Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள் - முக்கிய தினங்கள்
 • ஆரோவிலின் உதய தினம்

  விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்தில் 1968-ஆம் ஆண்டு பிப் ரவரி 28-ஆம் தேதி ஆரோவில் நகரம் அமைக்கப்பட்டது. அரவிந்தரின் முக்கிய சீடரான 'அன்னை ' என்றழைக்கப்படும் மீரா அல்போன்சாவின் கனவு நகரமாக இந்த ஆரோவில் சர்வதேச நகரம் அமைக்கப்பட்டது. பல்வேறு நாட்டினரும் இங்கு வாழ்வதற்கு ஏற்ற வகையில், வெளிநாடுக ளில் இருந்து மண் கொண்டுவந்து கொட்டப்பட்டு ஆரோவில் சர்வதேச நகர் உருவாக்கப்பட்டது. தற்போது இந்த நகரம் உலக நாடுகளின் கலை, கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. ஆரோவிலில் முக்கிய இடமாக மாத்ரி மந்திர்' அமைக்கப்பட்டது. மேலும் பாரத நிவாஸ், அரவிந்தர் சிலை, சாவித்ரி பவன், ஆம்பி தியேட்டர் எனப்படும் திறந்த வெளி அரங்கம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. ஆரோவிலின் உதய தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 28-ஆம் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த நகர் உருவாக்கப்பட்டு 51ஆவது ஆண்டு உதய தினம் வியா ழக்கிழமை ( பிப்ரவரி 28 ) கொண்டாடப்பட்டது. ஆரோவிலில் உள்ள திறந்த வெளி அரங்கில் வியாழக்கிழமை அதிகாலை திரண்ட அந்த நகர மக் கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் நெருப்பு மூட்டி (போன் பயர்) உதய தினத்தை வரவேற்று, கொண்டாட்டத்தில் ஈடுபட்ட னர்.
 • Reviews


 • தேசிய அறிவியல் நாள்

  தேசிய அறிவியல் நாள் இந்தியாவில் பெப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 - ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
 • Reviews


 • தேசிய ஆப்பிரிக்க அமெரிக்க வரலாற்று மாதம்

  அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய ஆப்பிரிக்க அமெரிக்க வரலாற்று மாதமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த விழாவில் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கலந்து கொண்டார்.
 • Reviews


 • சர்வதேச தாய்மொழி தினம்

  உலகம் முழுவதும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
 • Reviews


 • சர்வதேச தாய் மொழி தினம்

  முதன் முதலாக மொழிப் போர் இன்றைய வங்கதேசமான கிழக்கு பாகிஸ்தானிலிருந்துதான் தொடங்கியது. தமது தேசத்தின் மொழியாக வங்காளம் வளர வேண்டும் என்பதை முன்னிறுத்தி டாக்கா பலகலைக் கழக மாணவர்கள் கலகத்தில் ஈடுபட்டு அதிரடிக் காவலர்களின் அடக்கு முறைக்கு ஆளாகி நான்கு மாணவர்கள் உயிரிழந்தார்கள். இது நடந்தது 1952 பிப்ரவரி 21. பாரம்பரியங்களின் பாதுகாப்பு மையமான யுனெஸ்கோ பிப்ரவரி 21 ஐ சர்வதேச தாய்மொழி தினமாக 1999 இல் அறிவிக்க அது கடந்த 2000 முதல் சர்வதேசமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
 • Reviews


 • உலக வானொலி தினம்

  இன்றைக்கு எஃப்.எம். ரேடியோக்களில் படபடவென மின்னல் வேகத்தில், மூச்சுவிடாமல் பேசுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் முன்னோடி கே.எஸ்.ராஜா. இலங்கை வானொலியின் சூப்பர்ஸ்டார் அறிவிப்பாளர் இவர்தான். 13.2.19 உலக வானொலி தினமாக கொண்டாடப்படுகிறது.
 • Reviews


 • Data Privacy Day

  தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்புக்கான சிறந்த நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காகவும், அதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் ஜன.28 அன்று தரவு தனியுரிமை நாள் (Data Privacy Day) கடைப்பிடிக்கப்படுகிறது. இது மக்கள் தங்களின் தனியுரிமையை பாதுகாப்பதற்கு அதிகாரமளிக்கும் விதமாக உள்ளது.
 • Reviews


 • சர்வதேச பெரும் இன அழிப்பு நாள்

  2ஆம் உலகப்போரின்போது நிகழ்ந்த இனப்படுகொலையின் துயரத்தை நினைவுகூரும் பொருட்டு ஒவ்வோர் ஆண்டும் ஜன.27 அன்று சர்வதேச பெரும் இன அழிப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. நாசி ஆட்சியின்போது நடந்த இந்த இனப்படுகொலையில் சுமார் ஆறு மில்லியன் யூதர்கள் / ஏனையவர்கள் கொல்லப்பட்டனர்.
 • Reviews


 • இன்று 04.01.2019 "உலக ப்ரெய்ல் தினம் (World Braille day)." ப்ரெய்ல் முறையைக் கண்டுபிடித்த லூயி ப்ரெய்லின் பிறந்தநாளே, உலக ப்ரெய்ல் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
 • Reviews


 • உலக பிரைலி தினம்

  பார்வையிழந்தோருக்காக 'பிரைலி - Braille' முறையை கண்டறிந்த பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த பார்வையிழந்த விஞ்ஞானி லூயி பிரைலி என்பவரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜன.4 அன்று உலக பிரைலி தினம் கொண்டாடப்படுகிறது. 1809ஆம் ஆண்டு ஜன.4 அன்று வட பிரான்சில் உள்ள கூப்விரேவில் லூயி பிரைலி பிறந்தார். அவரது மூன்றாம் வயதில், எதிர்பாராத விதமாக அவர் தனது இரு கண்களையும் இழந்தார்.இதன் விளைவாக, பார்வையற்றோர் தடவிப்பார்த்துப் படிக்க ஏற்ற 'பிரைலி' முறையை அவர் கண்டறிந்தார். இம்முறையில் 1-6 புடைப்புப்புள்ளிகளையும், ஓட்டைகளையும் கொண்டு எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவுதலின் மூலம் பார்வையற்றோர் புரிந்துகொள்வர். இந்நாள், சில வகையான கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வையைக் கொண்ட ஏறக்குறைய 1.3 பில்லியன் மக்களுக்கு 'பிரைலி'யின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது. உலகெங்கிலும், 39 மில்லியன் மக்கள் பார்வையற்றோராகவும், மேலும் 253 மில்லியன் பேர் சிலவகை Pageன பார்வை குறைபாடுடீனும்-எளனர்.
 • Reviews


 • உலக கழிவறை தினம் – நவம்பர் 19 (World Toilet Day). உலகளவில் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ம் தேதி உலக கழிவறை தினமாக அனுசரிக்கப்படுகிறது. கழிவறைப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் 19ம் நாள் உலக கழிவறை கழகம் (world Toilet Organisation) ஏற்படுத்தப்பட்டதன் நினைவாக “உலக கழிவறை தினம்” கடைபிடிக்கப்படுகிறது. 2018ம் ஆண்டின் உலக கழிவறை தின கருத்துரு (Theme) “இயற்கை அழைக்கும் போது” (When Nature Calls).
 • Reviews


 • இன்று, அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கான உலக அறிவியல் தினம் (World Science Day for Peace and Development). ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10ஆம் நாள், அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கான உலக அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருத்து: “அறிவியல், ஒரு மனித உரிமை” (Science, a Human Right).
 • Reviews


 • நவம்பர் 6 முதல் டிசம்பர் 26-ம் தேதி வரை தேசிய சித்தா தின கொண்டாட்டம்

  ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம், ஹோமியோபதி போன்ற பல பழமையான மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகள் இந்தியாவில் உள்ளன. ஒவ்வொரு மருத்துவ முறையையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அதற்கான தினத்தை அறிவித்து கொண்டாடி வருகிறது. சித்த மருத்துவத்தை, 18 சித்தர்கள் தோற்றுவித்ததாக வரலாறு கூறுகிறது. சித்த மருத்துவத்தின் முன்னோடியும், 18 சித்தர்களில் முதன்மையானவருமான அகத்திய முனிவர் பிறந்த ஆயில்ய நட்சத்திரம் வரும் நாள், ஆண்டுதோறும் தேசிய சித்தா தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அறிவித்தது. அதன்படி, கடந்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி முதல் தேசிய சித்தா தினம் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு இரண்டாவது தேசிய சித்தா தினம் வரும் நவ. 6-ம் தேதி தொடங்கி டிசம்பர் 26-ம் தேதி வரை 50 நாட்களுக்கு கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • Reviews


 • இன்று உலக கண் பார்வை தினம் (World Sight Day) உலக அளவில் ஏறத்தாழ 36 மில்லியன் மக்களுக்குக் கண் பார்வை கிடையாது. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை உலகக் கண் பார்வை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சிந்தனை: எங்கும் கண் பராமரிப்பு (Eye Care Everywhere).
 • Reviews


 • ஜூலை 18- தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரும் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக போராட்டம் நடத்தியவருமான நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினம்

  1.நெல்சன் மண்டேலாவின் இயற்பெயர் ரோலிஹ்லாலா தலிபுங்கா மண்டேலா 2.நெல்சன் என்ற பெயர் அவரது பள்ளி ஆசிரியரால் கொடுக்கப்பட்டது 3.மண்டேலா தன் வாழ்வில், 1993ஆம் ஆண்டு பெற்ற அமைதிக்கான நோபல் பரிசு உட்பட 695க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
 • Reviews


 • ஜூலை 17 -சர்வதேச நீதி நாள்.

  1.சர்வதேச நீதி நாள் ஜூலை 17 அன்று கொண்டாடப்படுவதற்கான காரணம், ஜூலை 17, 1998இல்தான் ரோமின் சட்ட சாசனம் (சுழஅந ளுவயவரவந) உருவாக்கப்பட்டது. 2.சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் இதனால்தான் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 3.சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றமே, போர்க் குற்றங்கள், மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப் படுகொலைகள் குறித்த வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்குகிறது.
 • Reviews


 • ஜூலை 15 - உலக இளைஞர் திறன் தினம்
 • Reviews


 • ஜூலை 11: உலக மக்கள்தொகை நாள்
 • Reviews


 • ஜூலை 7

  சர்வதேச கூட்டுறவு நாள்
 • Reviews


 • ஜூலை 4- அமெரிக்க சுதந்திர தினம்
 • Reviews


 • ஜூலை 2 - உலக விளையாட்டு பத்திரிகையாளர்கள் தினம்
 • Reviews


 • ஜூலை 1: தேசிய மருத்துவர்கள் நாள்

  இந்தியாவில் 1991 முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை முதல் தேதி தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. பாரத ரத்னா விருது பெற்ற இவர் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராகவும் இருந்துள்ளார். தமிழகம் நாட்டிலேயே உடலுறுப்பு தானத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தமிழகம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை வரவுள்ளதால், 15 மாவட்டங்களைச் சேர்ந்த 4 கோடி மக்கள் பயன்பெறுவர்.
 • Reviews


 • ஜூலை 1: ஜிஎஸ்டி தினம்

  நாடு முழுவதும் ஒரே வரி என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரியை) கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி நள்ளிரவில் அமலுக்கு வந்தது.இதைக் கொண்டாடும் விதமாக ஜூலை ஒன்றாம் தேதியை ஜிஎஸ்டி தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 66 லட்சம். ஜிஎஸ்டி வரி அமல் செய்யப்பட்ட ஓராண்டில் புதிதாக 48 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. 17 விதமான வரிகள், 23 செஸ் வரிகள் ஒரே வரிவிதிப்பு (ஜிஎஸ்டி) முறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
 • Reviews


 • புள்ளியியல் தினத்தையொட்டி, ரூ.125 நாணயத்தைக் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நாளை (ஜூன் 29) வெளியிடவுள்ளார். இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் நிறுவன தலைவரும், இந்தியாவில் திட்டமிட்ட வளர்ச்சி, சமூக கட்டமைப்பில் ஏற்படுத்திய மாற்றங்களை அளவீடு செய்வதற்காக புதிய, புதிய மாதிரி சர்வேக்களை, வடிவமைத்தவருமான பிரசந்த சந்திர மகிலனாபிஸ் பிறந்த தினத்தையே இந்திய அரசு,2007 ஆம் ஆண்டு முதல் புள்ளியியல் தினமாக அறிவித்துக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு 'அரசு புள்ளிவிவரங்களின் தர உத்தரவாதம்' என்பதை மையப்பொருளாக வைத்து புள்ளியியல் தினம் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
 • Reviews


 • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஐநா சுற்றுச்சூழல் அமைப்பும், ஈஷா அறக்கட்டளையும் இணைந்து பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக இந்தியாவில் இன்று 250க்கும் மேற்பட்ட இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளன. இந்தாண்டு ஐநாவால் ‘பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுப்போம்’ என்பது கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (05.06.2018): இன்று சுற்றுச்சூழல் தினம்
 • Reviews


 • மே 31 – சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்
 • Reviews


 • ஒரு சமூகத்தின் மரபுச் சின்னங்களைப் பேணிப் பாதுகாப்பதில் அருங்காட்சியகத்தின் பணி மிக முக்கியமானது. நாளைய சந்ததியின் விலை மதிக்க முடியாத சொத்துகளாகக் கருதப்படும் இந்த அருங்காட்சியகங்கள் தொல்லியல், இயற்கை வரலாறு, கடல்சார், கலை, வரலாறு, போர் எனப் பல வகைப்படுகின்றன. இவற்றின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஆண்டுதோறும் மே 18ஆம் தேதியை உலக அருங்காட்சியக தினமாக சர்வதேச அருங்காட்சிய கவுன்சில் அறிவித்தது. 1977ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மே 18ஆம் தேதியும் அனுசரிக்கப்பட்டுவருகிறது.
 • Reviews


 • அன்னையர் தினமான இன்று (மே 13) உலகம் முழுதும் உள்ள அன்னையர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகக் கூகுள் டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்த அன்னையர் தினமானது 1908ஆம் ஆண்டு உருவானது. அமெரிக்காவைச் சேர்ந்த அன்னா ஜார்விஸ் என்ற பெண்மணி இறந்த தன் தாயாருக்கு மேற்கு விர்ஜினியாவிலுள்ள செயின்ட் ஆண்ட்ரூ தேவாலயத்தில் நினைவஞ்சலி செலுத்தினார். அப்போது உலகம் முழுவதும் உள்ள அன்னையர்களைப் பெருமைப்படுத்த ஒரு நாளை உருவாக்கினார். அதைத் தான் இன்று வரை நாம் அன்னையர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.
 • Reviews


 • மருத்துவர்கள்கூடச் செய்யத் தயங்கும் சில விஷயங்களைச் செவிலியர்கள் அசாத்தியமாகச் செய்து முடிப்பார்கள். யாரென்றே தெரியாதர்வகளிடம்கூடக் குறையாத அன்பை நீட்டுவார்கள். அதில் ஒரு தாய்மை குணம் இருக்கும். அப்படிப்பட்ட செவிலியர்களைப் பாராட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே 12ஆம் தேதி செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பைச் சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1965ஆம் ஆண்டிலிருந்து உலக செவிலியர் அமைப்பு (ICN - International Council of Nurses ) இந்த தினத்தை அனுசரித்துவருகிறது. ஜனவரி 1974இல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்தவச் சேவையின் வரலாற்று மைல்கல் என அழைக்கப்படும் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12ஆம் நாளைச் சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது.
 • Reviews


 • 25ஆவது உலகப் பத்திரிகை சுதந்திர தினம் இன்று (மே 3) கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருத்து: ‘அதிகாரத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்: மீடியா, நீதி மற்றும் சட்ட விதிமுறை' (Keeping Power in Check: Media, Justice and The Rule of Law). ஊடகங்கள் மற்றும் அரசியல் செயல்பாடுகளின் வெளிப்படைத்தன்மையை ஆராய்வது, நீதித் துறையின் சுதந்திரம் மற்றும் ஊடகவியல் கல்வியறிவு ஆகியவற்றை உள்ளடக்கியது இந்தக் கருத்து. இணையவெளியில் பத்திரிகை சுதந்திரத்தை உறுதி செய்வதற்கான சவால்களையும் ஆராய வேண்டும். 1993ஆம் ஆண்டு, மே மாதம் 3ஆம் நாளை உலகப் பத்திரிகை சுதந்திர தினமாகக் கொண்டாட முடிவு செய்தது ஐ.நா பாதுகாப்பு சபை.
 • Reviews


 • உலகம் முழுவதும் இன்றைய தினம் (மே 1) உழைப்பாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. 1884இல் அமெரிக்காவில் 8 மணி நேர இயக்கத்தின்போது வெடித்த போராட்டங்கள்தான் மே தினம் உருவாவதற்கு நேரடியான காரணமாய் அமைந்தன.
 • Reviews


 • உலக நடன தினம் - ஏப்ரல் 29 தமிழ்நாட்டில் பரத நாட்டியம், கோலாட்டம், கும்மியாட்டம், தெருக்கூத்து, கேரளாவில் சாக்கியார் கூத்து, கதகளி, மோகினி ஆட்டம், ஓட்டம் துள்ளல், தாசி ஆட்டம், கூடி ஆட்டம், கிருஷ்ணா ஆட்டம், ஜட்டா-ஜட்டின், லாகூய், நாச்சாரி, அஸ்ஸாமில் பிகு, ஜம்மு-காஷ்மீரில் சக்ரி, ரூக்ப், ஆந்திராவில் குச்சுப்பிடி, கோட்டம், வீதி பகவதம் கர்நாடகாவில் யக்ஷ கானம்: ஒரிஸ்ஸாவில் ஒடிசி: மணிப்பூரில் மணிப்புரி, லாய்-ஹரோபா, பஞ்சாப்பில் பாங்ரா, கிட்டா, பிகாரில் பிதேஷியா, என்றவாறு நடனத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. மிகச்சிறந்த உடற்பயிற்சியாகவும், மனதிற்கும் உடலுக்கும் உற்சாகமூட்டுவதாகவும் உள்ளது நடனம். தேவராட்டம், தொல்லு குனிதா, தண்டரியா, கரகம், கும்மி, கூட்டியாட்டம், படையணி, கோலம் (நடனம்) இலவா, நிக்கோபாரிய நடனம் போன்றவை தென் இந்திய சிறப்பு நடனங்களாகும்.
 • Reviews


 • சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பூமியை பாதுகாக்கும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 22ஆம் தேதி உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது.
 • Reviews


 • ஏப்ரல் 21 – உலக படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு தினம்.
 • Reviews


 • ஏப்ரல் 12 – உலக விமான போக்குவரத்து மற்றும் விண்வெளி தினம்
 • Reviews


 • ஹோமியோபதி டாக்டர் ப்ரீட்ரிச் சாமுவேல் ஹன்மான்மன் பிறந்த தினமான ஏப்ரல் 10 "உலக ஹோமியோபதி தினம்" இவர் 1755, ஜெர்மனியில் பிறந்தார்.
 • Reviews


 • 1948ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட உலக சுகாதார அமைப்பு, 1950ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஏப்ரல் மாதம் 7ஆம் தேதியை உலக சுகாதார தினமாகக் கடைப்பிடித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த நாள் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு, "உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு" என்ற கருத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.
 • Reviews


 • முன்னாள் மத்திய அமைச்சர் பாபு ஜக்ஜிவன் ராம் 1908 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ம் தேதி பிறந்தார். அவரது பிறந்த நாள் இந்தியா முழுவதும் 'சமடா திவாஸ்' அல்லது 'சமத்துவ தினம்' எனக் அனுசரிக்கப்படுகிறது.
 • Reviews


 • ஏப்ரல் 6: சர்வதேச அபிவிருத்தி மற்றும் அமைதிக்கான விளையாட்டு நாள்.
 • Reviews


 • சர்வதேச சுரங்க விழிப்புணர்வு நாள் - ஏப்ரல் 4
 • Reviews