Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள் - பாதுகாப்பு
 • புல்வாமா தாக்குதல்

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு பயங்கரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்கு தலுக்கு காரணமான ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு பயங்கரவாதிகள், பாகிஸ்தானின் பாலாகோட் முசாஃபராபாத், சகோட்டி ஆகிய இடங்களில் உள்ள முகாம்களில் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்து இந்திய போர் விமானங்கள் செவ்வாய்க்கிழமை அதி காலை குண்டுவீசின. இதில் 350 பயங்கரவா திகள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக ஜம்மு பிராந்தியத்தில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பாகிஸ்தானின் 20 அதிநவீன எப்-16 ரக போர் விமானங்கள் புதன்கிழமை காலை ஊடுருவின. பாகிஸ்தான் போர் விமானங்கள் ஊடுருவியதைக் கண்டறிந்து, அவற்றை வழிமறித்து இந்திய போர் விமானங்கள் விரட்டினர். அப்போது பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமானம், பாகிஸ் தான் பகுதியில் விழுந்தது. எஞ்சிய விமானங்கள் சில வெடிகுண்டுகளை இந்திய பகுதியினுள் வீசிச் சென்றன. இதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை . இதனிடையே, பாகிஸ்தான் போர் விமானங்களால், இந்திய விமானப்படையின் மிக்-21 ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. அதிலிருந்த விமானி அபிநந்தன் வர்த்தமான், பாகிஸ் தான் வீரர்களிடம் சிக்கிக் கொண்டார். இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்தது.அபிநந்தன் மார்ச் 1அன்று வித்தலை செய்யப்பட உள்ளார். அபிநந்தன் விடுதலை தொடர்பான இம்ரான்கானின் அறிவிப்பை இந்திய விமானப்படை வரவேற்றுள்ளது. தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விமானப்படை துணைத் தளபதி ஆர்.ஜி.கே, கபூர், 'அபிநந்தன் விடுதலை செய்யப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது; அவரை காண ஆவலுடன் இருக்கிறோம். இதை நல்லெண்ண நடவடிக்கையாக கருத முடியாது. ஜெனீவா தீர்மானத்தின்கீழ் அது இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்,
 • Reviews


 • மிராஜ் 2000

  பாகிஸ்தான் எல்லைக்குள் சுமார் 50 கி.மீ. தொலைவுக்கு ஊடுருவிய இந்தியாவின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் நேற்று அதிகாலை குண்டுமழை பொழிந்து தாக்கு தல் நடத்தின. சுமார் 21 நிமிடங்களில் பாலகோட், முஷாபராபாத், சாகோட்டி ஆகிய 3 இடங்களில் செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் முழுமையாக அழிக்கப்பட்டன.
 • Reviews


 • உலக தொழுநோய் தினத்தின் கருப்பொருள்

  பன்னாட்டளவில் தொழுநோயைப்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக தொழுநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மைக்கோ பாக்டீரியம் லெப்ரே எனும் பாக்டீரியாவினால் இந்நோய் உண்டாகின்றது. இவை மனித உடலில் மிகவும் மெதுவாக பெருகவல்ல தொற்றுநோயாகும். நிகழாண்டுக்கான உலக தொழுநோய் தினத்தின் கருப்பொருள் "குறைபாடுகளற்ற சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள்” என்பதாகும். குழந்தைகளில் தொழுநோயோடு தொடர்புடைய குறைபாடுகள் ஏற்படுவதை முற்றிலும் தடுப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது இந்தக் கருப்பொருள். இது மனித இனத்திற்கு தெரிந்த பழமையான நோய்களில் ஒன்றாகும்.
 • Reviews


 • தொழில் நிறுவனங்கள்

  சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கிக் கடனை திருப்பி செலுத்தும் பொழுது எதிர் கொண்டுள்ள பிரச்சனைகளை ஆராய்வதற்காக, யு.கே. சின்ஹா தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.
 • Reviews


 • திடக்கழிவு மேலாண்மை

  தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்படும், ஸ்வட்ச் சர்வேக்ஷன் விருதில், மாநில அளவில் திடக்கழிவு மேலாண்மையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. திடக்கழிவு மேலாண்மையில் முதலிடம் பிடித்த மாநகராட்சி – ஹைதராபாத் என்பது குறிப்பிடத்தக்கது.
 • Reviews


 • Women on Wheels

  ஹைதராபாத்தில் உள்ள பெண்களின் பாதுகாப்பிற்காக, ‘Women on Wheels’ என்னும் போலீஸ் பிரிவை அம்மாநில அரசு, தொடங்கியுள்ளது.
 • Reviews


 • அக்னி-5 ஏவுகணையை ராணுவத்தில் சேர்க்க நடவடிக்கை

  5,000 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று எதிரி இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது. அணு ஆயுதங்களையும் அக்னி-5 ஏவுகணை ஏந்திச் செல்லும் திறன் படைத்தது. இந்த ஏவுகணை சீனா தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய், ஹாங்காங் போன்ற எந்த நகரத்தையும் தாக்கும் சக்தி படைத்தது. 2012-ம் ஆண்டு முதல் இதுவரை அக்னி-5 ஏவுகணை 5 முறை சோதனை செய்து பார்க்கப்பட்டது. அந்த 5 முறையும் சோதனை வெற்றியடைந்தது.
 • Reviews


 • இராணுவத்தில், இலக்கை நோக்கி தாக்கக் பயன்படுத்தப்படும் பினாகா ராக்கெட் 2வது நாளாக சோதனை செய்யப்பட்டது.
 • Reviews


 • ஐ.என்.எஸ்.வி. தாரினி என்ற கப்பலில் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பெண்கள் நாளை திங்களன்று கோவா வந்தடையவுள்ளனர். இந்தியக் கடற்படையில் முதன்முறையாக ஆறு பெண் அதிகாரிகள் கொண்ட குழுவினர், ஐ.என்.எஸ்.வி. தாரினி என்ற கப்பலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். உத்தரகாண்டைச் சேர்ந்த வர்த்திகா ஜோஷி (28) தலைமையில் ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதீபா ஜம்வால், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஸ்வாதி, மணிப்பூரைச் சேர்ந்த விஜயதேவி, தெலங்கானாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா, டேராடூனைச் சேர்ந்த பாயல் குப்தா ஆகியோர் நிக்கா சாகர் பரிக்கிராம என்ற திட்டத்தின் பெயரில் 26,100 நாட்டிக்கல் மைல், அதாவது 42,000 கி.மீ பயணத்தை மேற்கொண்டனர். இந்த எட்டு மாத பயணத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஃபோக்லாந்து தீவுகள், கேப் டவுன் ஆகிய இடங்களில் மட்டுமே கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.
 • Reviews


 • 542 மில்லியன் டாலர் மதிப்பில் உலகிலேயே குறைந்த எடை கொண்ட 145 பீரங்கிகளை வாங்குவதற்கு பிரிட்டிஷை சேர்ந்த பிஏஇ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்திடம் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது
 • Reviews


 • ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட்ட ‘ஐ.சி.ஜி.எஸ்.விக்ரம்’ என்ற அதிநவீன புதிய ரோந்து கப்பல், இந்திய கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • ராஜஸ்தானில் போக்ரான் நகரில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது .இந்த ஏவுகணை ஒலி வேகத்தை விட மூன்று மடங்கு வேகமாக சென்று தாக்கும்.
 • Reviews


 • இந்திய ராணுவத்தில் முதல் முறையாக விமானப் படை விமானிகளாகப் பெண்களையும் சேர்க்கலாம் எனப் பாதுகாப்புத் துறை முடிவு செய்தது. அதற்கான சோதனை முயற்சியில் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாவனா காந்த், மோகனா சிங், அவானி சதுர்வேதி ஆகிய மூன்று பெண்களும் விமானப்படையில் பல்வேறு சவால் மிக்க பயிற்சிகளை மேற்கொண்டு போர் விமானிகளாகத் தேர்வாகினர். பயிற்சி முடித்த அவர்கள் அப்போதைய ராணுவ மந்திரியான மனோகர் பாரிக்கர் முன்னிலையில் பெண் விமானிகளாக முறைப்படி பொறுப்பேற்றனர்.
 • Reviews


 • ஒடிசா மாநிலம் பாலச்சூர் மாவட்டம் அப்துல் கலாம் தீவில் உள்ள கடற்கரை பகுதியில் அணு ஆயுதங்களைத் தாங்கிச் சென்று தாக்கக்கூடிய பிரித்வி 2 ஏவுகணை இன்று காலை 11.35 மணியளவில் சோதனையிடப்பட்டது. பிரித்வி-2, 9 மீட்டர் உயரம் கொண்டது. சுமார் 350 கிமீ தொலைவிலுள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. 500 கிலோ முதல் 1000 கிலோ வரையிலான எடையைச் சுமந்து சென்று இலக்கைத் தாக்கும் என்று இந்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
 • Reviews


 • அணு ஆயுதங்களைத் தாங்கி சென்று எதிரி இலக்குகளைத் தாக்கக்கூடிய, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி - 1(A) ஏவுகணை இன்று (பிப்ரவரி 6) வெற்றிகரமாகச் சோதித்துப் பார்க்கப்பட்டது. ஒடிசா மாநிலம் பாலச்சூர் மாவட்டம் அப்துல் கலாம் தீவில் உள்ள கடற்கரைப் பகுதியில் காலை 8.30 மணியளவில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. அக்னி - 1(A) ஏவுகணை 15 மீட்டர் உயரமும், 12 டன் எடையும் கொண்டது. ஒரு டன் அணு ஆயுதப் பொருட்களைச் சுமந்து சென்று இலக்கைத் தாக்கும் அளவில் தயாரிக்கப்பட்டது.
 • Reviews


 • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3வது நீர்மூழ்கிக் கப்பலான கரன்ஜ் இன்று மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 • Reviews


 • அணு ஆயுதங்கள் கொண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ரக ஏவுகணையின் சோதனை ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் பாதுகாப்பு சோதனை நிலையத்தில் நடைபெற்றது.
 • Reviews


 • இந்தியாவின் முதல் முழுநேர பெண் பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் நிா்மலா சீதாராமன் இன்று காலை சுகோய் 30 ஜெட்ரக போா் விமானத்தில் பயணம் மேற்கொண்டாா். புவியீா்ப்பு சக்திக்கு எதிராக பணியாற்ற வசதியாக ஜி-சூட் அணிந்த நிா்மலா சீதாராமன் ஜோத்பூா் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டாா்.
 • Reviews


 • ஆகாஷ் சூப்பர்சானிக் ஏவுகணை ஒடிசாவில் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது. இந்திய ராணுவத்தில் ஆகாஷ் ஏவுகணை சேர்க்கப்படுகிறது.
 • Reviews


 • பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை சோதனை இன்று வங்காள விரிகுடாவில் நடைபெற்றது. முதல் முறையாக சுகோய் -30 எம்.கே.ஐ. (Sukhoi-30MKI) என்ற போர் விமானத்தில் இருந்து ஏவுகணை ஒன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
 • Reviews


 • உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபாங்கி ஸ்வரூப். இவர் இந்திய கடற்படையின் முதல் பெண் விமானியாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், புதுடெல்லியைச் சேர்ந்த அஸ்தா சேகல், புதுச்சேரியைச் சேர்ந்த ஏ.ரூபா, கேரளாவைச் சேர்ந்த சக்தி மாயா ஆகிய மூவரும் கடற்படையில் ஆயுதம் மற்றும் தகவல் பிரிவில் ஆய்வாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 • Reviews


 • இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை 'நிர்பய்' வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
 • Reviews


 • "PRABLE DOSTYK - 2017" பயிற்சி இந்திய ராணுவத்திற்கும், கஜகஸ்தான் இராணுவத்திற்கும் இடையே ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்றது.
 • Reviews


 • இந்திய மற்றும் இந்தோனேசிய கடற்படைகளுக்கு இடையே கார்பேட் (CORPAT) கடற்படை பயிற்சி நடைபெற்றது.
 • Reviews


 • இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக்21 பைசன் ரக போர் விமானங்களை, முதல் முறையாக பெண் பைலட்டுகள் பாவனா காந்த், அவனி சதுர்வேதி, மோகனா சிங் ஆகிய 3 பேர் அடுத்த மாதம் இயக்க உள்ளனர்.
 • Reviews


 • மும்பையில் உள்ள அரசுக்கு சொந்தமான Mazaz Dock Limited இந்திய கடற்படைக்கு ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கியுள்ளது
 • Reviews


 • கோவா ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் உள்நாட்டில் கட்டப்பட்ட இந்திய கடலோர காவல்படை கப்பல் (Indian Coast Guard Ship) ஷவுர்யா கோவாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
 • Reviews


 • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation) இந்தியாவின் முதல் மனிதரில்லா தானியங்கி தாங்கியான "முந்த்ரா"(Muntra) வை உருவாக்கியுள்ளது.
 • Reviews


 • இந்தியாவின் முதல் தனியார் போர்க்கப்பல்கள் குஜராத்தில் ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது அவை - 'ஷாச்சி' மற்றும் 'ஸ்ருதி'
 • Reviews


 • நிலத்தில் மட்டுமல்லாமல் நீரிலும் போருக்கான ஆயுதங்களை வலுவாக்குவதில் இந்தியா தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் பிராஜெக்ட்-75 எனப்படும் நீர் மூழ்கி போர்க் கப்பல்களை உருவாக்கும் திட்டம், கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டது.தற்போது இந்த திட்டத்தை இந்தியா செயல்படுத்த உள்ளது.
 • Reviews


 • ஒடிசா சந்திபூரில் இந்தியாவின் அனைத்து வானிலை கண்காணிப்பு ஏவுகணை (all weather tracked-chassis Quick Reaction Surface-to-Air Missile) வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
 • Reviews


 • இந்திய ராணுவம் முதல் முறையாக துப்பாக்கி குண்டு பாயாத ஹெல்மெட்டுகளை பெற்றுள்ளது.
 • Reviews


 • அமெரிக்காவின் 22 ஆளில்லாத கார்டியன் டிரான்ஸ் விமானத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
 • Reviews


 • இந்திய கடற்படைக் கப்பல்களை சரி செய்வதற்காக,மிதக்கும் டாக்கை L &T நிறுவனம் சென்னையில் உருவாக்கியுள்ளது.
 • Reviews


 • ராஜஸ்தானில் டாங்கி எதிர்ப்பு நாக் ஏவுகணை வெற்றிகரமாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (The Defence Research and Development Organisation) சோதனை செய்துள்ளது.
 • Reviews


 • ரூ.60,000 கோடி மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் திட்டத்திற்கான பணியை இந்தியா தொடங்கவுள்ளது. பாதுகாப்புத் துறையின் உற்பத்திப் பிரிவில் புதிய கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் மேற்கொள்ளும் முதல் திட்டம் இதுவாகும்.
 • Reviews


 • இந்தியா முதன்முறையாக அனைத்து வானிலையையும் தாங்கும் தரையிலிருந்து விண்ணை நோக்கி தாக்கும் ஏவுகணையை (QR-SAM) ஒடிசா சந்திபூரில் வெற்றிகரமாக சோதனை செய்தது.
 • Reviews


 • ஒடிசா மாநிலம், சந்திப்பூர் அருகில் 350 கி.மீக்கு அப்பால் இருக்கும் இலக்கைத் துல்லியமாக கண்டறிந்து அழிக்கும் பிரித்வி-II ஏவுகணை விண்ணில் ஏவி பரிசோதனை செய்யப்பட்டது.
 • Reviews


 • மும்பை, மஸாகோன் டாக் லிமிடெட் தயாரித்த இரண்டாவது ஸ்கார்பியின் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல் INS காந்தாரி பாதுகாப்பு படையில் சேர்க்க உள்ளது
 • Reviews


 • இந்தியாவின் முதல் வெற்றிகரமான ஸ்கார்ப்பீயன் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து டார்ப்பெடோ வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
 • Reviews