Logo

Current Affairs

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்
All Current Affairs

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் கடந்த 1942-ம் ஆண்டு ஜனவரி 8-ந்தேதி பிறந்தவர் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங். அதிகமான அறிஞர்கள் நிறைந்த குடும்பத்தில், மருத்துவ ஆராய்ச்சியாளருக்கு மகனாக பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங், தனது சிறு வயதிலேயே ஆராய்ச்சித்திறன் பெற்றிருந்தார். ஹெர்ட்போர்ட்சயரில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த ஹாக்கிங், ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை பயின்றார். தனது 16-வது வயதிலேயே நண்பர்களுடன் இணைந்து கணித கோட்பாடுகளை தீர்ப்பதற்கான கணினி ஒன்றை உருவாக்கி சாதித்தார். அண்டவியலில் ஆய்வு செய்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற இவர், அந்த பல்கலைக்கழகத்திலேயே கணித பேராசிரியராக தனது பணியை தொடங்கினார். இவரது 21-வது வயதில் மிகவும் அரிதான ‘அமியோட்ராபிக் லேட்டரல் ஸ்கிலிராசிஸ்’ என்ற நரம்பியல் நோய், ஹாங்கிங்கை தாக்கியது. இதனால் கை, கால்கள் உள்ளிட்ட உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததுடன், வாழ்க்கை முழுவதும் சக்கர நாற்காலியிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. நரம்பியல் நோயால் உடலியக்கம் பாதிக்கப்பட்ட நிலையிலும், விஷேசமாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார். குவாண்டம் கோட்பாடு, அண்டவியல், கருந்துளை ஆராய்ச்சியில் அவரது பங்கு முக்கியமானது. பல்வேறு அறிவியல் மாநாட்டில் பங்கேற்று மக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியாக திகழ்ந்த, ஸ்டீபன் ஹாக்கிங், கடந்த மார்ச் 14-ம் தேதி அதிகாலை தனது 76-வது வயதில் காலமானார். லண்டன் கேம்பிரிட்ஜில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்தது. வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியிலுள்ள அறிவியலாளர் ஐசக் நியூட்டனின் கல்லறைக்கு அருகே ஹாக்கிங்கின் சாம்பல் ஜூன் 15-ம் தேதி அடக்கம் செய்யப்படும். கடந்த 1727ஆம் ஆண்டு இறந்த சர் ஐசக் நியூட்டன் உடலும், அதற்குப் பின்னர் 1882ல் உயிரிழந்த சார்லஸ் டார்வின் உடலும் வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் அடக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Reviews


 

விண்வெளியில் நீண்ட நேரம் நடந்து வீரர்கள் சாதனை

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, ஜப்பான், கனடா, உள்ளிட்ட 17 ஐரோப்பிய நாடுகளின் விண்வெளிகழகமும் இணைந்து, 150 பில்லியன் டாலர் செலவில் பூமிக்கு மேல் 400 மைல் தொலைவில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்கி வருகிறது. இங்கு 6 மாதத்துக்கு ஒரு முறை 3 வீரர்கள் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், தற்போது ரஷியாவை சேர்ந்த அலெக்சாண்டர் மிசுர்கின், ஆன்டன் ஸ்காப்லெரோவ் என்ற 2 வீரர்கள் விண்வெளி ஆய்வகத்தில் தங்கி கட்டுமான பணிகளை செய்து வருகின்றனர். நேற்று வீரர்கள் 2 பேரும் ஆய்வகத்தைவிட்டு வெளியே வந்து விண்வெளியில் நடந்தனர். இந்திய நேரப்படி இரவு 9.04 மணிக்கு தொடங்கி அதிகாலை 5.17 மணிவரை என மொத்தம், 8 மணி 13 நிமிட நேரம் விண்வெளியில் நடந்தனர். இதன்மூலம் வீரர்கள் இருவரும், விண்வெளியில் நீண்ட நேரம் நடந்தவர்கள் என்ற சாதனை படைத்தனர்.
Reviews


 

கோல்டன் க்ளோப் விருது

ஹாலிவுட்டின் சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை அங்கீகரிக்கும் கோல்டன் க்ளோப் விருது வழங்கும் விழா லாஸ் ஏஜல்ஸ் நகரில் நடைபெற்றது. விருதுகள் பட்டியல் சிறந்த திரைப்படம் டிராமா: Three Billboards Outside Ebbing, Missouri சிறந்த இயக்குநர்: குல்லரிமொ டெல் டொரொ, திரைப்படம் - The Shape of Water சிறந்த கதாநாயகன்: கேரி ஓல்டுமேன், திரைப்படம் -Darkest Hour சிறந்த கதாநாயகி: பிரான்சஸ் மெக்டோர்மண்ட் , திரைப்படம் - Three Billboards Outside Ebbing, Missouri சிறந்த நகைச்சுவை திரைப்படம் (Musical or Comedy) : Lady Bird சிறந்த நகைச்சுவை நடிகர் (Musical or Comedy): ஜேம்ஸ் பிரான்கோ, திரைப்படம் - The Disaster Artist சிறந்த நகைச்சுவை நடிகை ( Musical or Comedy): சாவ்ரைஸ் ரோனன், திரைப்படம்- Lady Bird சிறந்த துணை நடிகர்: சாம் ராக்வெல், திரைப்படம் -Three Billboards Outside Ebbing, Missouri சிறந்த துணை நடிகை: அலக்சாண்ட்ரே டெல்பிலாட், திரைப்படம் -The Shape of Water சிறந்த பாடல்: This is Me, திரைப்படம்- The Greatest Showman சிறந்த திரைக்கதை: மார்டின் , திரைப்படம் - Three Billboards Outside Ebbing, Missouri' சிறந்த பிறமொழி திரைப்படம் : In the Fade
Reviews


 

உலகத்திலேயே பெரிய ராக்கெட்

நாசாவால் விண்ணில் ஏவ முடியாத ராக்கெட்டை தற்போது ஒரு தனியார் நிறுவனம் செய்துமுடித்துள்ளது. அந்த வகையில் ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் மிக சிறப்பான பணிகளை செய்து வருகிறது. அமெரிக்காவில் இருக்கும் கோடிஸ்வரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் என்பவரின் நிறுவனம் இது. இந்த நிறுவனம் உலகத்திலேயே பெரிய ராக்கெட்டை ஏவ இருக்கிறது. இந்த ராக்கெட் இன்று மதியம் 12 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டுக்கு ஃபல்கான் ஹெவி என்று பெரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ராக்கெட்டுக்கு 18 போயிங் விமானங்களுக்கு இணையான சக்தியும், 747 ஜெட் விமானங்களுக்கு இணையான வேகத்தை கொண்டது. மேலும் இந்த ராக்கெட் மூலம் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடியும். மேலும் இதன் மூலம் 64 மெட்ரிக் டன் எடையை பூமியின் சுற்றுப்பாதயிலும் , 16 மெட்ரிக் டன் எடையை செவ்வாய் கிரகத்திலும் நிறுத்த முடியும். நாசா 1970 களில் விண்ணில் ஏவிய சார்ட்ரன் வி ராக்கெட்டை விட இது பல மடங்கு பெரியது. இந்த ராக்கெட் தற்போது எந்த காரணத்திற்காகவும் ஏவப்படவில்லை . ஆனால் எதிர்காலத்தில் இதை குறிப்பிட்ட காரணங்களுக்காக அனுப்ப திட்டம் இருக்கிறது.
Reviews


 

கூடங்குளம் 2வது அணு உலையில் மின்னுற்பத்தி தொடங்குகிறது

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் 2வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்க உள்ளது.

கூடங்குளம் 2வது அணு உலையில் இன்றிரவு அல்லது நாளை காலை மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என்று அணு உலை நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி 2வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு செப்டம்பர் 6ம் தேதி நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Reviews