Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள் - சுற்றுப்புற சூழ்நிலை
 • பபுக்

  'பபுக்' என்ற வெப்பமண்டல புயல் தாய்லாந்தை தாக்கியதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் & மின்தடையை அடுத்து ஜன.5 அன்று அந்நாட்டின் தென் பகுதியை சேர்ந்த சுமார் 30,000 மக்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.மணிக்கு 75 கி.மீ., வேகத்தில் வீசிய இந்தப் புயல், பெருமழை மற்றும் புயல் காற்றால் நாட்டின் தெற்குப்பகுதியை சூறையாடியது. கடந்த 30 ஆண்டுகளில் இப்பகுதியை தாக்கிய மிக மோசமான புயல் இது என்று கருதப்படுகிறது. தற்போது இப்புயல், அந்தமான் கடலில் மையம் கொண்டுள்ளது. இதனால் அங்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சமீபத்திய தரவுப்படி, ஒடிசாவிற்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை , ஆனால் அந்தமான் தீவுகளுக்கு அருகே சூறாவளி மையம் கொண்டுள்ள காரணமாக, கிழக்கிந்திய மாநிலங்களின் வானிலை, மேகமூட்டம் மற்றும் உலர்வாக உள்ளது.
 • Reviews


 • ஹவாயில் ஏற்பட்டிருக்கும் கிலாவேயா எரிமலை வெடிப்பால் வளிமண்டலத்தில் 10 கிமீ தூரம் வரை நச்சுப் புகை பரவி இருக்கிறது,மேலும் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 2000 மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர் அதனைத் தொடர்ந்து 26 வீடுகளும், 10 கட்டிடங்களும் இடிந்துள்ளன.
 • Reviews


 • மவுண்ட் மெரப்பி என்பது இந்தோனேசியாவில் மிகத் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் எரிமலைகளில் ஒன்றாகும் . இது மக்கள் அடர்த்தியாக வசிக்கும் ஜாவா தீவுக்கு அருகிலுள்ளது.இது 2010இல் குமுறி வெடித்ததில் 350 பேர் உயிரழந்தனர். தற்போது எரிமலை வெடித்து எரிகுழம்பு வெளியாவதற்கு முன்னதான நீராவி வெளியேறிக்கொண்டிருக்கிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் எரிமலை வெடித்து எரிகுழம்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 • Reviews


 • உலகில் அதிகமாக மாசடைந்த 20 நகரங்களில் 14 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என உலக சுகாதார நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகெங்கும் 108 நாடுகளிலிருந்து 4,300க்கும் அதிகமான நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் மாசடைந்த 20 நகரங்களின் பட்டியலில் டெல்லி, வாரணாசி உள்ளிட்ட 14 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், கான்பூர், ஃபரிதாபாத், கயா, பாட்னா, ஆக்ரா, முசாபர்பூர், ஸ்ரீநகர், குர்கான், ஜெய்பூர், பாட்டியாலா மற்றும் ஜோத்பூர் ஆகிய நகரங்களும் குவைத் நாட்டில் அலி சுபா அல் சலம் நகரமும் சீனா மற்றும் மங்கோலியாவில் உள்ள சில நகரங்களும் அந்த பட்டியலில் உள்ளன. மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் நுண்ணிய துகள்கள் நுரையீரலினுள் நுழைந்து இதய நோய், நுரையீரல் புற்றுநோய் போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் சுவாச நோய்கள் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. இதனால் ஒவ்வொரு வருடமும் சுமார் 7 மில்லியன் மக்கள் இறப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
 • Reviews


 • புவிவெப்பமயமாதல் காரணமாக, ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் நீரோட்டத்தின் வேகம் குறைந்திருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 • Reviews


 • அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்கான இனப்பெருக்க காலம் தொடங்கியுள்ளதால், வனத் துறையினரும், சமூக ஆர்வலர்களும் அதன் முட்டைகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலிவ் ரிட்லி ஆமைகள் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை தமிழக கடலோரங்களில் வந்து முட்டையிடுகின்றன. இந்த பருவகாலத்தில் ரிட்லி ஆமைகள் 44,000 முட்டைகளை இட்டுள்ளன. முட்டைகளிலிருந்து குஞ்சுகள் பொரிந்து சிறு ஆமைகள் கடலை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, 16,000 ஆமை குஞ்சுகள் பாதுகாப்பாக விரிகுடாவில் விடப்பட்டன.
 • Reviews


 • இந்தியாவில் முதன்முறையாகத் தலைநகர் டெல்லியில் பிஎஸ் VI ரக எரிபொருள் (ஏப்ரல் 1) முதல் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
 • Reviews


 • அஸ்ஸாம், உலக பாரம்பரிய இடமான காசிங்கங்கா தேசிய பூங்காவில் ஒற்றை கொம்பு காண்டாமிருக கணக்கெடுப்பு துவங்கியது .
 • Reviews


 • மரங்களுக்காக தங்கள் உயிரை மாய்த்த பிஷ்ணோய் இன மக்களின், சிப்கோ இயக்கத்தை நினைவு கூறும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டு மரியாதை செலுத்தியுள்ளது.
 • Reviews


 • விலங்கு நல வாரியத்தின் தலைமையகம் (AWBI) சென்னையில் இருந்து ஹரியானாவின் ஃபரிதாபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
 • Reviews


 • ஹைதராபாத்தில் சர்வதேச வேளாண் சுற்றுச்சூழல் மாநாடு நவம்பர் 25ஆம் தேதியில் தொடங்கவுள்ளதாக ஆரண்யா வேளாண்மை அமைப்பு அறிவித்துள்ளது.
 • Reviews


 • அமெரிக்காவை சேர்ந்த மேரிலேண்ட் பல்கலைக்கழகம் காற்று மாசுபாடு தொடர்பான ஆய்வை நடத்தியது. அதில், காற்று மாசுபாட்டில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
 • Reviews


 • தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலமும் ஒன்று. 1455 சதுர கிமீ பரப்பளவு கொண்ட இந்தப் புலிகள் காப்பகம், 2013ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி தமிழத்தின் நான்காவது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புலிகள் எண்ணிக்கை வெறும் 8ஆக இருந்தது. அதனைத் தொடர்ந்து புலிகளைப் பாதுகாக்கக் குற்றத்தடுப்புப் படைகள் அமைக்கப்பட்டுத் தொடர் கண்காணிப்பு காரணமாக புலிகள் கொல்லப்படுவது தடுக்கப்பட்டது. இதனால், கடந்த 4 ஆண்டுகளில் புலிகள் எண்ணிக்கை 55ஆக உயர்த்தப்பட்டது.
 • Reviews


 • சிரியா இணைவதாக அறிவித்தபின், பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இல்லாத ஒரே நாடாக அமெரிக்கா மாறிவிட்டது.
 • Reviews


 • இடம் பெயரும் காட்டு விலங்குகள் பாதுகாப்பு பற்றிய 13 வது மாநாடு 2020 இல் இந்தியாவால் நடத்தப்படும்.
 • Reviews


 • இந்தியாவிலேயே முதன்முறையாக 83 ஆண்டுகளுக்குப் பின், “இண்டியன் எமரால்ட்” எனப்படும் அரிய வகை தும்பியினம் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • ராஜஸ்தானில், டோல்பூர் மற்றும் பரத்பூர் மாவட்டங்களில் உள்ள ஜாட்களுக்கு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பின்கீழ் (ஓ.பி.சி) இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • 21ஆவது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும்
 • Reviews


 • அசாமில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வழங்கும் எந்தச் சலுகைகளும் வழங்கப்படாது மற்றும் உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட முடியாது என்ற புதிய சட்டம் அடுத்தாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
 • Reviews


 • தெலுங்கானா அரசாங்கம் சமீபத்தில் பெண்கள் நலத்திட்டத்திற்காக பிரத்யேக 24 × 7 ஹெல்ப்லைன் '181' ஒன்றை அறிமுகப்படுத்தியது.
 • Reviews


 • ராஜஸ்தான் மாநில கிராமப்புற மேம்பாட்டுக்கு நபார்டு வங்கி ரூ.1,350 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
 • Reviews


 • அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஜர்டுங் மருத்துவமனையானது, சூரிய மின்சக்தியை கொண்டு முழுவதுமாக இயங்கும் மாநிலத்தின் முதல் மருத்துவமனையாக மாறியுள்ளது.
 • Reviews


 • அம்மா உணவகம் போலவே கர்நாடகாவில் இந்திரா உணவகத்தை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி திறந்துவைத்தார்.
 • Reviews


 • மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டமான நமோ யுவ ரோஜகர் கேந்திராவை(Namo Yuva Rojgar Kendra) மும்பையில் அறிமுகப்படுத்தினார்.
 • Reviews


 • உலகளவில் வரும் 2030 ஆம் ஆண்டு காற்று மாசுபாடு காரணமாக 60ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்க நேரிடும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
 • Reviews


 • 2016 ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தின் படி பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி உயரும் என்ற இலக்கை விட 2 முதல் 4.9 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
 • Reviews


 • அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பூமியில் உள்ள பிளாஸ்டிக் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். அதில், கடந்த 2015ம் ஆண்டு வரையில் பூமியில் 8.3 பில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு பிளாஸ்டிக் உருவாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
 • Reviews


 • ரஷ்யாவின் கம்சட்கா பெனிசுலா நகருக்கு அருகில் உள்ள நிக்கோல்ஸ்கோயே தீவுப்பகுதிக்கு அருகே 7.8 ரிக்டர் அளவில் மிக பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
 • Reviews


 • நீலகிரியில் முதல் முறையாக ஒரு வெளிர் தோல் நிறத்துடன் ஒரு அரிய 'வெள்ளை புலி' காணப்பட்டதாக நம்பப்படுகிறது.
 • Reviews


 • உலக பவளப்பாறைகளை காப்பாற்ற ஒரே வழி பாரிஸ் காலநிலை உடன்பாட்டை விரைவாக செயல்படுத்துதல் என்று யுனெஸ்கோ கூறியுள்ளது.
 • Reviews


 • கடந்த 137 ஆண்டுகளில் 2017 மே மாதம் இரண்டாவது வெப்பமான மாதமாகும். முதல் மாதம் - 2016 மே.
 • Reviews


 • கழிவுகளை பிரித்தெடுத்து சேகரிக்கும் வாகனங்கள் டெல்லியில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தொடக்கி வைத்தார் .
 • Reviews


 • வங்காள விரிகுடாவில் மோரா என்ற வெப்ப மண்டல சூறாவளி தீவிரமடைந்துள்ளது. இது 2017 ஆம் ஆண்டில் வங்காள விரிகுடாவில் தோன்றிய இரண்டாவது சூறாவளி. முதல் சூறாவளி மாருதா.
 • Reviews


 • காலநிலை மாற்றம் காரணமாக அண்டார்டிகாவில் தாவரங்கள் வேகமாக வளர்ந்து வருகிறது.
 • Reviews


 • உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து மலைவாழிடங்கள் மற்றும் பனிப்பாறைகளை சூழல் உணர் பிரதேசங்களாக அம்மாநில உயர் நீதிமன்றம் பிரகடனப்படுத்தியது. இவற்றை சுற்றி 25 கி.மீ. சுற்றளவில் அனைத்து கட்டுமான பணிகள் மீதும் தடை விதித்துள்ளது
 • Reviews


 • கிருஷ்ணா வனவிலங்கு சரணாலயத்தில் முதன் முறையாக நீர்க்கிரி தென்பட்டது .
 • Reviews


 • தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு பசிபிக் தீவு நாடான வனுவாட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் தென்-மேற்கு பகுதியில் 209 கிலோ மீட்டர் தொலைவில் 35 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 • Reviews


 • தைவானின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.5 ஆகப் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 • Reviews


 • ஜெனா சுறாவளி பிஜி தீவை தாக்கியுள்ளது
 • Reviews


 • அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அது 6.2 புள்ளிகளாக பதிவானது. பூமிக்கு அடியில் 58 மைல் ஆழத்தில் அது மையம் கொண்டிருந்ததால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.
 • Reviews