Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள் - அரசு திட்டங்கள்
 • தேஜஸ்

  மதுரை-சென்னை இடையே அதி நவீன ரயிலான தேஜஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கன்னியா குமரியில் இருந்து மார்ச் 1 அன்று காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார். பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிறைந்த இந்த அதி நவீன ரயில் சென்னை-மதுரை இடையே 6மணி 30 நிமிஷத்தில் சென்றடையும்.
 • Reviews


 • சொற்குவைத் திட்டம்

  தமிழ் மொழியில் உள்ள அனைத்துச் சொற்களையும் ஒன்று திரட்டி ஓரிடத்தில் அனைவருடைய பயன்பாட்டுக்கும் வழங்கும் உயர்ந்த நோக்கத்துடன் தமிழக அரசு சொற்குவைத் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது. ரூ.1 கோடி தொடர் செல்வி னத்தில் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பொருட்குவையைப் போல பயனளிக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் தமிழில் எத்தனை சொற்கள் உள்ளன என்பதை யார் வேண்டுமானாலும் அறிய முடியும்.
 • Reviews


 • சவுதி அரேபியா மற்றும் இந்தியாவிற்கு இடையேயான ஒப்பந்தம்

  சவுதி அரேபியா பட்டத்து இளவரசரின் இந்திய வருகையின்போது கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள். 1.இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். 2 . இந்தியாவின் சுற்றுலா அமைச்சகம் மற்றும் சவுதி அரேபியாவின் சுற்றுலா மற்றும் தேசிய பாரம்பரிய சவுதி ஆணையத்தின் இடையே சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். 3 .இந்தியா மற்றும் சவுதி அரேபியா அரசின் இடையே வீட்டுவசதித் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 4 .இருநாடுகளுக்கு இடையேயான முதலீட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்திய அரசின் முதலீடு செய் இந்தியா திட்டம் மற்றும் சவுதி அரேபியாவின் முதலீட்டு ஆணையம் செயல்திட்டம் 5 .ஒலிபரப்புத் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில், இந்தியாவின் பிரசார் பாரதி மற்றும் சவுதியின் ஒலிபரப்புக்கழகம், ஒலி-ஒளி நிகழ்ச்சிகளை பரிமாறிக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
 • Reviews


 • மேக் இன் இந்தியா

  அமெரிக்காவில் போர் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனமான லாக் ஹீட் மார்டின் நிறுவனம் இந்தியாவுக்கென பிரத்யேகமாக எப் 21 விமானங்களை 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் தயாரித்து அளிக்க முடிவு செய்துள்ளது.
 • Reviews


 • 112

  அனைத்து அவசர சேவைகளுக் கும் '112 என்ற ஒரே உதவி எண்ணை அழைக்கும் திட்டம் தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.காவல்துறையை தொலைபேசியில் அழைக்க எண் 100, தீ விபத் துக்கு 101, ஆம்புலன்சுக்கு 108, பெண்கள் பாதுகாப்புக்கு 1090 என்று பல சேவைகளுக்கு பல் வேறு உதவி எண்கள் உள்ளன. இதற்கு பதிலாக அனைத்து அவசர சேவைகளுக்கும் ஒரே உதவி எண்ணாக '112' என்ற எண்ணை அழைக்கும் திட்டம் ஏற்கெனவே இமாச்சலப் பிரதேசம், நாகாலாந்தில் செயல்பாட்டில் உள் ளது. இந்நிலையில், இத்திட்டம் தமிழகம், ஆந்திரா, உத்தரா கண்ட், பஞ்சாப், கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், தெலங்கானா, குஜராத், ஜம்மு காஷ்மீர் ஆகிய 11 மாநிலங் களிலும் புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் டையூ ஆகிய 5 யூனியன் பிரதேசங்களிலும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். ஸ்மார்ட் போன்களில் பவர் பட் டனை மூன்று முறை அழுத்தி னாலோ அல்லது சாதாரண போன் களில் 5 அல்லது 9 என்ற எண்ணை நீண்ட நேரத்துக்கு அழுத்தினாலோ அவசரகாலஅழைப்பு மையத்துக்கு தகவல் சென்றுவிடும். அங்கு உள்ள பயிற்சி பெற்ற ஊழியர்கள் தேவைப்படும் அவசர உதவிகளை கிடைக்க வழிவகை செய்வார்கள். அடுத்த ஆண்டுக்குள் '112 என்ற எண்ணை அழைக்கும் சேவை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தபடும்.
 • Reviews


 • அரசு ஊழியர்கள்

  மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை நேற்று (19 .02 .2019 ) வழங்கியது.
 • Reviews


 • பெண் பாதுகாப்பு

  அனுமதி இன்றி செயல்படும் பெண்கள் தங்கும் விடுதிகளை பற்றி பொதுமக்கள் 181 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று சமூக நலத்துறை தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
 • Reviews


 • ஜீவன் சம்பர்க் திட்டம்

  மாநிலத்திலுள்ள குறிப்பாக பாதிக்கப்பட்ட பழங்குடியினக் குழுக்களிடையே மாநில அரசின் மேம்பாடு மற்றும் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், சமீபத்தில் 'ஜீவன் சம்பர்க்' எனும் திட்டத்தை UNICEF இந்தியாவுடன் இணைந்து தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.70ஆவது குடியரசு தினத்தன்று ஆண்டுதோறும் நடக்கும் பழங்குடியின திருவிழாவான "ஆதிவாசி மேளா” நிகழ்வின்போது அவர் இதனை அறிவித்தார். திறன் மேம்பாடு, சமூகங்கள் மேம்பாடு, குழுக்களிடையே கண்டுபிடிப்பு மற்றும் ஒத்துழைப்பை அளித்தல் ஆகியவற்றில் இந்தத் திட்டம் தனது கவனத்தை செலுத்தும். நாட்டிலுள்ள மொத்த 75 பழங்குடியின சமூகங்களில், ஒடிசா மாநிலத்தின் 12 மாவட்டங்களின் தொலைதூரப் பகுதிகளில் மட்டும் 13 பாதிக்கப்பட்ட பழங்குடி இனக்குழுக்கள் வசித்துவருகின்றன.
 • Reviews


 • 14433

  தேசிய மனித உரிமைகள் ஆணையமானது பொதுச்சேவை மையங்கள் மூலமாக புகார்களை பதிவு செய்வதற்காக 14433 எனும் இலவச தொலைபேசி எண்ணைத் தொடங்கியுள்ளது.
 • Reviews


 • கிரிஷக் பந்து திட்டம்

  18 முதல் 30 வயதிற்குள் இறக்கும் விவசாயிகளின் குடும்பத்திற்கு 2 இலட்சம் நிதியுதவி அளிப்பதற்காக மேற்கு வங்காள அரசானது கிரிஷக் பந்து திட்டம் (Krishak Bandhu Scheme) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
 • Reviews


 • Mission Zero Accident

  விபத்து இல்லாத இரயில் பயணத்தை இலக்காகக் கொண்டு Mission Zero Accident என்ற திட்டத்தை இந்திய இரயில்வே செயல்படுத்தி வருகிறது.2020-க்குள் ஆளில்லா இரயில்வே, கிராசிங்குகளே நீக்குதல், இரயில் மோதலை தவிர்க்கும் முறை (Train Collision Avoidance System) ஆகியவை இதில் அடங்கும்.
 • Reviews


 • “ ஏழைகள் குறைந்த விலையில் மருந்துகளைப் பெறவேண்டும் என்பதாலேயே, 'பிரதன் மந்த்ரி பார்திய ஜனுஸாதி பரி யோஜனா திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் பல்வேறு தரப்பு மக்களும் பயனடைந்துள்ளனர்”
 • Reviews


 • பசுமைப் புரட்சி மற்றும் கிரிஷோன்னட்டி யோஜனா உள்ளிட்ட 11 திட்டங்களை இணைக்கும் வேளாண் குடைத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 • Reviews


 • பிரதான் மந்திரி வயா வந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கான முதலீட்டை இரட்டிப்பாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 • Reviews


 • ’மத்திய அரசின் சாலை அமைப்புத் திட்டமான பாரத்மாலா திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலை அமைப்புப் பணிகளுக்காக ஆயுள் காப்பீட்டுக் கழகத்திடமிருந்து (எல்.ஐ.சி.) ரூ.8,500 கோடியும், தேசிய சிறு சேமிப்பு நிதி நிறுவனத்திடமிருந்து (என்.எஸ்.எஸ்.எஃப்.) ரூ.10,000 கோடியும் நிதி திரட்ட இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது’ என்று கூறியுள்ளது.
 • Reviews


 • கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்விதமாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் 2005ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. கிராமப்புற இந்தியாவில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் அவர்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் குறைந்தபட்ச ஊதியத் தொகையைவிடக் குறைவாக இருப்பதால், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்த 18,000 ரூபாயை உடனடியாக வழங்க வேண்டுமென்று தொழிலாளர் உரிமை அமைப்புகள் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
 • Reviews


 • "Videsh Aaya Pradesh Ke Dwaar" என்ற திட்டத்தை வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் ஹைதராபாத்தில் தொடங்கினார் .
 • Reviews


 • ஆந்திர மாநில அரசு நவீன கிராமப்புறங்களை உருவாக்கும் நைபுண்யா ரதம் எனும் திட்டத்தை துவக்கியது.
 • Reviews


 • பெண் தொழில்முனைவோருக்காக உதயம் சகி என்னும் புதிய இணையதளத்தை மத்திய அரசு பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. தொழில் துறையில் பெண்களை முன்னிறுத்தி அவர்களுக்கான சலுகைகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் சார்பாக www.udyamsakhi.org என்னும் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் பெண் தொழில்முனைவோர் புதிதாகத் தொழில் தொடங்குவதற்கு எவ்வாறு திட்டமிடுவது, புதிய கண்டுபிடிப்பு பொருட்களை எவ்வாறு உற்பத்திக்குக் கொண்டு வருவது, நிதி ஆதாரத்தைப் பெருக்குவது ஆகியவை குறித்த பயிற்சி, தொழில் முனைவோரின் நேரடி சந்திப்புக் கூட்டம், சந்தைப்படுத்துவதற்கான கணக்கெடுப்பு நடத்துவது, தொழில் கல்வி, தொழில்நுட்பம் போன்ற அம்சங்கள் அமைந்திருக்கின்றன.
 • Reviews


 • கர்ப்பிணி பெண்ணுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக LaQshya திட்டம் கொண்டுவரப்பட்டது.
 • Reviews


 • 2018-19ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டம் வரும் அக்டோபர் மாதம் அமலுக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.11,000 கோடி தொகையை மத்திய மாநில அரசுகள் செலவிட உள்ளன. இதில் 40% தொகையை மாநில அரசுகளும் 60% தொகையை மத்திய அரசு அளிக்கின்றன.
 • Reviews


 • இமாச்சல பிரதேச அரசு மூத்த குடிமக்கள் உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தை (Senior Citizen Health Insurance Scheme) அறிமுகப்படுத்தியுள்ளது.
 • Reviews


 • கிராமப்புறங்களின் முன்னேற்றத்தைக் கருத்தில்கொண்டு டிஜிட்டல் கிராமங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 • Reviews


 • கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் "அஜீவிகா கிராமேன் எக்ஸ்பிரஸ் யோஜனா (Aajeevika Grameen Express Yojana)" என்ற பெயரில் தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் (Deendayal Antyodaya Yojana – National Rural Livelihoods Mission) துணை திட்டமாக தொடங்கியுள்ளனர்.
 • Reviews


 • பிரதான மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (Pradhan Mantri Kaushal Vikas Yojana) கீழ், புனேவில் உள்ள ஃபிலிம் மற்றும் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (Film and Television Institute of India) திறமை சார்ந்த சிறு படிப்புகள் நடத்துகிறது.
 • Reviews


 • பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா (Pradhan Mantri Vaya Vandana Yojana) என்ற 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்குகான ஓய்வூதிய திட்டத்தை மத்திய நிதி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
 • Reviews


 • ஸ்யாம் என்பது IX வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரைக்கான ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் திட்டம், இதை யாருக்கும் எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமெனிலும் பெற முடியும்.
 • Reviews


 • ஸ்வாயாம் பிரபா என்பது GSAT-15 செயற்கைக்கோளைப் பயன்படுத்தி 24X7 உயர் தரமான கல்வி நிகழ்ச்சிகளை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட 32 DTH சேனல்களின் தளம் ஆகும்.
 • Reviews


 • குஜராத் கைவினைஞர்கள்களுக்கு 'pehchan ' என்ற அடையாள அட்டைகள் வழங்கும் திட்டத்தை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தொடங்கினார் .
 • Reviews


 • பிரதான் மந்த்ரி கிராமீன் அவாஸ் யோஜனா வின்படி நாடு முழுவதும் 3 கோடி வீடுகள் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 • Reviews


 • பிரதான் மந்திரி சுரக்ஷித் மட்ரிட்வ அபியான் என்ற திட்டம் கர்ப்பிணி பெண்களுக்கு தரமான கர்ப்பகால பாதுகாப்பு வழங்குதல்.
 • Reviews


 • நாட்டின் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் கேந்திரா திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திறன் பயிற்சி மூலம் அனைவரும் வேலைவாய்ப்பு பெறும் தகுதியுடையவர்களாக மாறுவர்.
 • Reviews


 • உள்நாட்டு விமான போக்குவரத்தை துரித படுத்த உடான் UDAN திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு விலையில்லா சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி வரும் ஒன்றாம் தேதி துவக்கி வைககிறார் பிரதமரின் உஜ்வாலா யோஜானா எனப்படும் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சமையல் எரிவாயுவிற்கான செலவுத்தொகை ரூ.1,600 ஐ மத்திய அரசு செலுத்தும்.உ.பி., மாநிலத்தின் பால்லியா மாவட்டத்தில் வரும் ஒன்றாம் தேதி இத்திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
 • Reviews