Logo

Current Affairs

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்
All Current Affairs

கோல்டன் க்ளோப் விருது

ஹாலிவுட்டின் சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை அங்கீகரிக்கும் கோல்டன் க்ளோப் விருது வழங்கும் விழா லாஸ் ஏஜல்ஸ் நகரில் நடைபெற்றது. விருதுகள் பட்டியல் சிறந்த திரைப்படம் டிராமா: Three Billboards Outside Ebbing, Missouri சிறந்த இயக்குநர்: குல்லரிமொ டெல் டொரொ, திரைப்படம் - The Shape of Water சிறந்த கதாநாயகன்: கேரி ஓல்டுமேன், திரைப்படம் -Darkest Hour சிறந்த கதாநாயகி: பிரான்சஸ் மெக்டோர்மண்ட் , திரைப்படம் - Three Billboards Outside Ebbing, Missouri சிறந்த நகைச்சுவை திரைப்படம் (Musical or Comedy) : Lady Bird சிறந்த நகைச்சுவை நடிகர் (Musical or Comedy): ஜேம்ஸ் பிரான்கோ, திரைப்படம் - The Disaster Artist சிறந்த நகைச்சுவை நடிகை ( Musical or Comedy): சாவ்ரைஸ் ரோனன், திரைப்படம்- Lady Bird சிறந்த துணை நடிகர்: சாம் ராக்வெல், திரைப்படம் -Three Billboards Outside Ebbing, Missouri சிறந்த துணை நடிகை: அலக்சாண்ட்ரே டெல்பிலாட், திரைப்படம் -The Shape of Water சிறந்த பாடல்: This is Me, திரைப்படம்- The Greatest Showman சிறந்த திரைக்கதை: மார்டின் , திரைப்படம் - Three Billboards Outside Ebbing, Missouri' சிறந்த பிறமொழி திரைப்படம் : In the Fade
Reviews


 

அமெரிக்க பாடலாசிரியர் பாப் டிலனுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

அமெரிக்க பாடலாசிரியர் பாப் டிலனுக்கு இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.

இதில், தத்துவம், அரசியல், சமூகம் சார்ந்த பாடல்களை எழுதியுள்ள பாப் டிலன் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க கவிதை உலகில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியதற்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசு பாப் டிலனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கோல்டன் குளோப், கிராம்மி விருதுகளைப் பெற்றுள்ள பாப் டிலன், நாட்டுப் புற பாடர், ஓவியர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர்.

Reviews


 

சீனச் சிறையில் வாடும் பேராசிரியருக்கு சர்வதேச மனித உரிமைகள் விருது

சீனச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உய்கர் இன முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பேராசிரியர் இல்ஹாம் தோதிக்கு, மனித உரிமைகளுக்கான சர்வதேச "மார்ட்டின் என்னல்ஸ்' விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்னஸ்டி இன்டர்நேஷனல், மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு உள்ளிட்ட 8 சர்வதேதச மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து வழங்கும் இந்த விருதுக்கு இல்ஹாம் தோதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, அவருக்கு வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஆயுள் தண்டனை குறித்து உலகின் கவனத்தை மீண்டும் திருப்பியுள்ளது என்று கூறப்படுகிறது.
46 வயதாகும் இல்ஹாம் தோதி, பெய்ஜிங்கிலுள்ள மின்ஸ பல்கலைக்கழகத்தில் பொருளாதார விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார். சிறுபான்மை உய்கர் இன முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த இவர், துருக்கிய முஸ்லிம் உய்கர் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். ஜின்ஜியாங் மாகாணத்தில் சீன அரசு கடைப்பிடித்து வரும் அடக்குமுறைகளை இல்ஹாம் தோதி வெளிப்படையாக விமர்சித்து வந்தார்.
இந்தச் சூழலில், அவர் மீது கடந்த 2014-ஆம் ஆண்டு பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, இரண்டு நாள் வழக்கு விசாரணைக்குப் பிறகு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்தது. இந்த நிலையில், நிகழாண்டுக்கான "மார்ட்டின் என்னல்ஸ்' விருதுக்கு இல்ஹாம் தோதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Reviews


 

பொருளாதாரம்: ஒப்பந்தக் கோட்பாட்டை உருவாக்கிய இருவருக்கு நோபல் பரிசு

நிகழாண்டில் பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசுக்கு பிரிட்டீஷ் அமெரிக்கரான ஆலிவர் ஹார்ட் மற்றும் ஃபின்லாந்தைச் சேர்ந்த பெங் ஹால்ம்ஸ்டிரம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஒப்பந்தங்களை உருவாக்குவதில் உள்ள சிக்கல்களை அலசி ஆராய்ந்து, அதற்குத் தீர்வளிக்கும் கோட்பாட்டை உருவாக்கியதற்காக அவர்களுக்கு அந்தப் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்தது.
இதுகுறித்து அந்தக் குழு திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
உயரதிகாரிகளின் செயல்பாட்டுக்கு ஏற்ப ஊதியம் அளித்தல், காப்பீடுகளுக்கான கட்டணங்கள் மற்றும் சம்பளப் பிடித்தங்களை நிர்ணயித்தல், பொது நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்போது, அதில் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அந்தச் சிக்கல்களை மிக விரிவாக அலசி ஆராய்வதற்கான கோட்பாட்டை ஆலிவர் ஹார்ட் மற்றும் பெங் ஹால்ம்ஸ்டிரம் உருவாக்கியுள்ளனர்.
அவர்கள் உருவாக்கியுள்ள கோட்பாட்டைப் பயன்படுத்தி, நடைமுறையில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்கள், ஒப்பந்த நிறுவனங்கள், ஒப்பந்தங்களுக்குள் ஒளிந்திருக்கக் கூடிய ஆபத்துகள் ஆகியவை குறித்த தெளிவான அறிவைப் பெற முடியும்.
நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் நொடிப்புநிலை (திவால்) தொடர்பான சட்டங்களை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கொள்கை
வடிவமைப்புகளுக்கு ஆலிவர் ஹார்ட், பெங் ஹால்ம்ஸ்டிரம் ஆகியோர் உருவாக்கிய ஒப்பந்தக் கொள்கை அடித்தளமாகத் திகழும் என்று நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுடன் வழங்கப்படும் 9.24 லட்சம் டாலர் (சுமார் ரூ.6.2 கோடி) பரிசுத் தொகை, ஆலிவர் ஹார்ட்டுக்கும், பெங் ஹால்ம்ஸ்டிரம்முக்கும் சமமாகப் பகிர்ந்து வழங்கப்படும்

ஆலிவர் ஹார்ட் (68)

பிரிட்டனில் பிறந்து, அமெரிக்காவில் வசித்து வரும் ஆலிவர் ஹார்ட், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பும், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர் பட்டமும் பெற்றவர் இவர்.

 பெங் ஹால்ம்ஸ்டிரம் (67)

ஃபின்லாந்தைச் சேர்ந்த பெங் ஹால்ம்ஸ்டிரம், மாஸசூùஸட்ஸ் தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் பொருளாதார விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.
அமெரிக்காவின் ஸ்டாண்ட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டாண்ட்ஃபோர்டு பொருளாதாரக் கல்லூரியில் ஆய்வாளர் பட்டம் பெற்றவர் ஆவார்.

Reviews


 

கொலம்பிய அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

நிகழாண்டில் அமைதிக்கான நோபல் பரிசு, கொலம்பிய அதிபர் யுவான் மேனுவல் சாண்டோஸýக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொலம்பியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் உள்நாட்டுப் போர்ப் பதற்றச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அவர் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்காக, இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அந்தக் குழுவின் தலைவர் கசி குல்மேன் ஃபைவ், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள கொலம்பியா, தற்போது மேலும் சீர்குலையும் அபாயக் கட்டத்தில் உள்ளது. இந்நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது, கொலம்பியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கு முயன்று வரும் அனைத்து தரப்பினரையும் ஊக்குவிக்கும் என்று தாம் நம்புவதாக காசி குல்மேன் ஃபைவ் தெரிவித்தார்.
கொலம்பியாவில் அரசின் ராணுவப் படைகளுக்கும், ஃபார்க் எனப்படும் புரட்சிகர அமைப்பின் கொரில்லா படைகளுக்கும் இடையே 50 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போரினால், இதுவரை 2.6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 45,000 பேர் காணாமல் போயினர்.
இந்நிலையில், கொலம்பியாவில் அமைதியை மீட்டெடுக்கும் முயற்சியாக, அரசுக்கும், புரட்சிகர அமைப்பின் தலைவர் ரோட்ரிகோ லண்டனோவுக்கும் இடையே முதல் கட்ட அமைதி ஒப்பந்தம் கடந்த மாதம் 26-ஆம் தேதி கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து, அந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதில், அமைதி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிபருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் வாக்களித்தனர். அதனால், அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல முயடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த நாட்டின் எதிர்காலம் தற்போது கேள்விக் குறியாகியள்ளது. இந்த நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Reviews