Logo

Current Affairs

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்
All Current Affairs

500-வது டெஸ்டில் கால்பதிக்கும் இந்திய அணி: சி.கே.நாயுடு முதல் விராட் கோலி வரை ஓர் அலசல்

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் வரும் 22-ம் தேதி கான்பூர் கீரின்பார்க் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இது இந்தியாவின் 500-வது டெஸ்ட் போட்டி. 1932-ம் ஆண்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க ஆரம்பித்த இந்தியா 84 வருட கிரிக்கெட் பயணத்தில் உச்சங்களையும் தொட்டது. அதேவேளையில் அதளபாதாளத்திலும் விழுந்தது. அதுபற்றிய ஒரு சிறிய தொகுப்பு.

அறிமுக போட்டி

1932 -ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக முதன் முறையாக சி.கே.நாயுடு தலைமையில் டெஸ்டில் காலடி எடுத்துவைத்தது இந்திய அணி. கிரிக்கெட்டின் சொர்க்கபுரியாக கருதப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த போட்டி 3 நாட்கள் கொண்டதாக நடத்தப்பட்டது.

இந்த ஆட்டத்தில் இந்தியா 158 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்த ஆட்டத்தின் இரு இன்னிங்ஸிலும் இந்திய வீரர்கள் ஒருவர் கூட பவுண்டரி அடிக்கவில்லை. ஆனால் ஒரே ஒரு சிக்ஸர் அடித்திருந்தது. இதை 9-வது வீரராக களமிறங்கிய ரிச்சர்டு பிரவுன் அடித்திருந்தார்.

1932-1946-ம் ஆண்டு வரை இங்கிலாந்து அணியுடன் மட்டும் தான் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தது. இந்த 14 ஆண்டு கால இடைவெளியில் இரு அணிகள் இடையே 10 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன. இதில் ஒன்றில் கூட இந்தியா வெற்றி பெறவில்லை.

1947-48-ம் ஆண்டு முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா விளையாடியது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 4-0 என இழந்தது. 1948 - 49-ம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தியாவில் விளையாடியது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் நான்கு ஆட்டங்கள் டிரா ஆனது. சென்னையில் நடைபெற்ற டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற அந்த தொடரிலும் வேதனையே ஏற்பட்டது.

20 ஆண்டுகள் கழித்து தான் இந்தியா முதல் வெற்றிக் கனியை பறித்தது. 1952-ல் ஹஸாரே தலைமையில் இந்தியா தனது 25-வது டெஸ்டில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்துடன் மோதியது. இதில் இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. இந்தியா சார்பில் பங்கஜ் ராய், பாலி உமரிக்கர் இருவரும் சதம் அடித்தார்கள். வினூ மங்கட் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்திய அணியின் முதல் வெற்றி சென்னையில் அமைந்தது என்பது வரலாற்றுச் சிறப்பு.

முதல் வெற்றிக்கு பின்னர்தான் இந்திய அணியின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியது. 1952 -1956 வரையிலான காலக்கட்டத்தில் 20 போட்டிகளில் இரண்டில் மட்டும் தோற்றது இந்திய அணி. ஆனால் அடுத்த 3 ஆண்டுகளில் 16 போட்டிகளில் 12 தோல்விகளை இந்திய அணி சந்தித்தது.

இதையடுத்து 1959-1961 வரை யிலான காலகட்டத்தில் விளையாடிய 14 டெஸ்ட் போட்டியில் மூன்றில் வெற்றி பெற்றது. ஒன்றில் தோற்றது. இந்த சீசனில் தொடர்ச் சியாக ஒன்பது போட்டிகளை இந்திய அணி டிரா செய்தது. இன்று வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் இது மிகப்பெரிய சாதனையாக கருதப் படுகிறது.

டெஸ்ட் உலகில் இந்தியாவை வெல்வது கடினம் என்ற சூழ்நிலை உருவாகிய நிலையில் மேற்கிந்தியத் தீவுகளின் வடிவில் ஆபத்து வந்தது. மேற்கிந்தியத் தீவுகளில் விளையாடிய இந்திய அணி 5 ஆட்டத்திலும் படுதோல்விகளை சந்தித்தது. இந்த தொடர் முடிந்தவேகத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி சொந்த மண்ணிலும் இந்திய அணியை அலறவைத்தது. இந்த வெற்றி களுக்கு பின்னர் கால் நூற்றாண்டுகளுகு மேற்கிந்தியத் தீவுகளின் ராஜ்ஜியம் தொடர்ந்தது.

1962-1883 காலக்கட்டங்களில் இந்திய அணி சுழற்பந்து வீச்சால் இந்திய துணைக்கண்ட போட்டிகளில் எதிரணியை சுழலால் மிரட்டியது. பிஷன் சிங் பேடி, பகவத் சந்திரசேகர், எரிப்பாலி பிரசன்னா, ஸ்ரீநிவாஸ் வெங்கட் ராகவன் ஆகியோர் சுழலில் மாயாஜாலம் காட்டினர். இவர்கள் நால்வரும் இணைந்து 231 போட்டி களில் மொத்தம் 853 விக்கெட்கள் சாய்த்தனர்.

1971-ல் போர்ட் ஆப் ஸ்பெயினில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சுனில் கவாஸ்கர் இரு இன்னிங்ஸிலும் அரைசதம் அடிக்க இந்தியா வெற்றி பெற்றது. கவாஸ்கரை தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் மொஹிந்தர் அமர்நாத், கபில்தேவ், ரவி சாஸ்திரி, பி.எஸ்.சந்து, வெங்சர்க்கார், கிர்மானி என நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்தார்கள்.

1983 உலகக்கோப்பையை இந்தியா வென்றதும், இந்திய ரசிகர்களை கிரிக்கெட் ஆட்கொண்டு விட்டது என்றுதான் கூற வேண்டும். ஒவ்வொரு டெஸ்ட் போட்டியையும் ரேடியோ வர்ணனையில் கேட்ட ரசிகனின் காதுகளில் கிரிக்கெட் நாமம் புகுந்தது.

1986-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இந்தியா-ஆஸ்தி ரேலியா அணிகள் முதல் டெஸ்டில் மோதின. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 574 ரன்கள் குவித்தது. ஆஸி. கேப்டன் டீன் ஜோன்ஸ் இரட்டைச் சதமும், ஆலன் பார்டர், டேவிட் பூன் சதமும் விளாசினர்.

இந்திய அணியில் காந்த், ரவி சாஸ்திரி, முகமது அசாருதீன் அரை சதம் அடிக்க, கபில்தேவ் அதிரடியாக சதம் விளாசினார். இதனால் இந்தியா பாலோ ஆனை தவிர்த்தது மட்டுமில்லாமல் 397 ரன்களையும் குவித்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 170 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 347 ரன்கள் எடுத்தது. இதனால் வரலாற்றில் முதன் முறையாக இந்தியா விளையாடிய டெஸ்ட் போட்டி டை ஆனது.

உலக கிரிக்கெட் அரங்கில் இந்தியாவை தலைநிமிர வைத்ததில் சச்சின் டெண்டுல்கருக்கு முக்கிய பங்கு உண்டு. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளுக்கும் கிரிக்கெட்டை கொண்டு சேர்த்தார் சச்சின். 1989-ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகமானார் சச்சின். 16 வயதிலேயே புயலாக உருவெடுத்த சச்சின் சுழன்றடித்ததில் சாயாத பந்து வீச்சாளர்களே இல்லை.

கங்குலி கேப்டனான பிறகு இந்திய அணியை அடுத்த கட்டத் துக்கு எடுத்துச்சென்றார். 2000-2007 வரை சேவக், டிராவிட், லட்சுமணன், சச்சின், ஹர்பஜன் சிங், கும்ப்ளே என விளையாடும் லெவனில் நட்சத்திர பட்டாளமே இருந்தது. பேட்டிங்கில் சச்சின், கங்குலி, டிராவிட் லட்சுமண் ஆகியோரை கொண்ட நால்வர் கூட்டணி எதிரணிக்கு சிம்ம சொப்பனாக திகழ்ந்தது.

2001-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் இன்ற ளவும் வரலாற்றின் சிறந்த டெஸ்ட் போட்டியாக கருதப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் சேவக் அடுத் தடுத்து அடித்த முச்சதம் பிரமிக்க வைத்தது.

2007-2011 வரையிலான காலக் கட்டம் இந்திய அணிக்கு பொற்காலம். கங்குலியால் விதைக்கப்பட்ட இந்திய அணி வெற்றியை அறுவடை செய்தது. டெஸ்ட் தரவரிசையில் முதன் முறையாக இந்திய அணி முதலிடம் பிடித்து அசத்தியது. உலகின் அத்தனை அணிகளையும் இந்தியா மிரள வைத்தது. இந்த காலக்கட்டத்தில் 47 போட்டிகளில் 22-ல் வெற்றி பெற்று வரலாறு படைத்தது இந்திய அணி.

2011-ம் ஆண்டு மத்தியில் இருந்து 2015 வரை இந்திய அணி கடும் சரிவை கண்டது. ஜாம்பவான் வீரர்கள் ஓய்வு பெற தோனிக்கு சோதனையாக அமைந்தது. இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என சுற்றுப்பயணம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் பெரும் உதை வாங்கியது. தொடர் தோல்விகளால் 2014-ம் ஆண்டு தோனி திடீரென டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதுவும் ஆஸ்திரேலிய பயணத்தின் கடைசி கட்டத்தில். நட்டாற்றில் விட்ட கதையாக அணியை கையில் எடுத்தார் விராட் கோலி.

விராட் கோலியின் தலை மையில் முற்றிலும் மாறுபட்ட வியூகங்களுடன் வெற்றிகளை வசப்படுத்தி வருகிறது இந்திய அணி. கங்குலி உருவாக்கிய அணி யில் எப்படி ஒரு வெற்றி வேட்கை இருந்ததோ, அதனை தற்போது காணமுடிகிறது. இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளுக்கு எதிராக வரலாற்று சிறப்பு மிக்க தொடர் வெற்றிகளை பெற்றுள்ளது.

கடைசியாக விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி, ஆறு போட்டியில் வெற்றி என நேர்மறையாக இருக்கிறது இந்திய அணி. வெற்றி ஒன்றுதான் இலக்கு, அதுவே பிரதான நோக்கமாக கொண்டு அணியை வழிநடத்தும் விராட் கோலியிடம் இருந்து இன்னும் அதிக வெற்றிகள் கிடைக்கக்கூடும்.

Reviews


 

பிரிக்ஸ் மகளிர் நாடாளுமன்றவாதிகளின் சந்திப்பு

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில், பிரிக்ஸ் மகளிர் நாடாளுமன்றக் குழுவின் கூட்டம் நடந்து வருகிறது. ஐந்து நாடுகளின் குழுவான பிரிக்ஸ் அமைப்பின் மேம்பாட்டை விரைந்து மேற்கொள்ள, புதுதில்லி கொண்டுள்ள உறுதிபாட்டை இந்த கூட்டம் எடுத்துக்காட்டுகிறது. பிரிக்ஸ் அமைப்பை மேம்படுத்துவதற்காக அதிக முயற்சியை பிரதமர் நரேந்திர மொதி அவர்கள் எடுத்துள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து வளரும் நாடுகளின் கூட்டமைப்பே பிரிக்ஸ் ஆகும். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, ஆகிய நாடுகளின் முதல் எழுத்தால் உருவானது, BRIC அமைப்பாகும். பின்னர், தென் ஆப்பிரிக்காவும் இணைந்து பிரிக்ஸானது, அடுத்த சில பத்தாண்டுகளில், உலகப் பொருளாதாரத்தில் இந்த நான்கு நாடுகளும் விரைவான வளர்ச்சியைப் பெறும் என்கிற நம்பிக்கையில் இந்த நாடுகளின் முதலீடுகளை மேம்படுத்தும் நோக்கில், முதலீட்டு வங்கியான கோல்டுமேன் சசு சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த அமைப்பை உருவாக்கியது.

பெரிய வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள நிதி கொந்தளிப்பு காரணமாக, உலகப் பொருளாதாரத்தில் பிரிக்ஸ் நாடுகளின் பங்கு முன்பு எதிர்பார்த்தைவிட அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. உலக நிலப்பரப்பில், இந்த பிரிக்ஸ் நாடுகளின் பரப்பளவு 25 சதவிதம் அதிகமாக காணப்படுகிறது. உலக, மொத்த மக்கள் தொகையில் 40 சதவிதம் அதிகமானோர் இந்த நாடுகளில் வாழ்கின்றனர். இந்த நாடுகளின் மொத்த உள் உற்பத்தி திறனும் சிறப்பாக உள்ளது. பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த பல மகளிர் நாடாளுமன்றவாதிகள் அமெரிக்காவின் சிறப்பு வளர்ச்சி இலக்குகளை அமல்படுத்துவது குறித்த பிரச்சனைகளைப் பெரிதும் விவாதிக்க உள்ளனர். இந்த விஷயமே இந்த ஐந்து நாடுகள் குழுவின் முக்கிய கவலைகளில் ஒன்றாகும்.

இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அவர்கள், இந்த மாநாட்டை தொடக்கி வைத்தார். இந்த கூட்டத்தில் பிரேசிலில் இருந்து மகளிர் நாடாளுமன்றவாதிகள் ஐந்து பேரும், ரஷ்யாவிலிருந்து மூன்று பேரும், இந்தியாவில் இருந்து இருபத்தெட்டு பேரும், சீனாவில் இருந்து இரண்டு பேரும், தென் ஆப்பிரிக்காவில் இருந்து நான்கு பேரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு, அக்டோபரில் இந்தியாவின் தலைமையில் கோவாவில் எட்டாவது பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெறுவதையொட்டி, பல்வேறு விஷயங்கள் தொடர்பான ஒரு டசனுக்கு அதிகமான பிரிக்ஸ் கூட்டங்கள், இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் நடைபெறயுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் கருப்பொருளான, அனைத்தும் உள்ளடக்கிய, ஒட்டுமொத்த தீர்வு, ஆக்கப்பூர்வ மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், ஜெய்ப்பூர் கூட்டம் நடைபெறுகிறது.

பிரிக்ஸ் நாடுகளின் மக்களிடையே நேரடி தொடர்புகளை குறிப்பாக, இளைஞர்களிடம் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும். இந்த நோக்கத்தில் பதினைந்து வயதிற்குட்பட்டோர் இடையில் கால்பந்துப் போட்டி நடத்துவது, இளைஞர் மாநாடு, இளைஞர் ராஜ்ஜியத்துறை குழுக் கூட்டம், திரைப்பட விழாக்கள் போன்றவற்றை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

பிரிக்ஸ் உச்சிமாநாடு இதற்கு முன்னர், ரஷ்யாவின் உஃபா நகரில் நடைபெற்றது. பிரிக்ஸ் அமைப்பு சர்வதேச உறவுகளில் மற்றும் சர்வதேச வேலை வாய்ப்பில் ஒரு தீவாக அல்லாமல், ஒரு கண்டமாக உருவாகி இருப்பதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போதைய சகிப்புத்தன்மையற்ற, உலக முறைமை காணப்படும் சூழலில் உயர்பொருளாதார வளர்ச்சியை ஒட்டுமொத்த ஒத்துழைப்பின் அடிப்படையில் மேம்படுத்தும் நோக்கில் பிரிக்ஸ் வளர்ந்து வருகிறது. இந்த அமைப்பிலுள்ள நாடுகள் அனைத்திற்கும் மேம்பாடான சூழலை கொடுவருவதே இதன் நோக்கம் ஆகும்.

இந்த நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார சீரமைப்புகளை மெற்கொண்டுள்ளதால் பிரிக்ஸ் நாடுகளில் உயர்வளர்ச்சி காணப்படுகிறது. மேலும், தற்போதைய பொருளாதார முறைமைக்கு தக்க சவால் தரும் நாடுகளாகவும், இந்த பிரிக்ஸ் அமைப்பு உருவாகி உள்ளது.

எடுத்துக்காட்டாக, 1990 ஆம் ஆண்டில், உலக மொத்த வர்த்தகத்தில் இந்த நாடுகளின் பங்கு 3.06 சதவிதமாகும். 2010-இல் இது 10 சதவிதமாக உயர்ந்துள்ளது. உலக மொத்த உள் உற்பத்தியைப் பார்க்கும்போது, 1990-இல் இந்த நாடுகளின் பங்கு 10 சதவிதமாக இருந்தது. 2010-இல் இது 25 சவிதத்தை கடந்துள்ளது. உலக மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பை பொருத்தவரை, இந்த நாடுகளின் பங்கு 1990-இல் 10 சதவிதமாக இருந்தது. 2010-இல் 40 சதவிதமாக காணப்படுகிறது. இந்த பிரிக்ஸ் நாடுகளில் காணப்படும் சேவைகள் மற்றும் பொருட்களின் சந்தை, அககட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அந்நிய நேரடி முதலீடுகளும், இந்த நாடுகளிடம் குவிந்து வருகின்றன.

ஒத்துழைப்பினுடைய அனுகூலங்கள் பிரிக்ஸ் மற்றும் உலகப் பொருளாதாரத்திற்கு சிறந்த பலனை தருகின்றன. ஆனால், சவால்களும் அதிகமுள்ளன. பிரிக்ஸ் அமைப்பை நன்கு, கொண்டு செலுத்த வேண்டுமென்ற புதுதில்லியின் உண்மையான ஈடுபாட்டிற்கு இந்த ஜெய்ப்பூர் பிரிக்ஸ் மகளிர் நாடாளுமன்றவாதிகளின் கூட்டம் வலுசேர்க்கும் என்று நம்பலாம்.

Reviews


 

ஒரு நாடு – ஒரே வரி – ஒத்தி வைத்த சரக்கு மற்றும் சேவை வரி உண்மையாகலாம்

இந்திய நாடாளுமன்றம் 122–ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்ததிற்கு, கடந்த புதன்கிழமை இரவு, ஒரு மனதாக ஒப்புதல் வழங்கியது. இது சரக்கு மற்றும் சேவை வரியை ஒத்திசைந்த அமைப்புடன் சீரமைக்கவும், சரக்குகள் மற்றும் பொருட்களுக்காக நாடு முழுமைக்கும் ஒத்திசைந்த சந்தையை உருவாக்கவும் வழி வகுக்கும். இந்தச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது மிக முக்கியமான விஷயமாகும்.

ஏனென்றால், இது அரசமைப்புச் சட்டத்தின் படி, மாநிலங்கள் நிர்வகித்து வந்த வரி விதிப்பு அதிகாரங்களை மாற்றியமைக்கப் போகிறது. அதிலும் குறிப்பாக, இந்தச் சட்டத்திருத்தம் 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்கள் இணைந்து, தேச அளவில் ஒரு மனதாக ஏற்கப்பட்டது முக்கியமான ஒன்றாகும். இதன் பயனாக, நாடு முழுமைக்கும், மதுபானம் தவிர்த்து கிட்டத்தட்ட எல்லாப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் நுகர்வின் அடிப்படையிலான சீரான வரி விகிதம் உருவாகும். அனைவருக்கும் ஏற்புடைய வகையின் வரி விதிப்பு முடிவு செய்ய மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையே ஜி.எஸ்.டி கவுன்சிலில் உடன்பாடு ஏற்படும் வரையில் பெட்ரோலியப் பொருட்களுக்கு, வரி விகிதம் பூஜ்யமாக இருக்கும்.

உள்நாட்டு அடிப்படையில் GST என்பது, சரக்குகள் மற்றும் சேவைக்காக சிதறாத ஒருங்கிணைந்த தேசியச் சந்தையை உருவாக்கும். இதன் மூலம் சிறு தொழில் புரிவோர் பலனடைவர். பொருட்களை வாங்குவதற்கோ சேவைகளைப் பெறுவதற்கோ பலமுனை வரிகளை செலுத்தும் சாதாரண மக்களுக்கு, இது சிரமத்தைக் குறைத்து,வரிகளை எளிமைப் படுத்தும். முதலீடு செய்வோர் மற்றும் சரக்குகளை உற்பத்திச் செய்வோருக்கு, பலமுனை வரிகளும், மத்திய அரசின் கட்டுப்பாடுகளும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

வெவ்வேறு வரி செலுத்துதல் போன்ற சிக்கல்கள் குறைந்து, நாடு முழுமைக்கும் ஒரே வரியாக மாறும் போது அவர்களுக்கிருக்கும் பெரும் பிரச்சனையான தொழில் முறைப் போட்டி குறையும். GST அமலுக்கு வரும் போது,வரி விதிப்பில் தற்போது இருக்கும் அனைத்துப் பிரச்சனைகளும் குறையும். வர்த்தகம் எளிமையாகும்.பொருட்களை உற்பத்திச் செய்வோருக்குத் தேவையான முதலீடு கிடைக்கும். வரி குறையும் போது பொருட்களுக்கானத் தேவைகளும் அதிகமாகும்.

ஒருங்கிணைந்த GST வருவதால் கிடைக்கப் போகும் ஆதாயங்கள் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், இந்தியா முழுமைக்கும் ஒருங்கிணைந்த, ஒரே சந்தையை உருவாக்குவதற்காக, இன்னும் பயணிக்க வேண்டியத் தூரம் அதிகம். அதில், முக்கியமானது வரி வருவாய் பங்கீடு, வரி விகிதம் ஆகியனக் குறித்து மத்திய,மாநில அரசுகள் GST கவுன்சிலில் விவாதித்து, மாநில அரசுகள் சட்டமியற்ற வேண்டும். மீண்டும் அவை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். பின்னரே ஒத்திசைந்த GST சட்டம் அமலுக்கு வர முடியும்.

தற்பொழுது கொண்டு வரப்பட உள்ள சரக்குகள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதம், சாதாரண மனிதர்களைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். GST வரிவிகிதம் 20 சதவிகிதம் இருக்க வேண்டும் என்று மாநிலங்கள் விரும்புகின்றன. முக்கிய எதிர்க் கட்சியான காங்கிரஸ் கட்சி, இந்த வரி விகிதம் 18 விழுக்காடாகக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மத்திய அரசு GST, மாநில அரசு GST ஆகிய இரண்டுக்கும் ஏற்ற வகையில்,வரி விகிதத்தை அமைப்பது, அதை இருதரப்பினரும் ஏற்றுகொள்வது ஆகியன சவாலாகவே இருக்கும். இருப்பினும், மாநிலங்களுடனான தனது பேச்சு வார்த்தையில், வரி விகிதங்கள், சரக்குகள் மற்றும் சேவைகள் மீது மத்திய, மாநில அரசுகள் தற்போது தனித்தனியே விதிக்கும் பலமுனை வரிகளை விட குறைவாக இருக்கும். வரி விகிதமும் நடுத்தரமாகக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையைத் தமக்களித்திருப்பதாக நிதியமைச்சர் திரு.அருண் ஜேட்லி கூறியிருப்பது, பலமளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது.

நாடாளுமன்றம் அரசமைப்புச் சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியது அரசுக்கு இருதரப்பு மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகும். கடந்த பத்தாண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருந்த பேச்சுவார்த்தைகள் முடிவை எட்டிய மகிழ்ச்சி ஒருபுறமிருக்க, சட்டத்திருத்தம் நிறைவேற்றுவதற்குத் தேவையான வாக்குகளை மாநிலங்களவைப் பெற முடிந்தது மற்றொரு மகிழ்ச்சியாகும்.

காங்கிரஸ் கட்சியும், தனது கடும் நிலைப்பாட்டை விட்டிறங்கி வந்தது. இதற்கு முக்கியக் காரணம், இந்தச் சட்டத் திருத்தத்திற்காகப் பாடுபட்டு, அதை நிறைவேற்றிக் காட்டிய நிதியமைச்சர் திரு. அருண் ஜேட்லியின் விடா முயற்சியும், தொடர்ந்து அவர் காங்கிரஸ் தகமைக் கட்சியை வற்புறுத்தி வந்ததுமேயாகும். தனது சுட்டுரையில், GST சட்டத்திருத்தம் பிரதமர் திரு. நரேந்திர மோதி, இந்தியாவை உருவாக்குவோம் என்கிற திட்டத்தை, இது ஊக்கவிக்கும் என்றும், இதனால் வேலை வாய்ப்புகள் பெருகும் என்றும், அரசுக்கு வருமானம் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

அடுத்த கட்டமாக, மாநிலங்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தங்கள் மீண்டும் மக்களவையில் ஆமோதிக்கப்பட வேண்டும். பின்னர், குறைந்தபட்சம் 15 மாநிலங்கள் தத்தமது சட்டசபைகளில் இந்தச் சட்டத்திருத்தத்தை ஆமோதிக்க வேண்டும். பின்னரே இந்த ஒத்திசைந்த சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் அனுமதிப் பெற்று சட்டமாக மாற்றப்படும். அதன் பின்னரே, நாடு முழுவதும் ஒரே சரக்குகள் மற்றும் சேவைகளுக்கான வரி சீர்திருத்தம் அமலுக்கு கொண்டுவரப் பட முடியும். ஏப்ரல் 1, 2017–க்குள் இதனை முடிக்க வேண்டும் என்று, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

அரசியல் வேறுபாடுகள், நிலைப்பாடுகளை மீறி, ஆர்வமாக அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பை நல்கியதால் சீரமைப்பின் மூலம், தன்னை மாற்றிக்கொள்ள இந்தியா எடுத்த இந்த GST-க்கான அரசமைப்புச் சட்டத்திருத்த ஒப்புதல், இந்தியாவை முன்னெடுத்து செல்வதற்கான மிக முக்கிய படிநிலையாகும்.

Reviews


 

இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் மோதி அரசின் ஊக்குவிப்பு

பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, இன்றுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தி செய்கிறது. இது, சாதாரண நிகழ்வாகத் தோன்றினாலும், மக்களிடையே இவ்வளவு காலம் அதீத ஈர்ப்பு மற்றும் பிரபலம் அடைந்துள்ளது அசாதாரணமே. பொதுவாக, புதிய அரசின் தேன் நிலவுக் காலம் ஆறு மாதங்களுக்குள் முடிவுக்கு வந்துவிடும். ஆனால், பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் இதற்கு விதிவிலக்கு. கடந்த இரு ஆண்டுகளாக, அவர் மக்களின் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொண்டு, பிரபலத்தின் உச்சியில் நிலைகொண்டுள்ளார்.

இந்த அனுமானத்திற்கு வலு சேர்ப்பது, அண்மையில் ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தல். அஸ்ஸாமில், முதல் முறையாக, பி.ஜே.பி.யும்  பிராந்தியக் கட்சிகளின் கூட்டணியும், 126 தொகுதிகளில் 86 இடங்களைப் பிடித்து அரசு அமைத்துள்ளது. அங்கே வாக்குகள் அதிகம் கிடைக்கக் காரணம், மோதி அவர்களின் பொருளாதாரக் கொள்கைகளேயாகும். மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் பி.ஜே.பி.யின் வாக்குப் பங்கு 8 சதத்திலிருந்து 11 சதமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கையிலும் மோதி அவர்கள் தனது முத்திரையைப் பதித்துள்ளார். இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவுகளில் மேம்பாடு விரிவடைந்து வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி, மோதி அவர்களின் பதவியேற்பு நிகழ்ச்சியில், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், மாலத் தீவுகள், பூடான் மற்றும் ஸ்ரீலங்கா போன்ற சார்க் நாடுகளின் உயர் தலைவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். இந்த நல்லுறவுகளின் பிரதிபலிப்பாக, வங்கதேசத்துடன் இருந்த நீண்ட நாளைய எல்லைப் பிரச்சனைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, இரு நாடுகளுக்கிடையே, பரஸ்பரம் நிலப் பகுதிகள் கைமாற்றப் பட்டுள்ளன. வங்க தேசம், தனது ஒளியிழைக் கேபிள்களை இந்தியா உபயோகிக்க அனுமதி அளித்ததன் மூலம், இந்தியா திரிபுராவில் இணையதள சேவைகளை இணைக்க வாய்ப்பு எற்பட்டுள்ளது.

இதன் பயனாக, திரிபுராவில் அதிக அளவில் வேலை வாய்ப்புக்கள் பெருகியுள்ளன. ஸ்ரீலங்காவுடனும், மியன்மாருடனும் இந்தியாவின் உறவு மேம்பட்டுள்ளது. அண்மையில் ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் வாயிலாக, புதிய வேலை வாய்ப்புக்கள் மற்றும் பாதுகாப்பு மேம்பட வாய்ப்புக்கள் பெருகியுள்ளன. இதன் மூலம், ஆப்கானிஸ்தானுடன் புதிய வழித்தட இணைப்பு ஏற்படுவதுடன், மற்ற மத்திய ஆசிய நாடுகளுடனான நெருக்கம் அதிகரிக்கவும் வழி பிறந்துள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றவுடனேயே, அதாவது, 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம், உலக சாதனையாக, யேமன், லிபியா மற்றும் ஈராக்கில் சிக்கிக் கொண்ட அநேக பன்னாட்டு மக்களை, வெற்றிகரமாக, விமானம், கப்பல் மற்றும் தரை வழியாக மீட்டுக் கொண்டு வந்து, உலகம் முழுவதும் நன்மதிப்பையும், புதிய நண்பர்களையும் இந்தியா பெற்றது.

முதலில் அண்டை நாடுகளுடனான உறவு மற்றும் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கை ஆகியவற்றின் எதிரொலியாக, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், 40 நாடுகளில் சூறாவளிப் பயணம் மேற்கொண்டார். ஐ.நா.வின் தலைமையகமான நியூயார்க்கிற்கும் விஜயம் செய்த பிரதமர், அமெரிக்க அதிபரை இந்தியாவின் பிரதான விருந்தினராக, 2015ஆம் ஆண்டு குடிரசுத் தின விழாவில் கலந்துகொள்ளச் செய்தார். பிரதமரின் அயல்நாட்டுப் பயணங்கள், உலகில் இந்தியாவிற்கான தனியைடத்தை முக்கியத்துவம் பெறச் செய்தது. உலக அரங்கில் யோகாசனத்தை எடுத்துச் சென்றதோடு, ஜூன் மாதம் 21ஆம் தேதியை, உலக யோகா தினமாக ஐ.நா. அங்கீகரிக்கவும் பிரதமரின் செயலாக்கங்கள் துணைபுரிந்தன. உள்நாட்டில், விவசாயத் துறையின் ஊக்குவிப்பு, “இந்தியாவில் தயாரிப்போம்” மற்றும் “எழுவோம் இந்தியா”, “ஸ்டார்ட் அப் இந்தியா” போன்ற நவீனத் திட்டங்களைத் துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள். ஊழலை ஒழிக்குமுகமாக, பிரதமர் அறிமுகம் செய்த நேரடி நிதி வழங்கும் முயற்சிகள் அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டன. இதனால், பொதுமக்களின் நம்பிக்கை பெருமளவு உயர்ந்து, பொருளாதார நடவடிக்கைகளிலும் உந்துதல் ஏற்பட்டுள்ளது.

இந்திய இளைஞர்களின் செயல் திறன் மேம்பாட்டிற்கான, பிரதமரின் திட்டத்தின் மூலம், 20022ஆம் ஆண்டுக்குள் 42 கோடிப் பேர் பயனடைவர். ஜவுளி, வாகனம், கட்டமைப்பு, வங்கி மற்றும் சில்லறை வியாபாரம் போன்ற 25 துறைகளில், 11 கோடி செயல் திறன் பெற்ற நபர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது. கடந்த இரு ஆண்டுகளில், 13 லட்சம் பேர்களுக்கு வேலை வழங்கப் பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், செயல் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் மூலம், இந்தியாவில், அனைவரையும் உள்ளடக்கிய, பொருளாதார வளர்ச்சி ஸ்திரமாக, 8 – 9 சத அளவில் நிலைநிறுத்த முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளார். இதற்கு, பலதரப்பட்ட துறைகளில், குறிப்பாக, கட்டமைப்பு, விவசாய அபிவிருத்தி, , நிதித் துறை, வர்த்தகம் போன்ற துறைகளில் ஆக்கத் திறன் மேம்பாடு காண செயல்திறன் பெற்ற தொழிலாளிகள் அவசியம்.

பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், நிதி ஆயோக் என்ற பெயரில், தேசிய மாறுபாட்டு அமைப்பை, திட்டக் கமிஷனுக்குப் பதிலாக நிறுவியுள்ளார். இதன் மூலம், நவீன உலகின் தேவைகளுக்கேற்ப, பொருளாதாரக் கொள்கைகள் செயல்பட வழி செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டில், கிராமப் புற வளர்ச்சிக்கென, ரூ. 8,70,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயனுற, புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டு, அவர்களின் நம்பிக்கை மற்றும் விளைபொருள் வளர்ச்சிக்கான வழி நெறிப்படுத்தப் பட்டுள்ளது. அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் மூலம், ஒரு கோடி குடும்பங்களுக்கென, ரூ.3000 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.

சாலை வழித் தொடர்பை, முன்பு கண்டிராத அளவு விரிவுபடுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. தவிர, புல்லட் ரயில் எனப்படும் அதிவேக ரயில் சேவை, சரக்கு வழித் தடங்கள் மேம்பாடு, உற்பத்தித் துறை வளர்ச்சி, பெருமளவில் விவசாய அபிவிருத்தி போன்ற வளர்ச்சித் திட்டங்கள் வாயிலாக, கடந்த காலத்திலிருந்து பெரிதும் மாறுபட்ட இந்தியாவை உருவாக்கும் முயற்சிகள் செயல்படத் துவங்கியுள்ளன என்பது எதிர்கால இந்தியாவைப் பற்றிய நம்பிக்கைகளை மிகவும் அதிகரித்துள்ளது எனலாம்.

Reviews


 

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வரலாற்று சிறப்பு மிக்க ஈரான் பயணம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஈரான் சென்று வந்தார்.  பதினைந்து ஆண்டுகளில் ஈரான் நாட்டிற்கு ஒரு இந்திய பிரதமரால் மேற்கொள்ளப்படும் முதல் பயணமாகும் இது.  ஐ.நா-வின் பொருளாதாரத் தடைகள் ஈரானில் இருந்து அகற்றப்பட்ட பிறகு, தங்கள்  இருதரப்பு கூட்டுறவை விரிவாக்கிக்கொள்ள புதுதில்லியும் தெஹ்ரானும் எடுத்துகொண்டிருக்கும் முயற்சிகளுக்குத் தேவையான தூண்டுதலைக் கொடுத்தனால், இந்த பயணம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.  தன் பயணத்தில், இந்திய பிரதமர் அவர்கள், ஈரான் அதிபர்  ஹசன் ரெளஹானியுடன் பிராந்தியத் தொடர்பு, ஆற்றல் சக்தி கூட்டமைப்பு, இரு தரப்பு வர்த்தகம், மக்கள் தொடர்ப்பு, பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மை ஆகியவை உட்பட பரஸ்பர நன்மையளிக்கும் பல விஷயங்களைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

இந்தியா மற்றும் ஈரான் இடையீல் நாகரீகம்  மற்றும் பண்பாட்டுத் தொடர்புகள் இருப்பதோடு, இந்தியா, ஈரானை தனது அண்டைநாடுகளில் ஒன்றாகத்தான் கருதுகிறது.  பொருளாதார மற்றும் பாதுகாப்புத் தளங்களில் இரு நாடுகளுக்கும் ஒற்றுமைகள் பல உள்ளன.  இந்த ஒற்றுமைகளின் அடிப்படையில் உறவை மேலும் வலுப்படுத்துவதே மோடி அவர்களின் பயணத்தின் நோக்கமாக இருந்தது.

பிரதமர் அவர்களின் இந்த பயணத்தில், இந்தியாவும், ஈரானும் 12 ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டன.  இவற்றில் மூன்று சாப்ஹார் துறைமுகம் தொடர்பானவை.  சாப்ஹார் துறைமுகம் தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம்  ’இந்தியா போர்ட்ஸ் குளோபல் பிரவேட் லிமிடெட்’ மற்றும் ஈரானின் ‘ஆர்யா பண்டேர்’ இடையில் கையெழுத்து இடப்பட்டது.  சாப்ஹார்  துறைமுகத்தில், பத்து வருடங்களுக்கு  2 முனையங்கள் மற்றும் 5 பர்த்துகளுக்கான இயக்கம் மற்றும் வளர்ச்சி பணிகள், இந்த ஒப்பந்தத்தின் மூலம் திட்டமிடப்பட்டுள்ளன.  இந்த திட்டத்திற்கு வழி வகுக்க இந்தியாவின் எக்ஸிம் வங்கி  மற்றும் ஈரானின் துறைமுகம் மற்றும் கடல்சார் அமைப்பின் இடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.  இதன் மூலம் 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள், இத்திட்டத்திற்கு  நிதி உதவியாக கிடைக்கும்.  சாப்ஹார் துறைமுகம் தொடர்பான மூன்றாவது ஒப்பந்தம், இந்தியாவின் எக்ஸிம் வங்கி  மற்றும் ஈரானின் மத்திய வங்கிக்கு இடையில், சாப்ஹார் துறைமுகத்திற்கு பெரிய எஃகு கம்பிகளை இறக்குமதி செய்ய, 30 பில்லியன் ரூபாய் கடன் வசதியை அமைத்துக் கொடுப்பதை உறுதி செய்ய கையெழுத்திடப்பட்டது.

இந்த பயணத்தில், இந்தியாவை ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவுடன் இணைக்கும் ‘முத்தரப்பு போக்குவரத்து மற்றும் தொடர்பு வழிச்சாலைக்கான ஒப்பந்தம்’,  இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையில் கையெழுத்தாகின.  இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும் போது நடந்த விழாவில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியும் இருந்தார்.  இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை சுருக்கமாக, ‘இந்த ஒப்பந்தம் இப்பகுதியின் வரலாற்றின் போக்கை மாற்றியமைக்கப் போகிறது’ என்று நரேந்திர மோடி அவர்கள் கூறினார்.

இந்தியா மற்றும் ஈரான் இடையில் வர்த்தகம் மற்றும் முத்லீடுகளை மேம்படுத்தும் பொருட்டு, பல ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டன.  இரு நாடுகளுக்கும் இடையில், வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு முதலீடு ஆகியவற்றை ஊக்குவிக்க, இந்தியாவின் ஏற்றுமதி கடன் உத்திரவாத நிறுவனமான ‘எக்ஸ்போர்ட் கிரெடிட் கேரண்டி கார்பரேஷன் ஆப் இந்தியா’  மற்றும் ஈரானின் ஏற்றுமதி உத்திரவாத நிதி எனப்படும் ‘எக்ஸ்போர்ட் கேரண்டி பண்ட் ஆப் ஈரான்’ இடையில் கையெழுத்து இடப்பட்ட ஒரு உடன்படிக்கையும் இதில் அடங்கும்.  இதேபோல், அலுமினிய உலோகத்தை கூட்டு முறையில் தயாரிக்கும் வழிகளை ஆராயும் பொருட்டு,  ‘தேசிய அலுமினிய நிறுவனம்’ மற்றும் ‘ஈரானிய சுரங்கங்கள்’, சுரங்க தொழிற்சாலை வளர்ச்சி மற்றும் சீரமைப்பு நிறுவனம் ஆகியவற்றின் இடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.  இரு நாடுகளுக்கும் இடையில் கலாச்சார, அறிவு சார்ந்த மற்றும் அறிவியல் பரிமாற்றங்களை செயல்படுத்தவும், மேம்படுத்தவும் இந்தியா, ஈரான் இடையில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தெஹ்ரானிற்கு சென்ற உடனேயே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பாய் கங்கா சிங் சபா, குருத்வாராவிற்குச் சென்றார்.  அங்கு அவருக்கு  பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  குருத்துவாராவில், அங்கு, கூடியிருந்த மக்களிடையே பேசிய பிரதமர் அவர்கள், எதிர்கால இளைய சமுதாயத்திற்கு இந்தியாவின் வளமான பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பாதுகாத்து வைத்திருப்பதற்காக தெஹ்ரானில் உள்ள சீக்கியர்களை பாராட்டினார்.  ‘வசுதைவ குடும்பகம்’ அதாவது முழு உலகமே ஒரு குடும்பம் என்பதில் இந்தியர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்து உள்ளார்கள்  என்றும் அவர் மேலும் கூறினார்.  ‘இந்தியா மற்றும் ஈரான்—இரு மகத்தான நாகரீகங்கள்’, நோக்கங்களும் வாய்ப்புகளும், என்ற தலைப்பில் ஒரு மாநாட்டையும் பிரதமர் அவர்கள் துவக்கி வைத்தார்.

தன் பயனத்தின் முடிவில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஈரானின் உயர் தலைவரான அயதொல்லா அலி  காமெனியைச் சந்தித்தார்.  இந்தியா, ஈரான் இடையில் இருக்கும் தனித்துவம் வாய்ந்த உறவுமுறையின் பலத்தை எடுத்துக்காட்டும் ஒரு அரிய மரியாதைக்குறிய செயலாகும் இது.  இந்தியப் பிரதமர் அவர்கள் ஈரான் தலைவர் அயதொல்லா அலி காமெனிக்கு, ஹஸ்ரத் அலிக்கு சமர்பிக்கப்பட்ட புனித குரானின் அரிய ஏழாம் நூற்றாண்டு கையெழுத்துப் பிரதியின் நகலை பரிசளித்தார்.  மிர்ஸா காலிப்பின் கவிதை தொகுப்பான ‘குல்லியத்-ஏ-பார்சி-ஏ-கலிப்-பின் பிரதியின் நகலையும், சுமைர் சந்த் செய்த இராமாயணத்தின் பாரசீக மொழிபெயர்ப்பையும் பிரதம் அவர்கள் ஈரான் அதிபர் ஹசன் ரெளஹானிக்கு பரிசாக வழங்கினார்.

Reviews