Logo

Current Affairs

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்
All Current Affairs

பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல். தொலைபேசி நிறுவனங்கள் லாபம்.

mtnl-bsnl-merge
பி.எஸ்.என்.எல்  நிறுவனம், 1,72,000  கோடி ரூபாயை லாபமாகப் பெற்றுள்ளது என்றும்,  எம்.டி.என்.எல்.  25 கோடி ரூபாயை லாபமாக பெற்றுள்ளது என்றும்  மத்தியத்   தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்  கூறியுள்ளார். பிஜேபி அரசின் வெற்றிகரமான இரண்டு ஆண்டு கால ஆட்சியின் கொண்டாட்டத்தில் மும்பையில் பேசிய அமைச்சர்,  அலைக்கற்றை விற்பனையில் 1,10,000 கோடி ரூபாயை லாபமாக பெற்றுள்ளது என்றும்,  உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின் படி, அலைக்கற்றை ஏலத்தில் மட்டுமே விற்க வேண்டும் என்று கூறினார். எதிர்காலத்தில் பணப் பரிவர்த்தனை வசதியும்   அஞ்சல்துறையில் அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளதாக  அமைச்சர் கூறினார். செல்வ மகள் திட்டத்தின் கீழ், இதுவரை 85 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தேசிய வேளாண்மை இணையதள சந்தைகளும் தொடங்கப்பட்டுள்ளதாக  அமைச்சர் மேலும்  தெரிவித்தார்.
Reviews


 

ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை ஹைதராபாத் சன் ரைஸர்ஸ் அணி வென்றது.

ipl_hydrabad
ஐபிஎல் கிரிக்கெட்டில், பெங்களூரு சின்னசாமி விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஹைதராபாத் சன் ரைஸர்ஸ் அணி பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 8 ரன் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்று முதலில் மட்டை வீசிய ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 208 ரன்களை எடுத்தது. 209 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் அடுத்து ஆடிய பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னர் 38 பந்துகளில் அதிகபட்சமாக 69 ரன்களையும் பென் கட்டிங்   ஆட்டமிழக்காமல் 39 ரன்களையும் எடுத்தனர். பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் 76 ரன்களும் விராட் கோஹ்லி 56 ரன்களும் எடுத்த நிலையில் அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க அந்த அணி 200 ரன்களுக்கு மேல் எடுக்க முடியாமல் வெற்றியைத் தவறவிட்டது.  கட்டிங்,    ஆட்ட நாயகராக அறிவிக்கப்பட்டார்.
Reviews


 

குடியரசு துணைத் தலைவர் முகம்மது ஹமீத் அன்சாரி மொராக்கோ தலைநகர், ரபாட் சென்றடைந்தார்.

hamid-ansari (1)
குடியரசு துணைத் தலைவர் முகம்மது ஹமீத் அன்சாரி மொராக்கோ மற்றும் டுனீசியாவிற்கான ஐந்து நாள் பயணமாக நேற்று இரவு, மொராக்கோ தலைநகர், ரபாட் சென்றடைந்தார். அவரை  பிரதமர் அப்தில் இலைஹ்பின்கிரான்,  விமான நிலையத்தில் வரவேற்றார். சிறப்பு விமானத்தில் பயணித்த திரு அன்சாரி செய்தியாளர்களிடம் பேசுகையில்,  இருநாடுகளின் தலைவர்களுடனும்,  இருதரப்பு உறவுகளை ஊக்குவிப்பது மற்றும் ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை காண்பது குறித்தும் இந்தியா எதிர்நோக்கியிருப்பதாக கூறினார்.  சுதந்திரம் பெற்றது முதலே,  புதுதில்லி ஆப்பிரிகாவிற்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறினார் . இந்தியாவில் தங்கி இருக்கும் ஆப்பிரிக்க நாட்டவர் மீது அண்மையில் நடந்த தாக்குதலை கண்டித்த அவர்,  தாக்குதல்கள் இந்தியர்கள் மீது ஆனாலும் சரி,  வெளிநாட்டவர் மீது ஆனாலும் சரி துரதிருஷ்டவசமானது என்று கூறினார்.  இந்த பிரசினையில் அரசின் நிலைப்பாடு தொடக்கம் முதலே தெளிவாக உள்ளது என்றும், ஒவ்வொரு வெளிநாட்டவருக்கும் பாதுகாப்பு அளிப்பது அதன் கடமை என்று தெரிவித்தார். குடியரசு துணை தலைவர்,  அந்நாட்டு மன்னர் ஆறாம் மொகமது,  பிரதமர் அப்தில் இலைஹ் பின்கிரான், ஆகியோரைச் இன்று சந்திப்பார்.  வியாழக்கிழமை, டுனீஸ் நகரில்,  அதிபர் பேஜி காயித் ஏசப்சி,  பிரதமர் ஹபிப் எஸ்சீத் ஆகியோரை அவர் சந்தித்து பேசுவார். மொராக்கோ  பிரதமர் மற்றும் திரு அன்சாரி இடையேயான பிரதிநிகள் நிலையிலான பேச்சுகளுக்கு பின்,  பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்திய மொராக்கோ வர்த்தக சேம்பரையும் திரு அன்சாரி துவக்கி வைப்பார். நாளை முகமது பல்கலைகழகத்திலும் அவர் உரையாற்ற உள்ளார்.
Reviews


 

ரயில்வே மற்றும் சாலை துறை வளர்ச்சி – பிரதமர் ஆய்வு

ரயில்வே மற்றும் சாலை துறை வளர்ச்சி – பிரதமர் ஆய்வு

ரயில்வே மற்றும் சாலை துறையின் முக்கிய உள்கட்டமைப்பு வளர்ச்சி குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்தார். ரயில்வே துறை ஆய்வின் போது, 2015-16-ம் ஆண்டு ரூ.93,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இது 65 சதவீதம் கூடுதலாகும். இதுவரையில் செய்யப்பட்ட முதலீடுகளில் இதுவே மிக அதிகமான முதலீடாகும். 2015-16-ம் ஆண்டில் 1780 கி.மீ தூரத்திற்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு, 1730 கி.மீ தூரம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறை வரலாற்றில் இந்த அளவீட்டில் சிறந்த செயல்பாட்டை இது குறிக்கிறது.

ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பை விரைவாக மேற்கொள்வதின் அவசியத்தை குறிப்பிட்ட பிரதமர், ரயில்வே துறை இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். ரயில்வே துறையை மேம்படுத்தவும் அதன் உள்கட்டமைப்புகளை பயன்படுத்தவும் பிரதமர் வலியுறுத்தினார். ஊரக பகுதிகளில், ரயில்வே அதன் உள்கட்டமைப்பை திறன் மேம்பாடு சம்பந்தமான செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தலாம். இதனால் ரயில்வே துறைக்கு வருமானம் கிடைக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

சாலைத் துறைகளில் 2015-16ம் ஆண்டில் 6000 கி.மீ தூரத்திற்கு நெடுஞ்சாலை பணி முடிக்கப்பட்டு 10,098 கி.மீ தூரத்திற்கான ஒப்பந்தத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு சாலை மேம்பாடு மாதிரிகளை கற்பதற்கான தேவையை குறிப்பிட்ட பிரதமர் அதில் சிறந்த முறையை பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். இதன் மூலம் நெடுஞ்சாலை கட்டமைப்புத் துறையில் தனியார் முதலீடுகளை கொண்டுவர முடியும் என்றும் பிரதமர் கூறினார்.

மிக முக்கியமான பாதைகளில் நெரிசலை குறைப்பதற்கான அவசியத்தை குறிப்பிட்ட பிரதமர் சுங்கச்சாவடிகளில் வசூலிக்க சிறந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

Reviews


 

திவால் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்


நலிவடைந்த நிறுவனங்களின் பிரச்னைகளுக்கு 180 நாள்களில் தீர்வு காணும் வகையில் புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள திவால் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
திவால் மசோதா, மக்களவையில் கடந்த மார்ச் 5-ஆம் தேதியும், மாநிலங்களவையில் கடந்த 11-ஆம் தேதியும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கடந்த சனிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
புதிய சட்டத்தின் சிறப்பம்சங்கள்: தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இயலாத நிறுவனங்கள் அல்லது தனி நபர்கள் திவாலாவதைத் தடுக்க முடியும். கடன் கொடுத்தவர்களுக்கும், கடன் வாங்கிய நிறுவனங்களுக்கும் இடையே சுமுகத் தீர்வை எட்டுவதற்கு இந்தச் சட்டம் வழிவகை செய்துள்ளது.
நலிவடைந்த நிறுவனங்கள் விண்ணப்பித்த 180 நாள்களில், அவற்றின் பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வை எட்ட முடியும். மேலும், திவால் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, மோசடி செய்ய முயல்வோருக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.
சொத்து விவரங்களை மறைத்தால் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.1 கோடி வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். நிறுவனங்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான பணிகளை, உரிமம் பெற்ற "திவால் அதிகாரிகள்' கவனிப்பார்கள். அவர்கள், திவால் அதிகாரிகள் அமைப்பின் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று அந்தச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviews