Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள்
 • வின்சன் சிகரம்

  அண்டார்டிகாவின் உயர்ந்த சிகரமான “வின்சன் சிகரத்தை” ஏறிய முதல் மாற்றுத்திறனாளி பெண் என்ற பெருமையை அருணிமா சின்ஹா (Arunima Sinha) என்பவர் பெற்றுள்ளார்.இவர் உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மாற்றுத் திறனாளி பெண்ணும் இவரே ஆவார்.
 • Reviews


 • சாங் இ – 4

  நிலவின் இருண்ட பகுதியை ஆராயும் செயற்கை கோளான சாங் இ – 4 (Chang e – 4) என்னும் செயற்கைகோள், ஜனவரி 3, 2019 அன்று வெற்றிகரமாக நிலவில் தரையிரங்கியது.இச்செயற்கைகோளை சீனா டிசம்பர் 8, 2018ல் விண்ணில் செலுத்தியது.
 • Reviews


 • அல்ட்டிமா துலே

  சூரியனை மிகவும் நீண்ட தொலைவில் சுற்றி வரும் “அல்ட்டிமா துலே (Ultima Thule) என்ற நுண்கோளின் அருகே சென்று, அமெரிக்காவின் “நியூ ஹொரைஸன்” என்ற விண்கலம் சாதனைப் படைத்துள்ளது.
 • Reviews


 • Competition Commission of India

  இந்தியாவின், போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளராக பி.கே.சிங் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.போட்டி ஒழுங்குமுறை ஆணையம் (Competition Commission of India) 2003, அக்டோபர் 14-ல் ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைவர் – அசோக் குமார் ஆவார்.
 • Reviews


 • தேசிய ஜியோஸ் பேசியல் விருது

  அகமதாபாத்தில் உள்ள விண்வெளிப் பயன்பாடுகள் மையத்தில் ரூர்கேலா ஐஐடியைச் சேர்ந்த பேராசிரியர். ஜெயந்த குமார் கோவுக்கு, 2017ஆம் ஆண்டுக்கான ISRS சிறப்பு தேசிய ஜியோஸ் பேசியல் விருது (வாழ்நாள் சாதனையாளர் விருது) வழங்கப்பட்டது. புவியிடஞ் சார்ந்த அறிவியல் மற்றும் பயன்பாடுகளின் வளர்ச்சிக்கான அவரது பங்களிப்புக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரு பதக்கம் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசை உள்ளடக்கியது இவ்விருது.இந்திய தொலையுணர்வு அறிவியல் சங்கம் (ISRS) என்பது விண்வெளி அறிவியல், தொலை உணர்வு மற்றும் புவியிடஞ்சார்ந்த தொழினுட்பம் ஆகியவற்றுக்காக அறியப்படுகிற ஓர் அமைப்பு.
 • Reviews


 • உச்சநீதி மன்றம்

  ஜன.2 அன்று பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்வி, பாகிஸ்தானின் புதிய தலைமை நீதிபதியாக ஆசிப் சயீத் கோசாவை நியமித்தார். ஜன.18 அன்று ஓய்வுபெறவுள்ள, தற்போதுள்ள தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசாருக்குப் பிறகு பதவியேற்கும் ஆசிப், 2019 டிச.20 வரை அப்பதவியில் இருப்பார். பாகிஸ்தானின் தலைமை நீதிபதி என்பவர் பாகிஸ்தான் நீதிமன்ற அமைப்பின் தலைவரும், பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் ஆவார்.நீதித்துறைக் கொள்கைகளை மேற்பார்வையிடுவதற்கும், உச்சநீதிமன்றத்தில் நீதிப் பணிகளை நடத்துவதற்கும் அவர் பொறுப்பானவர்.
 • Reviews


 • தென்னிந்திய நாணயவியல் கழகம்

  சென்னையில் நடந்த தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் 29ஆம் ஆண்டு கருத்தரங்கில் தினமலர் நாளிதழின் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.
 • Reviews


 • தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாகத் தலைசிறந்த ஊடகவியலாளருக்கான ராம்நாத் கோயங்கா விருது, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி ஆசிரியர் குணசேகரனுக்குக் கிடைத்துள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர் ராம்நாத் கோயங்கா நூற்றாண்டையொட்டி, 2005ஆம் ஆண்டு முதல் ஊடகத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு *ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருதுகள்’ வழங்கப்பட்டு வருகின்றன. பத்திரிகையாளர்களின் நேர்மையான, சிறப்பான பங்களிப்பைப் போற்றும் வகையில் இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2017ஆம் ஆண்டுக்கான விருதுகளை ஜனவரி 4ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.
 • Reviews


 • தென் சீனக் கடலில் உருவான பபுக் புயல் வங்கக் கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளது. இது வடமேற்கில் நகர்ந்து, மத்திய வங்கக் கடலுக்குள் நுழைந்து, அதன் பின்னர் வட கிழக்குத் திசையில் நகர்ந்து மியான்மரில் கரையைக் கடந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • Mission Zero Accident

  விபத்து இல்லாத இரயில் பயணத்தை இலக்காகக் கொண்டு Mission Zero Accident என்ற திட்டத்தை இந்திய இரயில்வே செயல்படுத்தி வருகிறது.2020-க்குள் ஆளில்லா இரயில்வே, கிராசிங்குகளே நீக்குதல், இரயில் மோதலை தவிர்க்கும் முறை (Train Collision Avoidance System) ஆகியவை இதில் அடங்கும்.
 • Reviews


 • இன்று 04.01.2019 "உலக ப்ரெய்ல் தினம் (World Braille day)." ப்ரெய்ல் முறையைக் கண்டுபிடித்த லூயி ப்ரெய்லின் பிறந்தநாளே, உலக ப்ரெய்ல் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
 • Reviews


 • இந்தியாவில் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி), இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) உட்பட பல்வேறு சிறந்த அறிவியல் கல்வி நிறுவனங்கள் உள்ளன. எனினும், உலகின் தலைசிறந்த முதல் 1% அறிவியல் ஆய்வாளர்களில் வெறும் 10 இந்தியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும்கூட நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் படிப்பை முடிக்காதவர்களாக உள்ளனர். உலகின் தலைசிறந்த, செல்வாக்குமிக்க 4,000 அறிவியல் ஆய்வாளர்களின் பட்டியலை கிளரிவேட் அனலிடிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், இந்திய அறிவியலாளரும், பிரதமருக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவருமான சி.என்.ஆர்.ராவ் பெயரும் இடம்பெற்றுள்ளது.
 • Reviews


 • ராணுவத் தளவாட வாரியத்தின் தலைவர்

  மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ராணுவத்தளவாட வாரியத்தின் தலைவராகவும், ராணுவத்தளவாட தொழிற்சாலைகளின் இயக்குநராகவும் சௌரப் குமார் பொறுப்பேற்றுள்ளார். ராணுவத் தளவாடங்கள் உற்பத்தித்துறையில் வல்லுநரான சௌரப், 1982ஆம் ஆண்டு ராணுவத் தளவாட அமைப்பில் அதிகாரியாக இணைந்தார். அதையடுத்து மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ், திட்டமிடல் மற்றும் ஒத்துழைப்பு பிரிவின் இயக்குநராக கடந்த 2002-2009ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில், பாதுகாப்பு துறைக்கான ஆயுதங்கள் கொள்முதல் செய்வதற்கான கொள்கைகளை வகுத்தார். பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் பசுமை ராணுவத்தளவாட தொழிற்சாலைகள் அமைப்பதற்கான திட்டங்களை முன்மொழிந்து, அரசின் ஒப்புதலைப் பெற்றவர் இவர்.
 • Reviews


 • உலக பிரைலி தினம்

  பார்வையிழந்தோருக்காக 'பிரைலி - Braille' முறையை கண்டறிந்த பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த பார்வையிழந்த விஞ்ஞானி லூயி பிரைலி என்பவரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜன.4 அன்று உலக பிரைலி தினம் கொண்டாடப்படுகிறது. 1809ஆம் ஆண்டு ஜன.4 அன்று வட பிரான்சில் உள்ள கூப்விரேவில் லூயி பிரைலி பிறந்தார். அவரது மூன்றாம் வயதில், எதிர்பாராத விதமாக அவர் தனது இரு கண்களையும் இழந்தார்.இதன் விளைவாக, பார்வையற்றோர் தடவிப்பார்த்துப் படிக்க ஏற்ற 'பிரைலி' முறையை அவர் கண்டறிந்தார். இம்முறையில் 1-6 புடைப்புப்புள்ளிகளையும், ஓட்டைகளையும் கொண்டு எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவுதலின் மூலம் பார்வையற்றோர் புரிந்துகொள்வர். இந்நாள், சில வகையான கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வையைக் கொண்ட ஏறக்குறைய 1.3 பில்லியன் மக்களுக்கு 'பிரைலி'யின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது. உலகெங்கிலும், 39 மில்லியன் மக்கள் பார்வையற்றோராகவும், மேலும் 253 மில்லியன் பேர் சிலவகை Pageன பார்வை குறைபாடுடீனும்-எளனர்.
 • Reviews


 • தேசிய ஜியோஸ்பேசியல் விருது

  அகமதாபாத்தில் உள்ள விண்வெளிப் பயன்பாடுகள் மையத்தில் ரூர்கேலா ஐஐடியைச் சேர்ந்த பேராசிரியர். ஜெயந்த குமார் கோவுக்கு, 2017ஆம் ஆண்டுக்கான ISRS சிறப்பு தேசிய ஜியோஸ் பேசியல் விருது (வாழ்நாள் சாதனையாளர் விருது) வழங்கப்பட்டது. புவியிடஞ் சார்ந்த அறிவியல் மற்றும் பயன்பாடுகளின் வளர்ச்சிக்கான அவரது பங்களிப்புக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரு பதக்கம் மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசை உள்ளடக்கியது இவ்விருது. இந்திய தொலையுணர்வு அறிவியல் சங்கம் (ISRS) என்பது விண்வெளி அறிவியல், தொலை உணர்வு மற்றும் புவியிடஞ்சார்ந்த தொழினுட்பம் ஆகியவற்றுக்காக அறியப்படுகிற ஓர் அமைப்பு.
 • Reviews


 • பனோரமா திரைப்பட விழா

  2019ஆம் ஆண்டுக்கான இந்திய பனோரமா திரைப்பட விழா, புது தில்லியிலுள்ள சிறி அரங்கில் ஜன.4-13 வரை நடைபெறவுள்ளது. தகவல் & ஒலிபரப்பு அமைச்சகத்தின் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. விழாவின் தொடக்கமாக முழுநீளத் திரைப் படப் பிரிவில் 'ஒலு' திரைப்படமும், ஆவண திரைப்படப் பிரிவில் 'கர்வாஸ்' திரைப்படமும் திரையிடப்படவுள்ளன.49ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI-2018) இந்திய பனோரமா பிரிவில் தெரிவான அனைத்து திரைப்படங்களும் இவ்விழாவில் திரையிடப்படும். 26 முழு நீளத்திரைப் படங்களும், 21 கதைசாரா திரைப்படங்களும் இதில் திரையிடப்படும்.
 • Reviews


 • LIC இன் இடைக்கால தலைவர்

  LIC நிறுவனத்தின் தலைவராக இருந்த V.K சர்மா டிச.31 ஓய்வுபெற்றார். இதையடுத்து, பIC'க்கு இடைக்கால தலைவராக ஹேமந்த் பார்கவாவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. ஹேமந்த் பார்கவா புஇன் நிர்வாக இயக்குநராக கடந்த 2017 பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டவர்.புதிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரை தேர்வு செய்வதற்காக தில்லியில் ஜன.4 அன்று வங்கிகள் வாரிய செயலகத்தால் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வில், எட்டு அதிகாரிகள் நேர்முகம் செய்யப்பட்டனர். செப்டம்பர் 30 அன்று உஷா சங்வான் ஓய்வுபெற்றதிலிருந்து ஒரு மேலாண்மை இயக்குநர் பதவி காலியாக இருந்தது. புஇன் தலைமை நிர்வாகம் ஒரு தலைவரையும், நான்கு மேலாண்மை இயக்குநரையும் கொண்டிருக்கும்.
 • Reviews


 • CH லோகநாத்

  கன்னட மொழி சார்ந்த புகழ்பெற்ற மூத்த மேடை மற்றும் திரைக்கலைஞர் CH லோகநாத் (91), பெங்களூருவில் டிச.31 அன்று காலமானார். அவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 650 திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மால்குடி டேசிலும் அவர் நடித்துள்ளார்.
 • Reviews


 • தொழில் நிறுவனங்கள்

  சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கிக் கடனை திருப்பி செலுத்தும் பொழுது எதிர் கொண்டுள்ள பிரச்சனைகளை ஆராய்வதற்காக, யு.கே. சின்ஹா தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.
 • Reviews


 • கே.பி.ஜார்ஜ்

  பெக்சாஸ் (அமெரிக்கா) மாகாணத்தில் உள்ள போர்ட் பென்ட் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக, இந்தியாவைச் சேர்ந்த ‘கே.பி.ஜார்ஜ்’ என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்.
 • Reviews


 • திடக்கழிவு மேலாண்மை

  தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்படும், ஸ்வட்ச் சர்வேக்ஷன் விருதில், மாநில அளவில் திடக்கழிவு மேலாண்மையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. திடக்கழிவு மேலாண்மையில் முதலிடம் பிடித்த மாநகராட்சி – ஹைதராபாத் என்பது குறிப்பிடத்தக்கது.
 • Reviews


 • SAMWAD with Student

  இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கிடையே அறிவியல் திறனை ஊக்குவிப்பதற்காக இஸ்ரோவானது ‘SAMWAD with Student’ (SwS), என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
 • Reviews


 • உலக நினைவாற்றல்

  ஹாங்காங்கில் நடைபெற்ற உலக நினைவாற்றல் போட்டியில், சிங்கப்பூரைச் சேர்ந்த, துருவ் மனோஜ் (இந்திய வம்சாவளி) இரு தங்கப்பதக்கங்களை வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
 • Reviews


 • Women on Wheels

  ஹைதராபாத்தில் உள்ள பெண்களின் பாதுகாப்பிற்காக, ‘Women on Wheels’ என்னும் போலீஸ் பிரிவை அம்மாநில அரசு, தொடங்கியுள்ளது.
 • Reviews


 • சர்வதேச விக்கெட் வீரர்

  இந்திய வீரர் ஜஸ்பிரிட் பும்ரா, 2018இல் அனைத்து தரப்புப்போட்டியிலும் அதிக சர்வதேச விக்கெட்டுகளை எடுத்த வீரராக உள்ளார். இவர் 9 டெஸ்ட் போட்டிகளில் 48 விக்கெட்டுகளையும், 13 ஒருநாள் போட்டிகளில் 28 விக்கெட்டுகளையும், 8 T20 போட்டிகளில் 8 விக்கெட்டுகளையும் என மொத்தம் 78 விக்கெட்டுகளை 2018இல் எடுத்துள்ளார்.தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ககிசோ ரபதாவின் எழுபத்தேழு விக்கெட்டுகள் சாதனையை அவர் முறியடித்துள்ளார் இவருக்கு அடுத்தபடியாக அவரது சகநாட்டு வீரர் குல்தீப் யாதவ் 76 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
 • Reviews


 • Future India: Science & Technology

  பஞ்சாப் மாநிலம் ஜலந்தரின் லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில், ஜன.3 முதல் 7 வரை நடைபெறவுள்ள இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்த ஆண்டுக்கான மாநாட்டுக்கு "எதிர்கால இந்தியா: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்" என்பது கருப்பொருளாக அமைக்கப்பட்டுள்ளது. 5 நாள் நடக்கும் இம்மாநாட்டில், அறிவியல் & தொழில் நுட்பம் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கருத்தரங்கங்களும், நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. இதில், அறிவியல் அறிஞர்களும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை உள்ளிட்டவற்றின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர். மேலும், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிவியல் அறிஞர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர்.
 • Reviews


 • கபி சாம்ராட் உபேந்திரா பஞ்சா தேசிய விருது

  பிரபல ஆங்கில மற்றும் ஒடிசா இலக்கியவாதியான பேராசிரியர் மனோஜ் தாஸ், இலக்கியத்தில் வாழ்நாள் சாதனைக்காக கபி சாம்ராட் உபேந்திரா பஞ்சா தேசிய விருது பெற்றார். இந்த விழா, ஒடிசாவின் பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டது.
 • Reviews


 • RBI தலைவர்

  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) துறையின் பொருளாதார மற்றும் நிதி நிலைத்தன்மையை விரிவாக மீளாய்வு செய்து நீண்டகால தீர்வுகளை முன்மொழிவதற்காக முன்னாள் SEBI தலைவர் UK சின்ஹா தலைமையிலான 8 உறுப்பினர்கள் கொண்ட வல்லுநர் குழுவை ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது. பணமதிப்பிழப்பின் காரணமாக MSME பிரிவானது மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டுள்ளது. வரும் ஜூன் மாத இறுதிக்குள் இந்தக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்.
 • Reviews


 • சாஸ்ட்ரா-2019

  சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப கழகத்தின் (IIT) சார்பில் “சாஸ்ட்ரா – 2019” என்ற பெயரில் தொழில்நுட்பக் கண்காட்சி மற்றும் மாநாடு ஜனவரி 3 முதல் ஜனவரி 6 வரை நடைபெற உள்ளது.
 • Reviews


 • INS-விராட்

  இந்தியாவின் முதல் விமானம் தாங்கிய போர் கப்பலான “INS-விராட்”, கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, அந்த போர்க்கப்பலை அருங்காட்சியமாக மாற்ற கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • JF Thunder – 17

  பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகள் ஒன்றிணைந்து “JF Thunder – 17” என்னும் ஒற்றை என்ஜின் பன்முக போர் விமானத்தை தயாரிக்கின்றன.
 • Reviews


 • 17வது ஆசிய கோப்பை கால்பந்து

  17வது ஆசிய கோப்பை கால்பந்து – 2019 போட்டிகள், ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஜனவரி 5 முதல் பிப்ரவரி 1 வரை நடைபெற உள்ளது. இதில் 24 அணிகள் பங்கேற்கின்றன.FIFA தரவரிசையில் இந்தியா 97வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 • Reviews


 • ஒசிரிஸ்-ரே

  சமீபத்தில் நாசா அனுப்பிய “ஒசிரிஸ்-ரே” எனப்படும் செயற்கைகோள் பூமியில் இருந்து 11 கோடி கி.மீ. தொலைவில் உள்ள “பென்னு” என்றழைக்கப்படும் குறுங்கோளின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்து சாதனைப் படைத்துள்ளது.
 • Reviews


 • தேசிய நிருத்ய ஷிரோமணி

  “கதக்” என்னும் நடனத்தை உலகளவில் பரப்பியதற்காக அமெரிக்க கதக் நடனக் கலைஞரான “அனிந்த்டே நியோகி அனாம்” (Anindita Neogy Anaam) என்பவருக்கு தேசிய நிருத்ய ஷிரோமணி – 2019 (National Nritya Shiromani Award – 2019) என்னும் விருது வழங்கப்பட்டது.
 • Reviews


 • இரயில்வே வாரியம்

  இரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக V.K. யாதவ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஆக்ஸிஸ் வங்கியின் CEO-வாக அமிதாப் சௌத்ரி (Amitabh Chaudhry) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 • Reviews


 • சம்வாத் திட்டம்

  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது தனது வெளிக்கள் திட்டத்தின் ஒருபகுதியாக மாணவர்களுடன் சம்வாத் எனும் திட்டத்தை சமீபத்தில் தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதுமுள்ள இளையோரை விண்வெளி அறிவியல் நடவடிக்கைகளில் ISRO ஈடுபடுத்தும்.பெங்களூரில் நடந்த இதன் தொடக்க விழாவின்போது, தேர்தெடுக்கப்பட்ட பள்ளிகளை சேர்ந்த 10 ஆசிரியர்கள் மற்றும் 40 மாணவர்கள் ISRO தலைவர் Dr. K. சிவனிடம் இந்திய விண்வெளி திட்டங்கள் & அதனால் சாதாராண மனிதருக்கு விளையும் பயன்கள் குறித்து விவாதித்தனர்.
 • Reviews


 • பேஹ்மான் (Fehmarn) பட்டை திட்டம்

  சுற்றுச்சூழல் முரண்பாடுகள் இருந்தபோதிலும் டென்மார்க் மற்றும் ஜெர்மனியை இணைக்கும் $8 பில்லியன் டாலர் மதிப்பிலான இரயில் மற்றும் சாலை சுரங்கப்பாதை திட்டத்துக்கு சமீபத்தில் ஜெர்மானிய அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இத்திட்டம் 4 வழித்தட நெடுஞ்சாலையை -யும், இரண்டு வழித்தட ரயில்வேயையும் கொண்டிருக்கும்.ஐரோப்பிய ஒன்றியமும் இத்திட்டத்திற்கு பகுதியளவு நிதியுதவி அளிக்கிறது. 19 கி.மீ., நீள பேஹ்மான் (Fehmarn) பட்டை நிரந்தர இணைப்பானது டென்மார்க்கின் லாலாந்து தீவையும், ஜெர்மனியின் பேஹ்மான் தீவையும் சுரங்கப்பாதை வழியாக இணைக்கும். இது கட்டிமுடிக்கப்பட் -டுவிட்டால் உலகின் மிக நீளமான சாலை மற்றும் இரயில் சுரங்கப்பாதையாக இது இருக்கும்.
 • Reviews


 • உஜ்வாலா சானிடரி நாப்கின் திட்டம்

  மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் புவனேசுவர் நகரத்தில் உஜ்வாலா சானிட்டரி நாப்கின் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தப்புதிய திட்டத்தின் கீழ், மாநிலத்தின் 93 தொகுதிகளை உள்ளடக்கிய பொது சேவை மையங்களில், ரூபாய் 2.94 கோடி செலவில் 100 உற்பத்தி அலகுகள் அமைக்கப்படும். ஒவ்வோர் உற்பத்தி அலகிலும் 5-6 உஜ்வாலா பயனாளிகள் பணியமர்த்தப்படுவார்கள். பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்த பயிற்சிகள் முதலில் வழங்கப்படும்.ஒவ்வோர் அலகும் நாளொன்றுக்கு சுமார் 1200-2000 பட்டைகள் வரை தயாரிக்கும் திறனைக் கொண்டிருக்கும். எட்டுப் பட்டைகள் கொண்ட ஒரு பேக்கெட்டின் விலை ரூ.42 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாதந்தோறும் ரூ.5000 - 15,000 வரை சம்பாதிக்க ஒரு வாய்ப்பினை இது வழங்கும். இது, ஒடிசா அரசின் 'குஷி' திட்டத்திற்கு நேரிணையான திட்டமாக இருக்கும், குஷி திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
 • Reviews


 • தேசிய நிருத்ய சிரோமணி விருது

  வட அமெரிக்காவை சேர்ந்த கதக் நடனக்கலைஞர் அனிந்திதா நியோஜி அனாம், ஜனவரி 2 அன்று தேசிய நிருத்ய சிரோமணி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். ஒடிசாவில் நடந்த சர்வதேச நடன & இசை திருவிழாவான 10ஆவது கட்டாக் மகோத்சவத்தின்போது அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. கட்டாக் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து உத்கல் யுவ சங்ஸ்கிருதி சங்கம் (UYSS) இதனை ஏற்பாடு செய்திருந்தது.தேசிய மற்றும் சர்வதேச அளவில் இந்திய கலைகளை காப்பாற்றுவதிலும், ஊக்குவிப்பதிலும் சிறந்த பங்களிப்பு செய்தமைக்காக ஜெயதேவ் ராஷ்ட்ரிய புரஸ்கார் மற்றும் பிதக்தா நர்தகி சம்மன் போன்ற புகழ்பெற்ற தேசிய விருதுகளையும் அனிந்திதா அனாம் பெற்றுள்ளார்.
 • Reviews


 • பனை எண்ணெய் மீதான இறக்குமதி

  • ASEAN (தெற்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு) நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பனை எண்ணெய் மீதான இறக்குமதி வரியை இந்தியா குறைத்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்படாத இருவகை பனை எண்ணெய்க்கும் இந்த வரி குறைப்பு பொருந்தும். • சுத்திகரிக்கப்படாத பனை எண்ணெய்க்கான இறக்குமதி வரி 44 சதவீதத்திலிருந்து 40% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட பனை எண்ணெய்க்கான வரி 54 சதவீதத்திலிருந்து 45% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா மற்றும் பிற ASEAN உறுப்பு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டால் அவ்வரி சதவீதம் 50% ஆக இருக்கும். * இந்தியா தனது பனை எண்ணெய் தேவைகளில் சுமார் 60 சதவீதத்தை (ஓராண்டுக்கு 15.5 மில்லியன் டன்கள்) மலேசியா, இந்தோனேசியா, அர்ஜென்டினா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது.
 • Reviews