Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள் - பொருளாதாரம்
 • அரசு பத்திரங்கள் சில்லரை முதலீட்டை ஈர்க்கவும், எளிமையாக்கும் வகையிலும் “என்எஸ்இ கோ பிட்” என்ற புதிய மொபைல் செயலியையும், இணைய தளத்தையும் தேசிய பங்குச்சந்தை அறிமுகம் செய்துள்ளது. இதனை, செபி (SEBI) தலைவர் அஜய் தியாகி தொடங்கி வைத்துள்ளார்.
 • Reviews


 • மகாராஷ்டிர மாநிலத்தில் கொங்கன் பகுதியில் அல்போன்சா ரக மாழ்பழங்கள் அதிகமாக விளைகின்றன. இதனை மாம்பழங்களின் அரசன் என்று கூறுவார்கள். ஹபஸ் என்று கூறப்படும் இந்த மாம்பழம் உலக அளவில் புகழ்பெற்றது. ஜப்பான், கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பழத்துக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாகக் கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில், மகாராஷ்டிராவின் ரத்னகிரி, சிந்துதுர்க் ஆகிய பகுதிகளிலும் விளையும் அல்போன்சா மாம்பழங்களுக்கு புவிசார் குறியீடு (Geographical Indication) அங்கீகாரம் கிடைத்துள்ளது.
 • Reviews


 • சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதாரவியலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சர்வதேச நாணய நிதியம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதாரவியலாளராக இருக்கும் மவுரிஸ் அப்ஸ்ட்ஃபெல்டு இந்த ஆண்டின் இறுதியில் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவருக்குப் பதிலாக கீதா கோபிநாத் அந்தப் பொறுப்பிற்கு நியமிக்கப்படவுள்ளார். உலகின் சிறந்த பொருளாதார அறிஞர்களில் கீதா கோபிநாத்தும் ஒருவர். அவர் கல்வித் துறையில் மிகச் சிறப்பான அனுபவம் கொண்டவர்.
 • Reviews


 • சுகன்யா சம்ரிதி திட்டத்துக்கான குறைந்தபட்ச முதலீட்டு தொகை 250 ரூபாயாக குறைப்பு

  சுகன்யா சம்ரிதி திட்டத்துக்கான குறைந்தபட்ச ஆண்டு முதலீட்டு தொகை 1,000 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தில் பலரும் இணைவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
 • Reviews


 • 28 சதவீத ஜிஎஸ்டி வரம்பில் 35 பொருட்கள் மட்டுமே இருக்கும்

  சரக்கு மற்றும் சேவை வரியில் உச்சபட்ச வரிவிகிதம் 28 சதவீதமாகும். கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட போது 226 பொருட்கள் 28 சதவீத வரி விதிப்பில் இருந்தன. கடந்த ஓர் ஆண்டில் 191 பொருட்கள் உச்சபட்ச வரி வரம்பில் இருந்து குறைக்கப்பட்டிருக்கின்றன ஜூலை 27-ம் தேதி முதல் 35 பொருட்கள் மட்டுமே உச்சபட்ச வரி பிரிவில் இருக்கும்.
 • Reviews


 • உலக பணக்காரர் பட்டியலில் 14ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார் அம்பானி

  புளும்பெர்க் நிறுவனத்தின் உலக பில்லியனர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 14ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
 • Reviews


 • டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 28ஆவது கூட்டம்

  ஜிஎஸ்டி தொடர்பான விவாதங்களுக்கும், பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதங்கள் குறித்து ஆலோசிக்கவும் ஜூலை 21ஆம் தேதி தேசியத் தலைநகர் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 28ஆவது கூட்டம் கூடியது.
 • Reviews


 • வேகமாக வளரும் இந்திய பொருளாதாரம் - ஆசிய மேம்பாட்டு வங்கி

  2018-19 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 விழுக்காடாகவும், 2019-20ஆம் நிதியாண்டில் 7.6 விழுக்காடாகவும் இருக்கும்.
 • Reviews


 • ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி

  இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் சந்தை மதிப்பு ஜூலை 12ஆம் தேதி 1.6 சதவிகிதம் உயர்ந்து பங்கு ஒன்றின் விலை ரூ.1,099.8 ஆக அதிகரித்து, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 44.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக முகேஷ் அம்பானி உருவெடுத்துள்ளதாக புளும்பெர்க் பணக்காரர்கள் பட்டியல் கூறுகிறது. சீனாவின் அலிபாபா குழுமத்தின் நிறுவனர் ஜேக் மாவின் சொத்து மதிப்பு 44 பில்லியன் டாலராக உள்ளது.
 • Reviews


 • பொருளாதார வல்லரசு: பிரான்ஸை பின்னுக்கு தள்ளி 6-வது இடத்தை பிடித்தது இந்தியா

  உலக வங்கி வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட, ஜிடிபி எனப்படும் உள்நாட்டு உற்பத்தி அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரான்ஸை பின்னுக்குதள்ளி 6-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
 • Reviews


 • சரக்கு மற்றும் சேவை வரிக்குள் (ஜிஎஸ்டி) விரைவில் பெட்ரோலியப் பொருட்கள் சேர்க்கப்படும்

  பெட்ரோலியப் பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டுவருவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை செய்யும் என்று நிதித் துறை செயலர் ஹஷ்முக் ஆதியா கூறியுள்ளார். படிப்படியாக பெட்ரோலியப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறினார
 • Reviews


 • கச்சா எண்ணெய் விலையேற்றம் இந்திய பொருளாதாரத்துக்கு முக்கியமான சவால்

  கச்சா எண்ணெய் விலையேற்றம், வங்கிகளின் வரவு செலவுகளை சரிசெய்தல் மற்றும் முதலீடுகள் போன்றவை இந்திய பொருளாதாரத்துக்கு முக்கியமான சவால்களாக இருக்கும் என மூடி’ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. வங்கிகளில் அரசு மறு முதலீடு செய்வது சிக்கல்களை குறைக்க போதுமானதாக இல்லை எனவும் மூடி’ஸ் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • பொது இடங்களில் வைஃபை சேவை அதிகரித்தால் ஜிடிபிக்கு 2,000 கோடி டாலர் அளவுக்கு பயனளிக்கும்: கூகுள் நிறுவனம் தகவல்

  நாடு முழுவதும் பொது இடங்களில் வைஃபை சேவை அளிப்பது அதிகரித்தால் ஜிடிபியில் 2,000 கோடி டாலர் அளவுக்கு பயன்தரும் என கூகுள் நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. இதுதொடர்பாக தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசித்து வருவதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2015-ம் ஆண்டு ரயில்டெல் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் 400 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதியை கூகுள் நிறுவனம் அமைத்துள்ளது.
 • Reviews


 • பட்டியலிடப்பட்ட 222 நிறுவனங்களை நீக்க பிஎஸ்இ முடிவு

  பட்டியலிடப்பட்ட 222 நிறுவனங்களை சந்தையில் இருந்து நீக்குவதற்கு மும்பை பங்குச் சந்தை முடிவு செய்திருக்கிறது. இந்த பங்குகள் கடந்த ஆறு மாதமாக வர்த்தகமாகாமல் இருப்பதால் பிஎஸ்இ இந்த முடிவினை எடுத்திருக்கிறது. வர்த்தகமாகாமல் இருப்பதை தவிர இதர காரணங்களுக்காக சந்தையில் இருந்து நீக்கப்படும் நிறுவனங்களின் நிறுவனர்கள், இயக்குநர்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பங்குச்சந்தையில் நிதி திரட்ட முடியாது. பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் வசம் உள்ள பங்குகளை திரும்ப வாங்கிக்கொள்ள வேண்டும். பங்குச் சந்தை அமைக்கும் குழு பரிந்துரை செய்யும் விலையில் இந்த பங்குகள் திரும்ப வாங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
 • Reviews


 • நிதி ஆண்டு வளர்ச்சி ரூ ரூபாய் மதிப்பு சரிவு

  டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருவதால் கவலையடைய தேவையில்லை என நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்தார். சர்வதேச சூழல், பணவீக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 69 ரூபாய் அளவில் வர்த்தகமாகி வருகிறது. ரூபாய் மதிப்பை குறிப்பிட்ட எல்லைக்குள் வைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி இலக்கு ஏதும் நிர்ணயம் செய்யவில்லை. 2018-19 நிதி ஆண்டு வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். 2019-20 நிதி ஆண்டு வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும். 2022-ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கும். அதனை தொடர்ந்து இதே நிலையில் பொருளாதார வளர்ச்சி இருக்கும்.
 • Reviews


 • நடப்பு நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை குறையும் : நிதி அமைச்சர் பியுஷ் கோயல்

  நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் நிதிப்பற்றாக்குறை நிர்ணயிக்கப்பட்ட இலக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அளவை விட குறைவாக இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். 2017-18-ம் நிதி ஆண்டில் பட்ஜெட் பற்றாக்குறை 3.53 சதவீதமாகவும் நடப்பு நிதி ஆண்டில் (2018-19) 3.30 சதவீதமாகவும் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் அரசின் செலவு ரூ. 3.45 லட்சம் கோடியாகும். இந்த அளவானது 2018-19-ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தொகையில் 55.3 சதவீதமாகும்.
 • Reviews


 • ஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்த நாடுகளுக்குக் கட்டணச் சலுகை

  குறைந்தபட்ச வளர்ச்சியைக் காணும் வளரும் நாடுகளுக்கு வரிச் சலுகைகள் வழங்கும் விதமாக ஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்த உறுப்பு நாடுகளுக்குக் கட்டணச் சலுகை வழங்க இந்தியா உறுதியளிக்கிறது. சுமார் 3,142 பொருட்களுக்கு இந்தக் கட்டணச் சலுகையை இந்தியா அளிக்க முடிவெடுத்துள்ளது. யுPவுயு வில் இந்தியா, வங்கதேசம், இலங்கை, லாவோஸ், சீனா, மங்கோலியா மற்றும் தென்கொரியா ஆகிய ஏழு நாடுகள் உள்ளன.
 • Reviews


 • வங்கிகளின் வாராக் கடன் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை

  வங்கிகளின் வாராக் கடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சொத்து மேலாண்மை நிறுவனம் ஒன்றைப் பிரத்தியேகமாக அமைக்க வேண்டும் என்று வங்கிக் குழுவினர் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர். இந்தியாவின் 21 பொதுத்துறை வங்கிகள் ஒட்டுமொத்த வங்கித் துறையின் சொத்துகளில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளதோடு, வாராக்கடனில் 90 சதவிகிதப் பங்களிப்பைக் கொண்டுள்ளன.
 • Reviews


 • ஐடிபிஐ வங்கியில் எல்ஐசி முதலீடு

  ஐடிபிஐ வங்கியில் எல்ஐசி முதலீடு செய்வதற்கு காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கி இருக்கிறது. ஐடிபிஐ வங்கியின் 51சதவீத பங்குகளை எல்ஐசி வாங்க இருக்கிறது. மேலும் ரூ.10000 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. ஐடிபிஐ வங்கியில், எல்ஐசி ஒரு முதலீட்டாளர் மட்டுமே. வங்கியின் நிர்வாகத்தில் எல்ஐசி தலையிடாது. காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கினாலும் செபி மற்றும் ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியாக வேண்டும்.
 • Reviews


 • நாடு முழுவதும் ஒரே வரி என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி(சரக்கு மற்றும் சேவை வரியை) கடந்த ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஜிஎஸ்டி முறை அறிமுகப்படுத்தி இன்றோடு (ஜூலை 1) ஓராண்டு நிறைவடைகிறது. இதனை கொண்டாடும் விதமாக ஜூலை ஒன்றாம் தேதியை ஜிஎஸ்டி தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
 • Reviews


 • தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா மோட்டார்ஸ் இந்தியாவில் கார் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் ஏற்கெனவே இந்தியச் சந்தையில் கார் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு இந்நிறுவனம் போட்டியாக உருவெடுக்கிறது. கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆந்திராவில் ஆலை அமைத்து கார் உற்பத்தியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 • Reviews


 • இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக, ஐடிபிஐ வங்கி மேலாண் இயக்குநர் எம்.கே.ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.
 • Reviews


 • நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளை(பேங்க் ஆப் பரோடா, ஐடிபிஐ வங்கி, ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா) இணைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
 • Reviews


 • கொடக் மற்றும் ஐசிசிஐ வங்கிகள் முதல் முறையாக வாட்ஸ்அப் மூலம் வங்கி சேவையை வழங்க உள்ளன.
 • Reviews


 • ஏடிஎம்களில் பணம் எடுப்பது, செக் புக் (காசோலைப் புத்தகம்) பெறுவது போன்ற சேவைகளுக்குக் கூடுதலான ஜிஎஸ்டி வசூலிக்கப்படாது என்றும், இலவச வங்கிச் சேவைகளுக்கு வரி விதிக்கப்படாது என்றும் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.
 • Reviews


 • 2018ம் ஆண்டிற்கான மிகவும் மதிப்பு மிக்கப் பிராண்டு கார்களின் பட்டியலில் முதன் முறையாக இந்தியாவை சேர்ந்த மாருதி மற்றும் வோக்ஸ்வாகன் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளது.
 • Reviews


 • இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட 38 வங்கிகளின் மொத்த வாராக் கடன் ஜனவரி - மார்ச் காலாண்டில் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
 • Reviews


 • ’பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா’ திட்டத்தின் கீழ் கிராமப்புற சாலைக் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சாலைக் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள உலக வங்கியிடம் இந்தியா கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மே 31ஆம் தேதி கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தில் கிராமப்புற சாலைத் திட்டங்களுக்காக ரூ.3,371 கோடி கூடுதலாகக் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கடன் தொகை மூன்று ஆண்டுக் காலச் சலுகையுடன் வழங்கப்படுவதாக நிதியமைச்சகம் கூறியுள்ளது.
 • Reviews


 • இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய இரண்டு வங்கிகளுக்கும் மத்திய அரசு ரூ.9,502 கோடி மறுமூலதனம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
 • Reviews


 • விமான எரிபொருளை ஜிஎஸ்டி வரி வளையத்திற்குள் கொண்டு வருவதற்காக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஜிஎஸ்டி கவுன்சிலை அணுகவுள்ளது.
 • Reviews


 • டெலினார் இந்தியா நிறுவனத்தை ஏர்டெல் நிறுவனத்துடன் இணைப்பதற்கு மே 14ஆம் தேதியன்று தொலைத் தொடர்புத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
 • Reviews


 • சைபர் பாதுகாப்புத் துறையில் ஊழியர்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு இருப்பதாகவும், இத்துறையில் கவனம் செலுத்தி அதிக சம்பளத்துடனான வேலைகளைப் பெற்றுக்கொள்ளும்படியும் இந்திய இளைஞர்களை ஐபிஎம் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
 • Reviews


 • வழக்குலம் அன்னாசிப் பழங்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. கேரள மாநிலத்தின் கொச்சிக்கு அருகிலுள்ள சிறிய நகரம் வழக்குலம். இந்த நகரம் அன்னாசிப் பழ உற்பத்திக்குப் புகழ்பெற்றது. அன்னாசி நகரம் என்றே இந்நகரம் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் அன்னாசிப் பழ உற்பத்தி மையமாகவும் வழக்குலம் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் 80 விழுக்காடு அன்னாசிப் பழங்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் அன்னாசிப் பழ உற்பத்தியில் தாய்லாந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 • Reviews


 • வால்மார்ட் நிறுவனம் மே 9ஆம் தேதியன்று ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை வரலாறு காணாத வகையில் 16 பில்லியன் டாலர் விலைக்கு வாங்கியுள்ளது. மேலும், ஃபிளிப்கார்ட்டில் பணிபுரியும் ஊழியர்களிடமிருந்தும், முன்னாள் ஊழியர்களிடமிருந்தும் பங்குகளை வாங்குவதற்காக சுமார் 500 மில்லியன் டாலரை தற்போது ஒதுக்கியுள்ளது.
 • Reviews


 • இந்திய சோலார் மின் உற்பத்தியாளர்கள் சோலார் உபகரணங்களை எளிமையாக இறக்குமதி செய்யும் வகையில் அதன் மீதான இறக்குமதி வரியை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின்னுற்பத்தி பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 2022ஆம் ஆண்டுக்குள் 175 கிகா வாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின்னுற்பத்தி செய்ய ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 • Reviews


 • 2018ஆம் ஆண்டில் உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா 7.4 விழுக்காடு வளர்ச்சியைப் பெறும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
 • Reviews


 • ’ஐபெக்ஸ்’ எனப்படும் ’சர்வதேச மருந்து மற்றும் மருத்துவச் சேவைக் கண்காட்சி’ தேசியத் தலைநகர் டெல்லியில் மே 8ஆம் தேதி நடைபெற்றது. இக்கண்காட்சியைத் தொடங்கி வைத்த மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு பேசுகையில், “உலகம் முழுவதும் இந்திய மருந்து உற்பத்தித் தொழில் நிறுவனங்களை அமைக்க வர்த்தக அமைச்சகம் உறுதியேற்றுள்ளது.
 • Reviews


 • இந்தியத் தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேயிலை உற்பத்தி குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. உற்பத்தி 5.9 சதவிகிதம் உயர்ந்துள்ள நிலையில் ஏற்றுமதியும் 12.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2017-18இல் மொத்தம் 256.6 மில்லியன் கிலோ அளவிலான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து எகிப்து, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கு அதிகளவில் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
 • Reviews


 • அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 7.9 சதவிகித வளர்ச்சி விகிதத்துடன் உலகின் மிக வேகமாக வளரும் நாடுகளுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருக்கும். சீனாவின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 2026ஆம் ஆண்டு வரையில் 4.9 சதவிகிதமாகவும், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 3 சதவிகிதமாகவும், பிரான்ஸ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.5 சதவிகிதமாகவும் இருக்கும். இந்தியாவைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை 7.5 சதவிகித வளர்ச்சியுடன் உகாண்டா தனதாக்கும்.
 • Reviews


 • இந்தியாவில் பல்வேறு புதுமையான திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியப் பொருளாதார விவகாரங்கள் துறை இணைச் செயலாளர் சமீர் குமார் காரேவும், உலக வங்கியின் இந்திய இயக்குநராகச் செயல்படும் ஹிஷாம் அப்தோவும் ஏப்ரல் 24ஆம் தேதி கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவின் பல்வேறு புதுமையான திட்டங்களுக்கு உலக வங்கி 125 மில்லியன் டாலர் கடன் வழங்கவுள்ளது.
 • Reviews