Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள் - தமிழ்நாடு
 • குரூப் 1 தேர்வு எழுதுவோருக்கான வயது உச்ச வரம்பு 37 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 • Reviews


 • ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில், 77 கிலோ பளு தூக்கும் பிரிவில் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள முதலமைச்சர் பழனிச்சாமி, 50 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையையும் அறிவித்துள்ளார்.
 • Reviews


 • இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 2 ,574 அரசுப் பள்ளிகளில், 238 அரசுப் பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்சசி பெற்று சாதனை படைத்தனர். இதற்கு மாறாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, மாசிநாயக்கனப்பள்ளியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் ஒருவர்கூடத் தேர்ச்சி பெறவில்லை.
 • Reviews


 • தமிழகம் முழுவதும் பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையைவிட அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் நலத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான புகார்களை தொழிலாளர் துறை அறிமுகப்படுத்திய ‘TN-LMCTS’ என்ற செயலி மூலம் தெரிவிக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • தமிழகத்தில் கீழடி, கொற்கை, ஆதிச்சநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் அருங்காட்சியகம் அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்’ என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
 • Reviews


 • தமிழகத்தில் மூடப்பட்ட ரயில்வே பள்ளிகளை மீண்டும் திறக்க குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமைச் சட்ட ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 • Reviews


 • ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 122ஆவது மலர் கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 18) காலை 9 மணிக்கு தொடங்கிவைத்தார்.
 • Reviews


 • சென்னையில் உள்ள ஐசிஎஃப் ரயில் பெட்டி தயாரிப்பு ஆலை சார்பாக ஆர்பிஎஃப் கவாத் மைதானத்தில் மே 17 முதல் 19 வரை மூன்று நாட்கள் ரயில்பெட்டி கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் உலகின் புகழ்பெற்ற ரயில் பெட்டி மற்றும் சாதனத் தொழிற்சாலைகள் தங்களது உற்பத்திப் பொருட்களையும், தொழில்நுட்பத்தையும் வைத்துள்ளன. 10க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட காட்சியாளர்கள் பங்கேற்று, இக்கண்காட்சியில் புதுமைப் படைப்பு மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தும் உற்பத்திப் பொருட்களை ரயில் பெட்டி உற்பத்தியாளர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்தியாவிலேயே முதன் முறையாக நடைபெறும் ரயில்பெட்டி கண்காட்சியை நேற்று (மே 17) ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கிவைத்தார்.
 • Reviews


 • தமிழகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை களப்பணி மூலம் கண்டறிந்து, அவர்களுக்கு சிகிச்சையளித்து மீண்டும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கும் புதிய திட்டம், நடப்பாண்டு முதல் தொடங்கப்படவுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 • Reviews


 • தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டுக் குழு என்ற புதிய அமைப்பு தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அணைகளில் உள்ள நீரின் அளவைக் கண்காணித்தல், புதிய திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை இந்தக் குழு மேற்கொள்ளும். பொதுப்பணித் துறையின் ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் எஸ்.எஸ்.ராஜகோபால் தலைமையிலான இந்தக் குழுவில், ஓய்வுபெற்ற சிறப்பு தலைமைப் பொறியாளர் ஆர்.இளங்கோவன் துணைத் தலைவராகவும், ஓய்வுபெற்ற நிர்வாகப் பொறியாளர்கள் ராம.பழனியப்பன், பி.வி.சீனிவாசராவ் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 • Reviews


 • சென்னையில் மே 15ஆம் தேதியன்று, மின்சக்தித் துறையில் பெண் தொழில்முனைவோருக்கான திட்டமான பவர்டு (POWERED) தொடங்கப்படவுள்ளது. டி.எஃப்.ஐ.டி இந்தியா மற்றும் ஷெல் ஃபவுண்டேஷன் ஆகிய நிறுவனங்கள் சோன் ஸ்டார்ட் அப்ஸ் ஃபார் இந்தியா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இத்திட்டத்தை மும்பையில் ஏப்ரல் 25ஆம் தேதியன்று துவங்கின. பிறகு, இத்திட்டக் குழு அகமதாபாத், டெல்லி, டேராடூன் ஆகிய இடங்களுக்கும் சென்று திட்டத்தைப் பரப்பி வருகிறது.
 • Reviews


 • தகுந்த அடமானச் சொத்துக்கள் இல்லாமல் மாணவர்கள் யாருக்கும் நான்கு லட்சத்திற்கு அதிகமான கல்விக் கடன் வழங்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 • Reviews


 • போக்குவரத்து விதியை மீறினால் அதற்கான அபராதத்தை 48 மணி நேரத்தில் கட்ட வேண்டும். அப்படிக் கட்ட தவறினால் வீட்டுக்கே போலீஸார் வந்து சம்மன் அளிப்பார்கள் என்று போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.
 • Reviews


 • திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்தை மதுரை போக்குவரத்துக் கழகத்துடன் இணைத்து தமிழக அரசு நேற்று (மே 11) உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சென்னை, மதுரை, நெல்லை, கோவை, கும்பகோணம், சேலம் என 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், போக்குவரத்துக் கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 26 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
 • Reviews


 • கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் தமிழகம்தான் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 • Reviews


 • அமெரிக்காவைச் சேர்ந்த மினசோட்டா தமிழ்ச் சங்கம் தமிழிசைப் பாடகர்களுக்கான புஷ்பவனம் குப்புசாமிக்கு "தமிழிசை வேந்தர்" பட்டமும் அவரது மனைவி அனிதா குப்புசாமிக்கு "மக்களிசை குயில்" பட்டமும் வழங்கி கௌரவித்துள்ளது.
 • Reviews


 • ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் ஏப்ரல் 4 முதல் 15-ந் தேதி வரை நடைபெற்ற 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த 5 விளையாட்டு வீரர்கள், ஒரு வீராங்கனை மற்றும் அவர்களது 8 பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு 4 கோடியே 44 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தலைமை செயலகத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பாவுக்கு 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பாராட்டினார்.
 • Reviews


 • சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தென்னிந்தியாவில் முதல் முறையாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
 • Reviews


 • கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என்று அறிவிக்கும் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 • Reviews


 • தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஐஏஎஸ் அதிகாரி சோ.அய்யர். தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் முறைமன்ற நடுவர் பதவிக்கு கடந்த 2015 ஏப்ரல் மாதம் நியமனம் செய்யப்பட்டார். அவருக்குத் தற்போது மேலும் மூன்று ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கித் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 • Reviews


 • கல்லூரிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் அரசியல் விவாதங்கள் நடத்த அனுமதிக்கக்கூடாது என கல்லூரிகளுக்கான கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக கல்லூரி கல்விக்கான இயக்குநரகத்தின் இயக்குநர் ஜே.மஞ்சுளா தமிழகத்திலுள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
 • Reviews


 • தமிழகத்தில் சிக்கன்குனியா மற்றும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய் பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தென்மாவட்டங்களில் சிக்கன்குனியா நோய் பாதிப்பில் திண்டுக்கல் மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
 • Reviews


 • காய்கறிகள், பழங்கள் மற்றும் எளிதில் வீணாகிவிடக்கூடிய பொருட்களுக்கான 400 கோடி ரூபாய் மதிப்பிலான நவீன விநியோக மேலாண்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அரசு -தனியார் கூட்டணிக்கும், கூட்டு முயற்சித் திட்டங்களை உருவாக்கவும் தமிழக அரசு ஆய்வு செய்துவருகிறது. ரூ.398.75 கோடி மதிப்பிலான இத்திட்டம் பத்து மாவட்டங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பதப்படுத்துதல், சுத்தப்படுத்துதல், தரப்படுத்துதல் போன்ற அம்சங்களுடனான 58 முதல்நிலைப் பதப்படுத்துதல் மையங்களை அமைப்பதும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
 • Reviews


 • சென்னை மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவராக ஒலிம்பியன் பாஸ்கரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 • Reviews


 • ஆவின் நிர்வாகம் சார்பில் 24 மணி நேரம் செயல்படும் பால் விற்பனை மையம், புதிய நவீன பாலகங்கள் மற்றும் புதிய பொருட்கள், புதிய செயலிகள் ஆகியவற்றை பால்வளத்துறை அமைச்சர் ‘ராஜேந்திர பாலாஜி’ நேற்று தொடங்கி வைத்தார்.
 • Reviews


 • காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு(சவுரவ் கோஷல் மற்றும் ஜோஸ்னாவுக்கு) தலா ரூ.30 லட்சத்தை பரிசளிக்க முதல்வர் ‘எடப்பாடி பழனிச்சாமி’ உத்தரவிட்டுள்ளார்.
 • Reviews


 • தமிழகத்தில் நுகர்வோரிடம் பொட்டல பொருட்களை அதிக விலைக்கு விற்றாலோ, பெட்ரோல் பங்க்களில் பெட்ரோல் மற்றும் டீசல் அளவு குறைந்தாலோ ‘TN-LMCTS’ என்ற செயலி மூலம் புகார் அளிக்கலாம் என தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.
 • Reviews


 • தலித்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் நிகழும் மாநிலங்களில் தமிழகம் பத்தாவது இடத்தில் இருப்பதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே தெரிவித்துள்ளார்.
 • Reviews


 • சட்டவிரோதமான கருக்கலைப்பு செய்யும் போலி மருத்துவர்கள் மீது கொலை வழக்கு தொடர காவல்துறைக்குத் தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. போலி மருத்துவர்கள் மற்றும், சட்ட விரோத கருக்கலைப்புகளை தடுக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு தனியார் மருத்துவமனைகள் (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2018, கடந்த மாதம் தமிழக சட்டப் பேரவையில் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் படி மருத்துவ சேவைகள் இயக்குநரகத்தின் உரிமம் பெற்றுதான் தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்கள் தொடங்க வேண்டும். அதன்படி தற்போது யார் வேண்டுமானாலும் கிளினிக் அல்லது கார்ப்பரேட் மருத்துவமனைகளைத் தொடங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 • Reviews


 • சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய தமிழகத்தில் முதல் மருத்துவமனையாக ராமநாதபுரம், அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே தற்போது, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. முதன்முறையாகத் தமிழகத்தில் ராமநாதபுரம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் தமிழகத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.
 • Reviews


 • காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் தமிழகத்தில் முதல் முறையாக வரும் 11ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை ராணுவ கண்காட்சி நடைபெறுகிறது. இந்தத் தொழில் காட்சி, உள்நாட்டு ராணுவ தளவாடங்களின் உற்பத்தித் திறன் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கத்தோடு நடைபெறுகிறது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • விவசாயிகளுக்கு உதவும் வகையில் `உழவன்' என்னும் மொபைல் செயலியைத் தமிழக அரசு இன்று (ஏப்ரல் 7) அறிமுகம் செய்துள்ளது. இந்த 'உழவன்' மொபைல் செயலி மூலம் வேளாண்மை திட்டங்களின் மானிய விவரங்கள், பயிர்காப்பீடு விவரங்கள் குறித்து விவசாயிகளுக்கு நேரடியாக அறிவிக்கப்படும். மேலும் டிராக்டர், பவர் டில்லர், பசுமைக்குடில் போன்றவற்றுக்கு மானியம் பெற முன்பதிவு செய்து கொள்ள முடியும். அதேபோல், தட்பவெட்ப நிலை குறித்த தகவல்களும் இந்தச் செயலியில் அறிவிக்கப்படும்.
 • Reviews


 • இந்தியாவில் தமிழகம் சுகாதாரத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது. டெங்கு பாதிப்பில் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகத்தில்தான் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
 • Reviews


 • பொது இடத்தில் தேசியக் கொடியை எரித்தல் மற்றும் சேதப்படுத்துவோருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனச் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
 • Reviews


 • தமிழகத்தில் 20 நிமிட இலவச அம்மா வைஃபை சேவை இன்று(ஏப்ரல் 5) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. தமிழகத்தில், முக்கியப் பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், வணிக வளாகங்கள் போன்ற 50 இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும் . அதன்படி, முதல் கட்டமாகச் சென்னை, மெரினா உழைப்பாளர் சிலை, மதுரை, திருச்சி, சேலம், கோவை ஆகிய பேருந்து நிலையங்கள் என, ஐந்து இடங்களில் இன்று, வைஃபை சேவை செயல்பாட்டிற்கு வருகிறது. முதல், 20 நிமிடங்கள் வரை இந்த சேவையை இலவசமாகப் பயன்படுத்தலாம். அதன் பின், ஒரு மணி நேரத்துக்கு, 10 ரூபாய் வீதம், இரண்டு மணி நேரம் இந்த சேவையைத் தொடர முடியும்.
 • Reviews


 • தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து, அவர்தம் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் வழங்கப்படும் ‘தமிழ்ச் செம்மல் விருது’ எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்கு அளிக்கப்படவிருக்கிறது.
 • Reviews


 • தமிழக அரசு சார்பில் காவலர் வாரிசுகளுக்கு வழங்கப்படும் 10 சதவிகித இட ஒதுக்கீடு முறை சட்ட விரோதமானது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. 2001ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா, காவல்துறையினரின் மன உறுதியை அதிகரிக்கவும், விசுவாசம் மற்றும் நேர்மையை ஊக்கப்படுத்தவும் அவர்களுடைய வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு முறையைக் கொண்டு வந்தார்.
 • Reviews


 • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஊழியர்களுக்கான தினசரி ஊதியம் தற்போதுள்ள 205 ரூபாயிலிருந்து 224 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
 • Reviews


 • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் தினக்கூலி 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஏரிகள், ஆறுகள்,வாய்க்கால்களைத் தூர் வாருதல், குளம் வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்ட தினக்கூலி 205 ரூபாயில் இருந்து 224 ஆக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 • Reviews


 • கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் தமிழக முதல்வர் இந்தியாவின் முதல் பூச்சி மியூசியத்தை திறந்துவைத்தார்.
 • Reviews