Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள் - விருதுகள்
 • தமிழகக் கலைஞர்களுக்கான விருது

  2016-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டுகளுக்கான விருது பெறும் அகில இந்திய அளவில் புகழ்பெற்ற தமிழகக் கலைஞர்கள் பட்டியல்: பாரதி விருது: புலவர் புலமைப்பித்தன் (கவிஞர்- பாடலாசிரியர்), கவிஞர் சுப்பு ஆறுமுகம் (வில்லிசை), சிவசங்கரி (எழுத்தாளர்) பாலசரஸ்வதி விருது: சி, வி.சந்திரசேகர் (பரதநாட்டியம்), வைஜெயந்தி மாலா பாலி (பரதநாட்டியம்), வி.பி.தனஞ்ஜெயன் (பரதநாட்டிய ஆசிரியர்) எம்.எஸ். சுப்புலட்சுமி விருது: எஸ்.ஜானகி (திரைப்படபாடகி), பாம்பே சகோ தரிகள் சி.சரோஜா- சி.லலிதா (கர்நாடக இசைக் கலைஞர்கள்), டி. வி. கோபால கிருஷ்ணன் (கர்நாடக இசைக் கலைஞர்). கேடயம் பெறும் சிறந்த கலை நிறுவனங்களின் பெயர்ப் பட்டியல்: - ஸ்ரீ கிருஷ்ணா கான சபா, சென்னை, பாரதீய வித்யா பவன், சென்னை, சேலம் அமெச்சூர் ஆர்ட்ஸ் , சேலம். சுழற்கேடயம் பெறும் சிறந்த நாடகக் குழு: குட்வில் ஸ்டேஜ். சென்னை.
 • Reviews


 • பி.வி. நரசிம்மராவ் தேசிய தலைவர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது

  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, மறைந்த பிரதமர் நரசிம்மராவ் பெயரில் 'பி.வி. நரசிம்மராவ் தேசிய தலைவர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர்' என்ற விருது அளிக்கப்பட்டுள்ளது. தில்லியிலுள்ள தீன்மூர்த்தி பவனில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு, இந்த விருதை மன்மோகன் சிங்குக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
 • Reviews


 • 2018ம் ஆண்டுக்கான திரைப்பட விருது

  2018ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதுக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட் டுள்ளனர். 'கேப்டன்' மற்றும் “ஞான் மேரி குட்டி' படங்களில் சிறப்பாக நடித்ததற்காக ஜெயசூர்யா வுக்கும், 'சூடானி பிரம் நைஜீரியா' படத்தில் நடித்ததற்காக சவுபின் ஷாஹீருக்கும் சிறந்த நடிகர் விருது வழங்கப்படுகிறது.“சோலை' மற்றும் 'ஒரு குப்புற சித்த பையன்' படங்களில் நடித்த நிமிஷா சஜையனுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படுகிறது. சிறந்த குணச்சித்திர நடிகைகளாக 'சூடானி பிரம் நைஜிரியா' படத்தில் நடித்த சாவித்ரி ஸ்ரீதரன் மற்றும் சரசாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.விருது வழங்கும் விழா திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
 • Reviews


 • மகாத்மா காந்தி அமைதி விருது

  விவேகா னந்த கேந்திரம், அக்ஷய பாத்ரா அமைப்பு, சுலப் இன்டர்நேஷ னல், ஏகல் அபியான் அறக்கட் டளை, யோஹெய் சஸாகாவா அமைப்பு ஆகியவற்றுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மகாத்மா காந்தி அமைதி விருதை செவ்வாய்க்கிழமை வழங்கினார். தில்லியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 • Reviews


 • சியோல் அமைதி விருது

  தென்கொரியாவின் மிக உயரிய "சியோல் அமைதி விருது” பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று வழங்கப் பட்டது. அப்போது பேசிய அவர், தீவிரவாதத்தை வேரறுக்க உலக நாடுகள் ஓரணியில் திரள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். தென்கொரிய அரசு சார்பில் கடந்த 1990-ம் ஆண்டில் 'சியோல் அமைதி விருது ஏற்படுத்தப்பட்டது. இதற்காக உருவாக்கப்பட்ட சியோல் அமைதி விருது கலாச்சார அறக்கட்டளை, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விருதினை வழங்கி வருகிறது. கடந்த அக்டோபரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, 'சியோல் அமைதி விருது' அறிவிக்கப்பட்டது.
 • Reviews


 • ஜூவல்லரி பிராண்டுக்கான சிறப்பு விருது

  கொச்சியில் நடைபெற்ற 44-வது ஐஏஏ உலக காங்கிரஸ் விழாவில் மிகச் சிறந்த பிராண்டாக சர்வதேச அளவில் பிரபலமான கல்யாண் ஜூவல்லரியின் நிறுவனர் டி.எஸ்.கல்யாணராமனுக்கு இந்தியாவின் மிக நம்பகமான ஜூவல்லரி பிராண்டுக்கான சிறப்பு விருதை வழங்கி கவுரவிக்கிறார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்.
 • Reviews


 • ஆஸ்கார் விருது

  அமெரிக்காவில் வழங்கப்படும் உயரிய - விருது 'ஆஸ்கார்.'இந்த விருதை உலகம் முழுவதும் உள்ள அனைத்து மொழி திரையுலகமும் உயர்வானதாக கருதுகிறது. வாழ்நாளில் ஒரு முறையாவது ஆஸ்கார் விருது வாங்கி விட வேண்டும் என்பது ஒவ்வொரு கலைஞனின் கனவாகவும் இருக்கிறது. 1928-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆஸ்கார் விருது வழங்கும் விழா, இதுவரை 90 விருது நிகழ்வுகளைக் கண்டிருக்கிறது. 91-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நாளை (24 . 02 . 2019), லாஸ் ஏஞ்சல்சில் உள்ள டோல்பி தியேட்டரில் நடைபெற உள்ளது.
 • Reviews


 • சித்திரை திருநாள் விருதுகள்

  தமிழ்த்தாய் விருது புவனேசுவரம் தமிழ்ச் சங்கத்துக்கும், கபிலர் விருது புலவர்மி.காசுமானுக்கும், உ.வே.சா. விருது நடன காசிநாதனுக்கும், கம்பர் விருது க. முருகேசனுக்கும், சொல்லின் செல்வன் விருது ஆவடி குமாருக்கும், ஜி.யு.போப் விருது கு.கோ. சந்திரசேகரன் நாயருக்கும், உமறுப்புலவர் விருது பேராசிரியர் சா.நசீமாபானுவுக்கும், இளங்கோவடிகள் விருது சிலம்பொலி விருது சு.செல்லப்பனுக்கும், அம்மா இலக்கிய விருது உலகநாயகி பழனிக்கும், சிங்காரவேலர் விருது பா.வீரமணிக்கும் மற்றும் 2017 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது வை. மதன் கார்க்கிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் வழங்கினார்.
 • Reviews


 • கி.வீரமணி விருது

  அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் பெரியார் பன்னாட்டு மையம், ஒவ்வோர் ஆண்டும் சமூகநீதிக்காகப் பாடுபட்ட சான்றோர், போராளிகள், தலைவர்களுக்கு சமூகநீதிக்கான கி.வீரமணி விருதினை வழங்கி வருகிறது. 1996ஆம் ஆண்டு விருது வழங்குவது தொடங்கப்பட்டு, இதுவரை 2018ஆம் ஆண்டுக்கான விருது வரை மொத்தம் 10 பெருமக்களுக்கு சமூகநீதி விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் அரசமைப்புச் சட்டமன்றத்தில் (Constitution Club) உள்ள துணை சபாநாயகர் அரங்கில் 2018ஆம் ஆண்டுக்கான சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் விழா நடைபெற்றது. 2018ஆம் ஆண்டுக்கான விருது மத்திய அரசின் செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றி சமூகநீதி வழங்குவதற்கு அளப்பரிய பங்களித்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 • Reviews


 • நியூயார்க் டைம்ஸ் பயணம்

  அண்மையில் நடந்து முடிந்த நியூயார்க் டைம்ஸ் பயண நிகழ்வில் (NYTTS - 2019), 'நிகழ்வில் சிறந்ததற்கான - Best in Show' சிறப்பு விருதை இந்தியா வென்றது. வட அமெரிக்காவின் மிகப் பெரிய பயண நிகழ்வான இது, ஜன.25 - 27 வரை அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஜேக்கப் K ஜாவிட்ஸ் மையத்தில் நடந்தது. சுற்றுலா அமைச்சகமானது (இந்தியா), NYTTS 2019இல் “வழங்குநராக பங்கேற்றது. மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் செயலாளர் யோகேந்திர திரிபாதி தலைமையிலான உயர்மட்ட குழு மற்றும் இந்திய சுற்றுலாத்துறையைச் சேர்ந்த பல்வேறு பங்குதாரர்கள் இதில் பங்கேற்றனர்
 • Reviews


 • ICSI

  'Translating Excellence in Corporate Governance into Reality்காக தொழிலதிபரும், கோத்ரேஜ் குழுமத்தின் தலைவருமான ஆதி கோத்ரேஜ் அவர்களுக்கு ICSI வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. பொன்விழா கொண்டாடும் இந்திய நிறுவன செயலாளர்கள் நிறுவனம் (ICSI) மூலமாக இவ்விருது வழங்கப்படுகிறது.பெருநிறுவன நிர்வாகத்தில் சிறப்பு வாய்ந்தமைக்கான 18ஆவது ICSI தேசிய விருது சிப்லா நிறுவனமும், டாபர் இந்தியா நிறுவனமும் ACC லிமிடெட், ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், டாடா மெட்டாலிக்ஸ் & இந்தியன் உணவகங்கள் நிறுவனம் ஆகியவையுடன் இணைந்து பெற்றுக்கொண்டன.3ஆவது CSR சிறப்பு விருதுகள் GMR ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்திற்கும், டாடா பவர் லிமிடெட் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு முறையே வளர்ந்துவரும், நடுத்தர மற்றும் பெரிய நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது.
 • Reviews


 • தேசிய ஜியோஸ் பேசியல் விருது

  அகமதாபாத்தில் உள்ள விண்வெளிப் பயன்பாடுகள் மையத்தில் ரூர்கேலா ஐஐடியைச் சேர்ந்த பேராசிரியர். ஜெயந்த குமார் கோவுக்கு, 2017ஆம் ஆண்டுக்கான ISRS சிறப்பு தேசிய ஜியோஸ் பேசியல் விருது (வாழ்நாள் சாதனையாளர் விருது) வழங்கப்பட்டது. புவியிடஞ் சார்ந்த அறிவியல் மற்றும் பயன்பாடுகளின் வளர்ச்சிக்கான அவரது பங்களிப்புக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரு பதக்கம் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசை உள்ளடக்கியது இவ்விருது.இந்திய தொலையுணர்வு அறிவியல் சங்கம் (ISRS) என்பது விண்வெளி அறிவியல், தொலை உணர்வு மற்றும் புவியிடஞ்சார்ந்த தொழினுட்பம் ஆகியவற்றுக்காக அறியப்படுகிற ஓர் அமைப்பு.
 • Reviews


 • தென்னிந்திய நாணயவியல் கழகம்

  சென்னையில் நடந்த தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் 29ஆம் ஆண்டு கருத்தரங்கில் தினமலர் நாளிதழின் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.
 • Reviews


 • தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாகத் தலைசிறந்த ஊடகவியலாளருக்கான ராம்நாத் கோயங்கா விருது, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி ஆசிரியர் குணசேகரனுக்குக் கிடைத்துள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர் ராம்நாத் கோயங்கா நூற்றாண்டையொட்டி, 2005ஆம் ஆண்டு முதல் ஊடகத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு *ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருதுகள்’ வழங்கப்பட்டு வருகின்றன. பத்திரிகையாளர்களின் நேர்மையான, சிறப்பான பங்களிப்பைப் போற்றும் வகையில் இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2017ஆம் ஆண்டுக்கான விருதுகளை ஜனவரி 4ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.
 • Reviews


 • தேசிய ஜியோஸ்பேசியல் விருது

  அகமதாபாத்தில் உள்ள விண்வெளிப் பயன்பாடுகள் மையத்தில் ரூர்கேலா ஐஐடியைச் சேர்ந்த பேராசிரியர். ஜெயந்த குமார் கோவுக்கு, 2017ஆம் ஆண்டுக்கான ISRS சிறப்பு தேசிய ஜியோஸ் பேசியல் விருது (வாழ்நாள் சாதனையாளர் விருது) வழங்கப்பட்டது. புவியிடஞ் சார்ந்த அறிவியல் மற்றும் பயன்பாடுகளின் வளர்ச்சிக்கான அவரது பங்களிப்புக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரு பதக்கம் மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசை உள்ளடக்கியது இவ்விருது. இந்திய தொலையுணர்வு அறிவியல் சங்கம் (ISRS) என்பது விண்வெளி அறிவியல், தொலை உணர்வு மற்றும் புவியிடஞ்சார்ந்த தொழினுட்பம் ஆகியவற்றுக்காக அறியப்படுகிற ஓர் அமைப்பு.
 • Reviews


 • கபி சாம்ராட் உபேந்திரா பஞ்சா தேசிய விருது

  பிரபல ஆங்கில மற்றும் ஒடிசா இலக்கியவாதியான பேராசிரியர் மனோஜ் தாஸ், இலக்கியத்தில் வாழ்நாள் சாதனைக்காக கபி சாம்ராட் உபேந்திரா பஞ்சா தேசிய விருது பெற்றார். இந்த விழா, ஒடிசாவின் பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டது.
 • Reviews


 • தேசிய நிருத்ய ஷிரோமணி

  “கதக்” என்னும் நடனத்தை உலகளவில் பரப்பியதற்காக அமெரிக்க கதக் நடனக் கலைஞரான “அனிந்த்டே நியோகி அனாம்” (Anindita Neogy Anaam) என்பவருக்கு தேசிய நிருத்ய ஷிரோமணி – 2019 (National Nritya Shiromani Award – 2019) என்னும் விருது வழங்கப்பட்டது.
 • Reviews


 • தேசிய நிருத்ய சிரோமணி விருது

  வட அமெரிக்காவை சேர்ந்த கதக் நடனக்கலைஞர் அனிந்திதா நியோஜி அனாம், ஜனவரி 2 அன்று தேசிய நிருத்ய சிரோமணி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். ஒடிசாவில் நடந்த சர்வதேச நடன & இசை திருவிழாவான 10ஆவது கட்டாக் மகோத்சவத்தின்போது அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. கட்டாக் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து உத்கல் யுவ சங்ஸ்கிருதி சங்கம் (UYSS) இதனை ஏற்பாடு செய்திருந்தது.தேசிய மற்றும் சர்வதேச அளவில் இந்திய கலைகளை காப்பாற்றுவதிலும், ஊக்குவிப்பதிலும் சிறந்த பங்களிப்பு செய்தமைக்காக ஜெயதேவ் ராஷ்ட்ரிய புரஸ்கார் மற்றும் பிதக்தா நர்தகி சம்மன் போன்ற புகழ்பெற்ற தேசிய விருதுகளையும் அனிந்திதா அனாம் பெற்றுள்ளார்.
 • Reviews


 • இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்ம்ருதி மந்தனா, மகளிர் கிரிக்கெட்டின் கடந்த ஆண்டுக்கான சிறந்த ஆட்டக்காரர், ஒருநாள் போட்டிகளின் சிறந்த ஆட்டக்காரர் ஆகிய இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளார். இந்திய டி-20 அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் கௌர் 2018ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி-20 அணியின் கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அலிசா ஹீலி ஆண்டின் சிறந்த டி-20 ஆட்டக்காரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 • Reviews


 • நார்மன் கிம்பெல்

  ஆஸ்கர் மற்றும் கிராமி ஆகிய விருதுகளை வென்ற அமெரிக்க பாடலாசிரியர் நார்மன் கிம்பெல் (91), டிச.17 அன்று நியூயார்க்கில் காலமானார்.
 • Reviews


 • இலக்கியத் துறையில் சிறந்து விளங்கும் படைப்பாளிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ஞானபீட விருது இந்த ஆண்டு இந்திய - ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டு வருகிறது. 7 லட்சம் ரூபாய்க்கான காசோலை, தங்கமும் செம்பும் கலந்த பட்டயமும், பாராட்டுப் பத்திரம் மற்றும் பித்தளையால் ஆன கலைமகள் சிலையை உள்ளடக்கிய இந்த விருது 1961ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதுவரை, அதிகபட்சமாக, கன்னட மொழி எழுத்தாளர்கள் 7 முறையும், இந்தி மொழி எழுத்தாளர்கள் 6 முறையும் இந்த விருதைப் பெற்றுள்ளார்கள். தமிழில் அகிலன், ஜெயகாந்தன் ஆகியோர் கடந்த 1975 மற்றும் 2002ஆம் ஆண்டுகளில் ஞானபீடம் விருதினை பெற்றுள்ளனர்.
 • Reviews


 • தமிழ் இலக்கிய உலகில் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முழுநேர எழுத்தாளராக இயங்கிவரும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அவர் எழுதிய ‘சஞ்சாரம்’ நாவலுக்காக இந்த விருது வழங்கப்படவுள்ளது. கரிசல் வட்டாரத்தில் வாழ்ந்த நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்க்கை, வலிகள் ஆகியவற்றை மண் மணம் மாறாமல் அந்நாவலில் படைப்பாக்கியுள்ளார்.
 • Reviews


 • 2017ம் ஆண்டின் இந்திரா காந்தி அமைதிக்கான விருது, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதானது மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக 1986-இல் உருவாக்கப்பட்டது. இவ்விருது ஆண்டுதோறும் இந்திரா காந்தியின் பிறந்த நாளான நவம்பர் 19ம் தேதி அன்று வழங்கப்பட்டு வருகிறது.
 • Reviews


 • பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா (பிசிஐ) சார்பில் கடந்த 2012இல் இருந்து ஆண்டுதோறும் பத்திரிகை துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு விருது தொடர்பாக பிசிஐ நேற்று (நவம்பர் 5) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மூத்த பத்திரிகையாளரும் தி இந்து குழுமத்தின் தலைவருமான ராமுக்கு ராஜாராம் மோகன் ராய் விருது அறிவிக்கப்பட்டுள்ளது
 • Reviews


 • சென்னை மியூசிக் அகாடமி விருதுகள்

  பிரபல இசைக் கலைஞர் அருணா சாய்ராம் இந்த வருட சங்கீத கலாநிதி விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சங்கீத கலாசார்யா விருதுகள், பிரபல மிருதங்க வித்வான் பாலக்காடு டி.எஸ். மணியின் சீடரான தஞ்சாவூர் ஆர். ராமதாஸ்-க்கும், திருவனந்தபுரம் ஸ்வாதித் திருநாள் இசைக் கல்லூரியில் இசை பயின்ற வாய்ப்பாட்டுக் கலைஞர் டாக்டர் கே. ஓமணக் குட்டிக்கும் வழங்கப்படும்.
 • Reviews


 • அமெரிக்காவில் உள்ள தியேல் அறக்கட்டளையின் 2018ஆம் ஆண்டிற்கான தியேல் ஃபெல்லோஷிப் விருது, சென்னையைச் சேர்ந்த 21 வயதான மாணவி அபர்ணா கிருஷ்ணனுக்குக் கிடைத்துள்ளது.
 • Reviews


 • கனடாவில் உள்ள ப்ளூ சாப்பைர் (Blue sapphire) என்ற நிறுவனம் ஆண்டுதோறும் டொரண்டோ சர்வதேச தெற்காசிய திரைப்பட விருதுகளை (TISFA) வழங்கி வருகிறது. தமிழில் இருந்து விக்ரம்வேதா, அருவி, அறம், குரங்கு பொம்மை ஆகிய படங்கள் இந்த விருதுக்கு போட்டி போட்டன. இந்த போட்டியில்தான் குரங்கு பொம்மைக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த படம் பிரிவில் குரங்கு பொம்மை திரைப்படத்திற்கும், சிறந்த துணை நடிகர் பிரிவில் இயக்குநர் பாரதி ராஜாவுவுக்கும் விருதுகள் கிடைத்துள்ளன.
 • Reviews


 • பிசிசிஐயின் மதிப்புமிக்க விருதான ‘பாலி உம்ரிகர்’ விருதுக்கு விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெங்களூரில் 12ஆம் தேதியன்று பிசிசிஐ சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. 2016-17, 2017-18 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, மிகவும் உயரிய விருதான பாலி உம்ரிகர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 2017-18 வரையில் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்றுவிதமான ஆட்டங்களிலும் சேர்த்து கோலி 1,847 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல் மகளிர் கிரிக்கெட் அணியிலிருந்து ஹர்மன்பிரீத் கவுர் (2016-17) மற்றும் ஸ்மிரிதி மந்தனா (2017-18) ஆகியோரும் இவ்விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 • Reviews


 • பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, சௌத் ஆப்பிரிக்கா(பிரிக்ஸ்) ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல சர்வதேச நாடுகளின் அமைச்சர்கள், தூதுவர்கள், தலைவர்கள் பங்குகொண்ட மூன்று நாள் சர்வதேச வர்த்தக மாநாடு டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் கடந்த மே 21ஆம் தேதி முதல் மே 23ஆம் தேதி வரை நடைபெற்றது. மாநாட்டின் நிறைவில் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட தற்போது லண்டனில் வசிக்கும் அப்துல் பாசித்துக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பிரிக்ஸ் நாடுகளின் அமைதிக்கான விருது மற்றும் பட்டயத்தை வழங்கிக் கவுரவித்தார். மேலும் இந்த விழாவில் இந்தியாவில் பிறந்த லண்டன் பாராளுமன்ற உறுப்பினர் லார்ட் தில்ஜித் சிங் ராணா MBE மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகிய இருவருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
 • Reviews


 • மல்ட்டிப்பிள் ஸ்களீரோசிஸ் (Multiple sclerosis) எனப்படும் கொடிய நரம்பு அழற்சி நோயிலிருந்து போராடி மீண்டு அதே நோயில் பாதிக்கப்படுபவர்களுக்குச் சேவை செய்துவரும் மகேஸ்வரி என்பவரைப் பாராட்டி, தமிழக அரசு தன்னம்பிக்கை சாதனையாளர் விருது வழங்கியுள்ளது. சென்னை ராஜாஜி மருத்துவமனையில் உலக மல்ட்டிப்பிள் ஸ்களீரோசிஸ் நாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் தமிழக சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கரால் இந்த விருது வழங்கப்பட்டது.
 • Reviews


 • உலக அளவில் இலக்கியத்திற்கான உயரிய பரிசுகளில் ஒன்றான “மேன் புக்கர் பரிசு”. 1969ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மேன் புக்கர் பரிசை இயன் மெக் ஈவன், ஐரிஸ் முர்டோச், சல்மான் ருஷ்டி உள்பட பல உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பெற்றுள்ளனர். இந்த ஆண்டுக்கான மேன் புக்கர் பரிசு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. போலந்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஓல்கா (Olga Tokarczuk) ப்ளைட்ஸ் (Flights) என்ற நூலுக்காக இந்தப் பரிசை வென்றுள்ளார். பெண் எழுத்தாளரான இவர் இந்தப் பரிசைப் பெரும் முதல் போலந்து எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.
 • Reviews


 • தனது திரைப்படங்கள் வாயிலாக இந்தியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இணைப்பு பாலமாகச் செயல்பட்டதற்காக அமிதாப் பச்சனுக்கு கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பியாவுக்கான இந்திய தூதரக அலுவலகத்தில் ‘ஈரோப் டே 2018’ விழா அனுசரிக்கப்பட்டது. அந்த விழாவில் அமிதாப்புக்கு இந்தக் கௌரவ விருது வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டது. அமிதாப்பின் திரைப்படங்கள் அனைத்துமே ஐரோப்பியர்களை மிக நெருக்கமாகக் கவரும்படியும் இந்திய கலாச்சாரத்தை ஐரோப்பியர்கள் மிக எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் இருப்பதால் அங்குள்ளவர்களால் பெரிதும் ரசிக்கப்படுகின்றன. எனவே அமிதாப்புக்கு இந்த விருதை வழங்குவதில் பெருமை கொள்வதாக ஐரோப்பிய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
 • Reviews


 • 71ஆவது கான் சர்வதேசத் திரைப்பட விழா, கடந்த மே 8ஆம் தேதி தொடங்கி, 19ஆம் தேதி வரை பிரான்ஸில் நடைபெற்றுவருகிறது. இவ்விழாவில் பல உலக நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்பட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. அந்த வகையில் இந்த ஆண்டு திரைத் துறையில் சிறந்து பணியாற்றிய பெண் கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருது நடிகை ஸ்ரீ தேவிக்கு வழங்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • லதா மங்கேஷ்கர் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகிகளுள் ஒருவராவார். இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படுபவர். நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவரும் ஒருவர். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், அவரது கலை பணிகளைப் பாராட்டும் வகையில் அவருக்கு ஸ்வர மவுலி விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விருதை மும்பையில் உள்ள அவரது வீட்டில் வைத்து சங்கராச்சாரியா வித்யநரசிம்ம பாரதி சுவாமிகள், லதா மங்கேஷ்கரிடம் வழங்கினார்.
 • Reviews


 • உலகிலேயே மிகவும் மதிப்புமிக்க விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு, 2018ஆம் ஆண்டு யாருக்கும் வழங்கப்படாது என்று பரிசு வழங்கும் தி ஸ்வீடன் அகாடமி அறிவித்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் முதன்முறையாக நோபல் பரிசு விருதுகள் அறிவிக்கப்படாமலும், தேர்வு செய்யப்படாமலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த உயரிய விருது இதற்கு முன் உலகப் போர் காரணமாக 1940 முதல் 1943 வரை வழங்கப்படாமல் இருந்தது. அதன் பின் இந்த ஆண்டுதான் விருது வழங்கப்படாது என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 • Reviews


 • இதய நோய் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட சென்னை மாணவி விஜயகுமார் ராகவி (வயது 18), சிங்கப்பூரின் "ஏ ஸ்டார் திறன் தேடல் விருது" பெற்று சாதனை படைத்துள்ளார்.
 • Reviews


 • ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம், இசை சார்ந்த துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹங்கேரிய அமெரிக்கப் பத்திரிகையாளரும், செய்திப் பத்திரிகை வெளியீட்டாளருமாகிய ஜோசேப் புலிட்சர் பெயரில் 1912-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் புலிட்சர் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில் 2018ஆம் ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி புலனாய்வு செய்தி சேகரிப்பு பிரிவில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு, ரஷ்யாவின் அதிகாரிகளுக்கு இடையே இருந்த தொடர்பை கண்டறிய புலன் விசாரணையில் ஈடுபட்டு, பல தகவல்களை வெளியிட்ட தி வாஷிங்டன் போஸ்ட் மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஆகியவற்றுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • ‘மாஸ்டர் தீனநாத் மங்கேஸ்கர் ஸ்ம்ருதி பிரடிஸ்தன் விருதுகள் 2018’ நிகழ்வு மும்பையில் செவ்வாய் அன்று நடைபெற்றது. இந்தியத் திரையுலகம் மற்றும் நாடகத்தில் சிறப்பான பங்களிப்பைச் செய்ததற்காக அனுபம் கெருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
 • Reviews


 • 65வது தேசிய திரைப்பட விருதுகள் சேகர் கபூர் தலைமையில் உருவாக்கப்பட்ட 65வதுதேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு காற்று வெளியிடை மற்றும் மாம் என்ற திரைப்படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பின்னணி இசை இசையமைப்பாளர் ஆகிய இரு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான விருதுக்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவி(மாம் படத்திற்காக) தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பகத் பாசிலுக்கு(திரைப்படம் – தொண்டிமுத்தும் திரிக்சாக்சியமும்) அறிவிக்கப்பட்டுள்ளது. தாதா சாகிப் பால்கே விருது பாலிவுட் நடிகை வினோத் கன்னாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்கள் அபிமானம் பெற்ற பிரபல திரைப்படத்திற்கான தேசிய பாகுபலி-2 படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருதுக்கு ‘டூ லெட்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது டேக் ஆஃப் மலையாள படத்தில் நடித்த நடிகை பார்வதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆகபஷன் டைரக்டராக ராஜமவுலி(படம் – பாகுபலி) தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த பாடகிக்கான விருது சாஷா திருப்பதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பாடகருக்கான விருது ஜேசுதாசுக்கு(மலையாளப் படத்திற்காக) அறிவிக்கப்பட்டுள்ளது. யூனியன் அல்யூரன்ஸ், 2017 விருது வழங்கும் விழாவை இந்தோனேசியாவில் நடத்தியது
 • Reviews


 • சுவாசிலாந்து நாட்டில் வெளிநாட்டு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் தி லயன் விருதை’ இந்திய குடியரசு தலைவர் ‘ராம்நாத் கோவிந்துக்கு’ அந்நாட்டு அதிபர் மூன்றாம் ‘முசுவாதி’ வழங்கினார்.
 • Reviews