Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள்
 • .இந்தியாவின் 2-வது திருநங்கை வழக்கறிஞரானார் எஸ்.விஜி

  இந்தியாவின் 2-வது திருநங்கை வழக்கறிஞராக தூத்துக்குடியைச் சேர்ந்த எஸ்.விஜி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளார். தூத்துக்குடி அருகேயுள்ள தாளமுத்துநகரைச் சேர்ந்தவர் எஸ்.விஜி(38). திருநங்கையான இவர், சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவர். ‘அன்பு அறக்கட்டளை’ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் தொடங்கி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.
 • Reviews


 • புதிய கல்விக் கொள்கை வரைவு தயாரிப்பது தொடர்பாக இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் 8 பேர் கொண்ட புதிய கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டிக்கான கால அவகாசம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 30-ம் தேதி கஸ்தூரிரங்கன் கமிட்டி தனது அறிக்கையை தாக்கல் செய்திருக்க வேண்டும். இந்நிலையில் அந்த கமிட்டிக்கான அவகாசம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது முறையாக காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • ஜிம்னாஸ்டிக் உலகக் கோப்பையில் தங்கம் வென்ற இந்திய மங்கை தீபா கர்மாகர் இரண்டாண்டுகள் போட்டியிலிருந்து விலகிய இந்திய வீராங்கனை தீபா கர்மாகர், ஜிம்னாஸ்டிக் உலகக் கோப்பையில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் பங்கேற்ற திரிபுராவைச் சேர்ந்த தீபா கர்மாகர், ஒட்டுமொத்த தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார். தற்போது துருக்கி நாட்டின் மெர்சின் நகரில் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக் உலகக் கோப்பை போட்டியில் தீபா கர்மாகர் 14.150 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். உலகக் கோப்பையில் தீபா கர்மாகர் தங்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.
 • Reviews


 • 18,500 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்: துருக்கி அரசு அதிரடி முடிவு

  துருக்கியில் ராணுவ புரட்சியில் பங்கு கொண்டதாக கூறி 18,500 அரசு ஊழிர்களை அந்நாட்டு அரசு பணி நீக்கம் செய்துள்ளது. துருக்கியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், ராணுவ புரட்சி நடந்தது. மக்களின் உதவியோடு அந்த புரட்சி முறியடிக்கப்பட்டது. துருக்கியில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் எர்டோகன், தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். முன்பு இருந்ததை விட அதிகப்படியான அதிகாரங்களை கொண்ட அதிபராக அவர் பதவியேற்க உள்ளார்.
 • Reviews


 • நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் ஈரானில் ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை

  ஈரானில் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் 8 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் 7-ம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள நாடாளுமன்றம் மற்றும் அயதொல்லா ருஹொல்லா கொமேனியின் நினைவிடத்தின் மீது ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இவ்விரு சம்பவங்களிலும் 18 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அதிக அளவில் மரண தண்டனையை நிறைவேற்றும் நாடுகளில் ஒன்றாக ஈரான் விளங்குகிறது. எனினும், ஒரே நாளில் அதிகம் பேருக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது அரிது. 2007-ம் ஆண்டு பலாத்கார வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு இப்போதுதான் அதிக அளவாக 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது
 • Reviews


 • ஜூலை 21ல் ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம்

  ஜூலை 21ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் ஆண்டு ரிட்டன் தாக்கல் மற்றும் ஆடிட்டிங் வடிவத்திற்கு ஜிஎஸ்டி கவுன்சில் குழு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது முதல் இப்போதுவரை ஆண்டு வருமான வரித் தாக்கல் செய்வதில் சில மாற்றங்களை செய்ய வேண்டுமென்று தொழிற்துறையினர் எதிர்பார்த்து வருகின்றனர். ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் இதுவரையில் 1.14 கோடி தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ஆண்டுக்கு ரூ.2 கோடிக்கு மேல் விற்றுமுதல் செய்யும் அனைத்து நிறுவனங்களும் ரிட்டன் தாக்கல் செய்வது கட்டயமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 • Reviews


 • கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமெரிக்காவில் பாராட்டு

  நிபா வைரஸை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொண்டதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமெரிக்காவின் வைராலஜி ஆய்வு நிறுவனம் பாராட்டு விழா நடத்தியுள்ளது. கேரளாவில் கடந்த மே மாதத்தில் நிபா வைரஸ் வேகமாகப் பரவியது. கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய பகுதிகளில் நிபா வைரஸ் காரணமாக 18 பேர் மரணமடைந்தனர். பின்னர் அம்மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் நிபா வைரஸ் ஒழிக்கப்பட்டது.
 • Reviews


 • உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றமும் (உத்தமம்) மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும், 17ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு, பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (ஜூலை 6) தொடங்கி நடைபெற்று வருகிறது. “அறிவுசார் தமிழ் தேடுபொறிகள்” என்ற தலைப்பில் ஜூலை 8ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், தமிழ் மென்பொருள் சார்ந்த 70க்கும் மேற்பட்டோர் ஆய்வுக் கட்டுரைகளைப் படிக்கின்றனர்.
 • Reviews


 • பஞ்சாப்பில் உள்ள பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பஞ்சாப் பெண்கள் ஆணையம் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
 • Reviews


 • திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலவாசலில் வசித்து வருபவர் ஆசிரியர் செல்வகுமார் இவர் வானிலை தகவல்களை அனைத்துத் தரப்பினரிடமும் விரைவாகக் கொண்டு செல்லும் விதத்தில் 'நம்ம உழவன்' என்ற புதிய செயலியை ஜூலை 5, வியாழக்கிழமை முதல் தொடங்கியுள்ளார்.
 • Reviews


 • இலங்கையில் இருந்து ‘தி புரோஸன் பயர்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை

  இலங்கையில் இருந்து முதல்முறையாக ஆஸ்கர் விருதுக்கு ‘தி புரோஸன் பயர்’ என்ற சிங்களத் திரைப்படம் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி.) நிறுவிய ரோகண விஜயவீரவின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குநர் அனுருத்த ஜயசிங்க இயக்கியுள்ள 'கின்னேன் உபன் சீத்தல' எனும் சிங்களத் திரைப்படம் (தி புரோஸன் பயர்-வுhந குசழணநn குசைந) எடுக்கப்பட்டுள்ளது. ரோகண விஜயவீரவின் கதாபாத்திரத்தில் முன்னணி சிங்கள திரைப்பட நடிகர் கமல் ஹத்தர ஆராச்சி நடித்துள்ளார
 • Reviews


 • பஞ்சாப்பில் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் குறித்து விழிப்புணர்வு

  பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் கல்வி மற்றும் பெண்கள் ஆணையம் கூட்டம் நடைபெற்றது. அதில், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி மாதத்திற்கு ஒருமுறை பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு குட் டச், பேட் டச் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கல்வித் துறைக்குப் பெண்கள் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
 • Reviews


 • நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராகிறார்

  தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தின் தலைவர் பதவி கடந்த 6 மாதமாக காலியாக இருந்தது. உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்ஃ இவர் 5 ஆண்டுகளுக்கு தலைவராக பதவி வகிப்பார் எனத் தெரிவித்துள்ளது
 • Reviews


 • பெண் தொழில்முனைவோருக்கு தொழில் பூங்கா

  எஃப்.ஐ.சி.சிஐ பெண்கள் அமைப்பு பெண் தொழில்முனைவோருக்கென பிரத்தியேக தொழில் பூங்காவை அமைக்க சுல்தான்பூரில் 50 ஏக்கர் நிலத்தை தெலங்கானா மாநில அரசு ஒதுக்கியிருந்தது. தெலங்கானாவில் பெண் தொழில் முனைவோருக்கு எஃப்.ஐ.சி.சிஐ பெண்கள் அமைப்புக்குக் கூடுதல் நிலத்தை வழங்க மாநில அரசு தயாராக இருப்பதாக தெலங்கானா மாநிலத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைச்சரான கே.டி.ராமா ராவ் தெரிவித்துள்ளார
 • Reviews


 • பெங்களுரு நகரில் கால் டாக்சி சேவை: கர்நாடக அரசு திட்டம்

  போக்குவரத்து துறை அமைச்சர் டி.சி.தம்மண்ணா கூறும்போது, “பெங்களூருவில் இயங்கும் வாடகை கார் நிறுவனங்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. இரவு நேரங்களில் பயணிக்கும் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது தொடர்கிறது. ஆங்காங்கே வழிப்பறி சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கால் டாக்சி சேவையில் ஈடுபட அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதனை அரசே நடத்தும்போது மக்களுக்கு நிறைய நன்மை கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் கன்னட மக்களுக்கு வேலை வாய்ப்பும், அரசுக்கு வருமானமும் கிடைக்கும். தனியார் நிறுவனங்கள் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து, அரசு இந்த விவகாரத்தில் உரிய முடிவை எடுக்கும்” என்றார்.
 • Reviews


 • கோவையில் பதினேழாவது உலகத் தமிழ் இணைய மாநாடு

  உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றமும் (உத்தமம்) மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும், 17ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு, வேளாண பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (ஜூலை 6) தொடங்கி நடைபெற்று வருகிறது. “அறிவுசார் தமிழ் தேடுபொறிகள்” என்ற தலைப்பில் ஜூலை 8ஆம் தேதி வரை நடைபெறும். கண்காட்சி அரங்கில் பல்வேறு நிறுவனங்களின் மென்பொருள் அறிமுகம், தமிழ்க்கணினி தொடர்பான உரைகள், தமிழ் கற்க உதவும் ஒலி மற்றும் ஒளி குறுவட்டுகள், தமிழ் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பொது மக்கள் இலவசமாகவே கலந்துகொள்ளலாம்.
 • Reviews


 • ஐந்தாண்டுகளுக்கு ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி

  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக மேலும் ஐந்தாண்டுகளுக்கு முகேஷ் அம்பானி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். முகேஷ் அம்பானி 1977-ம் ஆண்டு முதல் நிறுவனத்தில் இருந்து வருகிறார். இவரது தந்தையின் மறைவுக்கு பிறகு 2002 ஜூலையில் ரிலையன்ஸ் தலைவராக பொறுப்பேற்றார். 2019-ம் ஆண்டு முதல் ஐந்தாண்டுகளுக்கு நியமனம் செய்யப்பட்டார். மொத்தம் பதிவான வாக்குகளில் 98.5 சதவீதத்தினர் முகேஷ் அம்பானி தலைவராக தொடர வாக்களித்திருக்கின்றனர். 1.48 சதவீதத்தினர் எதிராக வாக்களித்திருக்கின்றனர். இவரது ஆண்டு சம்பளம் ரூ.4.17 கோடியாகவும், இதர சலுகைகள் 59 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
 • Reviews


 • உலக பணக்காரர்கள் பட்டியலில் மார்க் ஜூகர்பெர்க் முதலிடம்

  ஃபேஸ்புக் நிறுவனத்தின் இணை நிறுவனரான மார்க் ஜூகர்பெர்க் தற்போது உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். அமேசானின் ஜெஃப் பிஸோஸ், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர். 34 வயதாகும் ஜூகர்பெர்க்கின் சொத்து மதிப்பு 8,160 கோடி டாலராகும். பெர்க்ஷயர் ஹாத்வே இன்கார்ப்பரேஷனின் தலைமை செயல் அதிகாரியான 87 வயதாகும் பஃபெட் கோடீஸ்வரர்கள் பட்டியலில் மட்டுமின்றி சிறந்த கொடையாளியாகவும் திகழ்கிறார். மார்க் ஜூகர்பெர்க் தனது சொத்தில் 99 சதவீதத்தை அறக்கட்டளைக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 • Reviews


 • சரக்கு மற்றும் சேவை வரிக்குள் (ஜிஎஸ்டி) விரைவில் பெட்ரோலியப் பொருட்கள் சேர்க்கப்படும்

  பெட்ரோலியப் பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டுவருவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை செய்யும் என்று நிதித் துறை செயலர் ஹஷ்முக் ஆதியா கூறியுள்ளார். படிப்படியாக பெட்ரோலியப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறினார
 • Reviews


 • ஜூலை 7

  சர்வதேச கூட்டுறவு நாள்
 • Reviews


 • பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் தீர்ப்பு

  பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.74 கோடி(80 லட்சம் பவுண்ட்) அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நவாஸ் ஷெரீப் மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், 2 மில்லியன் பவுண்ட் அபராதமும் விதிக்கப்பட்டது.
 • Reviews


 • .இந்தியா வருகிறார் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்

  தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் முதல் முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். ஜூலை 8 லிருந்து ஜூலை 11 ஆம் தேதிவரை மூன் ஜே இன் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தில் மூன்னுடன் மூத்த தென்கொரிய அதிகாரிகள் உடன் வரவுள்ளனர். இந்த சுற்றுப்பயணத்தில் தென் கொரியா - இந்தியா இடையே பல்வேறு தொழில் சார்ந்த கூட்டங்களில் அவர் கலந்து கொள்கிறார். மேலும் கல்வி, மாணவர்கள், சுற்றுலா பயணிகள் குறித்து இரு நாடுகளின் எதிர்காலத் திட்டங்கள் சார்ந்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துகிறார்.
 • Reviews


 • வழக்குகள் ஒதுக்கீடு தலைமை நீதிபதியின் தார்மீக உரிமை - உச்ச நீதிமன்றம்

  உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகிய நான்கு பேரும், இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதன் முறையாக பேட்டியளித்தது, நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. முக்கிய வழக்குகளை குறிப்பிட்ட சில வழக்குகளை மூத்த நீதிபதிகளின் அமர்வுக்கு ஒதுக்காமல், தனக்கு வேண்டிய சில நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு ஒதுக்கீடு செய்வதாக புகார் தெரிவித்தனர். வழக்குகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக விதிமுறைகளை உருவாக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கன்வில்கர் மற்றும் டி.ஓய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றம் சுமூகமாக நடைபெறவும், வழக்குகள் உரிய நேரத்தில் விசாரிக்கப்படவும் தலைமை நீதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமை எனக்கூறி பொதுநல மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
 • Reviews


 • சூதாட்டத்திற்கு சட்டபூர்வ அனுமதி - சட்ட ஆணையம் பரிந்துரை

  சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் சூதாட்டங்கள் சட்டபூர்வமாக உள்ளன. எனினும் இந்தியாவில் அனைத்து வகையான சூதாட்டங்களும் சட்ட விரோதம் என அறிவித்து தடை செய்யப்பட்டுள்ளன. எனினும் இந்தியாவில் சட்டவிரோதமாக, திரைமறைவு சூதாட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. நீதிபதி சவுகான் தலைமையிலான மத்திய சட்ட ஆணையம் குழு சூதாட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளது. அதன்படி, இந்தியாவில் சட்டவிரோதமாக நடக்கும் சூதாட்டங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி விடலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதனை சட்டபூர்வமாக்கி வரி விதித்து அதன் மூலம் அரசு வருவாய் ஈட்டலாம் எனவும் பரிந்துரைத்துள்ளது.
 • Reviews


 • பூரி ஜெகன்நாதர் கோயிலுக்குள் மற்ற மதத்தினரையும் அனுமதிக்க வேண்டும் -உச்ச நீதிமன்றம்

  பிரசித்தி பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயிலுக்குள் இந்துக்கள் தவிர மற்ற மதத்தினர் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. மிருனாளினி பதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். பூரி ஜெகன்நாதர் கோயிலில் வழிபாட்டுக்குச் செல்லும் பக்தர்கள் சுரண்டலுக்கு உள்ளாவதாகவும், மாற்று மதத்தினர் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் கூறியிருந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்து மதம் எந்தவொரு மதத்தின் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் அழிக்காது. கோயில் நிர்வாகம், ஆடைக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறைக்கு உட்பட்டு, ஒவ்வொருவருக்கும் அவரவருக்குரிய மரியாதையை வழங்க வேண்டும் என்றனர்.
 • Reviews


 • ரயில் பயணங்களில் அசல் ஆதார் அட்டை அவசியமில்லை

  மத்திய அரசின் டிஜி லாக்கர் ஆப்பைப் பதிவிறக்கம் செய்து அதில் ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த டிஜிட்டல் ஆவணங்களை டிக்கெட் பரிசோதகரிடம் காட்டினாலே போதுமானது, அசல் ஆதார் அட்டை அல்லது மற்ற அடையாள அட்டை எதுவும் தேவையில்லை என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. டிஜிலாக்கரில் இருந்து மட்டுமே அடையாள அட்டைகள் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும். டிஜி லாக்கர் ஆப் மூலம், ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு, பல்வேறு வகையான ஆவணங்கள், சான்றிதழ்கள் போன்றவற்றைப் பதிவிறக்கமும் பதிவேற்றமும் செய்துகொள்ளலாம
 • Reviews


 • மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் சோதனை முயற்சி வெற்றி

  மனிதனை விண்ணுக்கு அனுப்புவது தொடர்பாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ‘பேட் அபார்ட் டெஸ்ட்’ என்ற சோதனை நேற்று நடைபெற்றது. விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும்போது நெருக்கடி ஏற்பட்டால் பாதுகாப்பாக அவர்களை மீட்கும் தொழில்நுட்பத்தை இஸ்ரோ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. தற்போது வரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே மனிதனை விண்ணுக்கு அனுப்பும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன.
 • Reviews


 • தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

  தமிழகத்தில், வருகின்ற ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் ஜூன் 5ஆம் தேதி அறிவித்திருந்தார். இந்நிலையில் அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
 • Reviews


 • டொரன்டோ, ஆக்ஸ்ஃபோர்டிலும் தமிழ் இருக்கைக்கு முயற்சி: தமிழ் இருக்கை குழுமம் தகவல்

  ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு தனி ஆய்வு இருக்கை அமைவதை ஹார்வர்டு தமிழ் இருக்கை குழுமம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. டொரன்டோ, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
 • Reviews


 • அமெரிக்காவின் முடிவால் யாருக்கும் பலனில்லை என்று தெரிவித்த ஈரான்

  அமெரிக்கா ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தைத் திரும்பப் பெற்றதில் யாருக்கும் பலனில்லை என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஈரான் அதிபர் ரவ்ஹானி ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக ஆஸ்திரியா சென்றிருக்கிறார். அங்கு ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ரஷ்யா உள்ளிட்ட 5 வல்லரசு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வியன்னாவில் கூடி விவாதிக்க உள்ளனர். ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் வாங்குவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் ட்ரம்ப் எடுத்து வருகிறார். ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகினாலும் தாங்கள் ஒப்பந்தத்தை தொடர்வதாக மற்ற வல்லரசு நாடுகள் ஏற்கெனவே அறிவித்துள்ளது
 • Reviews


 • விஜய் மல்லையாவின் லண்டன் வீட்டில் சோதனை நடத்த இங்கிலாந்து நீதிமன்றம் அனுமதி

  பொத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடினார். அவர் மீது பல்வேறு வங்கிகள் சார்பில் தொடர்பட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை கைது செய்யவும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது ரூ.13,900 கோடி சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது. விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்கவும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் அனுமதி கோரி இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தித்தின் வர்த்தக கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் மல்லையாவுக்கு சொந்தமாக லண்டனில் உள்ள வீடு மற்ற இடங்களில் சோதனை நடத்தவும், அவரது சொத்துக்களை முடக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.
 • Reviews


 • கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை-இந்தியர்கள் சிக்கிக் கொண்டனர்

  சீனாவின் திபெத் எல்லையில் அமைந்துள்ள கைலாஷ் மானசரோவருக்கு ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு புனிதப் பயணம் சென்று திரும்பும்போது, பலத்த மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, திபெத்தை ஒட்டிய நேபாள மலைப் பகுதியில் இந்திய பக்தர்கள் சிக்கிக் கொண்டனர். நேபாள அரசின் உதவியுடன் இவர்களை மீட்கும் நடவடிக்கைகளை சுஷ்மா ஸ்வராஜ் முடுக்கிவிட்டார். இதில் நேற்று முன்தினம் சிமிகோட் பகுதியிலிருந்து 158 பக்தர்கள் மீட்கப்பட்டு இந்திய எல்லையை ஒட்டியுள்ள நேபாள்கஞ்ச் பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தப் பணியில் 7 வர்த்தக விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன.
 • Reviews


 • டெல்லி துணைநிலை ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம்

  மத்திய அரசுக்கு ஆதரவாக துணைநிலை ஆளுநர் அனில் பைஜல் செயல்படுவதால், டெல்லியில் எந்தத் திட்டங்களையும் செயல்படுத்த முடியவில்லை என்று கேஜ்ரிவால் குற்றம் சாட்டினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் (ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் அசோக் பூஷண்) கொண்ட அமர்வு முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்தது. அமர்வு சார்பில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பை வாசித்தார். அதில் அவர் கூறியதாவது: சட்டம் ஒழுங்கு, காவல் துறை மற்றும் நில விவகாரங்களைத் தவிர மற்ற துறைகளை நிர்வகிக்கவும் முடிவெடுக்கவும் டெல்லி அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகள், ஆலோசனைகளைக் கேட்டுதான் ஆளுநரால் செயல்பட முடியும். அமைச்சரவை எடுக்கும் முடிவுகள் ஆளுநருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். அதனால், ஆளுநரின் முடிவு கட்டாயம் என்ற அர்த்தம் இல்லை. விதி விலக்காக உள்ள விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அதை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் தெரிவிக்கலாம்.
 • Reviews


 • நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை ஒன்றாக நடத்த சாத்தியமில்லை

  நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாகச் சட்ட ஆணையம் அறிவித்துள்ளது. ஜூலை 7 மற்றும் 8ஆம் தேதிகளில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. ஏழு தேசிய கட்சிகளுக்கும் 59 மாநிலக் கட்சிகளுக்கும் இது தொடர்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் , “அரசியலமைப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஆகியவற்றின் கீழ் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் கடமைப்பட்டுள்ளது. மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்தால் மட்டுமே ஒரே நேரத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல் நடத்த இயலும்.” என்று தெரிவித்துள்ளார
 • Reviews


 • பஞ்சாபில் அரசு ஊழியர்களுக்குப் போதை மருந்து சோதனை

  முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையில் பஞ்சாப் மாநில அமைச்சரவைக் கூடியது. முதன்முறையாக போதைப்பொருள் கடத்தலில் சிக்கியவர்களுக்கும் மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டுமென மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. பஞ்சாபில் அரசு ஊழியர்களுக்குக் கட்டாய போதைப் பொருள் சோதனை நடத்தப்படும் என அறிவித்துள்ளார் அமரீந்தர் சிங். காவல் துறை பணியாளர்கள் உட்பட அனைத்துத் துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கும் இது பொருந்தும
 • Reviews


 • விலங்குளையும் மனித உரிமைகளுடன் நடத்த வேண்டும் - உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம்

  இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையிலான மலைப்பகுதிகளில் பொதி சுமப்பதற்காக குதிரைகள், மாடுகள் மற்றும் கழுதைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் மீது அதிகமான சுமைகளை ஏற்றி அவற்றைக் கொடுமைப்படுத்துகின்றனர். நாரயண் தத் பட் என்பவர் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் கூறியதாவது: உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள அனைத்து விலங்குகளும், பறவைகளும் மற்றும் கடல்வாழ் உயிரினங்களும் மனிதர்களைப் போன்றே மனித உரிமைகளுடன் நடத்தப்பட வேண்டும். இதற்காக மாநில அரசு, விலங்குகளைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் கமிட்டிகளை உருவாக்க வேண்டும. விலங்குகளை கம்பி வைத்துள்ள குச்சிகளைக் கொண்டு துன்புறுத்தவோ, பிரம்புகளை வைத்து அடிக்கவோ கூடாது. இந்த நடவடிக்கைகள் தடை செய்யப்படுகின்றன. இதன் மூலம் விலங்குகளுக்கு ஏற்படும் காயங்கள், சிராய்ப்புகளைத் தடுக்கலாம். மாநிலம் முழுவதும் இந்த உத்தரவை அரசு அமல்படுத்த வேண்டும்.
 • Reviews


 • கேரளாவில் கல்லூரிகளில் திருநங்கைகளுக்குக் கூடுதலாக இரண்டு இடங்கள் ஒதுக்கீடு

  இதுகுறித்து கேரளக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், சமூகப் பிரச்சினைகள் காரணமாக, திருநங்கைகள் தங்கள் படிப்பைப் பாதியிலே நிறுத்துகின்றனர் அல்லது ஒரு கல்வியாண்டுக்கு பிறகு அல்லது மாணவர் சேர்க்கை முடிந்த கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கின்றனர். கல்வி பெற முடியாதவர்களுக்கு உதவும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உயர்கல்விக்கான சிறந்த வாய்ப்புகளைத் திருநங்கைகளுக்கு வழங்குவதன் மூலம், அவர்களைச் சமுதாயத்தில் முன்னிலைக்குக் கொண்டுவர முடியும். சமூக நீதி துறையின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில எழுத்தறிவு மிஷன் என்ற திட்டத்தின் கீழ் படிக்கவரும் திருநங்கைகளுக்குத் தங்குவதற்கு தேவையான வசதியையும் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 • Reviews


 • கச்சா எண்ணெய் விலையேற்றம் இந்திய பொருளாதாரத்துக்கு முக்கியமான சவால்

  கச்சா எண்ணெய் விலையேற்றம், வங்கிகளின் வரவு செலவுகளை சரிசெய்தல் மற்றும் முதலீடுகள் போன்றவை இந்திய பொருளாதாரத்துக்கு முக்கியமான சவால்களாக இருக்கும் என மூடி’ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. வங்கிகளில் அரசு மறு முதலீடு செய்வது சிக்கல்களை குறைக்க போதுமானதாக இல்லை எனவும் மூடி’ஸ் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • பொது இடங்களில் வைஃபை சேவை அதிகரித்தால் ஜிடிபிக்கு 2,000 கோடி டாலர் அளவுக்கு பயனளிக்கும்: கூகுள் நிறுவனம் தகவல்

  நாடு முழுவதும் பொது இடங்களில் வைஃபை சேவை அளிப்பது அதிகரித்தால் ஜிடிபியில் 2,000 கோடி டாலர் அளவுக்கு பயன்தரும் என கூகுள் நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. இதுதொடர்பாக தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசித்து வருவதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2015-ம் ஆண்டு ரயில்டெல் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் 400 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதியை கூகுள் நிறுவனம் அமைத்துள்ளது.
 • Reviews


 • ஜப்பான் கால்பந்து அணி கேப்டன் மகடோ ஹசீபே ஓய்வு

  ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்துத் தொடரின் நாக்-அவுட் சுற்றுக்கு ஜப்பான் முன்னேறியிருந்தது. இந்த நிலையில் அந்த அணி பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியில் தோல்வி கண்டு வெளியேறியது. இதையடுத்து அணியின் கேப்டன் ஹசீபே தனது ஓய்வு முடிவை அறிவித்தார
 • Reviews