Logo

Current Affairs

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்
All Current Affairs

உதய் திட்டத்தில் இணைகிறது தமிழகம்

 

கடன் சுமையில் உள்ள மின் விநியோக நிறுவனங்களை மீட்டெடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மத்திய அரசின் உதய் திட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் விரைவில் இணையவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உதய் திட்டத்தில் இணைவது தொடர்பாக தமிழகம், புதுவை, மத்தியப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநில அரசுகளுடன் மத்திய மின்சாரத் துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

இதில், மேற்குறிப்பிட்ட 4 மாநிலங்களும் இத்திட்டத்தில் விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தில் இணைவது தொடர்பான ஒப்பந்தத்தில் மத்திய பிரதேச அரசு இந்த வாரத்துக்குள் கையெழுத்திடும் எனத் தெரிகிறது.

உதய் திட்டத்தில் தமிழகத்தை இணைப்பது குறித்து அந்த மாநில முதல்வர் ஜெயலலிதாவை மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழகத்தைப் பொருத்தவரை, அங்குள்ள மின் விநியோக நிறுவனங்களின் மீதான கடன்தொகை ரூ.67 ஆயிரம் கோடியாக உள்ளது. உதய் திட்டத்தில் இணையும்பட்சத்தில், அடுத்த மூன்றாண்டுகளில் இந்த நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.18,600 கோடி கிடைக்கும்.

மூன்றாண்டுகளுக்குப் பின்னர் அந்நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.22,420 கோடி கிடைக்கும்.

புதுவையைப் பொருத்தவரை, அங்குள்ள மின் விநியோக நிறுவனங்களின் மொத்த கடன்தொகை ரூ.423 கோடியாக உள்ளது. உதய் திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் மூன்றாண்டுகளில் இந்நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.440 கோடி கிடைக்கும் என அந்த அதிகாரி தெரிவித்தார்.

Reviews


 

இலங்கை ரயில்வேயை மேம்படுத்த ரூ.2,130 கோடி இந்தியா நிதியுதவி

Image result for இலங்கை ரயில்வே

இலங்கை ரயில்வேயை மேம்படுத்த இந்திய அரசு ரூ.2,130 கோடி நிதியுதவி வழங்க அனுமதி அளித்துள்ளது. இலங்கையின் ரயில்வே  உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்திய அரசு நிதியுதவி அளிப்பது தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் டெல்லியில் ஆலோசனை கூட்டம்  நடந்தது. இதில், இரு நாட்டு அமைச்சர்கள், ரயில்வே துறை அதிகாரிகள், வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  இலங்கையில்  ரயில்வே கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்தியா நிதியுதவி செய்வதென தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இலங்கை அரசின் செய்தித்தொடர்பாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலகே நேற்று கூறுகையில், ‘‘இலங்கையில் தமிழர்கள் அதிகம்  வசதிக்கும் பகுதியில் ரயில்வே உள்கட்டமைப்புகளை மேம்படுத்த இந்திய அரசு 31.8 கோடி டாலர் (சுமார் ரூ.2,130 கோடி) வழங்கியுள்ளது.

இதில் வடக்கு மத்திய மாகாண பகுதியில் மகோவில் இருந்து அனுராதாபுரம் வரையிலும், அனுராதாபுரம் முதல் ஓமந்தை வரையிலும் சிக்னல்களை  நவீனப்படுத்துவது, குளிர்சாதன வசதியுள்ள ரயில் பெட்டிகள், இன்ஜின்கள் வாங்குவது உள்பட ரயில்வேயை நவீனப்படுத்துவதற்கான பணிகள்  மேற்கொள்ளப்படும்’’ என்றார். இதற்கு முன்பு இலங்கை ரயில்வேக்காக இந்திய அரசு 99.6 கோடி டாலர் (சுமார் ரூ.6,673 கோடி) வழங்கியுள்ளது.
Reviews


 

தமிழகத்தில் ஆராய்ச்சி மையத்தை தொடங்குகிறது யமஹா


யமஹா நிறுவனம் தமிழகத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை தொடங்க உள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதுகுறித்து இந்திய யமஹா மோட்டார் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் நிர்வாக இயக்குநர் யாஷுவோ இஷிகரா கூறியதாவது:

யமஹா நிறுவனம், உத்தரபிரதேசம் சர்ஜாபூரில் ஏற்கெனவே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைத்துள்ளது. இந்த நிலையில், இரண்டாவதாக தமிழகத்தில்  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை யமஹா நிறுவனம் புதிதாக தொடங்க உள்ளது.

ரூ.66 கோடி முதலீட்டில் சென்னை அருகே உள்ள காஞ்சிபுரத்தில் இப்புதிய ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது.

இதையடுத்து, இத்தாலி, தைவான், சீனா மற்றும் தாய்லாந்துக்கு அடுத்தபடியாக வெளிநாடுகளில் யமஹா நிறுவனத்துக்கு இருக்கும் ஐந்தாவது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு தலைமையகமாக இது விளங்கும்.

இந்த புதிய மையத்தில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு தேவையான வாகனங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் யமஹா நிறுவனம் வரும் 2018-ஆம் ஆண்டுக்குள் ரூ.1,500 கோடியை முதலீடு செய்ய ஏற்கெனவே உறுதியளித்துள்ளது என்றார் அவர்.

Reviews


 

ரிலையன்ஸ் ஜியோ சேவை அக்டோபரில் தொடக்கம்


ரிலையன்ஸ் ஜியோ 4ஜி மொபைல் சேவை அக்டோபர் மாதத்திலிருந்து அனைவருக்கும் கிடைக்கும் என்று பங்குச் சந்தை தரகு நிறுவனமான சிஎல்எஸ்ஏ தகவல் வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ 4 ஜி சேவையை வழங்குவதற்கான பரிசோதனை முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. வரும் அக்டோபர் மாதத்திலிருந்து முழு அளவிலான வர்த்தகரீதியான சேவையை அளிக்க உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

சுமார் 10 கோடி வாடிக்கையாளர்களுக்கு, மாதத்துக்கு சாதாரணமாக 5 ஜிபி டேட்டா பதிவிறக்க வசதியை அளிக்க முடியும் என்றும் ரிலையன்ஸ் நம்புகிறது. அக்டோபர் மாதம் பண்டிகை காலம் என்பதால் அப்போது அறிமுகப்படுத்த ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது

Reviews


 

இந்திய கடல் பகுதியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு

இந்திய பெருங்கடல் பகுதியில் மிக அதிக அளவிலான இயற்கை எரிவாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய எண்ணெய் எரிவாயு அமைச்சகம் மற்றும் அமெரிக்க நிலவியல் துறை இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது.

இப்பகுதியில் அதிக அடர்வு கொண்ட இயற்கையான எரிவாயு ஐஸ் கட்டி போல உறை நிலையில் வங்கக் கடலில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியப் பெருங்கடலில் இதுபோன்ற எரிவாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். இதிலிருந்து எரிவாயு உருவாக்க முடியும் என்று அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை எரிவாயு ஹைட்ரேட் இயற்கையாக உருவாவது. ஐஸ் கட்டியுடன் இணைந்த இந்த கூட்டுப் பொருள் இயற்கை வாயுவாக தண்ணீரில் அதிலும் கடல் பகுதியில் அதிலும் துருவ பிராந்தியத்தில் காணப்படும். வாயு ஹைட்ரேட் சேர்க்கை மற்ற வாயு வளங்களை விட மிகவும் அதிகமாகும்.

2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் உள்ள ஹைட்ரேட் வாயு வளத்தை கண்டறிவதற்கு இந்தியா ஒப்புக் கொண்டது. இதன்படி சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

வாயு ஹைட்ரேட் அதாவது திரவ நிலை வாயு இது இயற்கை வாயுவின் மிகப் பெரிய வளமாகும். இது கடல்பகுதியில் படியும். இந்தியாவில் இந்த வளம் 1,894 டிரில்லியன் கியூபிக் மீட்டர் அளவுக்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு, கிழக்கு மற்றும் அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் இது இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வங்கக் கடல் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள இயற்கை எரிவாயு படிவம் சர்வதேச அளவில் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்வதற்கு உதவும். ஆனால் இதை மிகவும் பாதுகாப்புடன் எரிவாயுவாக பிரித்தெடுக்க வேண்டும் என்று அமெரிக நிலவியல் ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வால்டர் குய்ட்ரோஸ் குறிப்பிட்டார்.

அடுத்தகட்டமாக இந்த பகுதி மணல் ஆய்வு செய்யப்பட்டு எரிவாயு உற்பத்தி எந்த அளவுக்கு பொருளாதார ரீதியில் லாபகரமானது என ஆய்வு செய்யப்படும்.

Reviews