Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள் - தமிழ்நாடு
 • மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை இந்தியாவின் சுத்தமான கோயிலாக மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.
 • Reviews


 • நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறில் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் (அக்டோபர் 1) திறந்துவைத்தார்.
 • Reviews


 • குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் தமிழகத்திலேயே வேலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது எனத் தமிழக அரசின் குடும்ப நலத்துறை இயக்குநர் ஜோதி தெரிவித்துள்ளார்.
 • Reviews


 • தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்ட, துாய்மையான உயர் கல்வி நிறுவனங்கள் பட்டியலில், முதல், 25 இடங்களில், 12 இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த கல்லுாரிகள் பெற்றுள்ளன. ஈரோட்டிலுள்ள, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, முதலிடம் பிடித்தது. தொழில் நுட்ப கல்லுாரிகள் பட்டியலில், கோவை, அம்ரிதா விஷ்வா வித்யாபீடம், முதலிடம் பிடித்தது.
 • Reviews


 • ராமநாதபுரத்தில் உணவுப் பொருள்களின் தரம் குறித்து புகார்களைத் தெரிவிக்க அம்மாவட்ட ஆட்சியர் நடராஜன் புதிய வாட்ஸ்அப் எண் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
 • Reviews


 • தமிழக அரசின் வருவாய்த் துறையின் பெயர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 • Reviews


 • ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்குத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 • Reviews


 • உலக வெப்பமயமாதலால் வருகின்ற 2050ஆம் ஆண்டு சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் கடலுக்குள் சென்றுவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 • Reviews


 • 2017ஆம் ஆண்டின் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்களுக்குத் தேசிய நல்லாசிரியர் விருது செப்டம்பர்-5 ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.
 • Reviews


 • தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக விஜய நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார்.
 • Reviews


 • புளூவேல் விளையாட்டின் தாக்கத்தால் இளைஞர்கள் தற்கொலை செய்தது தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமகாவே முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
 • Reviews


 • நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டார்.
 • Reviews


 • மாணவர்கள் வகுப்பறையில் செல்பேசி பயன்படுத்த அண்ணா பல்கலை தடை விதித்துள்ளது.
 • Reviews


 • தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞரான முத்துக்குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
 • Reviews


 • ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் காயமடைந்த யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளைக் காப்பாற்றி சிகிச்சை அளிப்பதற்கும், வேறு இடத்துக்கு ஏற்றிச் செல்வதற்கும் மருத்துவ வசதி கொண்ட பிரத்தியேக ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 • Reviews


 • கோவையில் யானைகளை மீட்பதற்காக ஹைட்ரோலிக் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 • Reviews


 • சென்னை நகரம் தோற்றுவிக்கப்பட்ட 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதியை நினைவூட்டும் வகையில் தற்போது 378ஆவது சென்னை தின விழா கொண்டாடப்படவுள்ளது. 1996ஆம் ஆண்டு மதராஸ் நகரம் சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
 • Reviews


 • சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு விருது வழங்கப்பட்டது.
 • Reviews


 • சிறந்த தொண்டு நிறுவனம் :சென்னை மெடிந்தியா நிறுவனத்துக்கும் , மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்கிய திருச்சியைச் சேர்ந்த ஆர்பிட் நிறுவனத்துக்கும் இவ்விருது வழங்கப்பட்டது.
 • Reviews


 • சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு விருது வழங்கப்பட்டது.
 • Reviews


 • மாற்றுத் திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்காகத் தமிழக அரசு விருது: காஞ்சிபுரம் கண் அறுவை சிகிச்சை மருத்துவர் வீ.ம.சங்கரனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த சமூகப் பணியாளர் விருது மதுரையைச் சேர்ந்த க்யூர் அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மைய நிறுவனர் இளையபாரிக்கும் வழங்கப்பட்டது.
 • Reviews


 • இளைஞர் விருது: இவ்விருது மூன்று பேருக்கு வழங்கப்பட்டது. கோவையைச் சேர்ந்த நோ ஃபுட் வேஸ்ட் அமைப்பின் நிறுவனர் பத்மநாபன், விருதுநகர் மாவட்டம் உமயலிங்கத்துக்கும், பெண்களுக்கான விருது நெல்லை மாவட்டம் ஸ்ரீபதி தங்கத்துக்கும் வழங்கப்பட்டது.
 • Reviews


 • சிறந்த பேரூராட்சி: பொன்னம்பட்டி, இருகூர், நம்பியூர் ஆகியவற்றுக்கு சிறந்த பேரூராட்சி விருது வழங்கப்பட்டது.
 • Reviews


 • சிறந்த மாநகராட்சி: நெல்லை மாநகராட்சிக்குச் சிறந்த மாநகராட்சி என்ற விருது வழங்கப்பட்டது.
 • Reviews


 • நல்லாசிரியர் விருது பெற ஆறு கட்டுப்பாடுகள்: அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க உழைத்தவராக இருக்க வேண்டும். வேலை நாட்களில் விடுமுறை எடுக்காமல், பள்ளிக்குச் சரியான நேரத்தில் வருபவராக இருக்க வேண்டும். பள்ளியின் சுற்றுப்புறம் மற்றும் கழிப்பறைகளின் தூய்மையை பராமரிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மரக்கன்றுகள், தோட்டம் ஆகியவற்றைப் பராமரிப்பதில், அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும். மாணவர்கள் கல்வித்திறனுக்கு மட்டுமல்லாமல் அவர்களின், தனித்திறனை வளர்க்கவும் உதவியாக இருந்திருக்க வேண்டும். அரசு விழாக்களில், பள்ளி மாணவர்களைப் பங்கேற்கச் செய்திருக்க வேண்டும்”
 • Reviews


 • நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஓராண்டுக்கு விலக்கு கோரும் அவசர சட்ட மசோதா, இன்று மத்திய உள்துறை அமைச்சகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
 • Reviews


 • இந்தியாவிலேயே தமிழகம்தான் உடலுறுப்பு தானத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
 • Reviews


 • வாட்ஸ் அப் வசதியைப் பயன்படுத்தி டெங்குவை ஒழிக்கும் முயற்சியில் சேலம் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் ரோகிணி இறங்கியுள்ளார்.
 • Reviews


 • எல்லையில் போராடி வரும் ராணுவ வீரர்களுக்கு 15 ஆயிரம் ராக்கி கயிறுகளை தமிழக பெண்கள் உள்பட பள்ளி மாணவிகள் அனுப்பி வைத்துள்ளனர்.
 • Reviews


 • சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில் (ஆகஸ்ட் 1) முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்குத் தடை விதிப்பதாக நகராட்சி ஆணையாளர் சுந்தாரம்பாள் தெரிவித்துள்ளார்.
 • Reviews


 • லோக் அதாலத் மூலம் அதிக வழக்குகளைத் தீர்த்துவைப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
 • Reviews


 • சென்னை ஐ.ஐ.டியில் (இந்தியத் தொழில்நுட்ப கழகம்) பெற்றோரின் ஆண்டு வருமானத்துக்கு ஏற்ப மாணவர்களின் கல்விக் கட்டணத்தை வசூலிக்க சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
 • Reviews


 • அப்துல்கலாமின் நினைவு தினத்தையொட்டி ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பு புதிய செயற்கைக் கோளை வடிவமைத்து அதற்கு கலாம்சாட்-2 என்று பெயா் வைத்துள்ளனா்.
 • Reviews


 • கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு காலங்களில் செலவுத் தொகையாக, டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் ரூ 12 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இந்த உதவித்தொகையை, ரூ18 ஆயிரமாக வழங்க முடிவு செய்துள்ளது தமிழக அரசு.
 • Reviews


 • தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஜூலை-25 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.
 • Reviews


 • தென் மாநிலங்களில் இந்தி கற்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக இந்தி பிரசார சபா தெரிவித்துள்ளது.
 • Reviews


 • எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதைக்கு சர்வதேசப் போட்டியில் முதல் பரிசு கிடைத்துள்ளது. ASYMPTOTE நடத்தும் சிறுகதைப்போட்டிக்கு எழுத்தாளர் ஜெயமோகனின் "பெரியம்மாவின் சொற்கள்" என்னும் சிறுகதையை எழுத்தாளர் ஜெயமோகனின் நண்பர் சுசித்ரா ராமச்சந்திரன் "Periyamma’s Words" என்று ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து அனுப்பியிருந்தார். தற்போது அந்த அது முதற்பரிசுக்குரியதாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.
 • Reviews


 • தமிழகத்தில் சென்னையை தொடா்ந்து இரண்டாம் கட்டமாக கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் தொிவித்தாா்.
 • Reviews


 • பத்திரிக்கையாளர்கள் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத் தொகையை உயர்த்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
 • Reviews


 • முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை கவிப்பேரரசு’ வைரமுத்து வரிகளில் ‘கலாம் ஆன்தம்’ என்ற பாடல் வெளியாகவுள்ளது. இப்பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் இந்த பாடலை பாடியுள்ளார்.
 • Reviews