Logo

Current Affairs

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்
All Current Affairs

வட்டி விகித நிர்ணயக் குழுவில் அரசு உறுப்பினர்கள் நியமனம்

வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்யும் நிதிக் கொள்கை நிர்ணயக் குழுவுக்கான (எம்.பி.சி.) அரசு சார்பிலான மூன்று உறுப்பினர்களை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு புது தில்லியில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடனுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் நிதிக் கொள்கை நிர்ணயக் குழுவில் மத்திய அரசின் சார்பில் மூன்று பேரை நியமனம் செய்ய அமைச்சரவையின் நியமனக் குழு வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி இந்த எம்.பி.சி. குழுவில், இந்திய புள்ளியியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் சேத்தன் கதே, டெல்லி ஸ்கூல் ஆப் இக்னாமிக்ஸ் தலைவர் பமி துவா மற்றும் ஐ.ஐ.எம்.-ஆமதாபாத் பேராசிரியர் ரவீந்திர டோலாகியா ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வட்டி விகிதங்கள் உள்ளிட்ட நிதிக் கொள்கை முடிவுகளை இதுவரை ரிசர்வ் வங்கி கவர்னர் எடுத்து வந்த நிலையில், இனி அந்தப் பணியினை நிதிக் கொள்கை நிர்ணயக் குழு மேற்கொள்ள உள்ளது. இந்தக் குழுவில், மத்திய அரசு சார்பில் 3 உறுப்பினர்கள், ரிசர்வ் வங்கி சார்பில் ஆளுநர் உள்ளிட்ட 3 உறுப்பினர்கள் என மொத்தம் ஆறு உறுப்பினர்கள் இடம்பெறுவர்.

Reviews


 

தொலைத் தொடர்பு சேவை வர்த்தகத்தில் இணைகிறது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஏர்செல் நிறுவனங்கள்

தொலைத் தொடர்பு சேவைத்துறை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்செல் நிறுவனங்கள் ஒன்றாக இணைகின்றன.

இதனையடுத்து அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கம்பியில்லா தொலைத்தொடர்பு சேவைப்பிரிவு ஏர்செல்லுடன் இணைக்கப்படவுள்ளது.  இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து உருவாக்கும் நிறுவனத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்செல்லின் தலைமை நிறுவனமான மேக்சிஸ் நிறுவனம் ஆகியவை தலா 50% பங்குகளை சரிசமமாக வைத்திருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

இணைப்புக்குப் பிறகு இந்த நிறுவனங்களின் பயனாளர்கள் எண்ணிக்கை 19 கோடியாக இருக்கலாம். ஏர்டெல் நிறுவனம் 25 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாகும். இந்த நடவடிக்கையினால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் ரூ.20,000 கோடி குறையும் அதேவேளையில் ஏர்செல் நிறுவனத்தின் கடன் ரூ.4000 கோடி குறையும். 

இந்த இணைப்பினால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மற்றும் வருவாய் அடிப்படையில் இந்தியாவில் 4-வது பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனம் உருவாகிறது. மேலும் ஸ்பெக்ட்ரம் அலைவரைசைக் கையகத்தில் 448 மெகா ஹெட்ஸுடன் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்த இணைந்த நிறுவனங்கள். இணைப்பின் மூலம் உருவாகும் புதிய நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.65,000 கோடி, நிகர மதிப்பு ரூ.35,000 கோடியாக இருக்கும்.
Reviews


 

உர்ஜித் படேல் கையெழுத்தில் புதிய 20 ரூபாய் நோட்டுகள்

புதிதாக ரிசர்வ் வங்கி கவர்னராகப் பொறுப்பேற்றுள்ள உர்ஜித் படேல் கையெழுத்தில் புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியாக உள்ளன.

மகாத்மா காந்தி சீரிஸ் 2005-ல் வெளியான நோட்டுகளில் ஆர் என்ற எழுத்து நம்பர் பேனலில் இடம்பெற்றிருக்கும். இதன் பின்பகுதியில் 2016 என்று அச்சாகும். வழக்கமான வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாக இந்த ரூபாய் நோட்டுகள் இருக்கும். சிறிய அளவிலான மாறுதல்கள் இதில் இடம்பெற்றிருக்கும்.

20 எண், ஆர்பிஐ முத்திரை, மகாத்மா காந்தி உருவம், உத்திர வாத பிரிவு, கவர்னரின் கையெழுத்து என்பன வழக்கமாக நோட்டுகளில் சற்று உயர்ந்த அளவினதாக இருக்கும். ஆனால் புதிய நோட்டுகளில் இவை வழக்கமானதாக இருக்கும். ரூபாய் நோட்டின் முக்கோண வடிவிலான அடையாள சின்னம் இந்த புதிய ரூபாய் நோட்டில் நீக்கப்பட்டிருக்கும். இருப்பினும் நிறத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

Reviews


 

அந்நிய மறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுமதி: ஐஆர்டிஏ தலைவர் விஜயன் தகவல்

சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள மறு காப்பீட்டு நிறுவனங்கள் விரைவில் இந்தியாவில் தங்களது செயல்பாடுகளைத் தொடங்க உள்ளன என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ஐஆர்டிஏ) தலைவர் விஜயன் கூறினார்.

தற்போது இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமான ஜிஐசி நிறுவனம் மட்டுமே மறு காப்பீட்டு பணிகளை மேற்கொள்கிறது.

சர்வதேச அளவில் மூனிச் ஆர்இ, ஸ்விஸ் ஆர்இ, ஸ்கோர், ஹனோவர் ஆர் உள்ளிட்ட நிறுவனங்கள் மறு காப்பீட்டில் ஈடுபட்டுள்ள பிரபலமான நிறுவனங்களாகும். பொது வாக அந்நிய காப்பீட்டு நிறுவனங்கள் இங்கு செயல்பாடுகளைத்தொடங்க ஆர்1 லைசென்ஸ் பெற வேண்டும். அடுத்த கட்டமாக ஆர்2 மற்றும் ஆர்3 லைசென்ஸ்களைப் பெற வேண்டும்.

மூன்று கட்ட லைசென்ஸைப் பெற்ற பிறகுதான் அந்நிய மறு காப்பீட்டு நிறுவனங்கள் இங்கு கிளைகளைத் தொடங்க முடியும். இது தொடர்பாக சில நிறுவனங்கள் ஐஆர்டிஏவை அணுகியுள்ளதாக விஜயன் குறிப்பிட்டார்.

குறைந்தபட்சம் 6 நிறுவனங்கள் இங்கு கிளைகள் தொடங்க அனுமதி கோரியுள்ளன. அடுத்த மூன்று மாதங்களுக்குள் அனுமதி பெற்று அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இங்கு கிளைகளை அமைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐஆர்டிஏ இயக்குநர் கூட்டத்தில் இந்நிறுவனங்களுக்கு ஆர்2 அனுமதி வழங்குவது குறித்து முடிவு செய்யப்பட்டு வழங்கப்படும் என்றார்.

இது தொடர்பான வரைவு அறிக்கை தயாரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நிறுவனங்கள் இது தொடர்பான அறிக்கையை பார்க்க வேண்டும் என வற்புறுத்துகின்றன. இது தொடர்பாக இறுதி அறிக்கை தயாரிக்கும் நிலையை எட்டவில்லை என்றார்.

பொது காப்பீட்டு நிறுவனங்களைப் பொறுத்தமட்டில் அவைகளைப் பட்டியலிடலாம் என அரசு அறிவித்துவிட்டது. ஆனால் இது தொடர்பாக எவ்வித அதிகாரபூர்வ ஆணையும் வெளியாகவில்லை என்றார் விஜயன்.

Reviews


 

இந்திய பணியாளர்களில் 34 சதவீதம் பேர் திறமையற்றவர்கள்

இந்திய பணியாளர்களில் 34 சதவீதம் பேர் திறமையில்லாதவர்களாக இருக்கின்றனர் என்று சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. இது சீனாவில் 47 சதவீதமாக இருக்கிறது.

பிஎன்பி மெட்லைப் பணியாளர் நலன் குறித்த ஆய்வை வெளியிட்டுள்ளது. ஆறு நாடுகளில் உள்ள மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு குறித்து பிஎன்பி மெட்லைப் அறிக்கை வெளியிட்டுள்ளது. 34 சதவீத இந்திய பணியாளர்கள் திறமை குறைவாக இருப்பதாக நம்புகிறார்கள். இது போலாந்து, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் 40 சதவீதமாகவும் சீனாவில் 47 சதவீதமாகவும் உள்ளது. ரஷ்யாவில் 56 சதவீதம் பேர் திறமை குறைவாக உள்ளார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் பணியாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்கும் கவர்ந்து இழுப்பதற்கும் சம்பளம் மற்றும் சலுகைகளில் அதிகம் கவனம் செலுத்தும். தற்போது பணியாளர்களை தக்கவைத்துக் கொள்ள வெறும் சம்பளம் மட்டுமல்லாமல் சிறப்புச் சலுகைகளை வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

மற்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக பணியாளர்களை ஈர்க்க சலுகைகளை வழங்குகிறார்கள் என்று ஆய்வில் கலந்து கொண்ட 88 சதவீத இந்திய பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். மிகப் பெரும்பான்மையான எம்என்சி நிறுவனங்கள் மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு போன்றவற்றை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பணியாளர்களுக்கு சலுகைகளை வழங்கவேண்டியது அதிகரித்து வருகிறது. மிகச் சிறிய நிறுவனங்களும் திறமையானவர்களை பணியில் தக்கவைத்துக் கொள்வதற்கு வரக்கூடிய வருடங்களில் சலுகைகளை வழங்க வேண்டி வரும். உடல்நலம் சார்ந்த சலுகைகள், ஓய்வுகால சலுகைகள் மற்றும் நிதி சார்ந்த திட்டங்கள் போன்றவை இந்த சலுகைகளில் முக்கிய பங்கு வகிக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Reviews