Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள் - தமிழ்நாடு
 • மண்வாசனை திட்டம்

  தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்கான 'மண்வாசனை' என்ற தமிழ்நாடு அறக்கட்டளையின் சிறப்புத் திட்டத்தை தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் தொடங்கிவைத்தார்.
 • Reviews


 • பயிர் காப்பீடு

  பிரதான் மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2016 – 17 ஆண்டில் அதிக காப்பீட்டுத் தொகை பெற்றதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பிரதான் மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ஏப்ரல் 2016ல் தொடங்கப்பட்டது இத்திட்டத்தின் கீழ் காரிப் பயிர்களுக்கு – 2 சதவிகிதமும், ராபி பயிர்களுக்கு 1.5 சதவிகிதமும் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படுகிறது.
 • Reviews


 • இந்தியாவில் முதலாவதாக செவிலியர் பட்டயப் பயிற்சியில் சேரும் மூன்றாம் பாலினத்தவராக, தமிழகத்தின் வேலூரைச் சேர்ந்த திருநங்கையான S. தமிழ்ச்செல்வி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர உள்ளார். இந்த முடிவானது மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் D. ஜெயச்சந்திரனின் பரிந்துரையின் அடிப்படையில் அமைந்துள்ளது.
 • Reviews


 • மூத்த குடிமக்களுக்கு சேவை மற்றும் வசதிகளை வழங்கும் சிறந்த மாவட்ட பஞ்சாயத்துக்கான “வயோஸ் ஸ்ரீத சம்மன் – 2018’ விருது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன் முன்னெடுத்துச் செல்லும் ‘இந்தியா-2047’ திட்டத்தின் ஒரு பகுதியாக 'இம்தாத் இந்தியா' என்ற தேசிய அளவிலான தகவல் மற்றும் சேவைகள் ஒருங்கிணைப்பு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை மக்களுக்கான அரசின் நலத் திட்டங்களைப் பற்றிய தகவல்களை வழங்குவது, அனைத்து குடிமக்களும் அரசின் பல்வேறு அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களை பெறுவதை உறுதி செய்வது, அனைவருக்கும் அரசின் நலத் திட்டங்களைப் பெறுவதற்கு உதவுவது 'இம்தாத் இந்தியா' நெட்வொர்க்கின் நோக்கம்.
 • Reviews


 • தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டம் 2018 - 2030

  தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன்கீழ், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் உருவாக்கப்பட்ட பேரிடர் மேலாண்மை தொலைநோக்குத் திட்டம் 2018 - 2030-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜப்பான் நாட்டின் சென்டாய் நகரில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் அடுத்த 15 ஆண்டுகளுக்கான பேரிடர் துயர் துடைப்புக்காக 4 இலக்குகள், 7 பரிந்துரைகளுடன் சென்டாய் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த கட்டமைப்பு அடிப்படையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்குத் திட்டம் உரு வாகியுள்ளது.
 • Reviews


 • தமிழகத்தில் முதன்முறை: கும்பகோணத்தில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்புகளை சீரமைக்க ரோபோட்

  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகராட்சியில் 2008-09 ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 5,309 மேன்ஹோல் எனப்படும் ஆளிறங்கும் குழாய்கள் மற்றும் 125.71 கிலோமீட்டர் நீளத்திற்கு குழாய் உள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக கும்பகோணம் நகராட்சியில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்புகளை சீரமைக்க ரோபோட் இயந்திரம் பரிசோதனை முறையில் இயக்கி வைக்கப்பட்டது.
 • Reviews


 • 2021ஆம் ஆண்டிற்குள் லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை

  லண்டன் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே தமிழ் மொழிக்கான துறை இயங்கி வந்தது. ஆனால் மாணவர் சேர்க்கை குறைந்ததால், 1995இல் இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை மூடப்பட்டது. 2021ஆம் ஆண்டிற்குள் தமிழ் இருக்கை நிறுவ வேண்டும் என்று, 54 கோடி ரூபாய் நிதி திரட்டும் பணியில் தமிழ் அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
 • Reviews


 • தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய நாள்;

  தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வலியுறுத்தி சங்கரலிங்கனார் சாகும் வரை உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தது, தமிழகத்தின் அழியாத தியாக வரலாறு. அதன் காரணமாக, 1967 ஜூலை 18 ஆம் தேதி சட்டப்பேரவையில், சென்னை மாகாணத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
 • Reviews


 • கீழடி அகழ்வாராய்ச்சி: மருத்துவத்தில் கொடிக்கட்டி பறந்த பழங்கால தமிழர்கள் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கீழடியில் கடந்த ஜுன் 2015ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை மூலம் பண்டைய தமிழர் நாகரிகம் குறித்த அகழாய்வு நடைபெற்றது. மூன்று கட்ட அகழாய்வில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அகழாய்வில், மருத்துவத்தில் பழங்கால தமிழர்கள் கொடிக்கட்டி பறந்ததற்கான பல ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டது.இதில், மருத்துவக் குறிப்பு எழுதி வைக்கப்பட்டுள்ள ஓடுகள், மருந்துகள் வைக்கப்படும் கிண்ணங்கள், தட்டுகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

  கீழடி அகழ்வாராய்ச்சி: மருத்துவத்தில் கொடிக்கட்டி பறந்த பழங்கால தமிழர்கள் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கீழடியில் கடந்த ஜுன் 2015ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை மூலம் பண்டைய தமிழர் நாகரிகம் குறித்த அகழாய்வு நடைபெற்றது. மூன்று கட்ட அகழாய்வில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அகழாய்வில், மருத்துவத்தில் பழங்கால தமிழர்கள் கொடிக்கட்டி பறந்ததற்கான பல ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டது.இதில், மருத்துவக் குறிப்பு எழுதி வைக்கப்பட்டுள்ள ஓடுகள், மருந்துகள் வைக்கப்படும் கிண்ணங்கள், தட்டுகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • மதுரையில் மாதிரி நியூட்ரினோ ஆய்வு மையம் செயல்படத் தொடங்கியது:

  மதுரை வடபழஞ்சியில் அமைக்கப்பட்ட மாதிரி நியூட்ரினோ ஆய்வு மையம் இன்று முதல் செயல்படத் தொடங்கியது.
 • Reviews


 • தமிழகத்தில் முதன்முறையாக மதுரையில் பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையம்

  பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையம் ரூ.5 கோடியில் மதுரையில் 10 ஹெக்டேரில் அமையவுள்ளதால், இதற்கு முதற்கட்டமாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான இடம் பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 • Reviews


 • உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றமும் (உத்தமம்) மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும், 17ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு, பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (ஜூலை 6) தொடங்கி நடைபெற்று வருகிறது. “அறிவுசார் தமிழ் தேடுபொறிகள்” என்ற தலைப்பில் ஜூலை 8ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், தமிழ் மென்பொருள் சார்ந்த 70க்கும் மேற்பட்டோர் ஆய்வுக் கட்டுரைகளைப் படிக்கின்றனர்.
 • Reviews


 • திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலவாசலில் வசித்து வருபவர் ஆசிரியர் செல்வகுமார் இவர் வானிலை தகவல்களை அனைத்துத் தரப்பினரிடமும் விரைவாகக் கொண்டு செல்லும் விதத்தில் 'நம்ம உழவன்' என்ற புதிய செயலியை ஜூலை 5, வியாழக்கிழமை முதல் தொடங்கியுள்ளார்.
 • Reviews


 • தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

  தமிழகத்தில், வருகின்ற ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் ஜூன் 5ஆம் தேதி அறிவித்திருந்தார். இந்நிலையில் அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
 • Reviews


 • டொரன்டோ, ஆக்ஸ்ஃபோர்டிலும் தமிழ் இருக்கைக்கு முயற்சி: தமிழ் இருக்கை குழுமம் தகவல்

  ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு தனி ஆய்வு இருக்கை அமைவதை ஹார்வர்டு தமிழ் இருக்கை குழுமம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. டொரன்டோ, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
 • Reviews


 • சாதி, வருமானச் சான்றிதழ்கள் பெற புதிய செயலி

  தேசிய மின் ஆளுகை திட்டத்தின் மூலம் புதிய மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுத் துறைகள் முதல் உள்ளாட்சித் துறைகள் வரை நாடு முழுவதும் மின் ஆளுகை மூலம் வழங்கப்பட்டுவரும் சேவைகளை ஒரே தரவு தளத்தின் கீழ் இந்த செயலி மூலம் பெறலாம். தமிழ்நாடு மின் ஆளுகை முகமையின் மூலம் மின்மாவட்ட திட்டத்தின் கீழ் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டுவருகின்றன. முதல் கட்டமாக, வருவாய்த் துறையைச் சேர்ந்த சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் பிறப்பிட, இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை UMANG செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் செல்போன்களில் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து சான்றிதழ்களைப் பெற முடியும். முதல் கட்டமாக, இதன்மூலம் 20 சேவை சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • டி.கே.பட்டம்மாள் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகள் பங்கேற்கும் ‘சுதந்திர கீதம்’

  கர்நாடக இசைப்பாடகி டி.கே.பட்டம்மாளின் 100-வது பிறந்தநாளை ஒட்டி குழந்தைகளிடையே நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில், தேசபக்தி பாடல்களைப் பாடும் ‘சுதந்திர கீதம்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி ஆகஸ்ட் 15-ம் தேதி நடக்கிறது. சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
 • Reviews


 • மோனோ ரயில் திட்டம் ரத்து

  சென்னையில் ரூ.6,402 கோடியில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த மோனோ ரயில் திட்டம் கைவிடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைத் தவிர வேறு யாரும் விரும்பவில்லை. அதுமட்டுமின்றி இது சாத்தியமில்லாத திட்டமும் ஆகும். 2001 ஆம் ஆண்டிலிருந்தே மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தீவிரமாக முயன்று வருகிறது. சென்னையில் இடநெருக்கடி காரணமாகவும், மெட்ரோ ரயில் வழித்தடங்கள் நீட்டிப்பு பணி காரணமாகவும், ஒரே நேரத்தில் இரண்டு ரயில் திட்டங்களை நடைமுறையில் செயல்படுத்த முடியாது என்பதாலும், தற்போது மோனோ ரயில் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
 • Reviews


 • கும்பகோணம் சுவாமிமலை சிலைகளுக்குப் புவிசார் குறியீடு

  இது சோழர்கால பாணியில் ஐம்பொன் சிலைகள் செய்யப்படுவதற்குக் கிடைத்த அங்கீகாரமாகும். தமிழகத்தில் தஞ்சாவூர் ஓவியம்;, தஞ்சாவூர் தட்டு, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, மதுரை சுங்குடி புடவை, திருநெல்வேலி அல்வா உட்பட 30 பொருட்களுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு கிடைத்துவிட்டது.புவிசார் குறியீடு சட்டம் 1999ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் உற்பத்தியாளர்களுக்கான உரிய அங்கீகாரமும், குறிபிட்ட பொருட்களுக்கான மதிப்பும் மக்கள் மத்தியில் அதிகரித்ததோடு, சர்வதேச வர்த்தகத்தில் புவிசார் குறியீடுகள் நமக்கான சட்டப் பாதுகாப்பினை உறுதி செய்கிறது.
 • Reviews


 • தமிழக கிராமத்துக்கு சாலை அமைக்க சச்சின் டெண்டுல்கர் நிதியுதவி

  தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோல்டன் சிட்டி பகுதியில் எளம்பலூரில் சாலை அமைக்க ரூ. 21.70 லட்சம் நிதியுதவியை முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர், கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் வழங்கியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஊரகப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் யார் வேண்டுமானாலும், நாட்டின் எந்தப்பகுதி கிராமத்துக்கும் நகரத்துக்கும் நிதி உதவி வழங்கலாம். அந்த அடிப்படையில் சச்சின் டெண்டுல்கர் பெரம்பலூர் மாவட்ட கிராமத்துக்கு வழங்கியுள்ளார்.
 • Reviews


 • குறள் அமுது- ஆயிரத்தில் ஒருவன்’ இசை நாட்டிய நாடக நிகழ்ச்சி

  பாரத் பண்பாட்டு மையம் சார்பில், அதன் தலைவரும், தமிழ் வளர்ச்சித்துறை முன்னாள் செயலருமான இராசாராம் உருவாக்கிய ‘குறள் அமுது- ஆயிரத்தில் ஒருவன்’ இசை நாட்டிய நாடக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று, இந்திய பண்பாட்டு மைய இணையதளத்தை தொடங்கி வைத்தார். இராசாராம் எழுதிய ‘பகவத் கீதையில் வெற்றியின் ரகசியம்’ என்ற நூலை வெளியிட, இந்தியாவுக்கான ஜப்பான் நாட்டு தூதர் கோஜிரோ உசியாமா பெற்றுக்கொண்டார். ஒரு மனிதன் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் எல்லா அம்சங்கள் குறித்தும் திருக்குறளில் கூறப்பட்டுள்ளது. அது, நல்லாட்சி, திட்டமிடல், நிதி மற்றும் குடிநீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை எடுத்துரைக்கிறது என்று ஆளுநர் கூறினார்.
 • Reviews


 • ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் திருநங்கை சத்தியஸ்ரீ சர்மிளா. பரமக்குடியில் பள்ளிப் படிப்பையும், சேலம் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்துள்ள அவர் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பொறுப்பேற்றுள்ளார். இதன் மூலம் வழக்கறிஞராகப் பொறுப்பேற்கும் முதல் திருநங்கை எனும் பெருமை இவருக்குக் கிட்டியுள்ளது.
 • Reviews


 • சென்னை ஆவடியில் 105 கோடி ரூபாய் மதிப்பிலான சூரிய மின்சக்தி ஆலையை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.
 • Reviews


 • சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த குருசாமி என்ற பொறியியல் பட்டதாரி செல்போன் மூலம் வாக்களிக்கும் செயலியை கண்டுபிடித்துள்ளார்.
 • Reviews


 • அபாகஸ் கணிதத்தில் சிறந்து விளங்கியதற்காக தமிழ் மாணவர் ஆதித்ய ஷர்மாவுக்கு, ஷார்ஜா அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • தனியார் இன்டர்நெட் மையங்களில் இம்மாத இறுதியில் இ – சேவை மையங்களை துவங்க தமிழ்நாடு அரசு கேவில், ‘டிவி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
 • Reviews


 • உலகின் பழமையான மொழிகளாக ஹீப்ரூ, கிரேக்கம், சமஸ்கிருதம், லத்தீன், சீனம் போன்ற மொழிகள் மட்டுமே இருந்தன. இந்த வரிசையில் நமது செந்தமிழும் இடம்பிடித்த நாள் இன்று.
 • Reviews


 • தமிழகத்தில், இலவச நாட்டு கோழி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
 • Reviews


 • தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 5) அறிவித்தார். உலகச் சுற்றுச்சூழல் தினமான இன்று (ஜூன் 5) முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பால், எண்ணெய், மருத்துவம், தயிர் போன்றவை தவிர்த்து வேறு எதற்கும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தத் தடை விதிப்பதாகத் தெரிவித்தார்.
 • Reviews


 • தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் இன்று (ஜூன் 4) விசாரணையைத் தொடங்கியது.
 • Reviews


 • சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய நீதிபதிகளை(குமாரி பி.டி ஆஷா, நிர்மல் குமார், சுப்பிரமணியம் பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சரவணன்) நியமிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
 • Reviews


 • பொதுமக்கள் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள இரண்டு புதிய மொபைல் அப்ளிகேஷன்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிமுகம் செய்தார். KAVALAN Dial 100, KAVALAN SOS என்ற புதிய மொபைல் ஆப்ஸ் மூலம் பொதுமக்கள் காவல்துறையை விரைவில் தொடர்புகொண்டு அவசர கால உதவியைப் பெறலாம். இந்த ஆப் மூலம் எளிதாகவும் நேரடியாகவும் மாநில தகவல் தலைமை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு பேசலாம்.
 • Reviews


 • நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மீனவர்கள் புஷ்பராஜ் மற்றும் குமார் ஆகிய இருவர் கொள்ளிடம் ஆற்றுப் பாலம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். மீன்பிடிக்கும் போது அவர்களது வலையில் கனமான பொருள் சிக்கியது போன்று இருந்ததால், அவர்கள் வலையைக் கரை நோக்கி இழுத்துச் சென்று பார்த்தனர். அதில், சுமார் நான்கு கிலோ எடை கொண்ட ஐம்பொன்னாலான சிவன் சிலை ஒன்று இருந்தது. முக்கால்அடி உயரமுள்ள அந்தச் சிலை, சிவன் புலி தோல் மீது அமர்ந்தும், பின்புறம் நந்திசிலை மற்றும் உடுக்கை, சூலம் ஆகிய அமைப்பும், மரக்கிளையில் இரண்டு மயில்கள் அமர்ந்திருப்பது போன்று இருந்தது.
 • Reviews


 • சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்குப் புதிய துணைவேந்தராக டாக்டர் வி.முருகேசன் என்பவரை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.
 • Reviews


 • காவிாி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவராக மத்திய நீா்வளத்துறை செயலாளா் யு.பி.சிங் நியமிக்கப்பட்டுள்ளாா். விரைவில் நிரந்தரத் தலைவா் நியமிக்கப்படுவாா் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • தமிழக பொது சுகாதாரத் துறை சார்பில் மகப்பேறு மற்றும் சிசு தொடர் கண்காணிப்பு மதிப்பீட்டுக்கான பிக்மி (Picme ) என்ற இணையதளத்தைத் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. பேறு காலத்திலும், குழந்தை பிறப்புக்குப் பின்னரும் தாய்-சேய் பராமரிப்பை முழுமைப்படுத்தும் வகையில், அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. தற்போது, பிக்மி என்ற இணையதளத்தைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்மூலம், தமிழகம் முழுவதும் உள்ள கருவுற்ற பெண்கள் மற்றும் பிறக்கும் குழந்தைகளின் சுகாதாரத்தை முழுமையாகக் கண்காணித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகள் அளிக்கப்படும்.
 • Reviews


 • தமிழ்நாட்டு அரசின் பலத்த சட்டப்போராட்டம், தமிழக கட்சிகள், மக்களின் கடுமையான போராட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு அமைத்து நேற்று (ஜூன் 1 ) அரசிதழில் வெளியிட்டது.
 • Reviews


 • தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் இனி, டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் கீழ் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆய்வு மையம், பொன்னேரியிலுள்ள மீன்வளத் தொழில்நுட்பக் கழகம், மாதவரத்திலுள்ள மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம் ஆகியவையும் தஞ்சாவூர் மற்றும் கன்னியாகுமரியில் மீன்வளப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்தில் மீன் வளர்ப்பு, மீன்வள உயிரியல், மீன் பிடித்தல், மீன்வளப் பொறியியல் உள்ளிட்ட மீன்வளம் சம்பந்தப்பட்ட பல்வேறு பாடப் பிரிவுகளின் கீழ் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பெலிக்ஸ் இருந்து வருகிறார்.
 • Reviews


 • காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துகான 2 உறுப்பினர்களின் பெயர்களை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. தற்போது தமிழகத்தின் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றி வரும் எஸ்.கே. பிரபாகர், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கான உறுப்பினராக தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. அதேபோல நீர்வளத்துறை தலைமை பொறியாளராக பணியாற்றி வரும் செந்தில் குமாரை காவிரி நீர் ஒழுங்காற்று குழு உறுப்பினருக்காக தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு மொத்தம் 10 உறுப்பினர்களின் தேவை உள்ளது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி என ஒவ்வொரு மாநிலங்களிலிருந்து ஒருவர் உறுப்பினராக தேர்வு செய்யப்படவுள்ளார்கள்.
 • Reviews