Logo

Current Affairs

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்
All Current Affairs

தமிழகம் முழுவதும் பாரம்பரிய உணவு திருவிழா நடத்த திட்டம்.

தமிழகம் முழுவதும் பாரம்பரிய உணவு திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் திருமதி. சரோஜா தெரிவித்துள்ளார். சேலத்தில் இத்தகைய திருவிழாவை நேற்று தொடங்கி வைத்து அவர் பேசினார். சிறுதானியம் மற்றும் பாரம்பரிய உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் 140 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் திருமதி. சரோஜா கூறினார்.
Reviews


 

சிங்கப்பூரில். ஓட்டுநர் இல்லாமல் பயணம் செய்யக்கூடிய டாக்ஸிகள் அறிமுகம்.

சிங்கப்பூரில், உலகிலேயே முதன் முறையாக ஓட்டுநர் இல்லாமல் பயணம் செய்யக்கூடிய டாக்ஸிகள் நேற்று பரிசோதனை அடிப்படையில் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த புரட்சிகரமான தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய நிறுவனங்களான UBER-ஐ விஞ்சி இது தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ – டாக்ஸி சேவை சிறிய ஆராய்ச்சி வளாகத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அமெரிக்க நகரமான Pitsburgh-ல் ஓட்டுநர் இல்லாத கார்களை அறிமுகப்படுத்த போவதாக, டாக்ஸி நிறுவனமான Uber கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டிற்குள் ஓட்டுநர் இல்லா கார்களை விற்பதற்கு ஸ்வீடனை சேர்ந்த Volvo நிறுவனத்தின் கூட்டு முயற்சியுடன், 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் நிறுவனம் ஒன்றை அது தொடங்கியது. Fiat Chrysler நிறுவனத்துடன் இணைந்து கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான Alphabet நிறுவனம், 2016 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தாமே ஓடக்கூடிய வாகனங்களை விரிவுபடுத்த உள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Reviews


 

இந்தியா – சைப்ரஸ் நாடுகளுக்கு இடையே திருத்தப்பட்ட இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு உடன்படிக்கை.

இந்தியா – சைப்ரஸ் நாடுகளுக்கு இடையே திருத்தப்பட்ட இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. எங்கு வசிக்கிறார் என்பதைப் பொருத்து இல்லாமல், பங்குகளின் மாற்றம் மீதான மூலதன ஆதாயத்தின் வளம் அடிப்படையிலான வரிவிதிப்புக்கு இது வகைசெய்கிறது. இந்த உடன்படிக்கையால், சைப்ரசில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் மூலதன ஆதாயம் இப்போது இந்தியாவில் வரி வசூலிக்கப்படும் இரட்டை வரியிலிருந்து நிவாரணம் அளிக்கப்படும். இந்தியா – பிஜி நாடுகளிடையே புதிய விமான சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், பிஜி தீவின் எந்தவொரு இடத்திற்கும் இந்திய விமானம் செல்ல அனுமதிக்கப்படும். அதேசமயம் தில்லி, மும்பை சென்னைக்கு நேரடி இயக்கங்களை பிஜி விமானங்கள் மேற்கொள்ளலாம் என்று அந்த உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviews


 

மஹாராஷ்டிரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தலா 10 நகரங்களை திறந்தவெளியில் மலம் கழிக்கும் முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட நகரங்கள் என மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் சான்று வழங்கியுள்ளது.

மஹாராஷ்டிரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தலா 10 நகரங்களை திறந்தவெளியில் மலம் கழிக்கும் முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட நகரங்கள் என மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் சான்று வழங்கியுள்ளது. தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் மூன்றாவது தரப்பு ஆய்வின் படி இந்த சான்று வழங்கும் பணிகளை அமைச்சகம் துவக்கி உள்ளது. இதனிடையே இந்த இயக்கத்தின் குறிக்கோள்களை எட்ட, திட்ட செயல்பாடுகள் குறித்த தரவுகளை மாநிலங்களிடம் இருந்து தொடர்ந்து பெறுவதை   உறுதி செய்யுமாறு, மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு,  அரசு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.  நகர்ப்புறங்களில் தூய்மை இந்தியா இயக்கத்தின் முன்னேற்றம் குறித்து, அமைச்சர் நேற்று ஆய்வு செய்ததாக, அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. மஹராஷ்ட்ராவின் 100 நகரங்கள் உட்பட 7 மாநிலங்களில் உள்ள 141 நகரங்கள், திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தில் இருந்து முற்றிலுமாக விடுபட்டுவிட்டதாக கூறியுள்ளன என்றும் இது உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Reviews


 

சிந்து, சாக்ஷி, தீபாவுக்கு கேல் ரத்னா விருது: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்

ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், இறுதிச்சுற்றுவரை முன்னேறிய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கி கெளரவித்தார்.

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, "விளையாட்டு மற்றும் சாகசங்களுக்கான தேசிய விருது' வழங்கும் நிகழ்ச்சி, தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா, துரோணாசார்யா, தியான்சந்த் உள்ளிட்ட விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவற்றை வழங்கி கெளரவித்தார்.

இதில், ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து, மல்யுத்தப் பிரிவில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக், மகளிர் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் 4-ஆவது இடம் பிடித்த தீபா கர்மாகர் ஆகியோர் கேல் ரத்னா விருது பெற்றனர்.

அவர்களுடன், ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கமும், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் ஜிது ராயும் கேல் ரத்னா விருது பெற்றார்.

அவர்களுக்கு பதக்கமும், சான்றிதழும், ரூ.7.5 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.

முதல் முறை: ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது 4 பேருக்கு வழங்கப்படுவது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பாக கடந்த 2009-ஆம் ஆண்டு குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், வீராங்கனை மேரி கோம், மல்யுத்த வீரர் சுஷீல் குமார் ஆகிய மூவருக்கு கேல் ரத்னா விருது ஒரே சமயத்தில் வழங்கப்பட்டது.

அர்ஜுனா விருது: ரியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 3000 மீ. ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் 10-ஆவது இடம் பிடித்த லலிதா பாபர், ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றவரும், உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவருமான சிவ தாபா, ஹாக்கி வீரர் ரகுநாத், வீராங்கனை ராணி ராம்பால் ஆகியோர் அர்ஜுனா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

அவர்களோடு, ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, ஆடவர் கால்பந்து அணி கோல்கீப்பர் சுப்ரதா பால், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அபூர்வி சந்தேலா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோரும் அர்ஜுனா விருது பெற்றனர். ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று காலில் காயம் அடைந்துள்ள மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், சக்கர நாற்காலியில் வந்து விருதை பெற்றுக் கொண்டார்.

அவர்கள் அனைவருக்கும் வெண்கலச் சிலையிலான விருது, ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இதில் நீரஜ் சோப்ரா, 20 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கத்துடன் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஹானே பங்கேற்கவில்லை: இவர்களோடு, இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்க்ய ரஹானேவுக்கும் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டிருந்தது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க அவர் அமெரிக்கா சென்றுள்ளதால், விருது நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

துரோணாசார்யா விருது: இந்த ஆண்டுக்கான துரோணாசார்யா விருதை, ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகரின் பயிற்சியாளர் விஸ்வேஷ்வர் நந்தி, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் கோலியின் தனிப் பயிற்சியாளர் ராஜ் குமார் சர்மா ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

அவர்களோடு, நாகபுரி ரமேஷ் (தடகளம்), சாகர் மால் தயாள் (குத்துச்சண்டை), பிரதீப் குமார் (நீச்சல்), மஹாவீர் சிங் (குத்துச்சண்டை) ஆகியோரும் துரோணாசார்யா விருது பெற்றனர்.

அவர்களுக்கு, வெண்கலச் சிலையிலான விருது, ரூ.7 லட்சம் ரொக்கப் பரிசு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

தியான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது: விளையாட்டுத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக தடகள வீராங்கனை சத்தி கீதா, ஹாக்கி வீரர் சில்வனஸ் டங் டங், துடுப்புப் படகு வீரர் ராஜேந்திர பிரகலாத் ஷெல்கே ஆகியோருக்கு தியான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

தியான்சந்த் விருது வென்றோருக்கு, ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு, பட்டயம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

Reviews