Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள் - முக்கிய நபர்கள்
 • திருப்பதி தேவஸ்தான மையத்தின் ஆலோசனை குழு உறுப்பினர்

  சென்னை தியாக ராயநகரிலுள்ள திருப்பதி தேவஸ்தான மையத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக வேல்ஸ் கல் விக்குழுமத்தின் வேந்தர் ஐசரி கே.க ணேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்
 • Reviews


 • ஜெய்ஷ்-ஏ-முகமது

  ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன.
 • Reviews


 • சுகாதாரத் துறை டாக்டர்-ஐஏஎஸ்

  மாநில சுகாதார சங்கத்தின் (தமிழகம்) இணை இயக்குநராக பணியாற்றி வரும் டாக்டர் எஸ்.உமா என்பவருக்கு ஐஏஎஸ் ஆக பதவி உயர்வு வழங்கி மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.எம்பிபிஎஸ், எம்டி (சமூக நல மருத்துவம்) படித்துள்ள இவர் 1995-ல் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று சுகாதார அதிகாரியாக பணியில் சேர்ந்தார். சுகாதாரத் துறை துணை இயக்குநராக பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளனர்.சுகாதாரத் துறையில் முதல் முறையாக டாக்டர் ஒருவர் ஐஏஎஸ் ஆக பதவி உயர்வு பெறுகிறார் என்பது குறிப்பித்தக்கது.
 • Reviews


 • வாழ்வில் சந்தித்ததும் சாதித்ததும்

  மறைந்த ஐஏஎஸ் அதிகாரி ப.சங்கரன் எழுதிய ' வாழ்வில் சந்தித்ததும் சாதித்ததும்' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.என்செங்கோட்டையன் நூலை வெளியிட, சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் பெற்றுக் கொண்டார்.
 • Reviews


 • ஆட்டோ சேவை

  சென்னையில் முதல்முறையாக திருநங்கைகள், புர்கா அணிந்த பெண் ஓட்டுனர்கள் இயக்கும் ஆட்டோ சேவை துவக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை ஐக்கிய அரசு எமிரேட்ஸ் இளவரசி ஷெய்கா ஹெண்ட் பைசல் அல் குவாஸ்மி நேற்று தொடங்கி வைத்து ஆட்டோவில் பயணிக்கிறார். இடம்: புனித தோமையார் மலை.
 • Reviews


 • நைஜிரியா

  ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நைஜிரியாவின் அதிபராக “முகம்மது புஹாரி” என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் மூன்று மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்த “அழகு அபுபக்கரை” தோற்கடித்துள்ளார்.
 • Reviews


 • சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி

  சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள செந்தில்குமார் ராமமூர்த்தி நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி வி.கே. தஹில் ரமானி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
 • Reviews


 • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம்

  தமிழ்நாடு அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் துணைத் தலைவராக “மயில்சாமி அண்ணாதுரையை” தமிழக அரசு நியமித்துள்ளது. இவர் இஸ்ரோவின் சந்திராயன் I மற்றும் மங்கல்யான் போன்ற செயற்கைகோள் திட்டத்தில் பணிபுரிந்துள்ளார்.
 • Reviews


 • நேபாளம்

  நேபாளத்தின் புதிய உச்சிநீதிமன்ற தலைமை நீதிபதியாக ராணா (Rana) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.நேபாள அதிபர் : பித்யா தேவி பண்டாரி,நேபாள பிரதமர் : சர்மா ஒலி.
 • Reviews


 • வின்சன் சிகரம்

  அண்டார்டிகாவின் உயர்ந்த சிகரமான “வின்சன் சிகரத்தை” ஏறிய முதல் மாற்றுத்திறனாளி பெண் என்ற பெருமையை அருணிமா சின்ஹா (Arunima Sinha) என்பவர் பெற்றுள்ளார்.இவர் உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மாற்றுத் திறனாளி பெண்ணும் இவரே ஆவார்.
 • Reviews


 • Competition Commission of India

  இந்தியாவின், போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளராக பி.கே.சிங் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.போட்டி ஒழுங்குமுறை ஆணையம் (Competition Commission of India) 2003, அக்டோபர் 14-ல் ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைவர் – அசோக் குமார் ஆவார்.
 • Reviews


 • உச்சநீதி மன்றம்

  ஜன.2 அன்று பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்வி, பாகிஸ்தானின் புதிய தலைமை நீதிபதியாக ஆசிப் சயீத் கோசாவை நியமித்தார். ஜன.18 அன்று ஓய்வுபெறவுள்ள, தற்போதுள்ள தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசாருக்குப் பிறகு பதவியேற்கும் ஆசிப், 2019 டிச.20 வரை அப்பதவியில் இருப்பார். பாகிஸ்தானின் தலைமை நீதிபதி என்பவர் பாகிஸ்தான் நீதிமன்ற அமைப்பின் தலைவரும், பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் ஆவார்.நீதித்துறைக் கொள்கைகளை மேற்பார்வையிடுவதற்கும், உச்சநீதிமன்றத்தில் நீதிப் பணிகளை நடத்துவதற்கும் அவர் பொறுப்பானவர்.
 • Reviews


 • கே.பி.ஜார்ஜ்

  பெக்சாஸ் (அமெரிக்கா) மாகாணத்தில் உள்ள போர்ட் பென்ட் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக, இந்தியாவைச் சேர்ந்த ‘கே.பி.ஜார்ஜ்’ என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்.
 • Reviews


 • உலக நினைவாற்றல்

  ஹாங்காங்கில் நடைபெற்ற உலக நினைவாற்றல் போட்டியில், சிங்கப்பூரைச் சேர்ந்த, துருவ் மனோஜ் (இந்திய வம்சாவளி) இரு தங்கப்பதக்கங்களை வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
 • Reviews


 • இரயில்வே வாரியம்

  இரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக V.K. யாதவ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஆக்ஸிஸ் வங்கியின் CEO-வாக அமிதாப் சௌத்ரி (Amitabh Chaudhry) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 • Reviews


 • உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி

  தெலுங்கான மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக “T.B.N. ராதா கிருஷ்ணன்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு தெலுங்கானா ஆளுநர் E.S.L. நரசிம்மன் (E.S.L. Narasimhan) பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
 • Reviews


 • இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன் சென்ற ஜூன் மாதம் 20ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகரை நியமிக்கும் பணியில் அரசு ஈடுபட்டது. அதற்காக, பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராகக் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் மத்திய அமைச்சரவை நியமனக் குழுவால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப்பதவியில் தொடருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • மத்திய அரசில் அட்டார்னி ஜெனரலுக்கு அடுத்ததாக இரண்டாவது முக்கிய பதவியாக சொலிசிட்டர் ஜெனரல் பதவி கருதப்படுகிறது. இப்பதவியில் இருந்த மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து இந்தப் பதவி கடந்த 11 மாதங்களாக காலியாவே இருந்து வந்தது. இந்த நிலையில் சொலிசிட்டர் ஜெனரல் பதவிக்கு மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா நேற்று (அக்டோபர் 10) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றி வந்தார்.
 • Reviews


 • சர்வதேச விளம்பரச் சங்கமானது இந்தியா உள்ளிட்ட 76 உலக நாடுகளில் சேவை வழங்குகிறது. ரோமானியாவில் உள்ள புக்கரெஸ்ட்டில் நடந்த சர்வதேச விளம்பர சங்கத்தின் வாரியக் கூட்டத்தில் ஸ்ரீனிவாசன் சுவாமி புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவிலிருந்து சர்வதேச விளம்பரச் சங்கத்துக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் இவர்தான். இந்தியாவிலிருந்து சர்வதேச விளம்பரச் சங்கத்தின் தலைமைப் பொறுப்பேற்பது தனது வாழ்நாள் சாதனையாகும் என்று ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.
 • Reviews


 • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக பதவி வகித்த கோபி அன்னான், சுவிட்சர்லாந்து நாட்டின் பெர்ன் நகரத்திலுள்ள மருத்துவமனையில் இன்று (ஆகஸ்ட் 18) காலமானார். அவருக்கு வயது 80. இதனை அவரது குடும்பத்தினரும், அன்னான் பவுண்டேஷனை சேர்ந்தவர்களும் தெரிவித்துள்ளனர். வட ஆப்ரிக்க நாடான கானாவைச் சேர்ந்த கோபி அன்னான் 8-4-1938 அன்று பிறந்தார். 1997ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டுவரை தொடர்ந்து இரண்டு முறை ஐநா பொதுச் செயலாளராக பதவி வகித்துள்ளார். பதவிக்காலம் முடிந்த பிறகு சிரியாவுக்கான ஐநா தூதராக பணியாற்றினார். சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார். ஓய்வுக்குப் பிறகு சுவிட்சர்லாந்திலுள்ள ஒரு கிராமத்தில் வசித்துவந்தார். உலகத்திலேயே மிகவும் உயர் பதவியில் அமர்ந்த முதல் வட ஆப்ரிக்க கறுப்பினத்தைச் சேர்ந்தவர் அன்னான். 2001ஆம் ஆண்டு "ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகத்திற்காக உழைத்ததற்காக" கோபி அன்னான் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசு விருது வழங்கப்பட்டது.
 • Reviews


 • நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நைபால் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். கடந்த 1932ஆம் ஆண்டு, மேற்கிந்திய தீவுகளின் டிரினாட் நகரில் வி.எஸ்.நைபால் பிறந்தார். இவரது தந்தை சீபிரசாத் நைபாலின் பெற்றோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இங்கிருந்து மேற்கிந்திய தீவுகளுக்கு குடிபெயர்ந்தனர். பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்தார். ‘ஏ ஹவுஸ் பார் மிஸ்டர்’ உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். கடந்த 1971ல் ’இன் ஏ ப்ரீ ஸ்டேட்’ என்ற புத்தகத்துக்காக புக்கார் விருதை வென்றார். இதையடுத்து 2001ல் நோபல் பரிசு பெற்றார். முதல் மனைவி 1996ல் மறைந்த பின், பாகிஸ்தான் பத்திரிகையாளர் நதிரா அல்வியை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.
 • Reviews


 • இலங்கையின் தேசிய கீதத்தைப் பாடிய பழம்பெரும் பாடகி கே.ராணி காலமானார்

  ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் கே.ராணி. கடந்த 1943-ம் ஆண்டு பிறந்த இவர், தனது 8-வது வயதிலேயே சங்கீதத்தில் சிறந்து விளங்கினார். இவர் முதன்முதலாக தமிழில் மோகனசுந்தரம், சிங்காரி ஆகிய படங்களிலும், தெலுங்கில் ரூபவதி என்கிற படத்திலும் பாடினார்.
 • Reviews


 • ஐந்தாண்டுகளுக்கு ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி

  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக மேலும் ஐந்தாண்டுகளுக்கு முகேஷ் அம்பானி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். முகேஷ் அம்பானி 1977-ம் ஆண்டு முதல் நிறுவனத்தில் இருந்து வருகிறார். இவரது தந்தையின் மறைவுக்கு பிறகு 2002 ஜூலையில் ரிலையன்ஸ் தலைவராக பொறுப்பேற்றார். 2019-ம் ஆண்டு முதல் ஐந்தாண்டுகளுக்கு நியமனம் செய்யப்பட்டார். மொத்தம் பதிவான வாக்குகளில் 98.5 சதவீதத்தினர் முகேஷ் அம்பானி தலைவராக தொடர வாக்களித்திருக்கின்றனர். 1.48 சதவீதத்தினர் எதிராக வாக்களித்திருக்கின்றனர். இவரது ஆண்டு சம்பளம் ரூ.4.17 கோடியாகவும், இதர சலுகைகள் 59 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
 • Reviews


 • எவரெஸ்ட் சிகரத்தின் மேல் 60 கி;மீ இலக்கை அடைய நடத்தப்பட்ட மார்த்தான் போட்டியில் பெங்களுரை சேர்ந்த தீபா பட் மற்றும் தஹர் மெர்சண்ட் வெற்றி பெற்றுள்ளனர்.
 • Reviews


 • அமெரிக்காவில், வாஷிங்டன் நகரில் உள்ள நியூசியம் என்னும் அருங்காட்சியகத்தில்(பத்திரிக்கையாளர்கள் நினைவகம்), 2 இந்திய பத்திரிக்கையாளர்கள்(கௌரி லங்கேஷ், சுதீப் தத்தா) இடம் பெற்றுள்ளனர்.
 • Reviews


 • ‘டான்சிங் அங்கிள்’ என என்று பெயர் பெற்றுள்ள மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பேராசிரியர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா, விதிஷா நகராட்சியின் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
 • Reviews


 • முன்னாள் அமெரிக்க விண்வெளி வீரர் ஆலன் பீன் காலமானார். நிலவில் காலடி பதித்த நான்காவது நபர் ஆலன் பீன். இவரது இழப்பை ஈடு செய்யமுடியாது என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 • Reviews


 • ரஸ்கின் பாண்ட் இந்தியாவில் குழந்தைகள் இலக்கியத்தில் பங்காற்றியவர்களில் மிகவும் முக்கியமானவர் எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட். பிரிட்டிஷ் நாட்டின் வழி வந்தவரான ரஸ்கின், இதுவரை ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ளார். இவரது பிறந்த நாளான இன்று இவரைப் பற்றிய சில துணுக்குகள்: 1. இந்தியாவின் வில்லியம் வேர்ட்ஸ்வர்த் என்றழைக்கப்படுவது, ரஸ்கின் பாண்ட்தான். 2. இவரது முதல் நாவலான The Room on the Roof வெளியானபோது இவரது வயது, 21. 3. Edith Clarke மற்றும் Aubrey Bond ஆகிய தம்பதியருக்குப் பிறந்த ரஸ்கின் பாண்ட், தனது நான்கு வயதில் பெற்றோரின் விவாகரத்தைக் காண்கிறார். அதன் பிறகு, இவருடைய அம்மா ஓர் இந்தியரை மணக்கிறார். 4. 1950ஆம் ஆண்டு, 16 வயதில், ரஸ்கின் பாண்ட் தன் முதல் சிறுகதையான 'Untouchable'ஐ எழுதினார். 5. சிறு வயதில் இவருக்கு ஒரு tap dancer ஆக வேண்டும் என்பது ஆசையாக இருந்திருக்கிறது. 6. சிறு வயதில் இவருக்கு மிகவும் பிடித்தமான கதைப் புத்தகம்: Ali in Wonderland: And Other Tall Tales. 7. மழை பெய்தால் இவர் மிகவும் சோம்பேறித்தனமாக உணர்வதுடன், முணுமுணுத்துக் கொண்டே இருப்பாராம். 8. இவரது "Susana's seven husbands" என்ற நாவல் அடிப்படையில் எடுக்கப்பட்ட "7 khoon maaf” என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். 9. 1992ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது; 1999ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது; 2014இல் பத்ம பூஷண் ஆகிய விருதுகளை இவருக்குக் கொடுத்து கவுரவித்திருக்கிறது இந்திய அரசு.
 • Reviews


 • மணிப்பூர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகத் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ராமலிங்கம் சுதாகர் இன்று (மே 18) பதவியேற்றார். வேலூர் மாவட்டம், பணப்பாக்கத்தைச் சேர்ந்தவர் நீதிபதி ராமலிங்கம் சுதாகர். சென்னை உயர் நீதிமன்றக் கூடுதல் நீதிபதியாக 2005ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி நியமிக்கப்பட்டார். பின்னர் 2007ஆம் ஆண்டு, ஏப்ரல் 20ஆம் தேதி நிரந்தர நீதிபதியானார். 2016ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதார் துரேஷ் அகமது ஓய்வு பெற்றதால் அங்கு பொறுப்பு நீதிபதியாகப் பதவியேற்றார்.
 • Reviews


 • ஜி.வி.பிரகாஷுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்து சிறப்பித்துள்ளது புனித ஆண்ட்ரூஸ் இறையியல் பல்கலைக்கழகம்.
 • Reviews


 • பிரபல எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவுமான பாலகுமாரன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று (மே 15) காலமானார். அவருக்கு வயது 71. தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்ற சிற்றூரில் பிறந்த பாலகுமாரனுக்கு, தமிழ் எழுத்துலகில் தனி இடம் உண்டு. தொடக்கத்தில் கவிதைகள் எழுதிவந்த இவர், அதன் பின் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் என பலவற்றையும் எழுதினார். மெர்க்குரிப் பூக்கள், கரையோர முதலைகள், பயணிகள் கவனிக்கவும், இரும்புக் குதிரைகள், சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் சொல்லும் கங்கை கொண்ட சோழன், உடையார் என 200க்கும் மேற்பட்ட நாவல்களும், 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியுள்ளார். இதில் இரும்புக் குதிரைகள் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
 • Reviews


 • மூத்த வழக்கறிஞரான முகுல் ரோத்கியை லோக்பாலின் தலைமை நீதிபதியாக நியமிப்பதாக மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
 • Reviews


 • சுவிட்சர்லாந்தை சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி டேவிட் குடால், அந்நாட்டு அரசின் அனுமதியுடன் தன்னை தானே கருணைக் கொலை செய்துகொண்டு காலமானார். உயிரியல் துறையின் உலகின் மூத்த விஞ்ஞானியாக இருந்தவர் டேவிட் குடால். 104 வயதான இவர், வயது மூப்பை கருத்தில் கொண்டு தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். பின்பு, அந்த முடிவை மாற்றி தன்னை கருணைக் கொலை செய்து கொள்ள சட்டப்படியான நடவடிக்கைகளில் இறங்கினார். பிரிட்டனில் பிறந்த டேவிட் குடால், உயிரியல் துறை உலகளவிலான பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். மேலும் ’ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா’ என்கிற அந்நாட்டின் உயரிய விருதை பெற்ற வெகுசில விஞ்ஞானிகளில் இவரும் ஒருவர். மேலும், இந்த விருது பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தால் மறைந்த விஞ்ஞானி டேவிட் குடாலுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 • Reviews


 • பழம்பெரும் நடிகர் நீலகண்டன் என்கிற நீலு உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று (மே 10) மாலை காலமானார். அவருக்கு வயது 82.
 • Reviews


 • அமெரிக்காவின் வணிகப் பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஒவ்வோர் ஆண்டும் உலகின் சக்திவாய்ந்த மனிதர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2018ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 75 மனிதர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சீன அதிபர் க்ஷி ஜின்பிங் முதலிடத்திலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டாம் இடத்திலும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானிக்கு 32ஆம் இடம் கிடைத்துள்ளது. இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் 4ஜி சேவையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியதாகவும், குறுகிய காலத்தில் 16 கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளதாகவும் ஃபோர்ப்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 • Reviews


 • ‘நவீன காலத்தின் மிகப் பெரிய சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ்’ என்று சீன அதிபர் ஷி ஜின்பிங்க் தெரிவித்துள்ளார். கம்யூனிச சித்தாந்தத்தின் தந்தை என்று அழைக்கப்படும் கார்ல் மார்க்ஸின் 200ஆவது பிறந்தநாள் இன்று (மே 5) கொண்டாடப்படுகிறது. கம்யூனிச நாடான சீனா, அவரது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. இந்த நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு பீஜிங்கில் நேற்று (மே 4) நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்க் கலந்துகொண்டு உரையாற்றினார்.
 • Reviews


 • முன்னாள் விமானப் படை தளபதி இட்ரிஸ் ஹாசன் லத்திப் 94 வயதில் காலமானார்.
 • Reviews


 • வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக சிக்கிம் திகழ்கிறது. அங்கு சிக்கிம் ஜனநாயக முன்னணியின் தலைவராக பவன் சாம்லிங் உள்ளார். கடந்த 1994ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார். அன்றிலிருந்து தொடர்ந்து 5 முறை ஆட்சி புரிந்து வருகிறார். இதன்மூலம் நீண்ட காலம் முதல்வராக இருந்த மேற்குவங்க முன்னாள் முதல்வரும், மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவருமான ஜோதிபாசுவின் சாதனையை முறியடித்துள்ளார்.
 • Reviews


 • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சுதாகர் ரெட்டி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 • Reviews


 • அசாம் மாநிலத்தின் சுற்றுலாத்துறை தூதராக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
 • Reviews