Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள்
 • உலகின் மிகப்பெரிய இந்திய விசா மையம்; வங்கதேசத்தில் அமைச்சர் திறந்து வைத்தார்

  வங்கதேச தலைநகர் டாக்காவில் உலகிலேயே மிகப்பெரிய இந்திய விசா மையத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார். டாக்கா நகரின் ஜமுனா பியூச்சர் பார்க் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய விசா விண்ணப்ப மையத்தை ராஜ்நாத் சிங்கும் வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஜமான் கானும் நேற்று திறந்து வைத்தனர்.
 • Reviews


 • அசாம் மாநிலத்தில் பதவி ஏற்ற முதல் ‘திருநங்கை நீதிபதி’

  அசாம் மாநிலம், லோக் அதாலத் நீதிமன்றத்தில் புதிய நீதிபதியாக திருநங்கை ஒருவர் பதவி ஏற்றுள்ளார். ஸ்வாதி பிதன் புராஹ் என்ற திருநங்கையே கம்ரூப் மாவட்டத்தில் உள்ள கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பதவி ஏற்றுள்ளார்.
 • Reviews


 • டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் அடுத்த ஆண்டில் இந்தியா வர திட்டம்

  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் அடுத்த ஆண்டு இந்தியா வர திட்டமிட்டுள்ளார்.
 • Reviews


 • மூன்றாவது இடம்: இங்கிலாந்தை வீழ்த்திய பெல்ஜியம்

  இந்தத் தொடரில் பிரான்ஸ் மற்றும் குரேஷியா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் மூன்றாவது இடத்துக்கு பெல்ஜியம் - இங்கிலாந்து அணிகள் மோதின. உலகக் கோப்பை கால்பந்து தொடரில், மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பெல்ஜியம் அணி இங்கிலாந்தை 2-0 என வென்றது.
 • Reviews


 • ஜூலை 15 - உலக இளைஞர் திறன் தினம்
 • Reviews


 • லண்டனில் இருந்து லாகூர் திரும்பிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் கைது

  ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபும் அவரது மகள் மரியமும் நேற்று நாடு திரும்பினர். லாகூர் விமான நிலையத்தில் இறங்கிய அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
 • Reviews


 • புதிய எம்.பி.க்களாக 4 பேர் நியமனம்

  மாநிலங்களவையில் பல்வேறு துறை சார்ந்த அறிஞர்கள், சாதனையாளர்களை 12 பேரை எம்.பி.க்களாக குடியரசு தலைவர் நியமித்து வருகிறார். மாநிலங்களவை எம்.பி.க்களாக நியமிக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர், நடிகை ரேகா, அனுஆஹா, பராசரன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்தது. விவசாய சங்க தலைவர் ராம் ஷெகால், சிற்ப கலைஞர் ரகுநாத் மொஹாபத்ரா, எழுத்தாளர் ராகேஷ் சின்ஹா, நாட்டிய கலைஞர் சோனல் மான்சிங் ஆகியோரை எம்.பி.க்களாக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
 • Reviews


 • பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கியவர்களுக்கு ஓட்டுநர் உரிமம், ஓய்வூதியங்கள் ரத்து: ஹரியாணா

  ‘‘பலாத்கார குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஓட்டுநர் உரிமம், ஓய்வூதியம் உட்பட அரசின் அனைத்து பயன்களும் ரத்து செய்யப்படும்’’ என்று ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கத்தார் எச்சரித்துள்ளார்.
 • Reviews


 • இலங்கையின் தேசிய கீதத்தைப் பாடிய பழம்பெரும் பாடகி கே.ராணி காலமானார்

  ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் கே.ராணி. கடந்த 1943-ம் ஆண்டு பிறந்த இவர், தனது 8-வது வயதிலேயே சங்கீதத்தில் சிறந்து விளங்கினார். இவர் முதன்முதலாக தமிழில் மோகனசுந்தரம், சிங்காரி ஆகிய படங்களிலும், தெலுங்கில் ரூபவதி என்கிற படத்திலும் பாடினார்.
 • Reviews


 • ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி

  இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் சந்தை மதிப்பு ஜூலை 12ஆம் தேதி 1.6 சதவிகிதம் உயர்ந்து பங்கு ஒன்றின் விலை ரூ.1,099.8 ஆக அதிகரித்து, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 44.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக முகேஷ் அம்பானி உருவெடுத்துள்ளதாக புளும்பெர்க் பணக்காரர்கள் பட்டியல் கூறுகிறது. சீனாவின் அலிபாபா குழுமத்தின் நிறுவனர் ஜேக் மாவின் சொத்து மதிப்பு 44 பில்லியன் டாலராக உள்ளது.
 • Reviews


 • தமிழகத்தில் முதன்முறையாக மதுரையில் பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையம்

  பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையம் ரூ.5 கோடியில் மதுரையில் 10 ஹெக்டேரில் அமையவுள்ளதால், இதற்கு முதற்கட்டமாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான இடம் பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 • Reviews


 • உலக ஜூனியர் தடகளப் போட்டி: தங்கம் வென்று ஹிமா தாஸ் வரலாற்று சாதனை

  இந்தியாவின் தடகள வீராங்கனை ஹிமா தாஸ் உலக தடகள ஜூனியர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமாவின் தந்தை ஒரு விவசாயி ஆவார். பின்லாந்தில் உலக ஜூனியர் தடகளப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயப் பிரிவின் இறுதிப் போட்டியில் 18 வயதான இந்தியாவின் ஹிமா தாஸ் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
 • Reviews


 • சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து முகமத் கைஃப் ஓய்வு

  இந்திய கிரிக்கெட் வீர்ர் முகமத் கைஃப் அனைத்து தர சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
 • Reviews


 • ஆந்திராவில் 60 இடங்களில் அண்ணா கேன்டீன்கள்: முதல்வர் தொடங்கி வைத்தார் தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகத்தை போன்று ஆந்திர மாநிலத்தில் 60 இடங்களில் அண்ணா கேன்டீன்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்தார்.
 • Reviews


 • கேரளக் காய்கனிகளுக்கு விதித்திருந்த தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீக்கியது

  கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதல் அச்சம் காரணமாக அங்கு விளையும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய அந்நிய நாடுகள் அஞ்சுகின்றன. கேரள மாநிலத்திலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய சென்ற மே 29ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்தது. மேலும், சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட நாடுகளும் கேரளாவிலிருந்து காய்கறிகள் மற்றும் பழங்களை இறக்குமதி செய்யத் தடை விதித்திருந்தன. இந்நிலையில் இந்தத் தடையை நீக்குவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
 • Reviews


 • ஊழலில் ஈடுபடும் ராணுவ அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: தலைமை தளபதி பிபின் ராவத்

  இதுதொடர்பாக ராணுவ இணையதளம் மூலம் அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: “ராணுவத்தில் ஊழலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். உயர் பதவி, கீழ் பதவி என்ற பாரபட்சம் பார்க்காமல் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றத்தைப் பொருத்து அவர்களுக்கு பென்ஷன் இன்றி பதவி நீக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
 • Reviews


 • அலுவலக இடத்துக்கான வாடகையில் 9-வது இடத்தில் டெல்லி கன்னாட் பிளேஸ்:

  புதுடெல்லியில் உள்ள கன்னாட் பிளேஸ் பகுதியில் அலுவலகத்துக்கான இடத்துக்கு மிக அதிக அளவில் வாடகை தர வேண்டியுள்ளது. அலுவலகம் அமைக்க அதிக செலவு பிடிக்கும் நகரங்கள் வரிசையில் 9-வது இடத்தில் கன்னாட் பிளேஸ் உள்ளது. இங்கு ஒரு சதுர அடிக்கு 153 டாலர் வாடகை செலுத்த வேண்டியிருப்பதாக சிபிஆர்இ ஆலோசனை மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பட்டியலில் ஹாங்காங் மையப்பகுதி முதலிடத்தில் உள்ளது. இங்கு ஒரு சதுர அடிக்கான வாடகை 306.57 டாலராக உள்ளது.
 • Reviews


 • படைப்பாற்றலில் சர்வதேச அளவில் முன்னேறிய இந்தியா

  உலகளவில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நாடுகளுக்கு ஜிஐஐ குறியீடு வழங்கப்படுகிறது இந்தியா 57ஆவது இடத்திலும், சீனா 17ஆவது இடத்திலும் உள்ளன.
 • Reviews


 • ஜூலை 12- உலக மலலா தினம் பெண்கள் கல்வி கற்கும் உரிமைக்காகப் போராடிவருபவர்களுள் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்தவர் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சையி.
 • Reviews


 • இலங்கையில் 42 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மரண தண்டனை

  1976க்குப் பிறகு வந்த இலங்கை அதிபர்கள் மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்க மறுத்துவிட்டனர். செவ்வாய்க்கிழமை இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 19 பேருக்கு தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.
 • Reviews


 • ட்விட்டரில் பின்தொடர்பவர்கள்: முதலிடத்தில் ட்ரம்ப்; பிரதமர் மோடிக்கு 3வது இடம்

  அதன்படி ட்விட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவராக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்ளார். அவரை 5.2 கோடி பேர் ட்விட்டரில் தொடர்கின்றனர். அமெரிக்க அதிபராக அவர் பதவியேற்ற பிறகு அவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இரண்டாவது இடத்தில் 4.75 கோடி பேருடன் போப் பிரான்சிஸ் உள்ளார். மூன்றாவது இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். 4.2 கோடி பேர் அவரை பின் தொடர்கின்றனர்.
 • Reviews


 • மாநிலங்களவையில் எம்.பி.க்கள் இனி 22 மொழிகளில் பேசலாம்

  நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பேசக் கூடிய வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக மொழிபெயர்ப்பாளர்கள் குழுவை நாடாளுமன்றம் நியமித்துள்ளது.
 • Reviews


 • மேக் இன் இந்தியா திட்டத்தில் வேலை வாய்ப்பு அதிகரிக்க தென் கொரியா உதவி

  இந்தியாவுக்கு வந்த தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்-னுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ அணி வகுப்பு மரியாதையோடு வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஜ்கோட்டுக்கு சென்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார் மூன் ஜே-இன். இரு தலைவர்களும் மெட்ரோ ரயிலில் நொய்டாவுக்கு பயணம் செய்து அங்கு சாம்சங் ஆலையைத் திறந்து வைத்தனர். மேக் இன் இந்தியா திட்டம் மூலம் இந்தியாவில் வேலை வாய்ப்பு அதிகரிக்க தென் கொரியா மிகவும் உதவியாக இருந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
 • Reviews


 • இரண்டு மாதத்தில் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

  தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை இரண்டு மாதங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லோக்பால் சட்டப்படி மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது கட்டாயம். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்த அமைப்பை உருவாக்காமல் காலம் தாழ்த்தியதையடுத்து அஸ்வினி குமார் உபாத்யாயா என்பவர் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். லோக் ஆயுக்தா அமைப்பில் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் இருப்பார்கள். எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ, அமைச்சர், முன்னாள் அமைச்சர், அரசு ஊழியர் ஆகியோர் மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகாரம் படைத்ததாக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சிவில் நீதிமன்றத்துக்கு உள்ள அதிகாரம் இந்த அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச சிம் கார்டு திட்டம் நிறுத்தம்

  முன்னாள் சுற்றுலாத் துறை அமைச்சரான மகேஷ் சர்மா 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இலவச சிம் கார்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இதுவரையில் வழங்கப்பட்டு வந்த இலவச சிம் கார்டு திட்டம் இனி நிறுத்தப்படுகிறது. இந்த சிம் கார்டு திட்டம் தேவையற்றது என்று உணர்ந்ததால்தான் நிறுத்தப்பட்டுள்ளது.
 • Reviews


 • பொருளாதார வல்லரசு: பிரான்ஸை பின்னுக்கு தள்ளி 6-வது இடத்தை பிடித்தது இந்தியா

  உலக வங்கி வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட, ஜிடிபி எனப்படும் உள்நாட்டு உற்பத்தி அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரான்ஸை பின்னுக்குதள்ளி 6-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
 • Reviews


 • தொழில் தொடங்குவதில் எளிதான மாநிலங்கள்; - ஆந்திரா முதலிடம்

  உலக வங்கியுடன் இணைந்து தொழில் முதலீடு மற்றும் மேம்பாட்டுத் துறை (டிஐபிபி) இணைந்து நடத்திய இந்த ஆய்வில் முதல் 10 மாநிலங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தெலங்கானா இரண்டாமிடத்திலும் ஹரியாணா மூன்றாமிடத்திலும் உள்ளன. ஜார்க்கண்ட், குஜராத், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
 • Reviews


 • ஜூலை 11: உலக மக்கள்தொகை நாள்
 • Reviews


 • அமெரிக்காவுடன் ராணுவப் பயிற்சியை நிறுத்தியது தென்கொரியா

  அமெரிக்காவுடன் இணைந்து நடத்தவிருந்த வருடாந்திட ராணுவ பயிற்சியை தென்கொரியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துக் கொண்ட உச்சி மா நாட்டில் அணு ஆயுத சோதனை தொடர்பாக விவகாரத்தில் அமெரிக்கா - வடகொரியா இடையே உடன்பாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் நடத்தவிருந்த வருடாந்திர ராணுவ பயிற்சியை தற்காலிகமாக கைவிடுவதாக அமெரிக்காவும் கூறியிருந்தது. தென் கொரியாவின் இந்த முடிவை வடகொரியா வரவேற்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 • Reviews


 • 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் என்ற அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. பெங்களுரு ஐஐஎஸ்சி, மும்பை ஐஐடி, டெல்லி ஐஐடி, பிஐடிஎஸ் பிலானி, மணிப்பால் அகாடமி ஆப் ஹையர் எஜுகேஷன், ஜியோ இன்ஸ்டிடியூட் ஆகியவற்றுக்கு தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் என்ற சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.
 • Reviews


 • உலகின் மிகப்பெரிய செல்போன் உற்பத்தி ஆலை:

  உலகின் மிகப் பெரிய செல்போன் உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உத்தர பிரதேச மாநிலத்தில் ஆலையை அமைத்துள்ளது. இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இந்த ஆலையை திறந்து வைத்தனர்.
 • Reviews


 • ஐடியா - வோடஃபோன் இணைவதற்கு மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் ஒப்புதல்

  இவ்விரு நிறுவனங்களும் இணையும் பட்சத்தில் ரூ.1.5 லட்சம் கோடி சொத்து மதிப்புடனும் 35 சதவிகித சந்தைப் பங்குடனும் இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமாக உருவெடுக்கும். இதில் சுமார் 43 கோடிப் பேர் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள்.
 • Reviews


 • இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனிடம் இருந்து போலீஸ் டிஎஸ்பி பதவி பறிப்பு

  அந்த பல்கலையில், பஞ்சாப் போலீஸார் சார்பில் ஹர்மன்ப்ரீத் எப்போது பட்டப்படிப்பு படித்தார், சான்றிதழ் உண்மையானதா உள்ளிட்ட விவரங்களை முறைப்படி விசாரித்துள்ளனர். அப்போது அந்தப் பல்கலையில் ஹர்மன்ப்ரீத் கவுர் படித்ததற்கான ஆதாரம் இல்லை, அவர் அளித்த சான்றிதழ் போலியானது என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். பஞ்சாப் முதல்வர் உத்தரவின் பெயரில், ஹர்மன்பிரீத் கவுருக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் டிஎஸ்பி பதவி பறிக்கப்பட்டு, அவரின் 12-ம் வகுப்பு தகுதிக்கு ஏற்ப, போலீஸ் கான்ஸ்டபிள் வழங்க உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 • Reviews


 • 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் பங்கேற்ற திரிபுராவைச் சேர்ந்த தீபா கர்மாகர், ஒட்டுமொத்த தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார். தற்போது துருக்கி நாட்டின் மெர்சின் நகரில் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக் உலகக் கோப்பை போட்டியில் தீபா கர்மாகர் 14.150 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். உலகக் கோப்பையில் தீபா கர்மாகர் தங்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.
 • Reviews


 • உலக சமஸ்கிருத மாநாடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இதுவரை மூன்று முறை இம்மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், கனடாவின் வான்குவர் நகரில் 17ஆவது உலக சமஸ்கிருத மாநாடு ஜூலை 9ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த மாநாட்டை இன்று (ஜூலை 9) தொடங்கி வைக்கிறார்.
 • Reviews


 • அமெரிக்காவில் உள்ள தியேல் அறக்கட்டளையின் 2018ஆம் ஆண்டிற்கான தியேல் ஃபெல்லோஷிப் விருது, சென்னையைச் சேர்ந்த 21 வயதான மாணவி அபர்ணா கிருஷ்ணனுக்குக் கிடைத்துள்ளது.
 • Reviews


 • ஐக்கிய அமீரகத்தில் கட்டாய ராணுவ சேவை 16 மாத காலம்

  ஐக்கிய அரபு அமீரக நாட்டில் 18 முதல் 30 வயதுள்ள இளைஞர்கள் ராணுவத்தில் கட்டாயம் பணிபுரிய வேண்டும் என்ற சட்டம் 2014 முதல் அமலில் உள்ளது. அதன்படி 12 மாதம் ராணுவத்தில் சேவையாற்ற வேண்டும். பெண்கள் தாமாக முன்வந்தால் ராணுவத்தில் பணியாற்றலாம். அவர்களுக்கு ராணுவப் பணி கட்டாயமில்லை. இந்த நிலையில் இளைஞர்களுக்கான கட்டாய ராணுவ பணிக்காலத்தை 12 மாதத்திலிருந்து 16 மாத காலமாக அதிகரித்து யுஏஇ அரசு நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு, அரசியல், தேசிய, சமூக, பொருளாதார அடிப்படையில் இதுபோன்ற முடிவுகளை அரசு எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. நாட்டு இளைஞர்கள் கட்டாயமாக ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற திட்டமானது யுஏஇ அரசின் முக்கிய முடிவுகளுள் ஒன்றாகக் பார்க்கப்படுகிறது. ஈரான் அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் தனது ராணுவத்தை பலப்படுத்தி வருகிறது.
 • Reviews


 • 5-ம் தலைமுறை தொழில்நுட்பங்களுடன் ரூ.2 லட்சம் கோடியில் போர் விமான திட்டம்- ரஷ்யாவுடன் போட்ட ஒப்பந்தம் மறுபரிசீலனை

  ரஷ்யாவுடன் இணைந்து 5-ம் தலைமுறை போர் விமானங்கள் தயாரிக்கும் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து வருகிறது. இந்த திட்டத்துக்கு அதிகமாக செலவிட வேண்டிவரும் என்பதே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இந்தியா-ரஷ்யா இடையிலான பாதுகாப்புத் துறை வர்த்தக உறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வது தொடர்பாக, கடந்த 2007-ம் ஆண்டு இரு நாடுகளும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி இரு நாடுகளும் இணைந்து ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான 5-ம் தலைமுறை போர் விமானங்களை தயாரிக்க திட்டமிட்டன.
 • Reviews


 • கனடாவில் உலக சமஸ்கிருத மாநாடு இன்று தொடக்கம்

  கனடாவில் நடைபெறும் உலக சமஸ்கிருத மாநாட்டை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று தொடங்கிவைக்கிறார். உலக சமஸ்கிருத மாநாடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இதுவரை மூன்று முறை இம்மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், கனடாவின் வான்குவர் நகரில் 17ஆவது உலக சமஸ்கிருத மாநாடு ஜூலை 9ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த மாநாட்டை இன்று (ஜூலை 9) தொடங்கி வைக்கிறார். சமஸ்கிருத புத்தமத புத்தகங்கள், வேத இலக்கியத்தில் பெண்களின் கல்வி மற்றும் வரலாறு, பகவத் புராண அறிமுகம் தொடர்பான உரைகள் இடம்பெறவுள்ளன. ஐந்து நாட்கள் நடைபெறும் மாநாட்டில் பல்வேறு தலைப்புகளின் கீழ் 500க்கும் மேற்பட்ட குறிப்புகள் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சர்வதேச அளவில் சமஸ்கிருதத்தைப் பாதுகாப்பதும் ஊக்குவிப்பதும் இந்த மாநாட்டின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • 50 வயதுக்கு மேலான அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு:

  உத்தரப் பிரதேச அரசு 50வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள், பணிகளில் கவனக்குறைவாக செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்குக் கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
 • Reviews