Logo

Current Affairs

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்
All Current Affairs

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

35CC6CC200000578-3666628-Finance_Minister_Arun_Jaitley_has_extended_the_salary_hike_to_an-m-18_1467244691661

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நேற்று மாலை புது தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, 7 ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரை இந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும், நிலுவைத் தொகை இந்த ஆண்டே வழங்கப்பட்டுவிடும் என்றும் கூறினார். 47 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 53 லட்சம் ஓய்வூதியதாரர்கள் இதனால் பயனடைவார்கள். ஏழாவது ஊதியக் குழுவின் படி, ஒரு அரசு ஊழியரின் குறைந்தபட்ச சம்பளம் 18,000 ரூபாயாகவும், அதிகபட்ச சம்பளம் 2,50,000 ரூபாயாகவும் இருக்கும். தற்போது இது முறையே 7,000 ரூபாயாகவும், 90,000 ரூபாயாகவும் உள்ளது. தற்போது 3,500 ரூபாயாக உள்ள ஓய்வூதியம் 9,000 ரூபாயாக அதிகரிக்கும். ஏழாவது ஊதியக் குழு ஒப்புதலின் படி, நடப்பு நிதியாண்டில், அரசுக்கு, ஏறத்தாழ ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவு பிடிக்கும். தனியார்த் துறை ஊதியத்துக்கு நிகராக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Reviews


 

இஸ்ரேல் உதவியுடன் தயாரிக்கப்பட்ட ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா


இஸ்ரேல் உதவியுடன் மேம்படுத்தப்பட்ட புதிய ஏவுகணையை இந்தியா இன்று ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக பரிசோதித்தது.  ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூர் ஏவுதளத்தில் மொபைல் லாஞ்சர் மூலமாக ஏவுகணை ஏவப்படது. இந்த ஏவுகணை இலக்குகளை மிக துல்லியமாக தாக்கி அழித்ததாக ராணுவ மேம்பாட்டு ஆராய்ச்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 50 முதல் 70 கி.மீட்டர் வரை சென்று இலக்குகளை தாக்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணை முதலில் நேற்று பரிசோதிப்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் நேற்று ஏவுவது தள்ளி வைக்கப்பட்டதையடுத்து இன்று பரிசோதிக்கப்பட்டது.
 
தேவையான பரிசோதனைகள் முடிந்த பின்னர் இந்த ஏவுகணை மூன்று படைபிரிவுகளிலும் இணைத்துக்கொள்ளப்படும். முன்னதாக ஏவுகணை பரிசோதிக்கப்படும் போது பாதுகாப்பு நடவடிக்கையாக, ஏவுதளத்திற்கு அருகாமையில் உள்ள  கிராம மக்களை அங்கிருந்து அதிகாரிகள் வெளியேற்றினர். அதேபோல், மீனவர்கள் கடலுக்குள் செல்லவும்
Reviews


 

முதல்முறையாக இந்திய ராணுவத்தில் ஒருங்கிணைந்த தகவல்தொடர்பு வசதி அறிமுகம்


ராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் சிறப்பு பாதுகாப்பு படை ஆகியவை ஒன்றுக்கொன்று கட்டளைகளையும், தகவல்களையும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு உடனுக்குடன் பகிர்ந்து கொள்வதற்கு இந்தியாவில் முதல்முறையாக ஒருங்கிணைந்த தகவல்தொடர்பு அமைப்பு (Defence Communication Network) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், தீவிரவாத தாக்குதல்களின் போதோ அல்லது பதற்றமான பாதுகாப்பு சூழ்நிலைகளின் போதோ ராணுவம் தனது கட்டளைகளையும், முடிவுகளையும் முப்படைகளுக்கு உடனடியாக தெரியப்படுத்த இயலும். இந்த நெட்வொர்க் மிகவும் பாதுகாப்பானது. ரூ.600 கோடி செலவில் எச்.சி.எல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த நெட்வொர்க் துல்லியமான உயர் தர தொலைபேசி உரையாடல்கள், வீடியோ உரையாடல்கள் மற்றும் இண்டர்நெட் சேவைகளை வழங்கக்கூடியது. ராணுவ வாகனங்களில் இவற்றை தொடர்பு கொள்ளும் வகையில் கருவிகள் பொருத்தப்படுவதால் சாட்டிலைட் மூலமாகவும் தொடர்பு கொள்ளும் வசதி இதில் உண்டு.

இந்த வசதியை பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர் டெல்லி சவுத் பிளாக்கில் இன்று துவங்கி வைத்தார்.
Reviews


 

டிஜிடல் தொழில்நுட்பத்தை கணித்த ஆல்வின் டாஃப்லர் மரணம்டிஜிடல் தொழில்நுட்பத்தால் உலக அளவில் ஏற்படும் பெரும் மாற்றத்தைக் கணித்தவரான, தொழில்துறை வளர்ச்சிக்குப் பிந்தைய காலத்தின் குருவாகக் கருதப்படுபவருமான ஆல்வின் டாஃப்லர் மரணமடைந்தார்.

ஆல்வின் டாஃப்லர் கடந்த 1970-ம் ஆண்டு, தனது மனைவி ஹெய்டியுடன் இணைந்து, எதிர்கால அதிர்ச்சி (Future Shock) என்ற புத்தகத்தை வெளியிட்டார். உற்பத்தித் துறையில் இருந்து, கம்ப்யூட்டர் சார்ந்த தகவல் பொருளாதாரத்துக்கு இந்த சமூகம் மாறும் என்பதை அதில் கணித்திருந்தார். அந்த மாற்றங்கள், சில நேரங்களில், மலைக்க வைப்பதாக இருந்தாலும் கூட, மனித சமூகத்துக்கு ஆக்கப்பூர்வமானதாக இருக்கும் என்று அவர் அந்த நூலில் தெரிவித்திருந்தார்.
Reviews


 

தான்சானியா நாட்டில் மிகப்பெரிய ஹீலியம் எரிவாயு வயல் கண்டுபிடிப்பு.

தான்சானியா நாட்டில் மிகப்பெரிய ஹீலியம் எரிவாயு வயலை விஞ்ஞானிகள்

கண்டிபிடித்துள்ளனர். உலக அளவில் எரிவாயு சப்ளை குறைந்து வரும் நிலையில், இந்தக்

கண்டுபிடிப்பு முக்கியமானதாக இருக்கும் என டுர்ராம் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு

பல்கலைக்கழக நில இயல் அறிஞர்கள் கூறுகின்றனர். மருத்துவமனைகளில் பயன்படும்

எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள், விண்கலங்கள், தொலைநோக்கி, கதிரியக்கமானி ஆகியவற்றில்

ஹீலியம் வாயு பயன்படுத்தப்படுகிறது. இதுவரை, எண்ணெய் மற்றும் எரிவாயு

அகழ்வுப்பணிகளின்போது, ஹீலியம் குறைந்த அளவே கண்டறியப்பட்டிருந்தது.

தான்சானியாவின் கிழக்கு ஆப்பிரிக்க பள்ளத்தாக்கில் மிகப்பெரிய அளவில் ஹீலியம் வாயு

இருப்பதைக் கண்டறிந்துள்ளதால், இதன் ஒரு பகுதி மூலமாகக் கிடைக்கும் ஹீலியத்தை

மட்டும் பயன்படுத்தி 10 லட்சம் மருத்துவ எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்களை நிரப்ப முடியும் என்று

விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Reviews