Logo

Current Affairs

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்
All Current Affairs

ஆயுஷ் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகம் உட்பட 6 முதல் 10 மாநிலங்களில் அமைக்கப்பட உள்ளது—-ஆயுஷ் துறை இணையமைச்சர் ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக்.

ஆயுர்வேதம், சித்தா, யோகா உள்ளிட்ட இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளின் மூலம் சிகிச்சை அளிக்கும் வகையில் பிரத்யேக ஆயுஷ் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகம் உட்பட ஆறு முதல் 10 மாநிலங்களில் அமைக்கப்பட உள்ளதாக மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆயுஷுக்கென தனிப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை புதுதில்லியில் தற்போது அமைக்கப்பட்டு வருவதாகவும் இரண்டு மாதங்களுக்குள் இப்பணிகள் முடிவடைந்து திறக்கப்படும் என்று கூறினார். அலோபதி, ஆயுர்வேதம், யுனானி ஆகியவற்றின் மூலம் சுகாதார சேவை வழங்க தேசிய அளவில் ஒருங்கிணைந்த சுகாதார திட்டம் செயல்படுத்த திட்டமிட்டு, நாடு முழுவதும் 10 மாவட்டங்களை தேர்வு செய்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் முன்னோட்ட அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Reviews


 

ஆந்திர பிரதேசத்தில், விசாகபட்டினத்தில், 3—வது பிரிக்ஸ் நகரமயமாக்கல் கூட்டமைப்பின் மாநாடு இன்று தொடங்குகிறது.

ஆந்திர பிரதேசத்தில்,  விசாகபட்டினத்தில், 3 வது பிரிக்ஸ் நகரமயமாக்கல்   கூட்டமைப்பின்  மாநாடு   இன்று  தொடங்குகிறது. மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சர் வெங்கய்ய நாயுடு முன்னிலையில்,  மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இந்த மூன்று நாள் மாநாட்டை துவக்கி வைப்பார். இந்த 3 நாள் கூட்டத்தில் முதலீடுகள், நகர மயமாக்கல், புதிய நகரங்களை உருவாக்குவது  உள்ளிட்ட பல விஷயங்களை பிரிக்ஸ் பிரதிநிதிகள் விவாதிப்பார்கள்.  உற்பத்தியை அதிகரிப்பது, நகர்புறத்திற்கான தனிப்பட்ட  நிதி வழி முறை மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது போன்ற விஷயங்களும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.  இந்த விவாதங்களில் அடிப்படையில் வைசாக் பிரகடனம் தயாரிக்கப்படும், இது அக்டோபர் 15, 16 தேதிகளில்,  கோவாவில் நடைபெற உள்ள பிரிக்ஸ் அமைச்சர்கள் மாநாட்டில் முக்கிய பங்கு வகிக்கும்.
Reviews


 

டிராக் ஆசியக் கோப்பை சைக்கிள் போட்டியில் மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா

டிராக் ஆசியக் கோப்பை சைக்கிள் போட்டிகள் 2016, நேற்று புதுதில்லியில் தொடங்கியது. தொடக்க நாளன்று, இந்தியா, மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் வென்றது.

Velodrome எனப்படும் உள் விளையாட்டரங்கு விரைவு சைக்கிள் போட்டியில், இந்தியாவின் Deborah Herold தங்கம் வென்றார். அணிகள் பிரிவில் Deborah Herold மற்றும் Kezia Vergheese அடங்கிய இந்திய அணி, கஸகிஸ்தான் அணியைத் தோற்கடித்து தங்கம் வென்றது. ஜூனியர் பிரிவில், இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

முதன் முதலாக, சர்வதேசப் போட்டியில் பங்கேற்கும் Alena Reji, வெள்ளிப் பதக்கம் வென்றார். 3 கி.மீ. போட்டியில் தமக்கு எதிராக போட்டியிடுபவர் போட்டியில் இருந்து விலகியதால், ராஜ்குமாரி தேவிக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Reviews


 

ISSF ஜூனியர் உலக்கோப்பை: இந்தியா, 6 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்களுடன் 2—வது இடத்தில் உள்ளது.


ISSF ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடல் போட்டியில், 25 மீட்டர் ராபிட் ஃபையர் பிஸ்டல் பிரிவில்,  இந்தியாவின் RUSHIRAJ BAROT , தங்கம் வென்றார். இந்தியா இதுவரை, 6 தங்கம், 4 வெள்ளி மற்றும் 8 வெண்கல பதக்கங்களுடன், பதக்க பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ரஷ்யா, 21 பதக்கங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறது. முன்னதாக, 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில், இந்திய ஆடவர் அணி, தங்கம் வென்றது.  5 மீட்டர் பிஸ்டல் பிரிவில், இந்திய ஜூனியர் ஆடவர் அணி, வௌ¢ளிப்பதக்கம் பெற்றது. ஜூனியர் மகளிர் பிரிவில், 10 மீட்டர் ஏர் ரைஃபிள்  போட்டியில்,  இந்திய அணி, வெண்கல பதக்கம் வென்றது.
Reviews


 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

78 வயதான இந்திய வம்சாவளி பிரிட்டிஷ்காரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான Lord Narendra Babubhai Patel-ஐ, மருத்துவ துறையில் ஆற்றிய சிறந்த பணிக்காக பிரபல பதிப்பாள் நிறுவனம் கௌரவித்துள்ளது. பிரிட்டனில் மருத்துவம் மற்றும் பொதுப்பணியில் இவர் ஆற்றிய சிறந்த பணிக்காக நேற்றிரவு நடந்த ஆசிய சாதனையாளர் விருதில் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
Reviews