 2ஆவது அமைச்சரவை கூட்டமும் இதுவாகும். மேற்கு மாவட்டங்களில் இருந்து பிரயாக்ராஜுக்கு சிறந்த சாலை இணைப்பு வசதியை வழங்குவதற்காக, ரூ. 36,000 கோடி ரூபாய் செலவில், மீரட் முதல் பிரயாக்ராஜ் வரை 600 கி.மீ., நீளத்திற்கு 'கங்கை விரைவுச்சாலை' நிர்மாணிக்க மாநில அமைச்சரவை அப்போது முடிவுசெய்தது.இது உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை என கருதப்படுகிறது. 6556 ஹெக்டேர் நிலப்பரப்பில் இது அமையவுள்ளது. 'கங்கை விரைவுச்சாலை திட்டம்' மீரட் நகரில் தொடங்கி அம்ரோஹா, புலந்த்சாஹர், பதெளன், ஷாஜகான்பூர், பரூகாபாத், ஹர்தோய், கன்னோஜ், உன்னாவ், ரேபரேலி, பிரதாப்கர் வழியாக பிரயாக்ராஜை சென்றடையும்.
 • Reviews


 • லோக்பால் தேடுதல் குழுவின் தலைவர்

  லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான எட்டு உறுப்பினர் அடங்கிய லோக்பால் தேடுதல் குழுவின் முதல் கூட்டம் ஜனவரி 29 அன்று நடைபெற்றது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான இக்குழு, லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான இயங்கு முறைமைகள் பற்றி விவாதித்தது. தேடுதல் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், லோக்பாலின் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோரை பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு நியமிக்கும். முன்னதாக, லோக்பால் அமைப்புக்கான பரிந்துரைகளை பிப்ரவரி மாத இறுதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று தேடுதல் குழுவினருக்கு உச்சநீதிமன்றம் கெடுவிதித்திருந்தது. உயர்பதவிகளில் இருப்போருக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக லோக்பால் அமைக்கப்படுகிறது. அதுதொடர்பான சட்டம் கடந்த 2013ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
 • Reviews


 • சர்வதேச கிரிக்கெட்டில் அரைசதத்தை எடுத்த இளம் வீரர்

  ஆடவர் சர்வதேச கிரிக்கெட்டில் அரைசதம் எடுத்த இளம் வீரர் என்ற வரலாற்றை நேபாளத்தின் கிரிக்கெட் வீரர் ரோகித் பவுடல் உருவாக்கியுள்ளார். இதன் மூலம், சச்சின் டெண்டுல்கர் (டெஸ்ட் போட்டி) மற்றும் சாகித் அப்ரிடி (ஒருநாள் சர்வதேச போட்டி) ஆகியோரின் சாதனையை அவர் முறியடித்தார். துபாயில் நடந்த ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான சர்வதேச போட்டியில், 16 ஆண்டுகள் 146 நாள் வயதில் அரைசதம் அடித்து அவர் இந்தச் சாதனையை படைத்துள்ளார்.இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தனது 16 ஆண்டுகள் 213 நாள் வயதில் 59 ரன்கள் அடித்தார். அதற்கடுத்ததாக பாகிஸ்தானின் சாகித் அப்ரிடி, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டியில், தனது 16 ஆண்டுகள் 217 நாள் வயதில் சதம் அடித்தார். இதுவே சாதனையாக இருந்தது.
 • Reviews


 • நியூயார்க் டைம்ஸ் பயணம்

  அண்மையில் நடந்து முடிந்த நியூயார்க் டைம்ஸ் பயண நிகழ்வில் (NYTTS - 2019), 'நிகழ்வில் சிறந்ததற்கான - Best in Show' சிறப்பு விருதை இந்தியா வென்றது. வட அமெரிக்காவின் மிகப் பெரிய பயண நிகழ்வான இது, ஜன.25 - 27 வரை அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஜேக்கப் K ஜாவிட்ஸ் மையத்தில் நடந்தது. சுற்றுலா அமைச்சகமானது (இந்தியா), NYTTS 2019இல் “வழங்குநராக பங்கேற்றது. மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் செயலாளர் யோகேந்திர திரிபாதி தலைமையிலான உயர்மட்ட குழு மற்றும் இந்திய சுற்றுலாத்துறையைச் சேர்ந்த பல்வேறு பங்குதாரர்கள் இதில் பங்கேற்றனர்
 • Reviews


 • ரஞ்சி கோப்பை

  பீகாரைச்சேர்ந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அசுதோஷ் அமன், 2018 - 19 ரஞ்சிக்கோப்பை போட்டியில் 68 விக்கெட்டுகளை வீழ்த்தி 44 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். அவர் 1974 - 75 ரஞ்சிக்கோப்பை போட்டியில் முன்னாள் இந்திய அணித்தலைவர் பிஷன் சிங் பேடி எடுத்த 64 விக்கெட் சாதனையை முறியடித்துள்ளார். ரஞ்சிக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை அமன் தற்சமயம் தன்னகத்தே கொண்டுள்ளார். தற்போது அவர் இந்திய விமானப்படையில் பணிபுரிந்து வருகிறார்.
 • Reviews


 • ICSI

  'Translating Excellence in Corporate Governance into Reality்காக தொழிலதிபரும், கோத்ரேஜ் குழுமத்தின் தலைவருமான ஆதி கோத்ரேஜ் அவர்களுக்கு ICSI வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. பொன்விழா கொண்டாடும் இந்திய நிறுவன செயலாளர்கள் நிறுவனம் (ICSI) மூலமாக இவ்விருது வழங்கப்படுகிறது.பெருநிறுவன நிர்வாகத்தில் சிறப்பு வாய்ந்தமைக்கான 18ஆவது ICSI தேசிய விருது சிப்லா நிறுவனமும், டாபர் இந்தியா நிறுவனமும் ACC லிமிடெட், ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், டாடா மெட்டாலிக்ஸ் & இந்தியன் உணவகங்கள் நிறுவனம் ஆகியவையுடன் இணைந்து பெற்றுக்கொண்டன.3ஆவது CSR சிறப்பு விருதுகள் GMR ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்திற்கும், டாடா பவர் லிமிடெட் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு முறையே வளர்ந்துவரும், நடுத்தர மற்றும் பெரிய நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது.
 • Reviews


 • இந்திய வண்ணப்பூச்சுகள் மாநாடு

  ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் 29ஆவது இந்திய வண்ணப்பூச்சுகள் மாநாடு ஜன.11 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் தொடங்கியது. இதனை நாட்டின் வண்ணப்பூச்சுகள் தொழிற்துறையின் உச்ச அமைப்பான இந்திய வண்ணப்பூச்சுகள் சங்கம் நடத்தியுள்ளது.ரூ.500 பில்லியன் (50,000 கோடி) மதிப்புடைய இந்திய வண்ணப்பூச்சுகள் மற்றும் பூச்சுகள் தொழிற்துறையின் மிகப்பெரிய வணிகக் கண்காட்சியாக இது உள்ளது. 3 நாள் நடைபெறும் இம் மாநாட்டில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி வண்ணப்பூச்சு தொழிற்துறை நிபுணர்கள் பங்கேற்கும் அறிவுப் பகிர்வு அமர்வுகள் நடைபெறும்.
 • Reviews


 • வெனிசுலா அதிபர்

  சர்வதேச அளவில் அவரது மறுதேர்தல் சட்டவிரோதமானது என்று விமர்சிக்கப்பட்ட போதிலும், ஜன.10 அன்று வெனிசுலாவின் அதிபராக 2ஆவது முறையாக நிகோலஸ் மதுரோ பதவியேற்றார்.
 • Reviews


 • AEMF தலைவர்

  ஊடக அமைப்புகள், விளம்பரதாரர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான செயற்குழு மற்றும் ஊடக ஆலோசனை அமைப்பான ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணியின் தலைவராக THG வெளியீட்டு நிறுவனத்தின் தலைவர் நரசிம்மன் ராம் நியமிக்கப்பட்டுள்ளார். ஊடக சுதந்திரம் மற்றும் பத்திரிகையாளரின் பாதுகாப்பிற்காக இந்தக் கூட்டணி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.இந்திய அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சுரிமையை பாதுகாக்கும் சூழ் நிலைகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக்காட்டும் சாசனத்தை இது ஏற்றுக்கொண்டுள்ளது.
 • Reviews


 • கிரிக்கெட் மைதானத்தின் (SCG's) வாழ்நாள் கெளரவ உறுப்பினத்துவம்

  இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி, தலைமைப்பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோருக்கு சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் (SCG's) வாழ்நாள் கெளரவ உறுப்பினத்துவம் வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் மற்றும் மைதானத்தின் வரலாற்றில் இருவரது பங்களிப்பையும் பாராட்டும் வகையில் SCG நிர்வாகம் இந்தக் கௌரவத்தை வழங்கியுள்ளது.சமீபத்தில், நடந்து முடிந்த 4 போட்டிகள் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி 71 ஆண்டுகால தாகத்தை தீர்த்தது. ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர், மேற்கிந்தியத் தீவுகளின் பிரைன் லாரா ஆகியோர் மட்டுமே இந்தக் கெளரவத்தை பெற்றுள்ளனர்.
 • Reviews


 • 25ஆவது கூட்டாண்மை உச்சிமாநாடு

  ஜன.12 அன்று மும்பையில் நடந்த 25ஆவது கூட்டாண்மை உச்சிமாநாட்டை துணைக் குடியரசுத் தலைவர் M. வெங்கைய நாயுடு தொடங்கிவைத்தார். “புதிய இந்தியா” மற்றும் “உலகளாவிய பொருளாதாரத்தின் புதிய முகவரி" ஆகியவற்றில் இந்தியாவின் தற்போதைய நிலை குறித்து இந்த உச்சிமாநாடு வெளிப்படுத்தும்.2 நாள் நடைபெறும் இந்த உச்சிமாநாடு செயற்கை நுண்ணறிவு, பெருந்தரவு, உணவு பதனிடுதல், பாதுகாப்பு, வானூர்தியியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் புதிய கூட்டாண்மைகளை கட்டமைக்கும் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய அளவிலும், உலகளவிலும் தீவிர ஈடுபாடு & ஒத்துழைப்பின் மூலம் இது புதிய இந்தியாவை காணும். இந்த உச்சிமாநாடு, இந்தியாவின் வளர்ச்சி போக்குகள் மற்றும் பொருளாதார கொள்கை மீதான இந்திய & உலகதலைவர்களின் உரையாடல், விவாதம் மற்றும் ஈடுபாடு ஆகியவற்றுக்கான உலகளாவிய தளமாகும்.
 • Reviews


 • அமெரிக்காவுக்கான இந்திய தூதர்

  அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக பணியாற்றி வந்த நவ்தேஜ் சர்னாவின் பதவிக்காலம் கடந்த 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, இந்தப் பதவிக்கு ஐஎப்எஸ் அதிகாரி ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லாவை மத்திய அரசு அண்மையில் நியமித்தது. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
 • Reviews


 • தைவான் பிரதமர்

  தைவானில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பிரதமர் வில்லியம் லாயின் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது. தைவானை பொறுத்தவரை உள்ளூர் தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியை தழுவும்போது, தலைமை பொறுப்பில் உள்ளோர் பதவிவிலகுவது வழக்கமாக உள்ளது. அவ்வகையில் பிரதமர் வில்லியம் லாய் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதையடுத்து தைவானின் முன்னாள் பிரதமரும், ஜனநாயக முற்போக்கு கட்சியின் முன்னாள் தலைவருமான சூ செங் - சங்கை புதிய பிரதமராக அதிபர் சை இங் - வென் நியமித்தார். இதற்கு முன் சூ செங் - சங் கடந்த 2006ஆம் ஆண்டு பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 • Reviews


 • light fly

  சர்வதேச குத்துச்சண்டை சங்கம் வெளியிட்டுள்ள உலக குத்துச்சண்டை தரவரிசைப் பட்டியலில், 45 - 48 கி.கி., 'Light fly' பிரிவில் இடம்பிடித்துள்ள மேரி கோம் 1700 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். கடந்தாண்டு தில்லியில் நடந்த மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்சிப்பில், உக்ரைனிய வீராங்கனை ஹன்னா ஓகோடாவை வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அவர் சாதனை படைத்தார். இதேபோல், 2018ஆம் ஆண்டில் நடந்த காமன்வெல்த் போட்டி மற்றும் போலந்து நாட்டில் நடந்த சைலேசியன் ஓப்பன் குத்துச்சண்டை போட்டிகளிலும் அவர் தங்கப்பதக்கம் வென்றார்.
 • Reviews


 • அகதிகளின் குரல்

  அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரும், பாகிஸ்தானிய போராளியுமான மலாலா யூசப்சையி, “We are displaced: My Journey and Stories from Refugee Girls around the World' என்ற நூலை எழுதி உள்ளார். இதில், உலகப் பயணங்களின்போதும், அகதிகள் முகாமுக்கு சென்றபோதும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை மலாலா விவரித்துள்ளார். மேலும், மலாலா தனது சொந்தக்கதையை மட்டுமல்லாமல், தனது பயணங்களில் தான் சந்தித்த சில அசாத்திய பெண்களின் கதைகள் குறித்தும் இதில் குறிப்பிட்டுள்ளார்.
 • Reviews


 • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம்

  தமிழ்நாடு அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் துணைத் தலைவராக “மயில்சாமி அண்ணாதுரையை” தமிழக அரசு நியமித்துள்ளது. இவர் இஸ்ரோவின் சந்திராயன் I மற்றும் மங்கல்யான் போன்ற செயற்கைகோள் திட்டத்தில் பணிபுரிந்துள்ளார்.
 • Reviews


 • தொழில் தொடங்க உகந்த இந்திய மாநிலங்கள்

  சமீபத்தில் சிங்கப்பூர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள “எளிதில் தொழில் தொடங்க உகந்த இந்திய மாநிலங்களின்” பட்டியலில் ஆந்திரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் இரண்டாமிடத்திலும், டெல்லி மூன்றாம் இடத்திலும் உள்ளது.
 • Reviews


 • BRAND DHARMA

  44-வது “சர்வதேச விளம்பர சங்கத்தின் உலகளாவிய உச்சி மாநாடு” [44th global Summit of the international advertising association (IAA)] கொச்சியில் (கேரளா) நடைபெற்றது.இம் மாநாட்டின் மையக்கருத்து: BRAND DHARMA என்பதாகும்.
 • Reviews


 • 14433

  தேசிய மனித உரிமைகள் ஆணையமானது பொதுச்சேவை மையங்கள் மூலமாக புகார்களை பதிவு செய்வதற்காக 14433 எனும் இலவச தொலைபேசி எண்ணைத் தொடங்கியுள்ளது.
 • Reviews


 • 27-வது உலக புத்தக கண்காட்சி

  27-வது உலக புத்தக கண்காட்சியானது புது டெல்லியில் பிரகதி மைதானத்தில் நடைபெற்றது.இக்கண்காட்சியின் கருத்துரு: சிறப்பு தேவைகளைக் கொண்ட வாசகர்கள் “(Readers with special Models) என்பதாகும்UAE-ன் 3-வது பெரிய அமீரகமான “ஷார்ஷா” இந்த புத்தக கண்காகாட்சியின் கௌரவ விருந்தினர் ஆகும்.“ஷார்ஷா” 2019 ஆம் ஆண்டின் உலக புத்தக தலைநகரம் ஆகும்.
 • Reviews


 • ஐ.நா பொதுச் சபை

  ஐ.நா பொதுச் சபையின் பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பினர்களாக, பெல்ஜியம், டொமினியன் குடியரசு, ஜெர்மனி, இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பொறுப்பேற்றுள்ளன.அடுத்த இரண்டு ஆண்டு காலத்திற்கு, இந்நாடுகள் பாதுகாப்பு அவையில் உறுப்பினர்களாக இருக்கும். டொமினியன் குடியரசானது முதன்முறையாக பாதுகாப்பு அவையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • Climate Change performance Index

  2019 ஆம் ஆண்டிற்கான காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டு (Climate Change performance Index – CCPI) பட்டியலில் “ஸ்வீடன்” மிகவும் சிறப்பான செயல்திறன் கொண்ட நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.CCPI -2019 குறியீட்டில் மொராக்கோ இரண்டாம் இடத்திலும் லித்வேனியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
 • Reviews


 • நேபாளம்

  நேபாளத்தின் புதிய உச்சிநீதிமன்ற தலைமை நீதிபதியாக ராணா (Rana) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.நேபாள அதிபர் : பித்யா தேவி பண்டாரி,நேபாள பிரதமர் : சர்மா ஒலி.
 • Reviews


 • பபுக்

  'பபுக்' என்ற வெப்பமண்டல புயல் தாய்லாந்தை தாக்கியதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் & மின்தடையை அடுத்து ஜன.5 அன்று அந்நாட்டின் தென் பகுதியை சேர்ந்த சுமார் 30,000 மக்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.மணிக்கு 75 கி.மீ., வேகத்தில் வீசிய இந்தப் புயல், பெருமழை மற்றும் புயல் காற்றால் நாட்டின் தெற்குப்பகுதியை சூறையாடியது. கடந்த 30 ஆண்டுகளில் இப்பகுதியை தாக்கிய மிக மோசமான புயல் இது என்று கருதப்படுகிறது. தற்போது இப்புயல், அந்தமான் கடலில் மையம் கொண்டுள்ளது. இதனால் அங்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சமீபத்திய தரவுப்படி, ஒடிசாவிற்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை , ஆனால் அந்தமான் தீவுகளுக்கு அருகே சூறாவளி மையம் கொண்டுள்ள காரணமாக, கிழக்கிந்திய மாநிலங்களின் வானிலை, மேகமூட்டம் மற்றும் உலர்வாக உள்ளது.
 • Reviews


 • HDFC பரஸ்பர நிதி

  ICICI தன்னலநோக்கு சார்ந்த நிதியை விஞ்சி HDFC பரஸ்பர நிதி ஆனது இந்தியாவின் மிகப் பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமாக மாறியுள்ளது. இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள் சங்கத்தின் (Amfi) சமீபத்திய தரவின்படி, 2018 டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் HDFC பரஸ்பர நிதி நிறுவனம், 3.35 லட்சம் கோடி சொத்துக்களையும், ஐசிஐசிஐ புரூடென்சியல் பரஸ்பர நிதி நிறுவனம், 3.08 லட்சம் கோடி சொத்துக்களையும் நிர்வகித்து வருகிறது.
 • Reviews


 • பனோரமா திரைப்பட விழா

  2019ஆம் ஆண்டுக்கான இந்திய பனோரமா திரைப்பட விழா, புது தில்லியிலுள்ள சிறி அரங்கில் ஜன.4-13 வரை நடைபெறவுள்ளது. தகவல் & ஒலிபரப்பு அமைச்சகத்தின் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. விழாவின் தொடக்கமாக முழுநீளத் திரைப் படப் பிரிவில் 'ஒலு' திரைப்படமும், ஆவண திரைப்படப் பிரிவில் 'கர்வாஸ்' திரைப்படமும் திரையிடப்படவுள்ளன.49ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI-2018) இந்திய பனோரமா பிரிவில் தெரிவான அனைத்து திரைப்படங்களும் இவ்விழாவில் திரையிடப்படும். 26 முழு நீளத்திரைப் படங்களும், 21 கதைசாரா திரைப்படங்களும் இதில் திரையிடப்படும்.
 • Reviews


 • கிரிஷக் பந்து திட்டம்

  18 முதல் 30 வயதிற்குள் இறக்கும் விவசாயிகளின் குடும்பத்திற்கு 2 இலட்சம் நிதியுதவி அளிப்பதற்காக மேற்கு வங்காள அரசானது கிரிஷக் பந்து திட்டம் (Krishak Bandhu Scheme) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
 • Reviews


 • Enabling Quality Affordable Health Care

  இந்திய மருந்து மற்றும் மருத்துவ மாநாடு – 2019, கர்நாடகத்தின் பெங்களுரில் நடைபெற்றது. (India Pharma – 2019) இம்மாநாடு இரசாயணம் மற்றும் உரங்கள் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்டது.இம்மாநாட்டின் மையக்கருத்து – “Enabling Quality Affordable Health Care”.
 • Reviews