Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள் - தமிழ்நாடு
 • விண்வெளி தர லித்தியம்-அயன் கலன்கள் உற்பத்திக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் – பாரத் மிகுமின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
 • Reviews


 • எதிர்வரும் மே மாதம் 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை காஞ்சிபுரத்தில் உலகத் தமிழ் சங்கங்களின் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து 375 தமிழ் சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன. இதில், 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 • Reviews


 • சென்னை நேப்பியர் பாலம் மற்றும் அண்ணா நினைவிடம் அருகே போக்குவரத்து விதிகள் மற்றும் குறியீடுகள் குறித்து விளக்கும் வகையில் ரூ.1 கோடியே 85 லட்சம் செலவில் போக்குவரத்து சிறுவர் பூங்கா மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட உள்ளது.
 • Reviews


 • மாணவர்களின் கண் பார்வை திறனை பாதிக்காத வகையில் கரும்பலகையில் பெரியதாக எழுத வேண்டும் என ஆசிரியர்களுக்குப் பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
 • Reviews


 • தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளும், தேசிய கட்டட விதிகளின்படி கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 • Reviews


 • வரலாற்றில் முதன் முறையாக சென்னை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி முகாமில் இரண்டு பெண் அதிகாரிகள் சிறப்பு முதலிடம் பிடித்துள்ளனர்.
 • Reviews


 • உலக மகளிர் தினத்தை முன்னிட்டுத் தென்னக ரயில்வே, சேலம் டவுன் ரயில்வே நிலையத்தை, மகளிர் ரயில்வே நிலையமாக மாற்றும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
 • Reviews


 • சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து, தெற்கு ரயில்வே சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்தது. அதன்படி, 12654 என்ற எண் கொண்ட மலைக்கோட்டை விரைவு ரயிலில்(Rockfort Express) பெண் பரிசோதகர்கள் மட்டும் பணியாற்றி உள்ளனர். மேலும் தெற்கு ரயில்வேயில் முதல் முறையாக மலைக்கோட்டை விரைவு ரயிலில் பெண் ரயில் கேப்டனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் மலைக்கோட்டை விரைவு ரயில், முழுவதுமாக பெண் அதிகாரிகளால் இயக்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் ரயில்.
 • Reviews


 • மாணவர்களுக்கு கல்வி மற்றும் வழிகாட்டல் பற்றிய தகவல் அளிக்க தமிழ்நாடு அரசு இலவச 24 மணிநேர ஹெல்ப்லைன்(14417 ) சேவையை வழங்கியுள்ளது.
 • Reviews


 • கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 18,775 இடங்களுக்கு ஐந்து கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படும் எனக் கூட்டுறவுத் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
 • Reviews


 • யூ ட்யூப் பயன்படுத்துவதில் தமிழகம் உலகில் மூன்றாம் இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • காஞ்சி சங்கர மடத்தின் 69ஆவது சங்கராச்சாரியாராக இருந்த ஜெயேந்திரர் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி காலமானார். இந்த நிலையில் மடத்தின் மரபுகளின்படியும், நடைமுறைகளின்படியும், அவருக்கு அடுத்த இளையவரான விஜயேந்திரர் அடுத்த சங்கராச்சாரியராக - மடாதிபதியாகப் பொறுப்பேற்றார் என்று சங்கர மடம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
 • Reviews


 • சென்னையில் முதன் முறையாக ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மத்திய அரசு சார்பில் பாதுகாப்புக் கண்காட்சி நடைபெறவுள்ளதாக இந்தியப் பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்புக் கண்காட்சி இந்தியா 2018 என்ற பெயரில் காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தலில் கண்காட்சி நடைபெறவுள்ளது. இது உலகின் மிகப் பெரிய நிகழ்ச்சியாக அமைய உள்ளது. கண்காட்சியில் பங்கேற்க அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேல், கொரியா, ஸ்வீடன் உள்ளிட்ட 42 நாடுகள் உறுதியளித்துள்ளன.
 • Reviews


 • உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த, உணவுப் பாதுகாப்பு ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. உணவுப் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வாசுகி நியமிக்கப்பட்டுள்ளார்.
 • Reviews


 • அரசுப் பணிகளில் பெண்கள், விதவைகள், முன்னாள் ராணுவத்தினருக்கு வழங்குவது போல, மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வயது வரம்பில் சலுகை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 • Reviews


 • உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான ரத்தினவேல் பாண்டியன் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானர். மண்டல் கமிஷன் பரிந்துரை அடிப்படையில், மத்திய அரசுப் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு அளிக்கப்பட்ட 27 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியவரும் இவரே. ரத்தினவேல் பாண்டியன் “My Life Journey A to Z” என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதியிருந்தார்.
 • Reviews


 • திருமணப்பதிவுக்கு மணமக்களின் மருத்துவ தகுதிச் சான்று கட்டாயம் என அறிவிக்கக் கோரிய மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. .
 • Reviews


 • தமிழகத்துக்கு நேற்று வந்த பிரதமர் மோடிக்கு, சோழர்களின் ஆட்சிக்காலத்தைப் பறைசாற்றும் ‘சோழனாமிக்ஸ்’ என்னும் ஆங்கிலப் புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பரிசளித்தார்.
 • Reviews


 • தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் 500 பேருக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சிறப்புப் பயிற்சியை வழங்குகிறது. தமிழகத்தில் 7 அரசுப் பள்ளிகளையும் தத்தெடுக்கிறது. இது தொடர்பாக இன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிகாரி மணீஷ் பிரகாஷ், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்தார். சிறப்புப் பயிற்சிக்கான ஒப்பந்தம் இரு தரப்பிலும் கையெழுத்தானது.
 • Reviews


 • தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்துவந்த ராஜேஷ் லக்கானி திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சத்யபிரதா சாஹூ புதிய அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 • Reviews


 • அம்மா அறக்கட்டளை சார்பாக நடமாடும் மருத்துவ வாகன சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கிவைத்தார்.
 • Reviews


 • குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் இன்று (பிப்ரவரி 19) முதல் ஆறு நாள்கள் வரை சென்னையில் நடைபெற உள்ளது.ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி, அறிவுசார் வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஒரு நுண்ணூட்டச் சத்தாக வைட்டமின் ஏ விளங்குகிறது. வைட்டமின் ஏ திரவம் வழங்குவதன் மூலம் பார்வையின்மை தடுக்கப்படுகிறது.
 • Reviews


 • தமிழகத்தில் 318 அரசு பள்ளிகளில் இலவச வைஃபை வசதி செய்து தரப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
 • Reviews


 • காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் இந்தியாவின் முதல்தர பல்கலைக்கழகமாகத் தேர்வு செய்யப்பட்டு, தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளது.
 • Reviews


 • தமிழகத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்குத் தனி அதிகாரியாக வி.அருண்ராய் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
 • Reviews


 • தமிழகத்தில் 2022ஆம் ஆண்டுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 • Reviews


 • குழந்தைகள், முதியோர்களின் நலனைக் கருத்தில்கொண்டு பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளையும் பெரிய ஸ்பீக்கர்களையும் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.
 • Reviews


 • சென்னையில் போக்குவரத்து போலீசார் சீருடையில் கேமரா பொருத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தத் திட்டம் டெல்லி, குஜராத், கேரளா, ஆந்திரப் பிரதேசம்,மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 • Reviews


 • டெல்லியில் இருக்கும் தமிழக அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு இல்லத்துக்கு வைகை இல்லம், பொதிகை இல்லம் என்று புதிய பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. டெல்லி சாணக்யபுரியில் 1962ஆம் ஆண்டு தமிழ்நாடு இல்லம் முதன்முதலாக அமைக்கப்பட்டது.
 • Reviews


 • உணவின் தரத்தை பாிசோதிக்கவும், மிச்சமாகும் உணவை சேமிக்கவும் தமிழகத்தில் பிரத்யேக வாகனத்தை சுகாதாரத்துறை அமைச்சா் விஜய பாஸ்கா் தொடங்கி வைத்தாா்.
 • Reviews


 • உடன்குடி அனல் மின் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் மின் மிகை மாநிலமாகத் திகழுவதாகப் பெருமிதத்துடன் கூறினார்.
 • Reviews


 • சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், தமிழகத்தின் முதல் தோல் மற்றும் திசுக்களுக்கான வங்கி தொடங்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • இங்கிலாந்து நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக வரும் ஜனவரி 17ஆம் தேதி பொங்கல் விழா நாடாளுமன்ற வளாகத்திலே கொண்டாடப்பட இருக்கிறது.
 • Reviews


 • திருச்சி மாவட்டம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
 • Reviews


 • மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “நாடு முழுவதும் உயர் கல்வியில் சேர்பவர்கள் பட்டியலில் தமிழகம் 46.9% முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் உயர் கல்வியில் சேர்வதில் 45.6% பெண்களும் 48.2% ஆண்களும் உள்ளனர்.
 • Reviews


 • குஜராத்தில் நடந்த தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், ஈரோட்டைச் சேர்ந்த பழங்குடி மாணவனான எம். சின்னக்கண்ணனுக்கு இளம் விஞ்ஞானி விருது கிடைத்துள்ளது.
 • Reviews


 • நியூட்ரினோ திட்டத்துக்கு புதிய சுற்றுச்சூழல் ஆய்வுச்சான்று சமர்பிக்கப்பட்டால் அனுமதி வழங்கப்படும் என மக்களவையில் அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டம் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
 • Reviews


 • 171 வது கர்நாடக இசைத் திருவிழா திருவையாரில் துவங்கியது .
 • Reviews


 • தமிழகத்தின் நீர்ப் பாசனத் திட்டத்தை நவீனப்படுத்த, உலக வங்கி ரூ.2035 கோடி கடனுதவி வழங்கியுள்ளது.
 • Reviews


 • இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனியை தூய்மை இந்தியா திட்டத்தின் விளம்பரத் தூதுவராக மதுரை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
 • Reviews