Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள் - தமிழ்நாடு
 • புற்றுநோய் சிகிச்சைக்கான சர்வதேச மாநாடு சென்னையில் இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.
 • Reviews


 • இந்திய அளவில் டெங்கு பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தொிவித்துள்ளது.
 • Reviews


 • பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கும் முன்னேறிய வகுப்பினருக்கு ஏன் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (டிசம்பர் 14) கேள்வி எழுப்பியுள்ளது.
 • Reviews


 • புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள கிராமத்தில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 • Reviews


  yes
  14-12-2017 10:38:32
 • இந்தியாவில் முதன்முறையாகச் சென்னையில் ரோபோக்கள் சர்வராகப் பணிபுரியும் ஹோட்டல் தொடங்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • ராமேஸ்வரம் அருகே அமைந்துள்ள மறைந்த டாக்டர் அப்துல் கலாம் தேசிய நினைவகத்தை, வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையாகப் பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
 • Reviews


 • மதுரை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேசச் சரக்கு முனையம் வருகிற டிசம்பர் 15ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • மாணவர்களின் தற்கொலை எண்ணத்தை போக்குவதற்காக 1098 என்ற இலவச தொலைப்பேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 • Reviews


 • உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து 3வது முறையாக தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
 • Reviews


 • ”தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கப்பல் கட்டுதல் பற்றிய அறிவுடன் சோழர்கள் இருந்திருக்கின்றனர். அதோடு, அவர்களின் கப்பல்படையில் பெண்கள் பணியாற்றியிருக்கின்றனர்” என்ற தகவலை, தனது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பகிர்ந்திருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி.
 • Reviews


 • காஞ்சிபுரம் மாவட்டம், அம்மனூர் கிராமத்தில் இலவச வைஃபை வசதியை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதை அடுத்து தமிழகத்தின் முதல் டிஜிட்டல் கிராமமாகத் தற்போது உருவெடுத்துள்ளது.
 • Reviews


 • புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு உதவும் வகையில் இலவசமாக மருத்துவ சிகிச்சை (கீமோதெரபி) அளிக்க ‘ஆற்றல்’ என்ற புதிய அமைப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • கும்பகோணத்தில் 5 ஆயிரம் மாணவர்கள் இணைந்து 2.50 லட்சம் விதைப் பந்துகளைத் தயாரித்து நேற்று (நவம்பர் 15) கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
 • Reviews


 • சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதியாக, ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதி சத்ருகன புஜாஹரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 • Reviews


 • தமிழக அரசின் விண்ணப்பத்தை ஏற்று, மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • ஊரகப் பகுதிகளிலுள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
 • Reviews


 • நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி மையங்களை இன்று தொடங்கிவைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
 • Reviews


 • திருச்சி மாவட்டத்தில் முதல்முறையாக, திருநங்கை ஒருவருக்குத் தற்காலிக ஜீப் ஓட்டுநர் பணியை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.
 • Reviews


 • "இந்தியாவில் முதல் முறையாக சென்னை ஐஐடி சார்பில் வெள்ளபாதிப்பின்போது தண்ணீரில் செல்லக்கூடிய ஆம்புலன்ஸ், வடிவமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
 • Reviews


 • கோவா சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் தமிழிலிருந்து அம்ஷன் குமார் இயக்கத்தில் உருவான ‘மனுசங்கடா’ திரைப்படம் பங்கு பெற்றுள்ளது.
 • Reviews


 • தமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவரும் , திராவிட சிந்தனைகளில் ஊறியவரும், கலைஞரின் மிக நெருங்கிய நண்பருமான தமிழ் பேராசிரியர் மா.நன்னன் சென்னையில் இன்று (நவம்பர் 7) காலமானார்.
 • Reviews


 • இந்தியாவின் பாரம்பரிய இசை நகரங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைச் சென்னை பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் ஜெய்ப்பூர் மற்றும் வாரணாசி ஆகியவை மட்டுமே இடம்பெற்றிருந்தன. நேற்று (நவம்பர் 7) சென்னையையும் இணைத்து யுனெஸ்கோ கவுரவித்துள்ளது.
 • Reviews


 • பிரதமர் நரேந்திர மோடி தினத்தந்தி பத்திரிகையின் 75 வது ஆண்டு விழாவில் பங்கேற்க இன்று சென்னை வருவார்.
 • Reviews


 • தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகளைத் திறக்கச் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
 • Reviews


 • வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்ய, 9 மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகத் தேசியப் பேரிடர் மீட்புப் படை அறிவித்துள்ளது.
 • Reviews


 • 15ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் மாதம் தொடங்கவிருக்கிறது.
 • Reviews


 • வழக்கு விவரங்களை செல்பேசி மூலம் தெரிந்து கொள்ளும் வகையில் புதிய ஆப் ஒன்றை உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகுர் சென்னை நீதிமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.
 • Reviews


 • நீலகிரி மலை ரயில்வே (NMR), தமிழ்நாட்டிலுள்ள உதகமண்டலத்தில் பாரம்பரிய இரயில்வே அருங்காட்சியகம் அமைக்க உள்ளது.
 • Reviews


 • காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தை அடுத்த வல்லம்-வடகால் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் 244 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள வானூர்தி தொழிற்பூங்காவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்.25) அடிக்கல் நாட்டினார்.
 • Reviews


 • ஆந்திர மாநில அரசாங்கத்துடன் வாழை உற்பத்தியைப் பற்றிய தொழில்நுட்பங்களை வளர்ப்பதற்காக திருச்சி தேசிய வாழைப்பழ ஆராய்ச்சி மையம் (National Research Centre for Banana) ஒப்பந்தம் செய்தது.
 • Reviews


 • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பான விசாரணையை நீதிபதி ஆறுமுகசாமி, அக்.25ஆம் தேதி தொடங்கவுள்ளார்.
 • Reviews


 • மகாவீர் நிர்வாண் தினத்தை முன்னிட்டு (அக்டோபர் 19) இறைச்சிக் கூடங்களில் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
 • Reviews


 • டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகமாகவும்,முதலிடத்திலும் தமிழகம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 • Reviews


 • தமிழ்நாட்டிலுள்ள மெட்ராஸ் ஐ.ஐ.டி. ல் உலகின் மிகப்பெரிய எரிபொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய மையம் (National Centre for Combustion Research and Development) திறந்து வைக்கப்பட்டது.
 • Reviews


 • சென்னையைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் 500 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் சக்தி படைத்த மேலாடையை உருவாக்கியுள்ளார். இதை தண்ணீரில் நனைத்துவிட்டு பயன்படுத்தினால், 1,500 டிகிரி செல்சியஸ் வரையான வெப்பத்தையும் தாங்கும்.
 • Reviews


 • சென்னை ராயப்பேட்டை பகுதியில் கொசு இல்லா இல்லம் மற்றும் நோயற்ற இல்லம் திட்டத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
 • Reviews


 • கடந்த 21 ஆண்டுகளாக பசுமை நடைப்பயணம் மேற்கொண்டு வரும், திருநெல்வேலியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெகஜோதி, சுற்றுச்சூழல் ஆர்வலர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 • Reviews


 • தமிழகத்திற்கான புதிய ஆளுநராக பன்வாாிலால் புரோஹித் பதவி ஏற்க்கொண்டாா். கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி இந்திரா பானா்ஜி ஆளுநருக்கான ரகசிய காப்புபிரமாணத்தை முன் மொழிந்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா். இதனையடுத்து தமிழகத்தின் 20வது ஆளுநராக பன்வாாிலால் புரோஹித் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
 • Reviews


 • வடகிழக்கு பருவமழையால் பேரிடர் ஏற்பட்டால், அதை எதிர்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போதே தமிழக அரசு 750 கோடி ரூபாய் நிவாரணம் ஒதுக்கீடு செய்துள்ளது.
 • Reviews


 • நாடு முழுவதிலும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த ஒன்பது மாதங்களில் 34 மடங்கு அதிகரித்துள்ளது. இதில் குஜராத், மகாராஷ்டிரா, உ.பியைத் தொடர்ந்து தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது.
 • Reviews