Logo

Current Affairs

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்
All Current Affairs

எகிப்து பல்கலை.யில் முதலாவது இந்திய ஆய்வு மையம்

 
 
 
எகிப்தில் உள்ள புகழ்பெற்ற அயின் ஷாம்ஸ் பல்கலைக்கழகத்தில், இந்தியா தனது ஆய்வு மையத்தை நிறுவ உள்ளது. எகிப்து மட்டுமன்றி அரபு நாடுகளிலேயே ஏற்படுத்தப்படும் முதலாவது இந்திய ஆய்வு மையம் இதுவாகும்.
 இதற்கான ஒப்பந்தம், கலாசார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் மற்றும் அயின் ஷாம்ஸ் பல்கலைக்கழகம் இடையே கையெழுத்தாகியுள்ளது. கெய்ரோவில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், எகிப்துக்கான இந்தியத் தூதர் சஞ்சய் பட்டாசார்யா, அயின் ஷாம்ஸ் பல்கலைக்கழகத்தின் தலைவர் (பொறுப்பு) அப்துல் வஹாப் இஸாத் ஆகியோர் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
 இதுதொடர்பாக சஞ்சய் பட்டாசார்யா கூறுகையில், "எகிப்து பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வு மையம் அமைப்பதற்கான ஒப்பந்தம், வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். அந்த மையத்தை நிர்வகிப்பதற்காக, இந்தியக் கல்வியாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்' என்றார்.
இந்த பல்கலை கழகம் 1950 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது .
Reviews


 

கமல் ஹாசனுக்கு ஹென்றி லாங்லாயிஸ் விருது!

 

நடிகர் கமல் ஹாசனுக்கு பிரான்சு நாட்டின் ஹென்றி லாங்லாயிஸ் (Henri Langlois) விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவில் கமலுடைய பங்களிப்புக்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

ஹென்றி லாங்லாயிஸ், பிரெஞ்சு பட ஆவணக் காப்பாளர். பாரிஸ் நகரில் நடைபெற்ற விழாவில் இந்த விருது கமலுக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து கமல் ட்விட்டரில் தெரிவித்ததாவது: பாரிஸில் ஹென்றி லாங்லாயிஸ் விருதைப் பெற்றுள்ளேன். இதைக் கேட்க என்னுடைய குருவான அனந்து சார் இருந்திருக்கவேண்டும். அவரிடமிருந்துதான் ஹென்றி லாங்லாயிஸ் பற்றி கேள்விப்பட்டுள்ளேன் என்றார்.

Reviews


 

ஒரு ஊசி போதும் ஒரு வருடத்திற்கு ஆணுறை தேவை இல்லை புதிய மருந்து கண்டுபிடிப்பு


மேம்படுத்தப்பட்ட கருத்தடை சாதனங்களை உருவாக்குவது தொடர்பாக அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழக மருந்தியல் துறை பேராசிரியர் ரொனால்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அதில் புதிய வகை கருத்தடை மருந்து ஒன்றை உருவாக்கி உள்ளனர். 

ஸ்டீரின் அல்மாலிக் ஆசிட்டால் உருவாக்கப்பட்ட இந்த மருந்து சிறந்த கருத்தடை மருந்தாக செயல்படுகிறது. இதை முயல்களுக்கு கொடுத்து சோதனை நடத்தினார்கள். அப்போது அது வெற்றிகரமாக செயல்பட்டது. இந்த மருந்தை பயன்படுத்தும்போது இனப்பெருக்க ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் ஆண் விந்தில் உயிரணுக்கள் எண்ணிக்கை மிக குறைவாகி விடுகிறது.

இதனால் அந்த ஆண் உயிரணுவால் கருத்தரிக்க செய்ய முடியாது. இந்த மருந்தை ஊசி  மூலம் உடலில் செலுத்திக் கொள்ளலாம். இது ஒரு வருடத்திற்கு வேலை செய்யும்.
இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர் ரொனால்ட் கூறும்போது, இதை மனிதனுக்கு பயன்படுத்துவது சம்மந்தமாக இன்னும் சில ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியது உள்ளது. அதன்பிறகு இதை மனிதன் பயன்பாட்டுக்கு அனுப்பி வைப்போம். இது நல்ல செயல்பாடுகளை தருகிறது. முயல்களுக்கு கொடுத்து பரிசோதித்த போது நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக பயனை கொடுத்தது என்றார்.
Reviews


 

தற்கொலை முயற்சி வழக்கில் இருந்து சமூக ஆர்வலர் இரோம் சர்மிளா விடுதலை டெல்லி கோர்ட்டு தீர்ப்பு

 

மணிப்பூரில் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யக்கோரி, சமூக ஆர்வலர் இரோம் சர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு குழாய் மூலமே உணவு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2006–ம் ஆண்டு அக்டோபர் 4–ந்தேதி டெல்லி ஜந்தர்மந்தரில் சாகும் வரை உண்ணாவிரதம் நடத்தினார். அப்போது அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹர்விந்தர் சிங், இரோம் சர்மிளாவை விடுவித்து  தீர்ப்பு வழங்கினார்.

 
Reviews


 

குஜராத்தில் தான் வருமான வரி செலுத்தாதவர்கள் அதிகம்

 

குஜராத்தில் தான் வருமான செலுத்தாவர்கள் அதிகம் என மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரி பாக்கி வைத்துள்ளவர்களில் டாப் 20 பட்டியலில் 3 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் அதிக அளவில் வருமான வரி பாக்கி வைத்திருப்போர் பற்றிய விபரங்களை மத்திய நிதித்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது. கடந்த ஓராண்டாக வரி செலுத்தாமல் இருப்பவர்களில் 67 பேரின் வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. இதில் முதல் 24 இடங்களில் குஜராத்தை சேர்ந்தவர்களே உள்ளனர். இவர்கள் ரூ.576.8 கோடி வரை வரி பாக்கி வைத்துள்ளனர். அதிகம் வரிபாக்கி வைத்திருப்போரை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் குஜராத் முதலிடத்திலும், மகாராஷ்டிரா 2வது இடத்திலும், தெலுங்கானா 3வது இடத்திலும் உள்ளன.

தற்போது வெளியிடப்பட்டுள்ள 67 பேரும் 1980-81ம் ஆண்டு முதல் 2013-14 வரை ரூ.3200 கோடிக்கும் மேல் வரி பாக்கி வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. குஜராத்தில் வரிபாக்கி வைத்திருப்பவர்களில் பெரும்பாலோனோர் ஜவுளி தொழில், சினிமா விநியோகஸ்தர்கள், நகைக்கடை, பங்கு முதலீடு செய்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக அளவில் வரிபாக்கி வைத்திருப்போரின் பட்டியலை லோக்சபாவில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்திருந்தார். இந்த பட்டியல், செலுத்த வரி விபரம் ஆகியவை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், வரி பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கையும் அதிவிரைவாக துவக்கப்பட உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Reviews