Logo

Current Affairs

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்
All Current Affairs

கிராம விடியல் பிரசாரம்:300 அதிகாரிகள் நியமனம்

நாட்டில், கிராமங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், 'கிராம விடியல்; பாரதத்தின் விடியல்' எனும் பிரசாரத் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பிரதேசத்தில் உள்ள, அம்பேத்கர் பிறந்த ஊரான, மஹுவில், ஏப்., 14ல் துவக்கி வைத்தார்.

பத்து நாட்கள் நடக்க உள்ள இந்த பிரசாரத் திட்டத்துக்காக, ராணுவ துறையைச் சேர்ந்த, 32 அதிகாரிகள், உள்துறையில் இருந்து, 15 பேர், நிதித்துறையில், 21 பேர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த, 300 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.துணை செயலர், இயக்குனர் பதவிகளை வகிக்கும் இவர்கள், ஏப்., 24 வரை, கிராமங்களுக்குச் சென்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். இந்த திட்டம் மூலம், கிராமங்களுக்கு சுய நிர்வாகம் வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இந்த பிரசார திட்டத்துக்காக கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்படுவர் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

Reviews