Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள்
 • ஐக்கிய நாடுகள் சபை அஞ்சல் அமைப்பானது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தபால் தலைகளை வெளியிட்டது. சர்வதேச அளவில் பரிமாறப்படும் கடிதங்களில் ஒட்டத்தக்க வகையில் இந்த தபால் தலைகள் உள்ளன. இதன் விலை 1.15 அமெரிக்க டாலர் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, சர்வதேச தபால் தலைகளுக்கான சராசரி விலையாகும். மொத்தமாக 10 தபால் தலைகளுடன், ஐக்கிய நாடுகள் சபையின் பெரிய படம் ஒன்றும் இந்த அட்டையில் உள்ளது. தீபாவளியைக் கொண்டாடும் வகையில் ஹேப்பி தீவாளி என்ற வாசகங்களும், தீபங்களின் படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
 • Reviews


 • உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளி திருநாள் அம்மாநில அரசின் சார்பில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அயோத்தியில் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை மூன்று நாட்கள் தீப உற்சவம் நடைபெற்றது. ராம்கதா பூங்காவில் நேற்று (நவம்பர் 6) நடைபெற்ற தீபாவளி விழாவில் சிறப்பு விருந்தினராக தென்கொரிய அதிபர் மனைவி கிம் ஜங் சுக் கலந்துகொண்டார். “உத்தரப் பிரதேசத்தின் பைசாபாத் மாவட்டத்தின் பெயர் அயோத்தி என்று பெயர் மாற்றம் செய்யப்படும்” என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
 • Reviews


 • பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா (பிசிஐ) சார்பில் கடந்த 2012இல் இருந்து ஆண்டுதோறும் பத்திரிகை துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு விருது தொடர்பாக பிசிஐ நேற்று (நவம்பர் 5) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மூத்த பத்திரிகையாளரும் தி இந்து குழுமத்தின் தலைவருமான ராமுக்கு ராஜாராம் மோகன் ராய் விருது அறிவிக்கப்பட்டுள்ளது
 • Reviews


 • ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைய தேர்தலுக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2019 முதல் 3 ஆண்டுகளுக்கு, மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக பதவி வகிக்கும் இந்தியா. இது குறித்து வாக்கெடுப்பின் போது, 188 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
 • Reviews


 • அர்ஜெண்டினாவின் பியோனஸ் ஏர்ஸ் நகரில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக்கில் அக்டோபர் 10ஆம் தேதி நடந்த போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவின் செளராப் சவுதரி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
 • Reviews


 • மத்திய அரசில் அட்டார்னி ஜெனரலுக்கு அடுத்ததாக இரண்டாவது முக்கிய பதவியாக சொலிசிட்டர் ஜெனரல் பதவி கருதப்படுகிறது. இப்பதவியில் இருந்த மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து இந்தப் பதவி கடந்த 11 மாதங்களாக காலியாவே இருந்து வந்தது. இந்த நிலையில் சொலிசிட்டர் ஜெனரல் பதவிக்கு மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா நேற்று (அக்டோபர் 10) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றி வந்தார்.
 • Reviews


 • இன்று உலக கண் பார்வை தினம் (World Sight Day) உலக அளவில் ஏறத்தாழ 36 மில்லியன் மக்களுக்குக் கண் பார்வை கிடையாது. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை உலகக் கண் பார்வை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சிந்தனை: எங்கும் கண் பராமரிப்பு (Eye Care Everywhere).
 • Reviews


 • சர்வதேச விளம்பரச் சங்கமானது இந்தியா உள்ளிட்ட 76 உலக நாடுகளில் சேவை வழங்குகிறது. ரோமானியாவில் உள்ள புக்கரெஸ்ட்டில் நடந்த சர்வதேச விளம்பர சங்கத்தின் வாரியக் கூட்டத்தில் ஸ்ரீனிவாசன் சுவாமி புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவிலிருந்து சர்வதேச விளம்பரச் சங்கத்துக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் இவர்தான். இந்தியாவிலிருந்து சர்வதேச விளம்பரச் சங்கத்தின் தலைமைப் பொறுப்பேற்பது தனது வாழ்நாள் சாதனையாகும் என்று ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.
 • Reviews


 • மகாராஷ்டிர மாநிலத்தில் கொங்கன் பகுதியில் அல்போன்சா ரக மாழ்பழங்கள் அதிகமாக விளைகின்றன. இதனை மாம்பழங்களின் அரசன் என்று கூறுவார்கள். ஹபஸ் என்று கூறப்படும் இந்த மாம்பழம் உலக அளவில் புகழ்பெற்றது. ஜப்பான், கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பழத்துக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாகக் கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில், மகாராஷ்டிராவின் ரத்னகிரி, சிந்துதுர்க் ஆகிய பகுதிகளிலும் விளையும் அல்போன்சா மாம்பழங்களுக்கு புவிசார் குறியீடு (Geographical Indication) அங்கீகாரம் கிடைத்துள்ளது.
 • Reviews


 • மூத்த குடிமக்களுக்கு சேவை மற்றும் வசதிகளை வழங்கும் சிறந்த மாவட்ட பஞ்சாயத்துக்கான “வயோஸ் ஸ்ரீத சம்மன் – 2018’ விருது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதாரவியலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சர்வதேச நாணய நிதியம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதாரவியலாளராக இருக்கும் மவுரிஸ் அப்ஸ்ட்ஃபெல்டு இந்த ஆண்டின் இறுதியில் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவருக்குப் பதிலாக கீதா கோபிநாத் அந்தப் பொறுப்பிற்கு நியமிக்கப்படவுள்ளார். உலகின் சிறந்த பொருளாதார அறிஞர்களில் கீதா கோபிநாத்தும் ஒருவர். அவர் கல்வித் துறையில் மிகச் சிறப்பான அனுபவம் கொண்டவர்.
 • Reviews


 • மத்தியப் பிரதேச மாநிலத்தில், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்களுக்கு மாதாந்தர ஓய்வூதியம் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு.
 • Reviews


 • 2018-19ஆம் நிதியாண்டுக்கான ட்ரான்ஸ் யூனியன் சிபில் நிறுவனம் சமீபத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டது. இதில், இந்தியாவைப் பொறுத்தவரை கடன் வாங்குவதில் மகாராஷ்டிராவுக்கு அடுத்த மாநிலமாகத் தமிழகம் இருப்பது தெரியவந்துள்ளது.
 • Reviews


 • நாட்டின் நூறாவது விமான நிலையமும், சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையமுமான பாக்யோங் விமான நிலையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம், கடந்த 20 ஆண்டுகளில் உலகப் புகழ் பெற்ற உயிரி சுற்றுலாத் தலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. மாநிலம் முழுவதும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வரும் முதல் மாநிலம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
 • Reviews


 • மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் 16 பெட்டிகளைக் கொண்ட பறக்கும் அதிவிரைவு ரயிலை பெரம்பூர் ஐசிஎஃப் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ரயிலானது 2018ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டுள்ளதால், இதற்கு ’ரயில் 18’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையிலிருந்து மைசூர், கோவை, திருப்பதி போன்ற பெருநகரங்களுக்குச் செல்லும் ‘சதாப்தி’ ரயிலுக்கு பதிலாக இந்த ரயில் இயக்கப்படவுள்ளது.
 • Reviews


 • உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் 16ஆவது விமான நிலையமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் திகழ்கிறது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்காவின் அட்லாண்டா ஹர்ட்ஸ்பீல்டு ஜாக்சன் விமான நிலையம் உள்ளது.
 • Reviews


 • எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன் முன்னெடுத்துச் செல்லும் ‘இந்தியா-2047’ திட்டத்தின் ஒரு பகுதியாக 'இம்தாத் இந்தியா' என்ற தேசிய அளவிலான தகவல் மற்றும் சேவைகள் ஒருங்கிணைப்பு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை மக்களுக்கான அரசின் நலத் திட்டங்களைப் பற்றிய தகவல்களை வழங்குவது, அனைத்து குடிமக்களும் அரசின் பல்வேறு அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களை பெறுவதை உறுதி செய்வது, அனைவருக்கும் அரசின் நலத் திட்டங்களைப் பெறுவதற்கு உதவுவது 'இம்தாத் இந்தியா' நெட்வொர்க்கின் நோக்கம்.
 • Reviews


 • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக பதவி வகித்த கோபி அன்னான், சுவிட்சர்லாந்து நாட்டின் பெர்ன் நகரத்திலுள்ள மருத்துவமனையில் இன்று (ஆகஸ்ட் 18) காலமானார். அவருக்கு வயது 80. இதனை அவரது குடும்பத்தினரும், அன்னான் பவுண்டேஷனை சேர்ந்தவர்களும் தெரிவித்துள்ளனர். வட ஆப்ரிக்க நாடான கானாவைச் சேர்ந்த கோபி அன்னான் 8-4-1938 அன்று பிறந்தார். 1997ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டுவரை தொடர்ந்து இரண்டு முறை ஐநா பொதுச் செயலாளராக பதவி வகித்துள்ளார். பதவிக்காலம் முடிந்த பிறகு சிரியாவுக்கான ஐநா தூதராக பணியாற்றினார். சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார். ஓய்வுக்குப் பிறகு சுவிட்சர்லாந்திலுள்ள ஒரு கிராமத்தில் வசித்துவந்தார். உலகத்திலேயே மிகவும் உயர் பதவியில் அமர்ந்த முதல் வட ஆப்ரிக்க கறுப்பினத்தைச் சேர்ந்தவர் அன்னான். 2001ஆம் ஆண்டு "ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகத்திற்காக உழைத்ததற்காக" கோபி அன்னான் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசு விருது வழங்கப்பட்டது.
 • Reviews


 • 1957ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவின் இரண்டாவது பாராளுமன்ற தேர்தலில், பாரதிய ஜன சங்கம் சார்பில் உத்தர பிரதேசத்தில் பல்ராம்பூர் தொகுதியில் வாஜ்பாய் முதல் முறையாக போட்டியிட்டார். லக்னோவிலிருந்து தொடர்ந்து 5 முறை எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவற்றை நினைவுகூறும் விதமாகவே ஆக்ரா, கான்பூர், பல்ராம்பூர், லக்னோ ஆகிய 4 இடங்களில் நினைவிடம் அமைக்கப்படும் என்று யோகி ஆதித்தியநாத் அறிவித்துள்ளார். பாராளுமன்ற தொகுதியாக இருந்து வந்த பல்ராம்பூர் 2008ஆம் ஆண்டு தொகுதி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
 • Reviews


 • பாகிஸ்தானின் 22ஆவது பிரதமராக இம்ரான் கான் இன்று (ஆகஸ்ட் 18) காலை பதவி ஏற்றுக்கொண்டார். பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரு தினங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி, 116 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக அமைந்தாலும், அதற்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அவருக்கு தேவைப்பட்ட 172 வாக்குகளை விட கூடுதலாக 4 வாக்குகள் கிடைத்தன. எனவே அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • Reviews


 • 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகர்தா நகரில் துவக்க விழாவுடன் இன்று கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஆசிய போட்டிகளை இந்த ஆண்டு இந்தோனேசியாவின் ஜகர்தா, பலெம்பங் ஆகிய இரு நகரங்கள் இணைந்து நடத்தவுள்ளது. இன்று (ஆகஸ்ட் 18) நடைபெறும் துவக்கவிழா நிகழ்ச்சியில் இந்தோனேசிய புகழ் அங்கன், ரைசா, துலுஸ், புத்ரி ஆயு, வியா வாலேன் உள்ளிட்ட பாடகர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். இதனையடுத்து 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடக்கும்.
 • Reviews


 • சூரியக் குடும்பம் பற்றிய சில குறிப்புகள்: 1. நாம் வாழும் சூரியக் குடும்பத்தில், ஒரு நட்சத்திரம் (சூரியன்), எட்டுக் கோள்கள், ஐந்து குறுங்கோள்கள் (Dwarf கோள்கள்), 181 நிலாக்கள், 5,66,000 சிறிய கோள்கள் (Asteroids), 3,100 வால் விண்மீன்கள் (Comet) இருக்கின்றன. 2. சூரியக் குடும்பத்தில் அனைத்துமே சூரியனையே சுற்றி வருகின்றன. 3. சூரியக் குடும்பத்தின் அளவு, பூமிக்கும் சூரியனுக்குமான தொலைவை விட 1,25,000 மடங்கு பெரியது! 4. சூரியக் குடும்பத்தின் அளவில் 99.86% சூரியனில் இருக்கிறது! 5. சூரியனுக்கு அருகில் இருக்கும் நான்கு கோள்கள் பாறைகளாலும் உலோகங்களாலும் ஆனவை. 6. மீதமுள்ள நான்கு கோள்கள் வாயுவால் ஆனவை! 7. மெர்க்குரிதான் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோள். ஆனால், அங்கு வளி மண்டலம் இல்லாத காரணத்தால், வீனஸ்தான் மிகவும் வெப்பமான கோளாகக் கருதப்படுகிறது. 8. சூரியக் குடும்பத்தின் மிகப் பெரிய நிலவின் பெயர் Ganymede. 9. வியாழன் (ஜுபிட்டர்), சனி (ஸடர்ன்) ஆகிய கிரங்கள் முழுவதும் ஹைட்ரஜன், ஹீலியம் ஆகிய வாயுக்களால் ஆனது. 10. யுரேனஸ், நெப்ட்யூன் ஆகிய கிரகங்கள் பனிக்கட்டியால் ஆனவை!
 • Reviews


 • நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நைபால் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். கடந்த 1932ஆம் ஆண்டு, மேற்கிந்திய தீவுகளின் டிரினாட் நகரில் வி.எஸ்.நைபால் பிறந்தார். இவரது தந்தை சீபிரசாத் நைபாலின் பெற்றோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இங்கிருந்து மேற்கிந்திய தீவுகளுக்கு குடிபெயர்ந்தனர். பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்தார். ‘ஏ ஹவுஸ் பார் மிஸ்டர்’ உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். கடந்த 1971ல் ’இன் ஏ ப்ரீ ஸ்டேட்’ என்ற புத்தகத்துக்காக புக்கார் விருதை வென்றார். இதையடுத்து 2001ல் நோபல் பரிசு பெற்றார். முதல் மனைவி 1996ல் மறைந்த பின், பாகிஸ்தான் பத்திரிகையாளர் நதிரா அல்வியை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.
 • Reviews


 • 2023ஆம் ஆண்டில் உலகின் நம்பர் ஒன் பணக்கார அந்தஸ்தை கத்தார் இழக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சூதாட்ட வருவாய் அடிப்படையில் உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது கத்தார். சீனாவின் மக்காவு நகரில் பெருகியுள்ள சூதாட்டத்தினால் அந்த நகரம் 2023ஆம் ஆண்டு கத்தாரை முந்தி முதலிடம் பிடிக்கும் என்று ஐ.எம்.எஃப். அறிக்கை தெரிவிக்கிறது.
 • Reviews


 • சோலார் சக்ரா திட்டத்தை நிறைவேற்றி ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாக ஒன்றிய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை இணையமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
 • Reviews


 • நாடு முழுவதும் ஸ்மார்ட் சிட்டியை உருவாக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம் சூரத் நகரப் பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட பேருந்து எங்கு செல்கிறது, எத்தனை மணிக்குப் பேருந்து நிலையத்துக்கு வந்து சேரும் என்பது உள்ளிட்ட பல தகவல்களைச் செயலி (APP) வாயிலாகப் பயனாளிகள் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காகத் தனிக் கட்டுப்பாட்டு அறையும் செயல்படுத்தப்படுகிறது. இந்தக் கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள், பேருந்து சேவை குறித்த அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பயனாளிகளுக்குச் செயலி மூலம் தெரியப்படுத்துகின்றனர்.
 • Reviews


 • அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு வணிகப் பத்திரிகையான பார்ச்சூன், உலகின் மிகப் பெரிய 500 நிறுவனங்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 55 இடங்கள் முன்னேறி 148ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற ஆண்டில் இந்நிறுவனம் 203ஆவது இடத்தில் இருந்தது. பார்ச்சூன் பத்திரிகையின் மதிப்பீடுகளின் படி, 2017-18 நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருவாய் 25.5 சதவிகிதம் ஏற்றம் கண்டு 62.3 பில்லியன் டாலரை ஈட்டியுள்ளது. பார்ச்சூன் பட்டியலில் இந்தியாவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் கார்பரேசன் 168ஆவது இடத்திலிருந்து 137ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்நிறுவனம் சென்ற நிதியாண்டில் மொத்தம் 65.9 பில்லியன் டாலர் வருவாயைப் பெற்றுள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 197ஆவது இடத்திலும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 216ஆவது இடத்திலும், டாடா மோட்டார்ஸ் 247ஆவது இடத்திலும், பாரத் பெட்ரோலியம் 295ஆவது இடத்திலும் உள்ளன. பார்ச்சூன் பத்திரிகையின் இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் முதலிடத்திலும், சீனாவின் ஸ்டேட் கிரிட் இரண்டாவது இடத்திலும் உள்ளன. டொயோடா, ஃபோக்ஸ்வாகன், ஆப்பிள், சாம்சங், அமேசான் ஆகிய நிறுவனங்கள் முறையே 6ஆவது, 7ஆவது, 11ஆவது, 12ஆவது மற்றும் 18ஆவது இடத்தில் இருக்கின்றன.
 • Reviews


 • தென்னிந்திய மாநிலங்களில், தமிழகத்தில் தான் அதிகபட்சமாக ஆண்டிற்கு 2.5 லட்சம் மாணவர்கள், இந்தி தேர்வை எழுதி வருகிறார்கள் என சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தி மொழியை வளர்க்க வேண்டும் என்பதற்காக, 1918ஆம் ஆண்டில் சென்னையில் இந்தி பிரசார சபாவை மகாத்மா காந்தி துவக்கினார். தற்போது, இந்த அமைப்பு நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில், தமிழகத்தில் இந்தி கற்கும் மாணவர்களின் எண்ணி்க்கை அதிகரித்து வருகிறது.
 • Reviews


 • 2020ஆம் ஆண்டுக்குள் வேளாண் சந்தைகள் மின்மயமாக்கல் திட்டம்

  2020ஆம் ஆண்டுக்குள் 22,000 கிராமப்புற வேளாண் சந்தைகள் தேசிய மின்னணு வேளாண் சந்தையுடன் இணைக்கப்படுமென ஒன்றிய வேளாண்துறை இணையமைச்சர் கஜேந்திர சிங் ஷேக்காவட் கூறியுள்ளார். புவனேஷ்வரில் ஜூன் 29ஆம் தேதி நடந்த அக்ரி விகாஸ்-2018 நிகழ்வில் கலந்துகொண்டு கஜேந்திர சிங் ஷேக்காவட் பேசுகையில், “நாட்டில் வேளாண் சந்தைகளை மின்னணு வேளாண் சந்தைத் திட்டத்துடன் இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதுவரையில் 585 வேளாண் சந்தைகள் மின்னணு வேளாண் சந்தைத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. மின்னணு வேளாண் சந்தைகள் மூலம் விவசாயிகள் இடைத்தரகர்களின்றி நேரடியாக தங்களது உற்பத்திப் பொருட்களை விற்கலாம். இதன்மூலம் விவசாயிகள் தங்களது லாபத்தைப் பெருக்கிக் கொள்ளலாம். விவசாயத் துறையில் தொழில்முனைவோர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இதன்மூலம் இந்தியாவின் உணவு உற்பத்தித் தேவையை நிவர்த்தி செய்யலாம்" என்றார்.
 • Reviews


 • பாரத் 6 விதிகளை பூர்த்தி செய்யாத வாகனங்களை 2020 ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உற்பத்தி செய்வதற்கும் தடை செய்துள்ளது. பிஎஸ் 4 விதிமுறைகள்படி தயாரிக்கப்பட்ட வாகனங்களை 2020-ம் ஆண்டு ஜூன் வரை பதிவு செய்யலாம். மார்ச் 2020 வரை தயாரிக்கலாம்.
 • Reviews


 • ஊழல் தடுப்பு சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

  லஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் 7 ஆண்டு சிறைத்தண்டனை தண்டனை அளிக்கப்படும் என்ற புதிய திருத்தங்களுடன் ஊழல் தடுப்பு சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் நேற்று (24.07.2018)நிறைவேறியது.ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பின் இந்த சட்ட முன்வரைவு அமலுக்கு வரும்.
 • Reviews


 • சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வகைப்படுத்த மசோதா

  இந்தச் சட்டத்திருத்தங்களின்படி, ஆண்டுக்கு ரூ.5 கோடி வரை விற்றுமுதல் பெறும் ஒரு தொழில் நிறுவனம், சிறு நிறுவனமாகக் கருதப்படும். ஒரு தொழில் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.5 கோடி முதல் ரூ.75 கோடி வரை விற்றுமுதல் பெற்றால், அது குறு நிறுவனமாகக் கருதப்படும். ஆண்டுக்கு ரூ.75 கோடி முதல் ரூ.250 கோடி வரை விற்றுமுதல் பெறும் நிறுவனங்கள் நடுத்தர நிறுவனங்களாகக் கருதப்படும்.
 • Reviews


 • ருவாண்டாவில் இந்திய பிரதமர் மோடி

  ருவாண்டா நாட்டுக்குச் சென்ற முதல் பிரதமர் என்ற பெருமையை இந்திய பிரமதர் மோடி பெற்றார். ருவாண்டா அரசு அந்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக கிரிங்கா சமூக பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த கிரிங்கா திட்டத்தின் படி ஏழைக் குடும்பத்துக்கு ஒரு பசு மாடு அரசு சார்பில் வழங்கப்படும். அந்தப் பசு மாடு கன்று போடும்போது, அந்தக் கன்றை அண்டை வீட்டாருக்குக் கொடுத்து, பரஸ்பரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பது திட்டமாகும். இந்தத் திட்டத்துக்காக இந்தியா சார்பில் பிரதமர் மோடி 200 பசு மாடுகளை ருவாண்டா நாட்டுக்கு அன்பளிப்பாக இன்று வழங்கினார்.
 • Reviews


 • 2019ஆம் ஆண்டு செயற்கைக்கோளைச் செலுத்தும் ஃபேஸ்புக்

  உலகம் முழுக்க இணையச் சேவையை வழங்கும் நோக்கில் ஃபேஸ்புக் நிறுவனம் 2019ஆம் ஆண்டு தனி செயற்கைக்கோள் ஒன்றை நிறுவத் திட்டமிட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் 'அதேனா' என்னும் செயற்கைக்கோளை தயாரித்து விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
 • Reviews


 • போக்குவரத்துத் துறையை மேம்படுத்த இந்தியா - இங்கிலாந்து ஒப்பந்தம்

  நாட்டின் ஒட்டுமொத்த பொதுப் போக்குவரத்துச் சேவையை மேம்படுத்துவதற்கு உதவி கோரும் வகையில் இங்கிலாந்துடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் பொதுமக்களுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில், மாநகர் லண்டன் ஆணைய சட்டம் 1999-ன் கீழ் உருவாக்கப்பட்ட லண்டனுக்கான போக்குவரத்து அமைப்பிற்கும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கும் இடையே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
 • Reviews


 • தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டம் 2018 - 2030

  தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன்கீழ், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் உருவாக்கப்பட்ட பேரிடர் மேலாண்மை தொலைநோக்குத் திட்டம் 2018 - 2030-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜப்பான் நாட்டின் சென்டாய் நகரில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் அடுத்த 15 ஆண்டுகளுக்கான பேரிடர் துயர் துடைப்புக்காக 4 இலக்குகள், 7 பரிந்துரைகளுடன் சென்டாய் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த கட்டமைப்பு அடிப்படையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்குத் திட்டம் உரு வாகியுள்ளது.
 • Reviews


 • பயணிகளுக்கு சேவைகளை அளிப்பதில் உலகிலேயே பெங்களுரு விமான நிலையம் முதலிடம்

  4.67 புள்ளிகளைப் பெற்றுப் பெங்களுரு விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி விமான நிலையம் 4.53 புள்ளிகளுடன் இரண்டாம் இடமும், கனடாவின் டொரண்டோ விமான நிலையம் 4.44 புள்ளிகளுடன் மூன்றாமிடம் பிடித்துள்ளது.
 • Reviews


 • சுகாதாரத்திற்குத் தனி சேனல் தொடங்க நிதி ஆயோக் முடிவு

  ஆயுஷ்மான் பாரத் என்ற மத்திய அரசின் சுகாதார இன்சுரன்ஸ் திட்டத்தை 1 கோடி மக்களிடம் கொண்டு செல்வதற்காக சுகாதாரத்திற்கென ஒரு தொலைக்காட்சி சேனல் தொடங்கப்பட உள்ளது.
 • Reviews


 • தொடர்ந்து 3-வது ஆண்டாக சிறந்த நிர்வாகத்தில் கேரளா முதலிடம்

  சமூக, பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்த அட்டவணை வெளியிடப்படுகிறது. கேரள மாநிலம் தொடர்ந்து 3-வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு 2-வது இடத்தைப் பிடித்துது.இவற்றைத் தொடர்ந்து சிறந்த நிர்வாகத்தை அளிக்கும் மாநிலங்கள் பட்டியலில் தெலங்கானா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்கள் இடம் பிடித்துள்ளன. இந்த அட்டவணையில் மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், பிஹார் ஆகிய மாநிலங்கள் கடைசி இடத்தில் உள்ளன.
 • Reviews


 • சபரிமலையில் பிளாஸ்டிக் பயன்படுத்த முழுமையான தடை விதித்தது கேரள உயர்நீதிமன்றம்

  கேரளாவில் உள்ள சபரிமலையில் பிளாஸ்டிக் பயன்படுத்த முழுமையான தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. புகழ்மிக்க ஐயப்ப ஸ்வாமி உள்ள மலை சுற்றுச்சூழலுக்கு உகந்ததது என்பதை உறுதி செய்யுமாறு அவ்வாணையில் கூறபட்டுள்ளது
 • Reviews