Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள் - State
 • பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ராஜினாமா செய்தார் .
 • Reviews


 • கேரள அரசு ஊழியர்கள் வரும் 31ம் தேதிக்குள் தங்களது ஆதார் அட்டை எண் அலுவலகங்களில் சமர்ப்பிக்காவிட்டால் அவர்களுக்கு 1ம் தேதி சம்பளம் வழங்கப்படாது என கேரள அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
 • Reviews


 • உத்திரபிரதேசத்தில் பெண்கள் மட்டுமே பயணிக்கும் வகையில் பிங்க் நிறப் பேருந்துகளை இயக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
 • Reviews


 • பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தற்க்காக இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு 50 லட்ச ரூபாய் மத்திய பிரதேச அரசு பரிசு வழங்கியுள்ளது.
 • Reviews


 • கொல்கத்தாவில் மேற்கு வங்க டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் (West Bengal Transport Corporation) பஸ்களில் சவாரி செய்யும் பயணிகள் Google Maps பயன்பாட்டில் நிகழ் நேர பஸ் தகவல்களைப் பெற முடியும்.
 • Reviews


 • இந்தியாவின் முதல் முறையாக அருணாச்சல பிரதேச மாநில செயலகம் முழுமையும் வயர்லெஸ் இணைப்புக்கு மாறியுள்ளது.
 • Reviews


 • ஒடிசாவில் 1817 ஆம் ஆண்டு பக்ஷி ஜகபந்து தலைமையின் கீழ் பைகா கலகம் (Paika rebellion) பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்கு எதிராக நடைபெற்றது. இதன் 200 வது ஆண்டு அனுசரிக்கப்பட்டது.
 • Reviews


 • மஹாநதியின் துணை நதியான காத்ஜோதியில் ஒடிசாவின் நீண்ட நெடுஞ்சாலை பாலம் "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சேது" 2.88 கிமீ நீளத்தில் கட்டப்பட்டது.
 • Reviews


 • தெலங்கானாவில் புத்தக சுமையை குறைக்கும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் அளிக்க தடை விதித்து அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 • Reviews


 • சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு விமான நிலையம் அமைக்கப்போவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
 • Reviews


 • மாதவிடாயின் முதல் நாளில் பெண்களுக்கு விடுமுறை அளித்து மாத்ருபூமி தொலைக்காட்சி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
 • Reviews


 • தெலுங்கானாவில், பொதுமக்களிடமிருந்து புகார் பெறும் திட்டமான "ஜனகிதா"(Janahitha) தொடங்கப்பட்டது.
 • Reviews


 • குண்டூரில் உள்ள ஆச்சார்யா நாகர்ஜூனா பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற 57 வது தேசிய இண்டர்-ஸ்டேட் சாம்பியன்ஷிப் போட்டியில் கேரளா 159 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றது.
 • Reviews


 • டி.ஆர்.ஜெலியாங் நாகாலாந்தின் புதிய முதலமைச்சராக ஆளுநர் பி.பி. ஆச்சார்யாவால் நியமிக்கப்பட்டார்.
 • Reviews


 • மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக, 'ஹமரி ஷால கைசி ஹோ'(Hamari Shala Kaisi Ho) மற்றும் 'சலா சித்தி கார்யக்ரம்' (Shala Siddhi Karyakram)ஆகிய திட்டங்கள் மத்தியப் பிரதேச அரசு பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
 • Reviews


 • உலக வர்த்தக மாநாடு நவம்பர் மாதம் கொல்கத்தாவில் நடைபெறும்.
 • Reviews


 • ஒடிசாவில் காணாமற்போன குழந்தைகளை காப்பாற்றுவதற்கான ஆபரேஷன் மஸ்கன்(Operation Muskan) மாநில போலீஸால் தொடங்கப்பட்டது.
 • Reviews


 • மத்திய பிரதேச அரசு, ஜோதிடர்களை வைத்து புற நோயாளி துறையை தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நோயாளிகளுக்கு ஜோதிடர்கள் மற்றும் குறிசொல்லுகிறவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.
 • Reviews


 • ஹரியானா, இந்தியாவில் முதன்முதலாக ஹைடெக் மற்றும் அதி நவீன அலங்கார மீன் குஞ்சு பொரிப்பகம் அமைக்க முடிவு செய்துள்ளது.
 • Reviews


 • முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் நினைவாகக் கேரளா திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்ட புதிய அருங்காட்சியகம் திறக்கப்படுகிறது.
 • Reviews


 • சமூகப் புறக்கணிப்பு ஒரு குற்றம் எனும் சட்டத்தை கொண்டுவரும் இந்தியாவின் முதல் மாநிலம் மகாராஷ்டிரா.
 • Reviews


 • அருணாச்சல பிரதேசத்திற்கு ரூ .51.30 கோடி முன் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • மகாராஸ்ட்ராவுக்குப் பிறகு இரண்டாவதாக டெல்லியில் குடிமக்களுக்கு தகவல் உரிமை உரிமை சட்டத்தை ஈ.ஆர்.டி.ஐ. மூலம் பதிவு செய்ய முடியும் .
 • Reviews


 • கிராமப்புற கூட்டுறவு சங்கங்களுக்குகான தேர்தல்களில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித் தகுதியை கொண்டுவந்த முதல் மாநிலமாக ராஜஸ்தான் திகழ்கிறது.
 • Reviews


 • பெண்களுக்கு உசி கருத்தடையை இலவசமாக வழங்கிய முதல் இந்திய மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது.
 • Reviews


 • உத்தரகண்ட் மாநிலம் 'சூப்பர் 30' என்ற புதுமையான கல்வித் திட்டமொன்றை மாநிலத்தின் உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தியுள்ளது.
 • Reviews


 • தெலங்கானாவில், ஹரிடா ஹராம்(Harita Haram) திட்டத்தின் கீழ் மூன்றாவது கட்டமாக ஒரு நாளில் 40 கோடி மரங்கள் நடப்படுகின்றன.
 • Reviews


 • மேகாலயா முதலமைச்சர் முகுல் சாங்க்மா LIFE (Livelihood Intervention and Facilitation of Entrepreneurship) என்ற திட்டத்தை தொடங்கினார்.
 • Reviews


 • அசாமில் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 44 பேர் இறந்துள்ளனர்.
 • Reviews


 • மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரம் மெட்ரோ ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘கிரஷர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • குடும்பக்கட்டுப்பாடு செய்பவர்களுக்கு 4ஜி போன் மற்றும் சேலை பரிசாக வழங்கப்படும் என்று ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
 • Reviews


 • கர்நாடகா அரசு, தனி மாநில கொடியை வடிவமைக்க ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
 • Reviews


 • எதிர்காலத்தில் தலைசிறந்த சர்வதேச விளையாட்டுகளை நடத்த, மாநில தலைநகரில் கலிங்கா சர்வதேச விளையாட்டு நகரத்தை அமைக்க உள்ளதாக முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார்.
 • Reviews


 • ஜி.எஸ்.டி-யின் தாக்கத்தை மதிப்பிட ஆலோசனை நிறுவனம் ஒன்றை நிர்ணயிக்க தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது.
 • Reviews


 • நெல் சாகுபடியைத் தவிர, நீர் குறைவாக தேவைப்படும் பயிர்களை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஹரியானா அரசாங்கம் வெகுமதி தொகை அளிக்கவுள்ளது.
 • Reviews


 • சத்தீஸ்கர் மாநிலம் இந்த ஆண்டு 8 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளது. இதற்காக, 'ஹரியார் சத்தீஸ்கர்' சிறப்பு பிரச்சாரத்தை ஜூலை 20 முதல் துவங்க உள்ளது.
 • Reviews


 • மாட்டுக்கறி தான் கொண்டு செல்கின்றனரா என்பதை போலீஸார் கண்டுபிடிக்க மும்பை தடயவியல் ஆய்வகம் புது கருவியை கண்டுபிடித்துள்ளது.
 • Reviews


 • சூரிய சக்தியால் இயங்கும் இந்தியாவின் முதல் ’ஏசி’ கழிவறை - மகாராஷ்டிர மாநிலம் மும்பை தாதர் பகுதியில் அரசுப் பேருந்து நிலையம் அருகே ஏசி கழிவறை திறக்கப்பட்டுள்ளது. அங்கு தானியங்கி சானிட்டரி நாப்கின் இயந்திரமும் உள்ளது.
 • Reviews


 • அம்மா உணவகம் போல் பெங்களூரில் இந்திரா கேண்டீன் தொடங்கப்படவுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
 • Reviews


 • ஜூலை 11 , உலக மக்கள் தினத்தன்று 'அன்டாரா'(Antara) என்ற புதிய குடும்ப நல திட்டத்தை மத்திய மற்றும் மஹாராஷ்ட்ரா அரசு இணைந்து பிரஹண்மும்பாய் முனிசிபல் கார்ப்பரேஷன் (BMC) இல் துவங்க உள்ளது.
 • Reviews