Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள்
 • UNESCO

  2018இன் முடிவில், அமெரிக்காவும், இஸ்ரேலும் அதிகாரப்பூர்வமாக, UNESCO அமைப்பிலிருந்து வெளியேறியுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டு, இஸ்ரேலுக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி, இருநாடும் UNESCO அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்த முடிவை வெளியிட்டன.இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்து, அமைதியை நிலைநாட்டும் நோக்கில் கூட்டாகத் தாம் உருவாக்கிய UNESCO அமைப்பில், அடிப்படை மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென்று, அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. UNESC0இல் 1949ஆம் ஆண்டு இஸ்ரேல் இணைந்தது.உலகில் பாரம்பரியமிக்க இடங்களை அடையாளங்கண்டு, அவற்றைப் பேணுவதற்காக, உலக பாரம்பரிய திட்டத்தை UNESCO செயல்படுத்திப் பெயர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பெண் கல்வி, ஊடக சுதந்திரம் காத்தல் ஆகிய பணிகளையும் UNESCO மேற்கொள்கிறது.பாலஸ்தீனம் UNESCOஇல் உறுப்பினராக இணைந்ததை அடுத்து, இஸ்ரேலும், அமெரிக்காவும் 2011இலிருந்து UNESCO'வுக்கு நிதியளிப்பதை நிறுத்தியுள்ளன. எனவே, இந்த இருநாடுகளும் வெளியேறியதால், நிதி சம்பந்தமாக யுனெஸ்கோ வுக்கு எந்த விதமான பிரச்னையும் ஏற்படாது.
 • Reviews


 • பிரேசிலின் அதிபர்

  பிரேசிலின் புதிய அதிபராக ஜேர் போல்சோநரோ (Jair Bolsonaro) பதவியேற்றுள்ளார். இவர் அடுத்த நான்காண்டுகளுக்கு அதிபராகப் பொறுப்புவகிப்பார்.சமூக தாராளவாத கட்சியின் உறுப்பினரான இவர் மைக்கேல் டெமருக்குப் பிறகு அதிபராக தெரிவாகியுள்ளார்
 • Reviews


 • தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி

  ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தோட்டத்தில் B ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். 2014ஆம் ஆண்டு ஆந்திராவிலிருந்து தெலுங்கானாவை பிரித்த பிறகு 2019 ஜன.1 முதல் தெலுங்கானாவில் புதிய உயர்நீதிமன்றம் செயல்பட தொடங்கியது. பின்னர் விஜயவாடாவில் உள்ள ஆந்திரப் பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாக சாகரி பிரவீன் குமாருக்கு அம்மாநில ஆளுநர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
 • Reviews


 • பாலின சமத்துவம்

  • ஜன.1 அன்று கேரள மாநிலத்தின் வடக்கே காசர்கோடிலிருந்து தெற்கே திருவனந்தபுரம் வரை 620 கி.மீ., தூரத்திற்கு ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைமையின் கீழ், சுமார் 50 லட்சம் பெண்கள் கைகோர்த்து மதில்சுவர் போல் நின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சபரி மலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த மதில்சுவர் போராட்டம் நடந்தது. இந்தப்போராட்டத்தில் அனைவரும் சேர்ந்து பெண்கள் சம உரிமைக்கும் மறுமலர்ச்சி கொள்கை -களுக்கும் ஆதரவு தெரிவிப்போம் என வாக்குறுதி எடுத்துக்கொண்டனர். ஆளும் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய பொதுவுடமைக் கட்சி, ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் மற்றும் கேரள புழையாறு மகா சபை உட்பட 176-க்கும் மேற்பட்ட சமூக - அரசியல் அமைப்புகளால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 • Reviews


 • இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்ம்ருதி மந்தனா, மகளிர் கிரிக்கெட்டின் கடந்த ஆண்டுக்கான சிறந்த ஆட்டக்காரர், ஒருநாள் போட்டிகளின் சிறந்த ஆட்டக்காரர் ஆகிய இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளார். இந்திய டி-20 அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் கௌர் 2018ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி-20 அணியின் கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அலிசா ஹீலி ஆண்டின் சிறந்த டி-20 ஆட்டக்காரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 • Reviews


 • இந்திய சமூக அறிவியல் மாநாடு

  42ஆவது இந்திய சமூக அறிவியல் மாநாடு நடந்த இடம்:புவனேசுவா்.டிச.27 அன்று ஒடிசா மாநிலம் புவனேசுவரில் உள்ள KIT பல்கலைக்கழக வளாகத்தில், மணிப்பூர் ஆளுநர் Dr. நஜ்மா ஹெப்துல்லா , 42ஆவது இந்திய சமூக அறிவியல் மாநாட்டை (ISSC-2018) தொடங்கிவைத்தார். "Human Future in Digital Era" என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும். இந்திய சமூக அறிவியல் அகாடமியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ISSC, சமூக விஞ்ஞானிகள் ஒன்றுகூடும் ஓர் ஆண்டு சந்திப்பாகும்.இது நடப்பு ஆராய்ச்சி மற்றும் கோட்பாட்டின் உள், வெளி மற்றும் பல் ஒழுங்குமுறை மதிப்பீடு மூலம் இயற்கை - மனிதர்கள் - சமூக அறிவியலுக்கான ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் ஒரு பல்நோக்கு தேசிய மன்றமாகும்.
 • Reviews


 • ICC

  ICC 2018ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை என்பதற்காக 'ரேச்சல் ஹெய் ஹோய் ஃபிளின்ட்' விருது மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் (ODI) சிறந்த வீராங்கனை என ICCஇன் 2 விருதுகளை இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வென்றுள்ளார். ஜனவரி 1 முதல் 31 டிசம்பர் 2018 வரையான வாக்களிப்பு காலத்தில் 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 66.90 சராசரியுடன் 669 ரன்களும், 25 T20 ஆட்டங்களில் விளையாடி 130.67 ஸ்டிரைக் ரேட்டுடன் 622 ரன்களும் இவர் குவித்திருந்தார்.சிறந்த T20 வீராங்கனையாக ஆஸ்திரேலியாவின் அலிஸ்ஸா ஹீலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த சோபி எக்லஸ்டோன் வளர்ந்து வரும் வீராங்கனை விருதை வென்றார். ICC விருதைப் பெறும் 2ஆவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் ஸ்மிருதி மந்தனா. இதற்கு முன் கடந்த 2007ஆம் ஆண்டு இவ்விருதை ஜூலன் கோஸ்வாமி பெற்றிருந்தார்.
 • Reviews


 • Chief information கமிஷனர்-CIC

  மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் சுதிர் பார்கவா ஜன.1 அன்று புதிய தலைமைத் தகவல் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவரைத் தவிர முன்னாள் IFS அதிகாரி யஷ்வர்தன் குமார் சின்ஹா , முன்னாள் IRS அதிகாரி வனஜா N. சர்னா, முன்னாள் IAS அதிகாரி நீரஜ் குமார் குப்தா, முன்னாள் சட்டத்துறை செயலர் சுரேஷ் சந்திரா ஆகிய 4 பேரையும் புதிய தகவல் ஆணையர்களா ரசுத்தல்லவர் ராம்லத் கோவிந்த் நியமித்தார்.
 • Reviews


 • நார்மன் கிம்பெல்

  ஆஸ்கர் மற்றும் கிராமி ஆகிய விருதுகளை வென்ற அமெரிக்க பாடலாசிரியர் நார்மன் கிம்பெல் (91), டிச.17 அன்று நியூயார்க்கில் காலமானார்.
 • Reviews


 • பாக்சிங் டே

  டிசம்பர் 30 அன்று ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் நடந்த 'பாக்சிங் டே' டெஸ்டின் இறுதிநாள் ஆட்டத்தில், இந்திய அணியின் ரிஷப் பாண்ட், ஒரே டெஸ்ட் தொடரில் 20 கேட்ச்சுகளை பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். இதன்மூலம், இந்திய வீரர்களில் கடந்த 1954-55ஆம் ஆண்டு நரேன் தமனே மற்றும் 1979-80ஆம் ஆண்டில் சையது கிர்மானி ஆகியோரின் 19 கேட்ச் சாதனையை அவர் சமன் செய்தார்.
 • Reviews


 • 354A

  பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களை திருநங்கையர்கள் தாக்கல் செய்ய இந்திய தண்டனை சட்டம் 354A பிரிவினை பயன்படுத்தலாம் என தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. IPC 354A பிரிவானது பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கான தண்டனை குறித்து கூறுகிறது. உச்சநீதிமன்றத்தின் தேசிய சட்ட சேவைகள் ஆணைய 2014ஆம் ஆண்டின் தீர்ப்பின் பாலின நடுநிலைத்தன்மை பற்றியும் அந்த அமர்வு மேற்கோளிட்டு காட்டியது.
 • Reviews


 • மத்திய தகவல் தொடர்புதுறை

  இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களில் மிக அதிக அளவிலான இணைய இணைப்புடன் கூடிய அறிதிறன் பேசிகள் பயன்பாட்டில் தமிழகமானது 2வது இடத்தில் உள்ளதாக மத்திய தகவல் தொடர்புதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.முதலிடத்தில் இமாச்சலப் பிரதேசம் உள்ளது.
 • Reviews


 • குனோ பல்பூர் வனவிலங்கு சரணாலயம்

  மத்திய பிரதேச அரசானது குனோ பல்பூர் வனவிலங்கு சரணாலயத்தினை, தேசிய பூங்காவாக அறிவித்துள்ளது.இப்பூங்காவானது, ஆசிய சிங்கங்களை குஜராத்தின் கிர் காடுகளிலிருந்து இடமாற்றும் திட்டத்திற்காக மேம்படுத்தப்பட்டுள்ளது.
 • Reviews


 • யுன்ஹாய் – 2

  வளிமண்டல சுழல், விண்வெளி சூழல் கண்காணிப்பு, பேரிடர்களை தடுத்தல் மற்றும் குறைத்தல் மற்றும் அறிவியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சீனாவானது யுன்ஹாய் – 2 என்ற செயற்கைக்கோளை விண்வெளி சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.
 • Reviews


 • உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி

  தெலுங்கான மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக “T.B.N. ராதா கிருஷ்ணன்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு தெலுங்கானா ஆளுநர் E.S.L. நரசிம்மன் (E.S.L. Narasimhan) பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
 • Reviews


 • Defying the Paradigm N. Srinivasan : Fifty Years of an extraordinary journey

  தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியா சிமெண்ட்ஸ் தலைவர் N. சீனிவாசனைப் பற்றிய “Defying the Paradigm N. Srinivasan : Fifty Years of an extraordinary journey” என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புத்தகமானது கல்யாணி கேன்டாடி என்பவரால் எழுதப்பட்டது.
 • Reviews


 • பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கட்ரியோனா க்ரே 2018 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 • Reviews


 • இலக்கியத் துறையில் சிறந்து விளங்கும் படைப்பாளிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ஞானபீட விருது இந்த ஆண்டு இந்திய - ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டு வருகிறது. 7 லட்சம் ரூபாய்க்கான காசோலை, தங்கமும் செம்பும் கலந்த பட்டயமும், பாராட்டுப் பத்திரம் மற்றும் பித்தளையால் ஆன கலைமகள் சிலையை உள்ளடக்கிய இந்த விருது 1961ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதுவரை, அதிகபட்சமாக, கன்னட மொழி எழுத்தாளர்கள் 7 முறையும், இந்தி மொழி எழுத்தாளர்கள் 6 முறையும் இந்த விருதைப் பெற்றுள்ளார்கள். தமிழில் அகிலன், ஜெயகாந்தன் ஆகியோர் கடந்த 1975 மற்றும் 2002ஆம் ஆண்டுகளில் ஞானபீடம் விருதினை பெற்றுள்ளனர்.
 • Reviews


 • உலகளவில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் திருப்பூர் 6வது இடத்தைப் பெற்றுள்ளது. உலகளவில் வேகமாக வளரும் நகரங்கள் பற்றி ஆக்ஸ்ஃபோர்ட் பொருளாதார ஆய்வு ஒன்றை நடத்தியது. 2019ஆம் ஆண்டு முதல் 2035ஆம் ஆண்டு வரை திருப்பூரின் சராசரி வளர்ச்சி விகிதம் 8.36 சதவிகிதமாக இருக்கும் என இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. வேகமாக வளரும் முதல் 10 நகரங்களின் பட்டியலில் தமிழகத்தின் திருச்சி, திருப்பூர், சென்னை ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
 • Reviews


 • இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன் சென்ற ஜூன் மாதம் 20ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகரை நியமிக்கும் பணியில் அரசு ஈடுபட்டது. அதற்காக, பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராகக் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் மத்திய அமைச்சரவை நியமனக் குழுவால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப்பதவியில் தொடருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • தமிழ் இலக்கிய உலகில் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முழுநேர எழுத்தாளராக இயங்கிவரும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அவர் எழுதிய ‘சஞ்சாரம்’ நாவலுக்காக இந்த விருது வழங்கப்படவுள்ளது. கரிசல் வட்டாரத்தில் வாழ்ந்த நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்க்கை, வலிகள் ஆகியவற்றை மண் மணம் மாறாமல் அந்நாவலில் படைப்பாக்கியுள்ளார்.
 • Reviews


 • இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்துவந்த ஓ.பி.ராவத் நேற்று ஓய்வு பெற்ற நிலையில், 23ஆவது தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா இன்று (டிசம்பர் 2) பதவியேற்றுக்கொண்டார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுனில் கடந்த 1980ம் ஆண்டு ராஜஸ்தானில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார்.
 • Reviews


 • ஜி20 என்பது வளர்ச்சியடைந்த, வளரும் நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்த கூட்டமைப்பாகும். இந்த ஜி20 அமைப்பில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த ஆண்டு ஜி20 மாநாடு ஜெர்மனியில் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டுக்கான மாநாடு அர்ஜென்டினா தலைநகர் பியுனோஸ் அயர்ஸில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. நேற்று மாநாடு நிறைவடைந்த நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான மாநாடு இந்தியாவில் நடைபெறும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
 • Reviews


 • ரஷ்யாவிலிருந்து 3,000 கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள் வாங்க மத்திய அரசின் பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் செய்யும் கவுன்சில் நேற்று (டிசம்பர் 1) ஒப்புதல் அளித்துள்ளது.
 • Reviews


 • நாடோடிகள், ஈசன் படங்களில் நடித்த நடிகை அபிநயா, தற்போது தேர்தல் தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள தெலங்கானா மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, அம்மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. இதற்கான பிராண்ட் அம்பாசிட்டராக, பேச்சுத்திறன் இல்லாத மாற்றுத்திறனாளியான நடிகை அபிநயா நியமிக்கப்பட்டுள்ளார்.
 • Reviews


 • இந்த ஆண்டில் சர்வதேசத் திறன் தரவரிசைப் பட்டியலில் இரண்டு இடங்கள் பின்தங்கி 53வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஐ.எம்.டி பிசினஸ் ஸ்கூல் நடத்திய 'உலக திறமையான நாடுகள்- 2018' உலகளாவிய ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 63 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், முதலிடத்தில் சுவிட்சர்லாந்து உள்ளது. முதலீடு, சுலபமான முறையீடுகள் மற்றும் தயார்நிலை ஆகிய மூன்று முக்கியக் கூறுகளைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. உலகின் 63 நாடுகளில் 6,000 நிர்வாகிகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், முதல் பத்து இடங்களுக்குள் அமெரிக்காவும், ஆசிய நாடுகளும் இடம்பெறவில்லை.
 • Reviews


 • அதிக ஊதியம் வழங்கப்படும் இந்திய நகரங்களில் பெங்களூரு முதலிடத்தைப் பிடித்துள்ளது.
 • Reviews


 • கால நிலை மாற்றத்திற்கான உலக இணைய மாநாடு மார்சல் தீவுகளில் நடைபெறுகிறது என்று அந்நாட்டின் அதிபர் ஹில்டா ஹெய்ன் தெரிவித்துள்ளார்.
 • Reviews


 • சர்க்கரை உற்பத்தியில் பாரம்பரியமாக ஆதிக்கம் செலுத்திவரும் நாடான பிரேசிலைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
 • Reviews


 • இந்தியாவில் முதலாவதாக செவிலியர் பட்டயப் பயிற்சியில் சேரும் மூன்றாம் பாலினத்தவராக, தமிழகத்தின் வேலூரைச் சேர்ந்த திருநங்கையான S. தமிழ்ச்செல்வி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர உள்ளார். இந்த முடிவானது மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் D. ஜெயச்சந்திரனின் பரிந்துரையின் அடிப்படையில் அமைந்துள்ளது.
 • Reviews


 • சீனாவின் இயற்பியல் ஆய்வகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள், இயற்கை சூரியனை விட அதிக வெப்பமுடைய செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளனர். இச்செயற்கை சூரியனானது 100 மில்லியன் டிகிரி வெப்பம் கொண்டதாக உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 • Reviews


 • அரசு பத்திரங்கள் சில்லரை முதலீட்டை ஈர்க்கவும், எளிமையாக்கும் வகையிலும் “என்எஸ்இ கோ பிட்” என்ற புதிய மொபைல் செயலியையும், இணைய தளத்தையும் தேசிய பங்குச்சந்தை அறிமுகம் செய்துள்ளது. இதனை, செபி (SEBI) தலைவர் அஜய் தியாகி தொடங்கி வைத்துள்ளார்.
 • Reviews


 • 2017ம் ஆண்டின் இந்திரா காந்தி அமைதிக்கான விருது, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதானது மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக 1986-இல் உருவாக்கப்பட்டது. இவ்விருது ஆண்டுதோறும் இந்திரா காந்தியின் பிறந்த நாளான நவம்பர் 19ம் தேதி அன்று வழங்கப்பட்டு வருகிறது.
 • Reviews


 • பீகார் உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக “அமரேஷ்வர் பிரதாப் சாஹி” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, அம்மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் பதவிப் பிரமானம் செய்து வைத்துள்ளார். உயர்நீதி மன்றத்தின் நீதிபதிகளை Article – 217-ன் படி குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
 • Reviews


 • உலக கழிவறை தினம் – நவம்பர் 19 (World Toilet Day). உலகளவில் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ம் தேதி உலக கழிவறை தினமாக அனுசரிக்கப்படுகிறது. கழிவறைப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் 19ம் நாள் உலக கழிவறை கழகம் (world Toilet Organisation) ஏற்படுத்தப்பட்டதன் நினைவாக “உலக கழிவறை தினம்” கடைபிடிக்கப்படுகிறது. 2018ம் ஆண்டின் உலக கழிவறை தின கருத்துரு (Theme) “இயற்கை அழைக்கும் போது” (When Nature Calls).
 • Reviews


 • இந்தியாவின் முக்கியத் துறைமுகங்களின் சரக்குப் பரிவர்த்தனைகளில் எண்ணூர் காமராஜர் துறைமுகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
 • Reviews


 • இன்று, அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கான உலக அறிவியல் தினம் (World Science Day for Peace and Development). ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10ஆம் நாள், அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கான உலக அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருத்து: “அறிவியல், ஒரு மனித உரிமை” (Science, a Human Right).
 • Reviews


 • இந்த ஆண்டு முதல் பட்டப்படிப்பை முடிக்கும் அனைத்துப் பெண்களுக்கும் ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என பிகார் மாநில அரசு தெரிவித்துள்ளது. பெண் குழந்தையின் பிறப்பில் இருந்து பட்டப்படிப்பு முடிக்கும் வரை, மொத்தம் ரூ.54,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் ஏற்கனவே பிகார் மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது. இதனுடைய ஒரு அங்கமாக, இந்த திட்டம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் மட்டும், பிகாரில் 1 லட்சம் 20 ஆயிரம் பெண்கள் தங்கள் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 • Reviews


 • சீனாவைச் சேர்ந்த முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகின் முதல் AI செய்தி தொகுப்பாளரை அறிமுகம் செய்துள்ளது.
 • Reviews


 • நவம்பர் 6 முதல் டிசம்பர் 26-ம் தேதி வரை தேசிய சித்தா தின கொண்டாட்டம்

  ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம், ஹோமியோபதி போன்ற பல பழமையான மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகள் இந்தியாவில் உள்ளன. ஒவ்வொரு மருத்துவ முறையையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அதற்கான தினத்தை அறிவித்து கொண்டாடி வருகிறது. சித்த மருத்துவத்தை, 18 சித்தர்கள் தோற்றுவித்ததாக வரலாறு கூறுகிறது. சித்த மருத்துவத்தின் முன்னோடியும், 18 சித்தர்களில் முதன்மையானவருமான அகத்திய முனிவர் பிறந்த ஆயில்ய நட்சத்திரம் வரும் நாள், ஆண்டுதோறும் தேசிய சித்தா தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அறிவித்தது. அதன்படி, கடந்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி முதல் தேசிய சித்தா தினம் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு இரண்டாவது தேசிய சித்தா தினம் வரும் நவ. 6-ம் தேதி தொடங்கி டிசம்பர் 26-ம் தேதி வரை 50 நாட்களுக்கு கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • Reviews