Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள் - முக்கிய இடங்கள்
 • கும்பமேளா

  உத்தரப் பிரதேசத்தில் கும்பமேளா நடைபெறுவதையொட்டி, கின்னஸ் சாதனை முயற்சியாக, பிரயாக்ராஜ் நகரில் கொல்கத்தா- தில்லி நெடுஞ்சாலையில் ஒரே நேரத்தில் இயக்கப்பட்ட 500 சிறப்பு பேருந்துகள். இதற்கு முன்பு, அபுதாபியில் நடைபெற்ற அணிவகுப்பில் 390 பேருந்துகள் இயக்கப்பட்டது கின்னஸ் சாதனையாக உள்ளது.
 • Reviews


 • உலகின் மிகப் பெரிய பகவத் கீதை

  புது தில்லியில் சர்வதேச கிருஷ்ணா இயக்கத்தினர் அமைத்துள்ள கோயிலில் வைத்துள்ள உலகின் மிகப் பெரிய பகவத் கீதை நூலைப் பிரதமர் மோடி பார்வையிட்டார்.
 • Reviews


 • கடலோர காவல் படை

  கடலோர காவல் படை மையத்தின் தென்பகுதி தலைமையகமாக தூத் துக்குடி கடலோர காவல் படை தரம் உயர்த்தப்பட் டுள்ளது. தூத்துக்குடியில் 22ம் தேதி நடைபெறும் விழாவில் கவர்னர் பன்வா ரிலால் புரோகித் இதனை முறைப்படி துவக்கி வைக் கிறார்.கடல்பகுதி பாதுகாப்பின் முக்கியத்துவம் கருதி இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு மண்டலத்தின் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி கடலோர காவல் படை, தனி தலைமையகமாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக கிழக்கு கடற்க ரையில் சுமார் 150 கி.மீ. தொலைவு அதிகரிக்கப் பட்டு தூத்துக்குடி கட லோர காவல் படையின் பாதுகாப்புக்குட்பட்ட கடற்கரை பகுதி 285 கி.மீ. ஆக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

  நாட்டின் மிக அதிவேக ரயிலான இதனை டெல்லி – மும்பை ராஜ்தானி வழித்தடத்தில் அதிகாரிகள் சோதித்துப் பார்த்தனர். இந்த ரயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அண்மையில் பெயர் சூட்டினார்.இந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் வரும் 15-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கிவைத்து உரையாற்ற உள்ளார். 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயில் டெல்லி – வாரணாசி இடையே இயங்கவுள்ளது. தற்போது இந்த வழித்தடத்தில் இயங்கி வரும் சதாப்தி எக்ஸ்பிரஸ் விலக்கிக் கொள்ளப்பட உள்ளது
 • Reviews


 • தொழில் தொடங்க உகந்த இந்திய மாநிலங்கள்

  சமீபத்தில் சிங்கப்பூர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள “எளிதில் தொழில் தொடங்க உகந்த இந்திய மாநிலங்களின்” பட்டியலில் ஆந்திரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் இரண்டாமிடத்திலும், டெல்லி மூன்றாம் இடத்திலும் உள்ளது.
 • Reviews


 • 27-வது உலக புத்தக கண்காட்சி

  27-வது உலக புத்தக கண்காட்சியானது புது டெல்லியில் பிரகதி மைதானத்தில் நடைபெற்றது.இக்கண்காட்சியின் கருத்துரு: சிறப்பு தேவைகளைக் கொண்ட வாசகர்கள் “(Readers with special Models) என்பதாகும்UAE-ன் 3-வது பெரிய அமீரகமான “ஷார்ஷா” இந்த புத்தக கண்காகாட்சியின் கௌரவ விருந்தினர் ஆகும்.“ஷார்ஷா” 2019 ஆம் ஆண்டின் உலக புத்தக தலைநகரம் ஆகும்.
 • Reviews


 • Climate Change performance Index

  2019 ஆம் ஆண்டிற்கான காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டு (Climate Change performance Index – CCPI) பட்டியலில் “ஸ்வீடன்” மிகவும் சிறப்பான செயல்திறன் கொண்ட நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.CCPI -2019 குறியீட்டில் மொராக்கோ இரண்டாம் இடத்திலும் லித்வேனியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
 • Reviews


 • பனோரமா திரைப்பட விழா

  2019ஆம் ஆண்டுக்கான இந்திய பனோரமா திரைப்பட விழா, புது தில்லியிலுள்ள சிறி அரங்கில் ஜன.4-13 வரை நடைபெறவுள்ளது. தகவல் & ஒலிபரப்பு அமைச்சகத்தின் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. விழாவின் தொடக்கமாக முழுநீளத் திரைப் படப் பிரிவில் 'ஒலு' திரைப்படமும், ஆவண திரைப்படப் பிரிவில் 'கர்வாஸ்' திரைப்படமும் திரையிடப்படவுள்ளன.49ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI-2018) இந்திய பனோரமா பிரிவில் தெரிவான அனைத்து திரைப்படங்களும் இவ்விழாவில் திரையிடப்படும். 26 முழு நீளத்திரைப் படங்களும், 21 கதைசாரா திரைப்படங்களும் இதில் திரையிடப்படும்.
 • Reviews


 • குனோ பல்பூர் வனவிலங்கு சரணாலயம்

  மத்திய பிரதேச அரசானது குனோ பல்பூர் வனவிலங்கு சரணாலயத்தினை, தேசிய பூங்காவாக அறிவித்துள்ளது.இப்பூங்காவானது, ஆசிய சிங்கங்களை குஜராத்தின் கிர் காடுகளிலிருந்து இடமாற்றும் திட்டத்திற்காக மேம்படுத்தப்பட்டுள்ளது.
 • Reviews


 • ஹவாயில் கிலாவேயா எரிமலை மீண்டும் வெடித்ததால் ஒரே நாளில் அடுத்தடுத்து 500 முறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிலாவேயா எரிமலை கடந்த மே 3ஆம் தேதி வெடிக்கத் தொடங்கிய நிலையில் அந்நாட்டு அரசு அப்பகுதியில் இருந்து 2,000 பேரை வெளியேற்றியுள்ளது.
 • Reviews


 • அனைத்து மாநில ஆளுநர்களின் 49 வது மாநாடு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் தொடங்கியது. நாளை வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. ஆறு அமர்வுகளாக நடைபெறும் இந்த அமர்வை இன்று காலை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்வில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்றனர்.
 • Reviews


 • கவுதமாலா நாட்டில் தலைநகா் கவுதமாலா சிட்டிக்கு 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பியூகோ எரிமலை திடீரென வெடித்து சிதறியது. அதில் இருந்து பல கி.மீ. தொலைவிற்கு 700 டிகிாி செல்சியஸ் வரை வெப்பம் மிகுந்த நெருப்பு குழம்பு (லாவா) வெளியேறி வருகிறது.
 • Reviews


 • இந்திய ராணுவ கமாண்டர்கள் மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது. இந்த மாநாடு தொடர்ந்து ஆறு நாட்கள் நடைபெறுகிறது.
 • Reviews


 • 21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலயாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்றது. அடுத்து நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளை நடத்த இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகர் உரிமம் பெற்றுள்ளது.
 • Reviews


 • உலகளாவிய லாஜிஸ்டிக்ஸ் உச்சிமாநாடு புது டெல்லியில் நடைபெற்றது.
 • Reviews


 • ​21 ஆவது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் இன்று (ஏப்ரல் 4) மாலை கோலாகலமாகத் தொடங்கியது.
 • Reviews


 • டவுன் சிண்ட்ரோம் பற்றிய தேசிய மாநாடு புது தில்லியில் நடைபெற்றது.
 • Reviews


 • உலகிலேயே மிகப்பெரிய மணற்கல் குகை கிரெம் புரி மேகாலயாவில் கிழக்குக் காசி ஹில்ஸ் மாவட்டத்தின் மவாசிநிரா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
 • Reviews


 • போபாலில் 106 வது இந்திய அறிவியல் காங்கிரஸ் நடைபெற உள்ளது . மணிப்பூர், இம்பாலில் 105 வது இந்திய அறிவியல் காங்கிரசு நடைபெற்றது .
 • Reviews


 • சர்வதேச யோகா விழா புது தில்லியில் நடைபெற்றது .
 • Reviews


 • புது தில்லியில் புதுமை மற்றும் தொழில் முனைவோர் விழா நடைபெற்றது.
 • Reviews


 • சுரங்கங்கள் மற்றும் கனிமங்களின் 3 வது தேசிய மாநாடு புது தில்லியில் நடைபெறும்.
 • Reviews


 • 105 வது இந்திய அறிவியல் காங்கிரசை பிரதமர் மோடி இம்பாலில் தொடக்கி வைத்தார்.
 • Reviews


 • 2013 ஆண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் தேதியை உலக ரேடியோ தினமாக அறிவித்தது. 1946ஆம் ஆண்டு முதல் முறையாக ஐ.நா., ரேடியோ தொடங்கப்பட்ட நாளில் ரேடியோ தினமாக கடைபிடிக்க என்று முடிவு செய்யப்பட்டது. வானொலியின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் விதமாக ஆண்டுதோறும் வானொலி தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, ஒரிசாவின் தலைநகர் புவனேஷ்வரில் சர்வதேச அளவிலான நூற்றுக்கணக்கான பழமையான ரேடியோக்களின் கண்காட்சி திங்கட்கிழமை தொடங்கியது.
 • Reviews


 • இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கிரிக்கெட் அகாடமி ஒன்றினை துபாயில் தொடங்கினார்.
 • Reviews


 • ஐதராபாத் நகரத்தில் பிச்சை எடுக்க தடை விதிக்கப்பட்டதால் பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாறியுள்ளது.
 • Reviews


 • எரிபொருள் பாதுகாப்பு மேம்பாட்டிற்காக தேசிய சைக்கிள் ஓட்டுதல் சாம்பியன்ஷிப் புதுடெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது.
 • Reviews


 • 20 வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா (International Children's Film Festival) நவம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரை ஹைதராபாத்தில் நடைபெறும்.
 • Reviews


 • 2017 சர்வதேச பொம்மை விழா (International Puppet Festival) கொல்கத்தாவில் நடைபெறும்.
 • Reviews


 • யோகா பற்றிய மூன்றாவது சர்வதேச மாநாடு புது தில்லியில் நடைபெற்றது .
 • Reviews


 • 3 வது இந்திய பெண்கள் ஆர்கானிக் விழா புது தில்லியில் நடைபெற்றது.
 • Reviews


 • ஈராக் நாட்டில் மாவீரன் அலெக்ஸ்சாண்டர் ஆட்சி செய்த 2000-ம் ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • முதல் முறையாக தெற்கு ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நடைபெறவுள்ளது.
 • Reviews


 • தேசிய தடகள போட்டி சென்னையில் தொடங்கியது .
 • Reviews


 • உலகில் குறைந்த மன அழுத்தமுள்ள நகரமாக ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் தேர்வுசெய்யபட்டுள்ளது .
 • Reviews


 • கரீபியன் தீவை மரியா புயல் தாக்கவுள்ளதாக அமெரிக்க வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 • Reviews


 • பசுபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள தாலிம் புயலால் ஜப்பானின் தென்மேற்கு பகுதிகள் மற்றும் தெற்கு பகுதிகளில் கனமழை பெய்யலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • உலகின் தலைசிறந்த நிதி மையமாக லண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 • Reviews


 • அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இர்மா புயல் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
 • Reviews


 • வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் புதிதாக இர்மா புயல் உருவாகியுள்ளது.
 • Reviews