Logo

Current Affairs

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்
All Current Affairs

பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியல்

உலகளவில் பட்டினியால் வாடும் மக்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 97வது இடம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டுக்கான உலக பட்டினி நாடுகளின் பட்டியலில் 118 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

மக்களுக்குக் கிடைக்கும் ஊட்டச்சத்து, வீணாக்கப்படும் உணவு, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி விகிதம், குழந்தை இறப்பு விகிதம் என 4 விஷயங்களை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில்  ஆப்ரிக்க நாடுகளான எத்தியோப்பியா, நைகர், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் முன்னிலையில் உள்ளன.  இலங்கை, வங்கதேசம், நேபாளம், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள் இந்தியாவுக்கு அடுத்த நிலைகளில் உள்ளன.

118 நாடுகளைக் கொண்ட இந்த பட்டியலில் 15% பேர் சாப்பிடும் உணவு தரம் மற்றும் அளவில் பற்றாக்குறை, குழந்தைகள் உயிரிழப்பு 4.8%, ஊட்டச்சத்து குறைபாடு என்பது 39% என்ற அளவில் இந்தியா 97வது இடத்தைப் பிடித்துள்ளது.

Reviews


 

இந்திய பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம்!

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ரூ.15 லட்சம் கோடி சொத்துக்களுடன் முகேஷ் அம்பானி மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.
இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலை ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.
அதில், ரிலையன்ஸ் தொழில் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.15 லட்சம் கோடி என்றும் அவர் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் சொத்து ரூ.12 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த 12 மாதங்களில் அவரது சொத்து 21 சதவீதம் அதிகரித்துள்ளது.
இவரைத்தொடர்ந்து இந்தியாவின் மருந்து பொருட்கள் உற்பத்தி துறையில் சாதனை படைத்து வரும் திலிப் சங்வி 2-வது இடம் பிடித்துள்ளார். இவரது சொத்து ரூ.11 லட்சம் கோடி.
அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளவர்களின் பட்டியல் விவரம்: 
3. இந்துஜா சகோதர்கள் (ரூ.10.1 லட்சம் கோடி)
4. அசிம் பிரேம்ஜி (ரூ.10 லட்சம் கோடி)
5. பல்லோன்ஜி பிஸ்திரி (ரூ.9.31 லட்சம் கோடி)
6. லட்சுமி மிட்டல் (ரூ.8.37 லட்சம் கோடி)
7. கோத்ராஜ் குடும்பம் (ரூ.8.31 லட்சம் கோடி)
8. ஷிவ் நாடார் (ரூ.7.64 லட்சம் கோடி)
9. குமார் பிர்லா (ரூ.5.89 லட்சம் கோடி)
10. சைரஸ் பூனவாலா (ரூ.5.76 லட்சம் கோடி)

Reviews


 

அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 5 இந்திய வம்சாவளியினர்

அமெரிக்காவின் மிகப் பெரும் பணக்காரர்களுக்கான பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.
சிம்பொனி டெக்னாலஜி நிறுவனர் ரமேஷ் வாத்வானி, சின்டெல் பாரத் பணிசேவை நிறுவனர் நீரஜா தேசாய், விமான சேவைத் துறை ஜாம்பவான் ராஜேஷ் கங்வால், தொழிலதிபர் ஜான் கபூர், முதலீட்டு நிபுணர் கவிதார்க் ராம் ஸ்ரீராம் ஆகிய அமெரிக்க இந்தியர்கள், ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் "2016-ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் மிகப் பெரும் 400 பணக்காரர்கள்' பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களில் கவிதார்க் ராம் ஸ்ரீராம் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் ரமேஷ் வாத்வானி 222-ஆவது இடத்திலும், நீரஜா தேசாய் 274-ஆவது இடத்திலும் உள்ளனர்.
ராஜேஷ் காங்வால், ஜான் கபூர், கவிதார்க் ராம் ஸ்ரீராம் ஆகியோர் முறையே 321, 335, 361 ஆகிய இடங்களை வகிக்கின்றனர்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், இந்தப் பட்டியலில் தொடர்ந்து 23-வது ஆண்டாக முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Reviews


 

இளம் தலைவர்கள் பட்டியலில் 3 இந்தியர்: ஐ.நா. சபை வெளியீடு

ஐ.நா.வின் இளம் தலைவர்கள் பட்டியலில் இரு இந்தியர்கள், ஒரு அமெரிக்க வாழ் இந்தியர் உட்பட 17 பேர் இடம்பெற்றுள்ளனர். நீடித்த வளர்ச்சி இலக்கில் அவர்களின் தலைமைப் பண்பு, ஏழ்மை ஒழிப்பில் பங்களிப்பு, சமத்துவம், சமநீதிக்கான போராட்டம், வரும் 2030-ம் ஆண்டுக்குள் பருவநிலை மாறுபாட்டை எதிர் கொள்ளும் திட்டம் ஆகியவை சார்ந்து 17 இளம் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மகளிர் கல்வி, மறுவாழ்வு, பாலின அத்துமீறல்களுக்கு எதி ரான நடவடிக்கைக்காக ஷீசேய்ஸ் என்ற அமைப்பை நிறுவிய திரிஷா ஷெட்டி (25) இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

திருமணம், திருவிழாக்கள், கொண்டாட்டங்களில் உணவுகள் வீணடிக்கப்படுவதைத் தடுத்து, அவற்றைத் தேவைப்படுவோர்க்கு கொண்டு சேர்ப்பதற்காக ஃபீடிங் இந்தியா அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வரும் அங்கித் கவார்ட்டா (24) இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றொரு இந்தியர் ஆவார்.

அமெரிக்க வாழ் இந்தியர் கரண் ஜெராத் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார். கடலுக்கடி யில் உள்ள எண்ணெய்க் கிணறு களில் இருந்து எண்ணெய் எடுக்கும்போது, எண்ணெய் சிந்தாமல் இருப்பதற்கான மூடி அமைப்பைக் கண்டறிந்ததற்காக இவர் இப்பட்டியலில் இடம்பிடித் துள்ளார்.

Reviews


 

பெண்கள் பணியாற்ற சிறந்த மாநிலம் : 9வது இடத்தில் தமிழகம்

பெண்கள் பணியாற்ற சிறந்த டாப் 10 மாநிலங்களில் சிக்கிம் முதலிடத்திலும், தமிழகம் 9வது இடத்திலும் உள்ளன. தலைநகர் டில்லி டாப் 10 பட்டியலில் இடம்பெறவில்லை. 

பெண்கள் பணியாற்ற சிறந்த இந்திய மாநிலங்கள் பற்றிய ஆய்வை சிஎஸ்ஐஎஸ் அமைப்பு நடத்தியது. இதில் அதிகபட்சமாக சிக்கிம் மாநிலம் 40 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக டில்லி 8.5 புள்ளிகளையும் பெற்றுள்ளன. பெண்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றுவதற்கு நேரம் தொடர்பான சட்ட ரீதியிலான கட்டுப்பாடுகள், ஐடி துறை, பிற துறைகள், பணியிடத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள், பணி செய்யும் பெண்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.


இதில் டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் சிக்கிம் - 40 புள்ளிகள், தெலுங்கானா - 28.5 புள்ளிகள், புதுச்சேரி - 25.6 புள்ளிகள், கர்நாடகா - 24.7 புள்ளிகள், இமாச்சல பிரதேசம் - 24.2 புள்ளிகள், ஆந்திரா - 24 புள்ளிகள், கேரளா - 22.2 புள்ளிகள், மகாராஷ்டிரா - 21.4 புள்ளிகள், தமிழகம் - 21.1 புள்ளிகள், சட்டீஸ்கர் - 21.1 புள்ளிகள் பெற்றுள்ளன. இவற்றில் சிக்கிம், கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் ஆகிய 4 மாநிலங்களில் கோர்ட் உத்தரவுப்படி தொழிற்சாலைகளில் பெண்கள் இரவு நேரங்களில் பணியாற்றுவது உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெண்கள், எந்த துறையிலும் இரவு நேர பணி செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. பணிகளில் பெண்களுக்கு பங்களிக்கும் நாடுகளில் இந்தியா மிகவும் பின்தங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 24 சதவீதம் மட்டுமே பெண்களுக்கு வேலையில் பங்களிப்பு அளிக்கப்படுகிறது.

Reviews