Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள் - உலகம்
 • ஆசியாவில் முதல்முறையாக தன்பாலின திருமணச் சட்டம் தைவான் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
 • Reviews


 • ஓமா புயல்

  பசிபிக் தீவுகளை ஓமாபுயல் மணிக்கு 185 கி.மீ. வேகத்தில் சூறாவளியாக மாறி தாக்குதலை தொடங்கிவிட்டது. தற்போது, ஆஸ்திரேலிய கடலோரப்பகுதிக்கு அப்பால் உள்ள இந்த சூறாவளிப்புயல் புது கலிடோனியா பகுதியை, அதிவேகமாக தாக்கியதில் அங்கு முழுமையானமின்தடை ஏற்பட்டது. ஏராளமான பயிர்களும், விளைநிலங்களும் நாசமானது. ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஏராளமான கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன.
 • Reviews


 • உணவு பாதுகாப்பு

  கே.எஃப்.சி. உணவகங்க ளில் இருந்த குடிநீரில் கிளப்சிவியா எனும் மோசமான கிருமி இருப்பதும், சோடா இயந்திரத்தில் இ கோலி கிருமி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தலைநகர் உடான் படாரில் உள்ள கே . ஃப்.சி. கிளையில் பணிபுரிந்த 4பேருக்கு, சிஜில்லா எனும் நோய்த் தொற்று இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மங்கோலியா அரசுக்கு அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். இதைத் தொடர்ந்து, மங்கோலியாவில் செயல்பட்ட அனைத்து கே.ஃப்.சி. உணவகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன.
 • Reviews


 • தென் சீனக் கடலில் உருவான பபுக் புயல் வங்கக் கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளது. இது வடமேற்கில் நகர்ந்து, மத்திய வங்கக் கடலுக்குள் நுழைந்து, அதன் பின்னர் வட கிழக்குத் திசையில் நகர்ந்து மியான்மரில் கரையைக் கடந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கட்ரியோனா க்ரே 2018 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 • Reviews


 • கால நிலை மாற்றத்திற்கான உலக இணைய மாநாடு மார்சல் தீவுகளில் நடைபெறுகிறது என்று அந்நாட்டின் அதிபர் ஹில்டா ஹெய்ன் தெரிவித்துள்ளார்.
 • Reviews


 • சீனாவின் இயற்பியல் ஆய்வகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள், இயற்கை சூரியனை விட அதிக வெப்பமுடைய செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளனர். இச்செயற்கை சூரியனானது 100 மில்லியன் டிகிரி வெப்பம் கொண்டதாக உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 • Reviews


 • சீனாவைச் சேர்ந்த முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகின் முதல் AI செய்தி தொகுப்பாளரை அறிமுகம் செய்துள்ளது.
 • Reviews


 • ஐக்கிய நாடுகள் சபை அஞ்சல் அமைப்பானது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தபால் தலைகளை வெளியிட்டது. சர்வதேச அளவில் பரிமாறப்படும் கடிதங்களில் ஒட்டத்தக்க வகையில் இந்த தபால் தலைகள் உள்ளன. இதன் விலை 1.15 அமெரிக்க டாலர் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, சர்வதேச தபால் தலைகளுக்கான சராசரி விலையாகும். மொத்தமாக 10 தபால் தலைகளுடன், ஐக்கிய நாடுகள் சபையின் பெரிய படம் ஒன்றும் இந்த அட்டையில் உள்ளது. தீபாவளியைக் கொண்டாடும் வகையில் ஹேப்பி தீவாளி என்ற வாசகங்களும், தீபங்களின் படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
 • Reviews


 • ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைய தேர்தலுக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2019 முதல் 3 ஆண்டுகளுக்கு, மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக பதவி வகிக்கும் இந்தியா. இது குறித்து வாக்கெடுப்பின் போது, 188 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
 • Reviews


 • பாகிஸ்தானின் 22ஆவது பிரதமராக இம்ரான் கான் இன்று (ஆகஸ்ட் 18) காலை பதவி ஏற்றுக்கொண்டார். பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரு தினங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி, 116 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக அமைந்தாலும், அதற்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அவருக்கு தேவைப்பட்ட 172 வாக்குகளை விட கூடுதலாக 4 வாக்குகள் கிடைத்தன. எனவே அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • Reviews


 • 2023ஆம் ஆண்டில் உலகின் நம்பர் ஒன் பணக்கார அந்தஸ்தை கத்தார் இழக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சூதாட்ட வருவாய் அடிப்படையில் உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது கத்தார். சீனாவின் மக்காவு நகரில் பெருகியுள்ள சூதாட்டத்தினால் அந்த நகரம் 2023ஆம் ஆண்டு கத்தாரை முந்தி முதலிடம் பிடிக்கும் என்று ஐ.எம்.எஃப். அறிக்கை தெரிவிக்கிறது.
 • Reviews


 • ருவாண்டாவில் இந்திய பிரதமர் மோடி

  ருவாண்டா நாட்டுக்குச் சென்ற முதல் பிரதமர் என்ற பெருமையை இந்திய பிரமதர் மோடி பெற்றார். ருவாண்டா அரசு அந்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக கிரிங்கா சமூக பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த கிரிங்கா திட்டத்தின் படி ஏழைக் குடும்பத்துக்கு ஒரு பசு மாடு அரசு சார்பில் வழங்கப்படும். அந்தப் பசு மாடு கன்று போடும்போது, அந்தக் கன்றை அண்டை வீட்டாருக்குக் கொடுத்து, பரஸ்பரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பது திட்டமாகும். இந்தத் திட்டத்துக்காக இந்தியா சார்பில் பிரதமர் மோடி 200 பசு மாடுகளை ருவாண்டா நாட்டுக்கு அன்பளிப்பாக இன்று வழங்கினார்.
 • Reviews


 • போக்குவரத்துத் துறையை மேம்படுத்த இந்தியா - இங்கிலாந்து ஒப்பந்தம்

  நாட்டின் ஒட்டுமொத்த பொதுப் போக்குவரத்துச் சேவையை மேம்படுத்துவதற்கு உதவி கோரும் வகையில் இங்கிலாந்துடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் பொதுமக்களுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில், மாநகர் லண்டன் ஆணைய சட்டம் 1999-ன் கீழ் உருவாக்கப்பட்ட லண்டனுக்கான போக்குவரத்து அமைப்பிற்கும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கும் இடையே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
 • Reviews


 • செப்டம்பர் 6-ம் தேதி வெளியுறவு, பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த இந்திய - அமெரிக்க அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

  இந்திய - அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தை வரும் செப்டம்பர் 6-ம் தேதி டெல்லியில் நடைபெறும். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் சந்தித்து பேசுவார்கள். அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ{ம் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் சந்தித்து பேசுவார்கள்.
 • Reviews


 • . பிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

  ஜூலை 23 ஆம் தேதி ருவாண்டாவுக்கு செல்கிறார் மோடி, அங்கு வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப அமைப்புகள், நிறுவனங்களை பார்வையிடுகிறார். ருவாண்டாவிலிருந்து, உகண்டாவிற்கு 24 -ம் தேதி பயணம் செய்கிறார். அங்கு நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கிறார். 25-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • இஸ்ரேல் யூத நாடாக பிரகடனம்: புதிய சட்டம் நிறைவேற்றம்

  1948 மே 14-ம் தேதி இஸ்ரேல் நாடு உருவானது. இஸ்ரேலில் 85.5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இதில் 74.5 சதவீதம் பேர் யூதர்கள். 20.9 சதவீதம் பேர் பாலஸ்தீனர்கள். இதர இனங்களைச் சேர்ந்த 4.6 சதவீதம் பேரும் அந்த நாட்டில் வசிக்கின்றனர். மதரீதியாக 74.7 சதவீத யூதர்கள், 17.7 சதவீத முஸ்லிம்கள், 2 சதவீத கிறிஸ்தவர்கள் உள்ளனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியபோது, “இஸ்ரேல், யூதர்களின் நாடு என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
 • Reviews


 • ஆப்கானிஸ்தானில் பள்ளிக்குச் செல்லாத 85 % பெண் குழந்தைகள்

  ஆப்கானிஸ்தானில் 2002ஆம் ஆண்டிலிருந்து பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்நாட்டுச் சண்டை, வறுமை, குழந்தைத் திருமணம், பாலினப் பாகுபாடு போன்றவற்றின் காரணமான பள்ளிக்குச் செல்வதில்லை. அனைத்து இடங்களுக்கும் வன்முறை பரவிவருவதால் பல பள்ளிகள் மூடப்பட்டன. குறிப்பாக, பெண் குழந்தைகள் பள்ளி வகுப்பறைக்குள் காலடி கூட எடுத்து வைத்ததில்லை. ஏழு வயது முதல் 17 வயது வரையிலான 3.7 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை. அதில் பெண் குழந்தைகள் 2.7 மில்லியன். தலிபான்கள் கடுமையான இஸ்லாமிய ஆட்சிக்கு நாட்டைத் திருப்ப முயன்றபோது, பெண் குழந்தைகள் பள்ளிக்குப் போகக் கூடாது எனக் கட்டாயப்படுத்தப்பட்டது. 85 சதவிகிதப் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை. இந்தாண்டின் ஏப்ரல் மாதத்தில் தீவிரவாதிகள் நடத்திய வன்முறைத் தாக்குதல்கள் நூற்றுக்கணக்கான தனியார் பள்ளிகளை மூட வழிவகுத்தது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாததால், அவர்கள் துஷ்பிரயோகம், சுரண்டல் மற்றும் தீவிரவாதத்துக்கு ஆட்சேர்ப்பு போன்ற ஆபத்தில் சிக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
 • Reviews


 • பணக்காரர் பட்டியல்: உச்சத்தில் ஜெஃப் பெசோஸ்

  உலகின் நம்பர்.1 பணக்காரரான ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 150 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.
 • Reviews


 • அதிபர்கள் ட்ரம்ப் - புதின் சந்திப்பு

  அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் நேற்று சந்தித்துப் பேசினர். முதலில் இருவரும் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு 2 மணி நேரம் நீடித்தது.
 • Reviews


 • பொருளாதாரத் தடை: அமெரிக்காவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் புகார்-

  ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தார் ட்ரம்ப். இந்தியா உள்ளிட்ட அமெரிக்க நட்பு நாடுகள் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா கூறியிருந்தது. ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வந்த நிலையில் சர்வதேச நீதிமன்ற உதவியை ஈரான் நாடியுள்ளது.
 • Reviews


 • ரஷ்யாவில் ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் நடைபெறும் தீவிரவாத எதிர்ப்பு பயிற்சியில் இந்தியா - பாகிஸ்தான் பங்கேற்பு

  ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கடந்த 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ளுஊழு அமைப்பின் தீவிரவாத எதிர்ப்பு பயிற்சி வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் நகரில் நடைபெற உள்ளது.
 • Reviews


 • உலகின் மிகப்பெரிய இந்திய விசா மையம்; வங்கதேசத்தில் அமைச்சர் திறந்து வைத்தார்

  வங்கதேச தலைநகர் டாக்காவில் உலகிலேயே மிகப்பெரிய இந்திய விசா மையத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார். டாக்கா நகரின் ஜமுனா பியூச்சர் பார்க் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய விசா விண்ணப்ப மையத்தை ராஜ்நாத் சிங்கும் வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஜமான் கானும் நேற்று திறந்து வைத்தனர்.
 • Reviews


 • டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் அடுத்த ஆண்டில் இந்தியா வர திட்டம்

  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் அடுத்த ஆண்டு இந்தியா வர திட்டமிட்டுள்ளார்.
 • Reviews


 • லண்டனில் இருந்து லாகூர் திரும்பிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் கைது

  ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபும் அவரது மகள் மரியமும் நேற்று நாடு திரும்பினர். லாகூர் விமான நிலையத்தில் இறங்கிய அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
 • Reviews


 • படைப்பாற்றலில் சர்வதேச அளவில் முன்னேறிய இந்தியா

  உலகளவில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நாடுகளுக்கு ஜிஐஐ குறியீடு வழங்கப்படுகிறது இந்தியா 57ஆவது இடத்திலும், சீனா 17ஆவது இடத்திலும் உள்ளன.
 • Reviews


 • ஜூலை 12- உலக மலலா தினம் பெண்கள் கல்வி கற்கும் உரிமைக்காகப் போராடிவருபவர்களுள் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்தவர் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சையி.
 • Reviews


 • இலங்கையில் 42 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மரண தண்டனை

  1976க்குப் பிறகு வந்த இலங்கை அதிபர்கள் மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்க மறுத்துவிட்டனர். செவ்வாய்க்கிழமை இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 19 பேருக்கு தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.
 • Reviews


 • ட்விட்டரில் பின்தொடர்பவர்கள்: முதலிடத்தில் ட்ரம்ப்; பிரதமர் மோடிக்கு 3வது இடம்

  அதன்படி ட்விட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவராக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்ளார். அவரை 5.2 கோடி பேர் ட்விட்டரில் தொடர்கின்றனர். அமெரிக்க அதிபராக அவர் பதவியேற்ற பிறகு அவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இரண்டாவது இடத்தில் 4.75 கோடி பேருடன் போப் பிரான்சிஸ் உள்ளார். மூன்றாவது இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். 4.2 கோடி பேர் அவரை பின் தொடர்கின்றனர்.
 • Reviews


 • மேக் இன் இந்தியா திட்டத்தில் வேலை வாய்ப்பு அதிகரிக்க தென் கொரியா உதவி

  இந்தியாவுக்கு வந்த தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்-னுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ அணி வகுப்பு மரியாதையோடு வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஜ்கோட்டுக்கு சென்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார் மூன் ஜே-இன். இரு தலைவர்களும் மெட்ரோ ரயிலில் நொய்டாவுக்கு பயணம் செய்து அங்கு சாம்சங் ஆலையைத் திறந்து வைத்தனர். மேக் இன் இந்தியா திட்டம் மூலம் இந்தியாவில் வேலை வாய்ப்பு அதிகரிக்க தென் கொரியா மிகவும் உதவியாக இருந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
 • Reviews


 • அமெரிக்காவுடன் ராணுவப் பயிற்சியை நிறுத்தியது தென்கொரியா

  அமெரிக்காவுடன் இணைந்து நடத்தவிருந்த வருடாந்திட ராணுவ பயிற்சியை தென்கொரியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துக் கொண்ட உச்சி மா நாட்டில் அணு ஆயுத சோதனை தொடர்பாக விவகாரத்தில் அமெரிக்கா - வடகொரியா இடையே உடன்பாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் நடத்தவிருந்த வருடாந்திர ராணுவ பயிற்சியை தற்காலிகமாக கைவிடுவதாக அமெரிக்காவும் கூறியிருந்தது. தென் கொரியாவின் இந்த முடிவை வடகொரியா வரவேற்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 • Reviews


 • உலக சமஸ்கிருத மாநாடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இதுவரை மூன்று முறை இம்மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், கனடாவின் வான்குவர் நகரில் 17ஆவது உலக சமஸ்கிருத மாநாடு ஜூலை 9ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த மாநாட்டை இன்று (ஜூலை 9) தொடங்கி வைக்கிறார்.
 • Reviews


 • ஐக்கிய அமீரகத்தில் கட்டாய ராணுவ சேவை 16 மாத காலம்

  ஐக்கிய அரபு அமீரக நாட்டில் 18 முதல் 30 வயதுள்ள இளைஞர்கள் ராணுவத்தில் கட்டாயம் பணிபுரிய வேண்டும் என்ற சட்டம் 2014 முதல் அமலில் உள்ளது. அதன்படி 12 மாதம் ராணுவத்தில் சேவையாற்ற வேண்டும். பெண்கள் தாமாக முன்வந்தால் ராணுவத்தில் பணியாற்றலாம். அவர்களுக்கு ராணுவப் பணி கட்டாயமில்லை. இந்த நிலையில் இளைஞர்களுக்கான கட்டாய ராணுவ பணிக்காலத்தை 12 மாதத்திலிருந்து 16 மாத காலமாக அதிகரித்து யுஏஇ அரசு நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு, அரசியல், தேசிய, சமூக, பொருளாதார அடிப்படையில் இதுபோன்ற முடிவுகளை அரசு எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. நாட்டு இளைஞர்கள் கட்டாயமாக ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற திட்டமானது யுஏஇ அரசின் முக்கிய முடிவுகளுள் ஒன்றாகக் பார்க்கப்படுகிறது. ஈரான் அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் தனது ராணுவத்தை பலப்படுத்தி வருகிறது.
 • Reviews


 • 5-ம் தலைமுறை தொழில்நுட்பங்களுடன் ரூ.2 லட்சம் கோடியில் போர் விமான திட்டம்- ரஷ்யாவுடன் போட்ட ஒப்பந்தம் மறுபரிசீலனை

  ரஷ்யாவுடன் இணைந்து 5-ம் தலைமுறை போர் விமானங்கள் தயாரிக்கும் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து வருகிறது. இந்த திட்டத்துக்கு அதிகமாக செலவிட வேண்டிவரும் என்பதே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இந்தியா-ரஷ்யா இடையிலான பாதுகாப்புத் துறை வர்த்தக உறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வது தொடர்பாக, கடந்த 2007-ம் ஆண்டு இரு நாடுகளும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி இரு நாடுகளும் இணைந்து ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான 5-ம் தலைமுறை போர் விமானங்களை தயாரிக்க திட்டமிட்டன.
 • Reviews


 • கனடாவில் உலக சமஸ்கிருத மாநாடு இன்று தொடக்கம்

  கனடாவில் நடைபெறும் உலக சமஸ்கிருத மாநாட்டை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று தொடங்கிவைக்கிறார். உலக சமஸ்கிருத மாநாடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இதுவரை மூன்று முறை இம்மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், கனடாவின் வான்குவர் நகரில் 17ஆவது உலக சமஸ்கிருத மாநாடு ஜூலை 9ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த மாநாட்டை இன்று (ஜூலை 9) தொடங்கி வைக்கிறார். சமஸ்கிருத புத்தமத புத்தகங்கள், வேத இலக்கியத்தில் பெண்களின் கல்வி மற்றும் வரலாறு, பகவத் புராண அறிமுகம் தொடர்பான உரைகள் இடம்பெறவுள்ளன. ஐந்து நாட்கள் நடைபெறும் மாநாட்டில் பல்வேறு தலைப்புகளின் கீழ் 500க்கும் மேற்பட்ட குறிப்புகள் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சர்வதேச அளவில் சமஸ்கிருதத்தைப் பாதுகாப்பதும் ஊக்குவிப்பதும் இந்த மாநாட்டின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • 18,500 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்: துருக்கி அரசு அதிரடி முடிவு

  துருக்கியில் ராணுவ புரட்சியில் பங்கு கொண்டதாக கூறி 18,500 அரசு ஊழிர்களை அந்நாட்டு அரசு பணி நீக்கம் செய்துள்ளது. துருக்கியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், ராணுவ புரட்சி நடந்தது. மக்களின் உதவியோடு அந்த புரட்சி முறியடிக்கப்பட்டது. துருக்கியில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் எர்டோகன், தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். முன்பு இருந்ததை விட அதிகப்படியான அதிகாரங்களை கொண்ட அதிபராக அவர் பதவியேற்க உள்ளார்.
 • Reviews


 • நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் ஈரானில் ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை

  ஈரானில் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் 8 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் 7-ம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள நாடாளுமன்றம் மற்றும் அயதொல்லா ருஹொல்லா கொமேனியின் நினைவிடத்தின் மீது ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இவ்விரு சம்பவங்களிலும் 18 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அதிக அளவில் மரண தண்டனையை நிறைவேற்றும் நாடுகளில் ஒன்றாக ஈரான் விளங்குகிறது. எனினும், ஒரே நாளில் அதிகம் பேருக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது அரிது. 2007-ம் ஆண்டு பலாத்கார வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு இப்போதுதான் அதிக அளவாக 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது
 • Reviews


 • இலங்கையில் இருந்து ‘தி புரோஸன் பயர்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை

  இலங்கையில் இருந்து முதல்முறையாக ஆஸ்கர் விருதுக்கு ‘தி புரோஸன் பயர்’ என்ற சிங்களத் திரைப்படம் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி.) நிறுவிய ரோகண விஜயவீரவின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குநர் அனுருத்த ஜயசிங்க இயக்கியுள்ள 'கின்னேன் உபன் சீத்தல' எனும் சிங்களத் திரைப்படம் (தி புரோஸன் பயர்-வுhந குசழணநn குசைந) எடுக்கப்பட்டுள்ளது. ரோகண விஜயவீரவின் கதாபாத்திரத்தில் முன்னணி சிங்கள திரைப்பட நடிகர் கமல் ஹத்தர ஆராச்சி நடித்துள்ளார
 • Reviews


 • பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் தீர்ப்பு

  பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.74 கோடி(80 லட்சம் பவுண்ட்) அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நவாஸ் ஷெரீப் மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், 2 மில்லியன் பவுண்ட் அபராதமும் விதிக்கப்பட்டது.
 • Reviews


 • .இந்தியா வருகிறார் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்

  தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் முதல் முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். ஜூலை 8 லிருந்து ஜூலை 11 ஆம் தேதிவரை மூன் ஜே இன் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தில் மூன்னுடன் மூத்த தென்கொரிய அதிகாரிகள் உடன் வரவுள்ளனர். இந்த சுற்றுப்பயணத்தில் தென் கொரியா - இந்தியா இடையே பல்வேறு தொழில் சார்ந்த கூட்டங்களில் அவர் கலந்து கொள்கிறார். மேலும் கல்வி, மாணவர்கள், சுற்றுலா பயணிகள் குறித்து இரு நாடுகளின் எதிர்காலத் திட்டங்கள் சார்ந்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துகிறார்.
 • Reviews