Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள் - தமிழ்நாடு
 • அதிவேக பைபர் ஆப்டிக்கல்ஸ் இணைய இணைப்பு "தமிழ்நெட்" என்ற பெயரில் நகரங்களில் விரைவில் செயல்ப்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
 • Reviews


 • 2016-17ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த வரி வசூல், அதற்கு முந்தைய நிதியாண்டோடு ஒப்பிடும்போது 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
 • Reviews


 • இந்தியாவில் தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்திற்கு கடைசி இடம்
 • Reviews


 • தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் விரைவில் 'அம்மா இ.கிராமம்' என்னும் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 • Reviews


 • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 27 வயதான ஒருவருக்கு ஜிகாவில் வைரஸ் தொற்று ஏற்பட்டதாக அறியப்பட்டுள்ளது.
 • Reviews


 • இந்திய அளவில் கடந்த 2016ஆம் ஆண்டில் அதிகப் போராட்டங்கள் நடைபெற்ற மாநிலங்களில் தமிழகம் இரண்டாமிடம் பிடித்துள்ளது. முதலிடத்தில் உத்தரகாண்ட் உள்ளது.
 • Reviews


 • மோனோ ரயில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 • Reviews


 • கோயம்புத்தூர் பகுதிகளில் விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக மாநாடு ஒன்றை இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. ’உழவே தலை’ என்ற பெயரில் இந்த மாநாடு ஜூலை 15ஆம் தேதி கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி அரங்கில் நடைபெறுகிறது.
 • Reviews


 • மெட்ரோ ரயில் பயணிகள், ரயில் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று வர இலவச சைக்கிள் சேவை திட்டத்தை ஆகஸ்ட் மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 • Reviews


 • இந்தியாவிலேயே ‌தமிழகத்தில்தான் அதிக தொழிற்சாலை‌கள் ‌இருப்பதாக ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன‌. தமிழகத்துக்கு அடுத்த இடங்களில் மகாராஷ்டிரா, குஜராத், ஆந்தி‌ரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.‌
 • Reviews


 • சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் இந்திரா பானர்ஜி சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு 1992ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக காந்தகுமாரி பட்நாகர் பதவி வகித்துள்ளார்.
 • Reviews


 • சென்னை உயர் நீதிமன்றத்தின் 135 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக அனைத்து மகளிர் நீதிபதிகள் அமர்வு அமைந்துள்ளது.
 • Reviews


 • சென்னையில் முதல்முறையாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 • Reviews


 • உலகிலேயே குட்டி செயற்கைக்கோளை உருவாக்கிய மாணவர்களுக்கு முதல்வர் பழனிசாமி ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ரிஃபாத் ஷாரூக். இவருக்கு வயது 18. இவர் உலகிலேயே மிகச்சிறிய செயற்கைக்கோளை 4 கியூபிக் செமீ அளவில் 64 கிராம் எடையில் வடிவமைத்துள்ளார். முகமது ரிஃபாத் ஷாரூக், கிரசென்ட் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 முடித்துள்ளார். இவர் எடுத்த மதிப்பெண்கள் 750 தான். ஆனால் அவர் செய்த சாதனை உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதுவரை விஞ்ஞானிகள் யாரும் வடிவமைக்காத அளவுக்குச் சிறிய செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளார்.
 • Reviews


 • தமிழக - கர்நாடக எல்லையில் அமைந்துள்ள ஓசூரில் மத்திய அரசின் உடான் திட்டத்தின்கீழ் விமான நிலையம் விரைவில் செயல்படவுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.
 • Reviews


 • கோவை கங்கா மருத்துவமனை இன்று ஏர் ஆன்புலன்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. மருத்துவத் தேவைக்காக ஒரு மருத்துவமனை நிர்வாகம் ஏர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தியிருப்பது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்கிறது கங்கா மருத்துவமனை நிர்வாகம்.
 • Reviews


 • தமிழகத்தில் பத்து இடங்களில், அம்மா பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் காமராஜ் அறிவித்தார்.
 • Reviews


 • கல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு இலவசக் கல்வி மற்றும் உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
 • Reviews


 • உலகின் முதன்மை பல்கலைக்கழகங்கள் பட்டியலில் முதன்முறையாகச் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இடம்பிடித்துள்ளது.
 • Reviews


 • கவிக்கோ அப்துல் ரகுமான் உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார்.
 • Reviews


 • 223 வருட பழைமையான , கிண்டி பொறியியல் கல்லூரிக்கு முதல் முறையாக டி.வி. கீதா என்ற பெண்மணி டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 • Reviews


 • ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழா திருச்சியை அடுத்த திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி கோபால்சாமி தலைமை தாங்கினார்.
 • Reviews


 • தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலைத் தொடர்ந்து காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
 • Reviews


 • திருவையாற்றில் சத்குரு ஸ்ரீதியாகராஜர் சுவாமிகளின் 170-வது ஆராதனை விழா நடைபெறுகிறது.
 • Reviews


 • தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
 • Reviews


 • குமரியில், காணொலி காட்சி மூலம், பாரத மாதா கோயிலை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்கிறார்.
 • Reviews


 • பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்ப ரேஷன் நிறுவனத்தின் பெயர் மாற்றத்துக்கு இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. என்எல்சி இந்தியா என்று மாற்றப்பட உள்ளது.
 • Reviews


 • முதல் முறையாக மதுரை யாதவா பெண்கள் கல்லுாரியில் வாக்காளர் விழிப்புணர்வு தபால் தலை வெளியிடப்பட்டது. ரூ.5 மதிப்புள்ள தபால் தலையில் 'மே.,- 16 அன்று வாக்களியுங்கள்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. தபால்தலையை கலெக்டர் கே.வீரராகவராவ் வெளியிட்டார்.
 • Reviews


 • சென்னை தீவுத்திடலில் ஜூன் 1-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள்- பதிப்பாளர்கள் சங்கத்தின் ("பபாசி') சார்பில் 39-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
 • Reviews


 • விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 'வெளிச்சம்' எனப் பெயரிடப்பட்டுள்ள தொலைக்காட்சியின் ஒளிப்பரப்புகள் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
 • Reviews


 • தமிழ் படம் கனவு வாரியம் அமெரிக்காவின் ரெமி விருதுக்கு தேர்வு செயப்பட்டுள்ளது
 • Reviews