Logo

Current Affairs

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்
All Current Affairs

நாட்டிலேயே முதன்முறையாக தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய திருநங்கை..

Transgender fb

நாட்டிலேயே முதன்முறையாக மேற்கு வங்கத்தை சேர்ந்த திருநங்கையான ரியா சர்க்கார் என்பவர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பணிபுரிந்துள்ளார்.

அம்மாநிலத்தில் இன்று நடைபெற்ற ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவின் போது, ரியா சர்க்கார் இந்த பெருமையை பெற்றார். கொல்கத்தாவில் உள்ள பல்லிகுன்கே அரசு மேல்நிலைப்பள்ளியில் ரியா சர்க்கார், தேர்தல் நடத்தும் அலுவலர் பணியை திறன்பட மேற்கொண்டார்.

Reviews


 

பதினாறு வயதில் ஆஸ்திரேலிய அணியில்: சாதனை படைத்த இந்திய வம்சவாளி வீரர்

Jason sanga

ஆஸ்திரேலியாவின் முன்னணி உள்ளூர் அணியான நியூ சவுத்வேல்ஸ் அணியில், 16 வயதில் இடம்பிடித்து இந்திய வம்சாவளி வீரர் ஜேசன் சங்கா சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் ஜூனியர் கிரிக்கெட் பல குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்துள்ள சங்கா, நியூசவுத் வேல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட மிக இளவயது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

அதிரடி பேட்ஸ்மேனாக அறியப்பட்டுள்ள ஜேசன் சங்கா, பாகிஸ்தான் ஜுனியர் அணிக்கெதிரான போட்டியில் அறிமுகமான, தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். இவரைப்போலவே 18 வயதான அர்ஜூன் நாயர் என்ற சுழற்பந்து வீச்சாளரையும் அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

Reviews


 

ஒலிம்பிக் போட்டி தூதராக சச்சின் டெண்டுல்கர்?

Sachin tendulkar

ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான நல்லெண்ண தூதராக சச்சின் தெண்டுகல்கரை நியமிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக தெண்டுல்கருக்கு ‌இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள‌ளது. அதில், பிரேசிலில் நடைபெறவுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவின் சார்பில் நல்லெண்ண தூதராக செயல்பட வேண்டும் என தெண்டுகருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரேசில் ஒலிம்பிக் போட்டிக்கான இந்தியாவின் நல்லெண்ண தூதராக இந்தி நடிகர் சல்மான்கான் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ள சூழலில், அதனை சமாளிக்கவே தற்போது சச்சின் தெண்டுல்கரையும் நல்லெண்ண தூதராக நியமிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Reviews


 

பொது இடங்களில் தண்ணீர் குடித்தால் 850 டாலர் அபராதம்: கடுமை காட்டும் வினோத தீவு

Drink

பொது இடங்களில் தண்ணீர் குடித்தால் 850 டாலர் அபராதம் விதிக்கப்படும் என்று புதிய சட்டத்தினை இபிஸா தீவு நடைமுறைப்படுத்தியுள்ளது.

மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள சுற்றுலாத் தீவுகளில் முக்கியமானது இபிஸா தீவு. ஐரோப்பிய யூனியனில் உள்ள இந்த தீவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகளவு இருக்கும்.

இதனால், போது இடங்களில் மது அருந்திவிட்டு வருபவர்களால் பிரச்னைகள் ஏற்படுவதாகப் புகார் எழுந்தது. இதைக் கட்டுப்படுத்த அந்த தீவின் நிர்வாகம், பொது இடங்களில் மது, குளிர்பானம் மற்றும் தண்ணீர் குடித்தால் கூட 850 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டத்தினை அமல்படுத்தியுள்ளது.

Reviews


 

வில்வித்தை உலகக்கோப்பை இறுதியில் இந்திய மகளிர் அணி

இந்திய வில்வித்தை வீராங்கனைகள் தீபிகா குமாரி, பொம்பைலா தேவி, லஷ்மி ராணி மஜ்ஹி. | கோப்புப் படம்: பிடிஐ.

சீனாவில் நடைபெறும் வில்வித்தை உலகக் கோப்பையில் ஜெர்மனியை அதிர்ச்சித் தோல்விக்குள்ளாக்கி இந்திய மகளிர் ரீகர்வ் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

ஜெர்மனி மகளிர் அணியை 5-3 என்று வீழ்த்திய இந்திய மகளிர் ரீகர்வ் அணி இறுதிப் போட்டியில் சீன தைபே அணியைச் சந்திக்கிறது.

தீபிகா குமாரி, லயிஷ்ராம் பொம்பல்யா தேவி, லஷ்மிராணி மஜ்ஹி ஆகியோர் தனிப்பட்ட வீரர்கள் போட்டிப் பிரிவில் ஏமாற்றமளித்தாலும் ஜெர்மனி அணிக்கு எதிராக ஒரு அணியாக எழுச்சியுற்று 5-3 என்று வெற்றி பெற்று ஜெர்மனிக்கு அதிர்ச்சியளித்துள்ளனர்.

மற்றொரு ஆட்டத்தில் 7-ம் தரவரிசையில் உள்ள சீன தைபே அணியினர் இவர்களை விட தரவரிசையில் உயர்ந்த இடத்தில் உள்ள ரஷ்யாவை 6-0 என்று அதிர்ச்சிகரமாக தோல்வியுறச் செய்துள்ளது.

முதல் செட்டில் 2-0 என்று இந்திய மகளிர் அணி முன்னிலை பெற, அடுத்ததாக ஜெர்மனி வீராங்கனைகள் லிசா அன்ரு, எலினா ரிக்டர், கரினா விண்டர் ஆகியோர் அபாரமாக இலக்குகளைத் தாக்கி 57 புள்ளிகளுடன் நெருங்கினர், ஆனால் தொடர்ந்து அபாரமாக ஆடிய இந்திய மகளிர் அணி 3-1 என்று முன்னிலை பெற்றது. 3-வது செட்டில் இந்திய வீராங்கனைகள் சிறிய அளவில் தவறிழைக்க ஜெர்மனி நெருக்கியது. ஆனால் மீண்டும் இலக்குகளை குறிவைப்பதில் சோடை போகாத இந்திய மகளிர் அணி ஜெர்மனியை வீழ்த்தியது.

இதே ரீகர்வ் பிரிவில் இந்திய ஆடவர் அணி அரையிறுதியில் ஹாலந்து அணியிடம் 4-5 என்று போராடி தோல்வி தழுவியது.

இதனையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய ஆடவர் ரீகர்வ் அணி பிரிட்டனைச் சந்திக்கிறது.
Reviews