Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள்
  • சுகன்யா சம்ரிதி திட்டத்துக்கான குறைந்தபட்ச முதலீட்டு தொகை 250 ரூபாயாக குறைப்பு

    சுகன்யா சம்ரிதி திட்டத்துக்கான குறைந்தபட்ச ஆண்டு முதலீட்டு தொகை 1,000 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தில் பலரும் இணைவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
  • Reviews


  • 28 சதவீத ஜிஎஸ்டி வரம்பில் 35 பொருட்கள் மட்டுமே இருக்கும்

    சரக்கு மற்றும் சேவை வரியில் உச்சபட்ச வரிவிகிதம் 28 சதவீதமாகும். கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட போது 226 பொருட்கள் 28 சதவீத வரி விதிப்பில் இருந்தன. கடந்த ஓர் ஆண்டில் 191 பொருட்கள் உச்சபட்ச வரி வரம்பில் இருந்து குறைக்கப்பட்டிருக்கின்றன ஜூலை 27-ம் தேதி முதல் 35 பொருட்கள் மட்டுமே உச்சபட்ச வரி பிரிவில் இருக்கும்.
  • Reviews


  • உலக பணக்காரர் பட்டியலில் 14ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார் அம்பானி

    புளும்பெர்க் நிறுவனத்தின் உலக பில்லியனர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 14ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
  • Reviews


  • காலே கிரிக்கெட் மைதானம் அகற்றப்படமாட்டாது என்று இலங்கை அரசு அறிவிப்பு

    இலங்கையின் தென் மாகாணங்களின் தலைநகரான காலே அந்நாட்டில் பெரிய நகரங்களில் ஒன்று. 2006-ம் ஆண்டு காலே கோட்டையில் இருந்து கிரிக்கெட் போட்டிகளை பார்வையாளர்கள் பார்த்து ரசிப்பதற்கு பார்வையாளர் அரங்கம் மற்றும் கட்டிடங்களும் புதிதாகக் கட்டப்பட்டன. காலே கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட பார்வையாளர்கள் அரங்கத்தையும், கட்டிடங்களையும் அகற்ற வேண்டும் இல்லாவிட்டால் காலே கோட்டையை மரபுரிமை பட்டியலில் இருந்து நீக்க வேண்டிய நிலை ஏற்படும் என யுனெஸ்கோ நிறுவனம் 2007-ம் ஆண்டு முதல் இலங்கை அரசுக்கு தெரிவித்து வந்தது. இலங்கை நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் கேட்கப்பட்டபோது அந்நாட்டு இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் சாகல ரத்னாயக்க பதிலளிக்கையில், “இந்த மைதானத்தில் தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச போட்டிகள் எப்போதும் போல நடைபெறும். 2006-ம் ஆண்டு ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் காலே கோட்டையில் கட்டப்பட்ட கிரிக்கெட் பார்வையாளர் அரங்கம், கட்டிடங்கள் மட்டுமே அகற்றப்படும”; எனத் தெரிவித்தார
  • Reviews


  • டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 28ஆவது கூட்டம்

    ஜிஎஸ்டி தொடர்பான விவாதங்களுக்கும், பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதங்கள் குறித்து ஆலோசிக்கவும் ஜூலை 21ஆம் தேதி தேசியத் தலைநகர் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 28ஆவது கூட்டம் கூடியது.
  • Reviews


  • ஜப்பானில் நடைபெறவுள்ள 2020 ஒலிம்பிக் சின்னம் வெளியீடு

    நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் திருவிழா, கடந்த 2016 ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்றது. 2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறவுள்ளன. “ஹமிரைடோவா' என்று பெயரிடப்பட்டுள்ள நீல நிற சின்னம் ஒலிம்பிக் தொடருக்கும், “ஹசோமெய்டி' என்று பெயரிடப்பட்டுள்ள சிகப்பு நிற சின்னம் பாராலிம்பிக் தொடருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • Reviews


  • செப்டம்பர் 6-ம் தேதி வெளியுறவு, பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த இந்திய - அமெரிக்க அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

    இந்திய - அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தை வரும் செப்டம்பர் 6-ம் தேதி டெல்லியில் நடைபெறும். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் சந்தித்து பேசுவார்கள். அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ{ம் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் சந்தித்து பேசுவார்கள்.
  • Reviews


  • . பிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

    ஜூலை 23 ஆம் தேதி ருவாண்டாவுக்கு செல்கிறார் மோடி, அங்கு வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப அமைப்புகள், நிறுவனங்களை பார்வையிடுகிறார். ருவாண்டாவிலிருந்து, உகண்டாவிற்கு 24 -ம் தேதி பயணம் செய்கிறார். அங்கு நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கிறார். 25-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Reviews


  • மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி;

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது.இதைத் தொடர்ந்து மக்களவையில் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. சுமார் 12 மணி நேர விவாதத்துக்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இறுதியில் அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகள் கிடைத்தன. எதிராக 126 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் தீர்மானம் தோல்வி அடைந்தது.
  • Reviews


  • தமிழகத்தில் முதன்முறை: கும்பகோணத்தில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்புகளை சீரமைக்க ரோபோட்

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகராட்சியில் 2008-09 ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 5,309 மேன்ஹோல் எனப்படும் ஆளிறங்கும் குழாய்கள் மற்றும் 125.71 கிலோமீட்டர் நீளத்திற்கு குழாய் உள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக கும்பகோணம் நகராட்சியில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்புகளை சீரமைக்க ரோபோட் இயந்திரம் பரிசோதனை முறையில் இயக்கி வைக்கப்பட்டது.
  • Reviews


  • மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர்

    14-வது மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் லண்டனில் இன்று தொடங்குகிறது. 16 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடர் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை லண்டனில் உள்ள லீ வாலி ஹாக்கி மற்றும் டென்னிஸ் சென்டரில் நடைபெறுகிறது.
  • Reviews


  • இஸ்ரேல் யூத நாடாக பிரகடனம்: புதிய சட்டம் நிறைவேற்றம்

    1948 மே 14-ம் தேதி இஸ்ரேல் நாடு உருவானது. இஸ்ரேலில் 85.5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இதில் 74.5 சதவீதம் பேர் யூதர்கள். 20.9 சதவீதம் பேர் பாலஸ்தீனர்கள். இதர இனங்களைச் சேர்ந்த 4.6 சதவீதம் பேரும் அந்த நாட்டில் வசிக்கின்றனர். மதரீதியாக 74.7 சதவீத யூதர்கள், 17.7 சதவீத முஸ்லிம்கள், 2 சதவீத கிறிஸ்தவர்கள் உள்ளனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியபோது, “இஸ்ரேல், யூதர்களின் நாடு என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
  • Reviews


  • சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி தஹில் ரமணி

    சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி தஹில் ரமணி நியமிக்கப்பட்டுள்ளார். 2017 ஏப்ரல் 5-ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி செயல்பட்டு வருகிறார். இவர் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
  • Reviews


  • 2021ஆம் ஆண்டிற்குள் லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை

    லண்டன் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே தமிழ் மொழிக்கான துறை இயங்கி வந்தது. ஆனால் மாணவர் சேர்க்கை குறைந்ததால், 1995இல் இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை மூடப்பட்டது. 2021ஆம் ஆண்டிற்குள் தமிழ் இருக்கை நிறுவ வேண்டும் என்று, 54 கோடி ரூபாய் நிதி திரட்டும் பணியில் தமிழ் அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
  • Reviews


  • வேகமாக வளரும் இந்திய பொருளாதாரம் - ஆசிய மேம்பாட்டு வங்கி

    2018-19 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 விழுக்காடாகவும், 2019-20ஆம் நிதியாண்டில் 7.6 விழுக்காடாகவும் இருக்கும்.
  • Reviews


  • குஜராத் பாரம்பரிய சின்னத்துடன் புதிய 100 ரூபாய் நோட்டு

    லேவண்டர் நிறத்தில் விரைவில் ரூ.100 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது. புதிய 100 ரூபாய் நோட்டில் குஜராத் மாநிலத்தின் பாரம்பரிய சின்னமான ராணி கி வாவ் படம் இடம் பெற்றுள்ளது. புதிய ரூ.100 நோட்டுகள் வெளியிடப்பட்டாலும், ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளும் செல்லுபடியாகும். புதிய 100 ரூபாய் நோட்டு 66மிமீ ,142மிமீ நீள,அகலம் கொண்டதாக இருக்கும்.
  • Reviews


  • 15 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் நாளை நம்பிக்கையில்லாத் தீர்மானம்

    2003-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி அப்போது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படவே இல்லை. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 75-ன்படி, அமைச்சரவைதான் மக்களவைக்கு ஒட்டுமொத்த கூட்டுப் பொறுப்பாகும். பிரதமர் தலைமையிலான இந்த அமைச்சரவை செயல்பட மக்களவை உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கிறார்கள். மக்களவை விதி198-ன்படி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர அனுமதிக்கிறது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர ஒரு எம்.பி. மக்களவை சபாநாயகரிடம் மனு அளித்தால், அதை 50 எம்.பி.க்கள் ஆதரிக்க வேண்டும்.
  • Reviews


  • ‘குடியரசுத் தலைவர்’ காருக்கும் பதிவு எண் கொண்டுவர டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

    குடியரசுத் தலைவர்இ துணை குடியரசுத் தலைவர், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் பயணம் செய்யும் கார்களும், உரிய அதிகாரிகளிடம் பதிவு செய்யப்பட வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • Reviews


  • ஆப்கானிஸ்தானில் பள்ளிக்குச் செல்லாத 85 % பெண் குழந்தைகள்

    ஆப்கானிஸ்தானில் 2002ஆம் ஆண்டிலிருந்து பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்நாட்டுச் சண்டை, வறுமை, குழந்தைத் திருமணம், பாலினப் பாகுபாடு போன்றவற்றின் காரணமான பள்ளிக்குச் செல்வதில்லை. அனைத்து இடங்களுக்கும் வன்முறை பரவிவருவதால் பல பள்ளிகள் மூடப்பட்டன. குறிப்பாக, பெண் குழந்தைகள் பள்ளி வகுப்பறைக்குள் காலடி கூட எடுத்து வைத்ததில்லை. ஏழு வயது முதல் 17 வயது வரையிலான 3.7 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை. அதில் பெண் குழந்தைகள் 2.7 மில்லியன். தலிபான்கள் கடுமையான இஸ்லாமிய ஆட்சிக்கு நாட்டைத் திருப்ப முயன்றபோது, பெண் குழந்தைகள் பள்ளிக்குப் போகக் கூடாது எனக் கட்டாயப்படுத்தப்பட்டது. 85 சதவிகிதப் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை. இந்தாண்டின் ஏப்ரல் மாதத்தில் தீவிரவாதிகள் நடத்திய வன்முறைத் தாக்குதல்கள் நூற்றுக்கணக்கான தனியார் பள்ளிகளை மூட வழிவகுத்தது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாததால், அவர்கள் துஷ்பிரயோகம், சுரண்டல் மற்றும் தீவிரவாதத்துக்கு ஆட்சேர்ப்பு போன்ற ஆபத்தில் சிக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
  • Reviews


  • பணக்காரர் பட்டியல்: உச்சத்தில் ஜெஃப் பெசோஸ்

    உலகின் நம்பர்.1 பணக்காரரான ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 150 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.
  • Reviews


  • நீதிபதிகளின் ஓய்வு வயது வரம்பை உயர்த்தத் திட்டம்

    உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது வரம்பை 65இல் இருந்து 67ஆக உயர்த்தவும், அதேபோல் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் வயது வரம்பை 62இல் இருந்து 64 ஆக உயர்த்தவும் முடிவு செய்துள்ளது.
  • Reviews


  • வெறுப்புக் குற்றங்கள்: நான்காவது இடத்தில் தமிழகம்

    உலக அளவில் மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் அமைப்பு ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல். "வெறுப்புக் குற்றங்களை நிறுத்துங்கள்" என்கிற பக்கத்தில் பதிவாகியுள்ள புகார்களின் எண்ணிக்கையை வைத்து இந்தியாவில் அதிக வெறுப்புக் குற்றங்கள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 18 வெறுப்புக் குற்றங்களோடு உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இரண்டாவது இடத்தில் (13) குஜராத்தும் மூன்றாவது இடத்தில் (8) ராஜஸ்தானும் உள்ளன. தமிழ்நாடு, பிகார் ஆகியவை தலா 7 குற்றங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Reviews


  • தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய நாள்;

    தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வலியுறுத்தி சங்கரலிங்கனார் சாகும் வரை உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தது, தமிழகத்தின் அழியாத தியாக வரலாறு. அதன் காரணமாக, 1967 ஜூலை 18 ஆம் தேதி சட்டப்பேரவையில், சென்னை மாகாணத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
  • Reviews


  • கீழடி அகழ்வாராய்ச்சி: மருத்துவத்தில் கொடிக்கட்டி பறந்த பழங்கால தமிழர்கள் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கீழடியில் கடந்த ஜுன் 2015ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை மூலம் பண்டைய தமிழர் நாகரிகம் குறித்த அகழாய்வு நடைபெற்றது. மூன்று கட்ட அகழாய்வில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அகழாய்வில், மருத்துவத்தில் பழங்கால தமிழர்கள் கொடிக்கட்டி பறந்ததற்கான பல ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டது.இதில், மருத்துவக் குறிப்பு எழுதி வைக்கப்பட்டுள்ள ஓடுகள், மருந்துகள் வைக்கப்படும் கிண்ணங்கள், தட்டுகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    கீழடி அகழ்வாராய்ச்சி: மருத்துவத்தில் கொடிக்கட்டி பறந்த பழங்கால தமிழர்கள் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கீழடியில் கடந்த ஜுன் 2015ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை மூலம் பண்டைய தமிழர் நாகரிகம் குறித்த அகழாய்வு நடைபெற்றது. மூன்று கட்ட அகழாய்வில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அகழாய்வில், மருத்துவத்தில் பழங்கால தமிழர்கள் கொடிக்கட்டி பறந்ததற்கான பல ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டது.இதில், மருத்துவக் குறிப்பு எழுதி வைக்கப்பட்டுள்ள ஓடுகள், மருந்துகள் வைக்கப்படும் கிண்ணங்கள், தட்டுகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • Reviews


  • ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம்

    பிரான்ஸில் டி சோட்டேவில்லெ-லெஸ்-ரூயெனில் தடகள போட்டிகள் நடக்கின்றன. இதில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்ட நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மால்டோவாவின் ஆண்டிரியன் மார்டாரே இரண்டாவது இடம் பெற்றார்.
  • Reviews


  • ஜூலை 18- தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரும் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக போராட்டம் நடத்தியவருமான நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினம்

    1.நெல்சன் மண்டேலாவின் இயற்பெயர் ரோலிஹ்லாலா தலிபுங்கா மண்டேலா 2.நெல்சன் என்ற பெயர் அவரது பள்ளி ஆசிரியரால் கொடுக்கப்பட்டது 3.மண்டேலா தன் வாழ்வில், 1993ஆம் ஆண்டு பெற்ற அமைதிக்கான நோபல் பரிசு உட்பட 695க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
  • Reviews


  • அதிபர்கள் ட்ரம்ப் - புதின் சந்திப்பு

    அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் நேற்று சந்தித்துப் பேசினர். முதலில் இருவரும் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு 2 மணி நேரம் நீடித்தது.
  • Reviews


  • பொருளாதாரத் தடை: அமெரிக்காவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் புகார்-

    ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தார் ட்ரம்ப். இந்தியா உள்ளிட்ட அமெரிக்க நட்பு நாடுகள் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா கூறியிருந்தது. ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வந்த நிலையில் சர்வதேச நீதிமன்ற உதவியை ஈரான் நாடியுள்ளது.
  • Reviews


  • டெல்லியில் வீடுதேடி வரும் 100 வகை அரசு சான்றிதழ் சேவைகள்

    ஓட்டுநர் உரிமம், பிறப்பு, சாதி சான்றிதழ்கள் உள்ளிட்ட 100 வகையான அரசு சேவைகள் டெல்லிவாசிகளின் வீடு தேடிவர உள்ளது. நாட்டில் முதன்முறையாக வித்தியாசமான திட்டத்தை ஆம் ஆத்மி தலைமையிலான அரசு அமலாக்குகிறது ‘மொபைல் சஹாயக்(மொபைல் நண்பர்)’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் அடுத்தமாதம் ஆகஸ்ட் 1 முதல் அமலாக்கப்படுகிறது.
  • Reviews


  • கவனிக்கவில்லை என்றால் மகனுக்கு எழுதி கொடுத்த சொத்துகளை பெற்றோர் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்: மும்பை உயர் நீதிமன்றம்

    பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டம் 2007-ல் இயற்றப்பட்டது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களிடமிருந்து அன்பளிப்பாகவோ, வேறு வழிகளிலோ சொத்துக்களின் உரிமையைப் பெற்றவர்கள், அந்த வயதானவர்களை அவர்கள் வாழ்நாள் முழுவதும் பராமரிக்க வேண்டும். இல்லையெனில் அன்பளிப்பாக வழங்கிய சொத்துக்களின் உரிமையை திரும்பப் பெற பெற்றோர் அல்லது மூத்த குடிமக்களுக்கு உரிமை உள்ளது.
  • Reviews


  • ஜூலை 17 -சர்வதேச நீதி நாள்.

    1.சர்வதேச நீதி நாள் ஜூலை 17 அன்று கொண்டாடப்படுவதற்கான காரணம், ஜூலை 17, 1998இல்தான் ரோமின் சட்ட சாசனம் (சுழஅந ளுவயவரவந) உருவாக்கப்பட்டது. 2.சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் இதனால்தான் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 3.சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றமே, போர்க் குற்றங்கள், மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப் படுகொலைகள் குறித்த வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்குகிறது.
  • Reviews


  • சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி

    28-வது சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டிகள் செக் குடியரசின் பில்சேன் நகரில் நடைபெற்று வந்தன. இதில் இந்தியாவின் மனு பாக்கர் மற்றும் அன்மோல் ஜெயின் ஆகியோர் கலப்பு 10மீட்டர் ஏர் பிஸ்டல் குழு பிரிவில் போட்டியிட்டனர். இருவரும் 476.9 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தினை தட்டிச் சென்றனர். மற்றொரு இந்திய இணையான தேவன்ஷி ராணா மற்றும் சௌரப் சவுதிரி 1.2 புள்ளிகள் வித்தியாசத்தில் இரண்டாவது இடம் பிடித்தனர்.
  • Reviews


  • 2022ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி

    2022ம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்தும் பொறுப்பு கத்தாரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.2022-ம் ஆண்டு பிபா உலகக் கோப்பையை நடத்தும் பொறுப்பை நேற்று நடந்த எளிமையான நிகழ்ச்சியில் ரஷ்யா, வளைகுடா நாடான கத்தாரிடம் ஒப்படைத்தது.21-வது பிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நேற்றுடன் நடந்து முடிந்துள்ளன.
  • Reviews


  • ரஷ்யாவில் ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் நடைபெறும் தீவிரவாத எதிர்ப்பு பயிற்சியில் இந்தியா - பாகிஸ்தான் பங்கேற்பு

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கடந்த 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ளுஊழு அமைப்பின் தீவிரவாத எதிர்ப்பு பயிற்சி வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் நகரில் நடைபெற உள்ளது.
  • Reviews


  • மதுரையில் மாதிரி நியூட்ரினோ ஆய்வு மையம் செயல்படத் தொடங்கியது:

    மதுரை வடபழஞ்சியில் அமைக்கப்பட்ட மாதிரி நியூட்ரினோ ஆய்வு மையம் இன்று முதல் செயல்படத் தொடங்கியது.
  • Reviews


  • சென்னை மியூசிக் அகாடமி விருதுகள்

    பிரபல இசைக் கலைஞர் அருணா சாய்ராம் இந்த வருட சங்கீத கலாநிதி விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சங்கீத கலாசார்யா விருதுகள், பிரபல மிருதங்க வித்வான் பாலக்காடு டி.எஸ். மணியின் சீடரான தஞ்சாவூர் ஆர். ராமதாஸ்-க்கும், திருவனந்தபுரம் ஸ்வாதித் திருநாள் இசைக் கல்லூரியில் இசை பயின்ற வாய்ப்பாட்டுக் கலைஞர் டாக்டர் கே. ஓமணக் குட்டிக்கும் வழங்கப்படும்.
  • Reviews


  • குரோஷியாவை வீழ்த்தி 2-வது முறையாக பிரான்ஸ் சாம்பியன்

    21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் கடந்த ஒருமாத காலமாக நடைபெற்று வந்தது. 32 அணிகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து திருவிழாவில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோஷியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
  • Reviews


  • உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தின் இறுதி போட்டியில், 2 கோல் வித்தியாசத்தில் குரோஷியாவை வென்றிருக்கிறது பிரான்ஸ்.
  • Reviews


  • 4–வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றார், ஜோகோவிச்

    ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் கடந்த 2 வார காலமாக லண்டனில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), கெவின் ஆண்டர்சனும் (தென்ஆப்பிரிக்கா) பலப்பரீட்சை நடத்தினர்.விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4–வது முறையாக பட்டத்தை கைப்பற்றினார்.
  • Reviews


  • தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்

    பாங்காக்கில் நடந்த தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர் கொண்டார்.ஜப்பானின் ஒகுஹாரா இந்தியாவின் பி.வி.சிந்துவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
  • Reviews