Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள் - அறிவியல் & தொழில்நுட்பம்
 • கேலோ இந் தியா

  விளையாட்டு, உடல்தகுதி ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், 'கேலோ இந்தியா' என்ற பெயரில் செல்லிடப் பேசி செயலியை பிரதமர் மோடி. பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார். | மத்திய அரசின் 'கேலோ இந்தியா' (விளையாடு இந்தியா) திட்டத் தின் ஒரு பகுதியாக இந்திய விளையாட்டு ஆணையம், இந்தச் செய லியை வடிவமைத்துள்ளது. விளையாட்டையும், உடல்தகுதியையும் அடிப்படையாக வைத்து செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். இதுகுறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கூறுகையில், 'விளையாட்டுத் துறையில் மிகமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இந்தச் செயலி அமை யும். இளம்வயது விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் திறமையை வெளிப்படுத்த இந்தச் செயலி வழிகாட்டும் என்றார்.18 விளையாட்டுகள் குறித்த விதிமுறைகளும் இதில் குறிப்பிடப் பட்டிருக்கும், ஒவ்வொரு விளையாட்டுக்கும் என்னென்ன உபகர ணங்கள் தேவை என்பது குறித்த அடிப்படையான விஷயங்களும் இதில் இருக்கும். இந்திய விளையாட்டு ஆணையம் நாடு முழுவதும் செய்துள்ள வசதிகள், முகவரிகள், அதிகாரிகளின் தொடர்பு எண்கள் உள்ளிட்ட விவரங்களும் இருக்கும்.
 • Reviews


 • QRSAM

  முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவிரைவு ஏவுகணையான “QRSAM” (Quick Reaction Surface to Air Missile) என்ற தரையிலிருந்து வானில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அளிக்கும் இரு ஏவுகணைகளை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வெற்றிகரமாக ஒடிசாவின் சண்டிப்பூரில் சோதனை செய்துள்ளது.
 • Reviews


 • பயோ ஆசியா – 2019

  ஆசியாவின் மிகப்பெரிய உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மன்றத்தின் 16வது பதிப்பான “பயோ ஆசியா – 2019” (Bio Asia – 2019) தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரில் நடைபெற்றது.இம்மன்றத்தினை தெலுங்கானா ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்ஹன் தொடங்கி வைத்தார்.இம்மாநாட்டின் கருத்துரு:- “வாழ்க்கை அறிவியல் 4.0 – இடையூறுகளை சீர்குலைத்தல்” (Life Science 4.0 – Disrupt the Disruption”) என்பதாகும்.
 • Reviews


 • டிஆர் டிஓ

  ஒடிஸாவின் பாலசோர் அரு கேயுள்ள சண்டிப்பூரில், பாது காப்பு ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ தயாரிக்கப்பட்ட 2 அதிவி ரைவு ஏவுகணைகள் செவ்வாய்க் கிழமை சோதனை செய்யப்பட் டன. தரையிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள், விண்ணில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழித்தன. 5 மேலும், பல்வேறு சூழல்க ளில் இயங்கும் வகையிலும், வெவ்வேறு தூரங்களிலுள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் 5 வகையிலும் இந்த ஏவுகணை கள் சோதனை செய்யப்பட்டன.
 • Reviews


 • பெர்த்

  நிலவில் ஆய்வு செய்வதற்காக இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட 'பெர்த்' என்ற விண்கலம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து வியாழக்கிழமை இரவு விண்ணில் செலுத்தப்பட்டது. 585 கிலோ எடையுடைய அந்த விண்கலம், அமெரிக்காவின் தனியார் நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸின் ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் உள்ளூர் நேரப்படி இரவு 8.45 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட் டது. ஹீப்ரு மொழியில் "தோற்றம் என்ற பொருள் தரும் பெயரைக் கொண்ட பெரஷீத் விண்கலம், இஸ்ரேலில் உருவாக்கப்பட்டதாகும்.
 • Reviews


 • விண்கலம்

  சந்திரனில் ஆய்வு நடத்துவதற்காக முதல் முறையாக இஸ்ரேல் தனது விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் அமெரிக்காவின் கானவெரலில் இருந்து ஸ்பேஸ் எக்ஸின் பால்கன் -9 ராக்கெட் மூலமாக நேற்று முன் தினம் இரவு விண்ணில் ஏவப்பட்டது.
 • Reviews


 • எதிர்கால தொழில்நுட்பம்

  செயற்கை நுண்ணறிவு, இணைய உலகம் மற்றும் எதிர்கால தொழினுட்பமான 5ஜி சேவைகளை மேம்படுத்த சோதனை மேற்கொளல் உள்ளிட்ட எதிர்கால தொழினுட்பங்களில் ஒத்துழைப்பு நல்கும் ஒப்பந்தமொன்றில், அரசுக்கு சொந்தமான BSNL தொலைத்தொடர்பு நிறுவனமும், ஜப்பானின் NTTAT அதன் இந்திய பங்குதாரரான விர்கோ கார்ப்ஸ் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன. அடுத்த தலைமுறை தொழினுட்பங்களுக்கு ஒத்துழைப்பு நல்குவது மற்றும் மென்பொருளில் இந்தியாவின் நிபுணத்துவமும், உற்பத்தியில் ஜப்பானிய நிபுணத்துவமும் ஒருங்கிணைவது எனும் இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபேவின் நோக்கத்தின் வரிசையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 • Reviews


 • 12-ஆவது பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண் காட்சி

  பெங்களூரு எலஹங்காவில் உள்ள விமானப் படை நிலையத்தில் புதன்கிழமை 12-ஆவது பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண் காட்சியைத் தொடக்கிவைத்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது: பெங்களூரில் 12-ஆவது முறையாக பன்னாட்டு விமானத் தொழில் கண்காட்சி நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.இக்கண்காட்சியில் 20 இந்திய நிறுவனங்கள், 200 வெளிநாட்டு நிறுவனங்கள் கலந்து கொண் டுள்ளன. ஆசியாவின் மிகப்பெரிய விமானத் தொழில் கண்காட்சியாக விளங்குவது இந்தியா வுக்குப் பெருமையளிக்கிறது. விமானப் படை, ராணுவ உற்பத்தித்துறை மட்டுமல்லாது, பயணி கள் விமானத் துறையும் இந்த கண்காட்சியில் பங் காற்றியுள்ளன.இந்த கண்காட்சியின் வாயிலாக உலக அரங் கில் விமானத் தொழிலில் இந்தியாவை நிலைநி றுத்தும் முயற்சி நடைபெறுகிறது. நூறுகோடி வாய்ப்புகளின் ஓடுகளம் என்ற நோக்கத்தில் நடத்தப்படும் இக் கண்காட்சியில், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்துக்கு முக்கியத்து வம் அளிக்கப்படுகிறது.
 • Reviews


 • ரோபோ

  இந்தியாவிலேயே முதல் முறையாக திருவனந்தபுரத்திலுள்ள(கேரளா) போலீஸ் டி.ஜி. பி. அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு உதவுவ தற்காக ரோபோ அமைக் கப்பட்டுள்ளது.
 • Reviews


 • SOLAR

  தற்போது சோலார் மின்னுற்பத்தியில் சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா, அடுத்த ஆண்டிலும் தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் என்று சர்வதேச ஆய்வு நிறுவனமான உட் மெக்கென்ஸி தெரிவித்துள்ளது.
 • Reviews


 • மிஹிர்

  இந்தியாவின் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்தும் விதமாக, 'மிஹிர்' எனும் 2.8 பெடா பிளாப்ஸ் உயர் செயல்திறன் கொண்ட கணினி அமைப்பை நொய்டாவில் மத்திய புவி அறிவியல் துறையமைச்சர் Dr. ஹர்ஷ் வர்தன் அறிமுகம் செய்துவைத்தார். " இப்புதிய ‘மிஹிர்' கணினி அமைப்பானது, நாடு முழுவதிலும் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்தும், தீவிர வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கும் மற்றும் பருவகால மாற்றங்களை நிகழ்நேர தகவல்களாக தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பன்னாட்டளவில் செயல்படும் உயர் செயல்திறன் கணிணிகளின் பட்டியலில் முதல் 500 இடங்களில் 368வது இடத்திலுள்ள இந்திய உயர் செயல்திறன் கணிணிகள், இவற்றின் வருகையால் முதல் 30 இடத்துக்கு முன்னேறும்.
 • Reviews


 • சாங் இ – 4

  நிலவின் இருண்ட பகுதியை ஆராயும் செயற்கை கோளான சாங் இ – 4 (Chang e – 4) என்னும் செயற்கைகோள், ஜனவரி 3, 2019 அன்று வெற்றிகரமாக நிலவில் தரையிரங்கியது.இச்செயற்கைகோளை சீனா டிசம்பர் 8, 2018ல் விண்ணில் செலுத்தியது.
 • Reviews


 • அல்ட்டிமா துலே

  சூரியனை மிகவும் நீண்ட தொலைவில் சுற்றி வரும் “அல்ட்டிமா துலே (Ultima Thule) என்ற நுண்கோளின் அருகே சென்று, அமெரிக்காவின் “நியூ ஹொரைஸன்” என்ற விண்கலம் சாதனைப் படைத்துள்ளது.
 • Reviews


 • இந்தியாவில் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி), இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) உட்பட பல்வேறு சிறந்த அறிவியல் கல்வி நிறுவனங்கள் உள்ளன. எனினும், உலகின் தலைசிறந்த முதல் 1% அறிவியல் ஆய்வாளர்களில் வெறும் 10 இந்தியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும்கூட நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் படிப்பை முடிக்காதவர்களாக உள்ளனர். உலகின் தலைசிறந்த, செல்வாக்குமிக்க 4,000 அறிவியல் ஆய்வாளர்களின் பட்டியலை கிளரிவேட் அனலிடிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், இந்திய அறிவியலாளரும், பிரதமருக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவருமான சி.என்.ஆர்.ராவ் பெயரும் இடம்பெற்றுள்ளது.
 • Reviews


 • SAMWAD with Student

  இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கிடையே அறிவியல் திறனை ஊக்குவிப்பதற்காக இஸ்ரோவானது ‘SAMWAD with Student’ (SwS), என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
 • Reviews


 • Future India: Science & Technology

  பஞ்சாப் மாநிலம் ஜலந்தரின் லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில், ஜன.3 முதல் 7 வரை நடைபெறவுள்ள இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்த ஆண்டுக்கான மாநாட்டுக்கு "எதிர்கால இந்தியா: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்" என்பது கருப்பொருளாக அமைக்கப்பட்டுள்ளது. 5 நாள் நடக்கும் இம்மாநாட்டில், அறிவியல் & தொழில் நுட்பம் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கருத்தரங்கங்களும், நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. இதில், அறிவியல் அறிஞர்களும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை உள்ளிட்டவற்றின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர். மேலும், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிவியல் அறிஞர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர்.
 • Reviews


 • சாஸ்ட்ரா-2019

  சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப கழகத்தின் (IIT) சார்பில் “சாஸ்ட்ரா – 2019” என்ற பெயரில் தொழில்நுட்பக் கண்காட்சி மற்றும் மாநாடு ஜனவரி 3 முதல் ஜனவரி 6 வரை நடைபெற உள்ளது.
 • Reviews


 • INS-விராட்

  இந்தியாவின் முதல் விமானம் தாங்கிய போர் கப்பலான “INS-விராட்”, கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, அந்த போர்க்கப்பலை அருங்காட்சியமாக மாற்ற கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • JF Thunder – 17

  பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகள் ஒன்றிணைந்து “JF Thunder – 17” என்னும் ஒற்றை என்ஜின் பன்முக போர் விமானத்தை தயாரிக்கின்றன.
 • Reviews


 • ஒசிரிஸ்-ரே

  சமீபத்தில் நாசா அனுப்பிய “ஒசிரிஸ்-ரே” எனப்படும் செயற்கைகோள் பூமியில் இருந்து 11 கோடி கி.மீ. தொலைவில் உள்ள “பென்னு” என்றழைக்கப்படும் குறுங்கோளின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்து சாதனைப் படைத்துள்ளது.
 • Reviews


 • சம்வாத் திட்டம்

  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது தனது வெளிக்கள் திட்டத்தின் ஒருபகுதியாக மாணவர்களுடன் சம்வாத் எனும் திட்டத்தை சமீபத்தில் தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதுமுள்ள இளையோரை விண்வெளி அறிவியல் நடவடிக்கைகளில் ISRO ஈடுபடுத்தும்.பெங்களூரில் நடந்த இதன் தொடக்க விழாவின்போது, தேர்தெடுக்கப்பட்ட பள்ளிகளை சேர்ந்த 10 ஆசிரியர்கள் மற்றும் 40 மாணவர்கள் ISRO தலைவர் Dr. K. சிவனிடம் இந்திய விண்வெளி திட்டங்கள் & அதனால் சாதாராண மனிதருக்கு விளையும் பயன்கள் குறித்து விவாதித்தனர்.
 • Reviews


 • யுன்ஹாய் – 2

  வளிமண்டல சுழல், விண்வெளி சூழல் கண்காணிப்பு, பேரிடர்களை தடுத்தல் மற்றும் குறைத்தல் மற்றும் அறிவியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சீனாவானது யுன்ஹாய் – 2 என்ற செயற்கைக்கோளை விண்வெளி சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.
 • Reviews


 • சூரியக் குடும்பம் பற்றிய சில குறிப்புகள்: 1. நாம் வாழும் சூரியக் குடும்பத்தில், ஒரு நட்சத்திரம் (சூரியன்), எட்டுக் கோள்கள், ஐந்து குறுங்கோள்கள் (Dwarf கோள்கள்), 181 நிலாக்கள், 5,66,000 சிறிய கோள்கள் (Asteroids), 3,100 வால் விண்மீன்கள் (Comet) இருக்கின்றன. 2. சூரியக் குடும்பத்தில் அனைத்துமே சூரியனையே சுற்றி வருகின்றன. 3. சூரியக் குடும்பத்தின் அளவு, பூமிக்கும் சூரியனுக்குமான தொலைவை விட 1,25,000 மடங்கு பெரியது! 4. சூரியக் குடும்பத்தின் அளவில் 99.86% சூரியனில் இருக்கிறது! 5. சூரியனுக்கு அருகில் இருக்கும் நான்கு கோள்கள் பாறைகளாலும் உலோகங்களாலும் ஆனவை. 6. மீதமுள்ள நான்கு கோள்கள் வாயுவால் ஆனவை! 7. மெர்க்குரிதான் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோள். ஆனால், அங்கு வளி மண்டலம் இல்லாத காரணத்தால், வீனஸ்தான் மிகவும் வெப்பமான கோளாகக் கருதப்படுகிறது. 8. சூரியக் குடும்பத்தின் மிகப் பெரிய நிலவின் பெயர் Ganymede. 9. வியாழன் (ஜுபிட்டர்), சனி (ஸடர்ன்) ஆகிய கிரங்கள் முழுவதும் ஹைட்ரஜன், ஹீலியம் ஆகிய வாயுக்களால் ஆனது. 10. யுரேனஸ், நெப்ட்யூன் ஆகிய கிரகங்கள் பனிக்கட்டியால் ஆனவை!
 • Reviews


 • 2019ஆம் ஆண்டு செயற்கைக்கோளைச் செலுத்தும் ஃபேஸ்புக்

  உலகம் முழுக்க இணையச் சேவையை வழங்கும் நோக்கில் ஃபேஸ்புக் நிறுவனம் 2019ஆம் ஆண்டு தனி செயற்கைக்கோள் ஒன்றை நிறுவத் திட்டமிட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் 'அதேனா' என்னும் செயற்கைக்கோளை தயாரித்து விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
 • Reviews


 • குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் Physical Research Laboratory (PRL) எனும் வானியல் ஆராய்ச்சி ஆய்வக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த புதிய கிரகத்துக்கு EPIC 211945201b or K2-236b என்று பெயரிடப்பட்டுள்ளது. EPIC 211945201 or K2-236 என்ற நட்சத்திரத்தைச் சுற்றி வரும் இந்த புதிய கிரகம், பூமியைப் போன்று ஆறு மடங்கு ஆரத்தில் பெரியதாகவும் 27 மடங்கு எடை கொண்டுள்ளாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அபு மலையில் நிறுவப்பட்டுள்ள ஸ்பெக்ட்ரோகிராப் தொலைநோக்கி மூலம் (நிறமாலையைப் பயன்படுத்தி பொருட்களை கண்டறியும் கருவி) இந்த புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • புவியில் நாள் ஒன்றுக்கு 24 மணி நேரம் என கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் 24 மணி நேரம் போதவில்லை என்று கூறுவர். அவர்களின் விருப்பம் நிறைவேறும் வகையில், நாள் ஒன்றுக்கு 25 மணி நேரமாக மாறும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய அமெரிக்காவின் விஸ்கான்சின் - மேடிசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் மேயர்ஸ், 140 கோடி ஆண்டுகளுக்கு முன், புவிக்கு அருகில் நிலவு இருந்தது. ஒரு நாளைக்கு வெறும் 18 மணி நேரம் மட்டுமே. தற்போது நிலவு 44,000 கி.மீ விலகிச் சென்றுள்ளது. மேலும் ஒரு நாளைக்கு 24 மணி நேரமாக உள்ளது. புவியில் இருந்து நிலவு, ஆண்டிற்கு 3.82 செ.மீ அளவிற்கு தொடர்ந்து விலகிச் செல்கிறது.
 • Reviews


 • ரிலையன்ஸ நிறுவனம் செட்டாப் பாக்ஸ் உடன் தொலைக்காட்சி சேவையை 5 வருடத்துக்கு 500 ரூபாய் மட்டுமே என்ற அதிரடி ஆஃபர் அறிவித்துள்ளது.
 • Reviews


 • 100 ஆண்டுகளுக்கு, அரை வாழ்வு கொண்ட நிக்கல்-63 கதிரியக்க ஐசோடோப்பை பயன்படுத்தி அணு பேட்டரியை ரஷ்ய விஞ்ஞானிகன் கண்டுபிடித்துள்ளனர்.
 • Reviews


 • சூரிய குடும்பத்திற்கு வெளியே, வியாழன் கோளை விட 1.4 மடங்கு அகலம் அதிகம் உள்ள வாஸ்ப்-127பி என்ற கோளில் தண்ணீர் மற்றும் உலோகங்கள் உள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
 • Reviews


 • சீனா புவி கண்காணிப்பு செயற்கை கோளான ‘கோபென்-6’ செயற்கை கோளை லாங் மார்ச் 2டி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.
 • Reviews


 • ஃபிபா உலகக் கோப்பை போட்டியை விளம்பரப்படுத்தும் விதமாக, ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள்(அண்டான் ஷ்காப்லெவ் மற்றும் ஒலே ஆர்டேமிவ்) விண்வெளியில் கால்பந்தாடி அசத்தியுள்ளனர்.
 • Reviews


 • 2015ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த நாசா விண்வெளி மையம் அனுப்பி வைத்த “நியூ கொரைசான்ஸ்” என்ற விண்கலம் ப்ளுட்டோ கிரகத்தில் மீத்தேன் படிமங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளது.
 • Reviews


 • அடுத்த 4 ஆண்டுகளில் 30 பிஎஸ்எல்வி மற்றும் 10 ஜிஎஸ்எல்வி எம்கே III உள்ளிட்ட ஏவுகணைகள் தயாரிப்புக்கு ரூ.10,900 கோடி ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
 • Reviews


 • அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் ஆப்பிள் மென்பொருள் வடிவமைப்பாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் ஆப்பிள் டிசைன் விருதை தமிழகத்தைச் சேர்ந்த ராஜா விஜயராம் என்ற மெக்கானிக்கல் இஞ்சினியர் பெற்றிருக்கிறார். சிறந்த ஐபோன் அப்ளிகேஷன் வடிமைப்புக்காக அளிக்கப்படும் இந்த விருதை பெற்றுள்ள ராஜா வித்தியாசமான கால்குலேட்டரை வடிவமைத்து விருதைத் தட்டிச்சென்றிருக்கிறார். Calzy 3 என்ற பெயரில் உள்ள இந்த கால்குலேட்டர் மற்ற மொபைல் கால்குலேட்டர்கள் போல இல்லாமல் அழகிய வடிவமைப்புடன் வந்திருக்கிறது. மெமரி ஃபங்ஷன்களை ட்ராக் அன்ட் ட்ராப் மூலம் மூலம் மாற்றி அமைத்திருக்கிறார். சைன்டிஃபிக் கால்குலேட்டரும் உள்ளது.
 • Reviews


 • அக்னி 5 ஏவுகணை இன்று ஒடிஸாவில் உள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 17 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்ட இந்த ஏவுகணை ஒரு டன்னுக்கும் அதிகமான எடை கொண்டது. சராசரியாக 5,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்று தாக்கக்கூடியது. மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் அக்னி 5 ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 8.000 முதல் 10,000 கிலோ மீட்டர் வரை சென்று துல்லியமாகத் தாக்கக்கூடிய வகையில் அக்னி 6 ஏவுகணையை தயாரிக்கும் பணியில் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டுள்ளது.
 • Reviews


 • கூகுல் இந்தியா, நெய்பர்ஹூட் எனும் புது அப்ளிகேசனை பீடா வெர்சனில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அப்ளிகேசனில் அருகில் செல்ல வேண்டிய இடங்கள் குறித்து எளிமையாகக் கண்டுபிடிப்பதுடன் அந்த ஏரியா வாசிகளிடன் மேலதிக தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். உதாரணமாக அருகில் பூங்கா எங்கே உள்ளது எனத் தேடினால், அதன் முகவரி கிடைப்பதுடன் எந்த பூங்கா சிறப்பாக இருக்கும் அதன் நிறை குறைகள் என்ன போன்ற தகவல்களை அந்த ஏரியா வாசிகள் மூலமாக அறியலாம்.
 • Reviews


 • ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப்களின் பேட்டரித் திறனை நூறு மடங்கு அதிகரிக்கும் திறன் கொண்ட கருவி ஒன்றை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
 • Reviews


 • தமிழக பள்ளி மாணவி கண்டுபிடித்த “அனிதா சாட்” என்ற மினி சாட்டிலைட் இன்று விண்ணில் பாய்ந்தது. திருச்சி திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்தவா் வில்லட் ஓவியா. 12ம் வகுப்பு தோ்வெழுதியுள்ள ஓவியா கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு சோதனைகளுக்கு பின்னா் வளிமண்டலத்தில் கலந்துள்ள மாசு மற்றும் வெப்பமயமாதல் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளும் வகையில் குறைந்த எடை கொண்ட செயற்கை கோள் ஒன்றை வடிவமைத்துள்ளாா். கடந்த 2014ம் ஆண்டு மறைந்த முன்னாள் குடியரசுத் தவைா் அப்துல் கலாம் அவா்களால் தொடங்கி வைக்கப்பட்ட அக்னி இக்னைட் இந்தியா என்ற தனியாா் அமைப்பு 7ம் அறிவு என்ற பெயாில் விஞ்ஞானிகளை தோ்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த அமைப்புடன் இணைந்து இந்த மினி சாட்டிலைட் தயாாிக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • செவ்வாய் கிரகத்தில் குழி தோண்டி ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அமைப்பு இன்சைட் என்ற ரோபோட்டை அனுப்பி உள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு நாசா ஏற்கனவே ரோவர் அனுப்பி உள்ளது. இது செவ்வாய் மீது நகர்ந்து செல்லும் சிறிய வாகனம் ஆகும். இந்த ரோவர் அங்கு சில ஆராய்ச்சிகளை செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. ஆனால் இதன் வேகம் போதவில்லை என்பதால் தற்போது இன்சைட் ரோபோட் அனுப்பப்பட்டு உள்ளது. இதோடு இன்னும் சில வருடங்களில் செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா அமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு ''மார்ஸ்பீஸ்'' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வருடங்களில் தேனீக்கள் அனுப்பப்பட உள்ளது.இது செவ்வாய் கிரகத்தில் எளிதாக பறக்கும். இங்கு இருப்பதை விட அங்கு ஈர்ப்பு விசை குறைவு. இதை வைத்து ஆராய்ச்சி செய்வதும் மிகவும் எளிதாகும்.
 • Reviews


 • சிக்குன்குனியா நோயைக் கட்டுப்படுத்தும் புதிய மூலக்கூறுகளை உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரூர்கே ஐஐடி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஏடிஸ் வகை கொசு கடிப்பதால் டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. பல நாடுகளில் சிக்குன்குனியா நோய் பாதிப்பு அதிகம் இருந்த நிலையில், கடந்த 2005ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இந்த நோய் அதிகம் பரவ ஆரம்பித்தது.
 • Reviews