Logo

Current Affairs

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்
All Current Affairs

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் கடந்த 1942-ம் ஆண்டு ஜனவரி 8-ந்தேதி பிறந்தவர் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங். அதிகமான அறிஞர்கள் நிறைந்த குடும்பத்தில், மருத்துவ ஆராய்ச்சியாளருக்கு மகனாக பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங், தனது சிறு வயதிலேயே ஆராய்ச்சித்திறன் பெற்றிருந்தார். ஹெர்ட்போர்ட்சயரில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த ஹாக்கிங், ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை பயின்றார். தனது 16-வது வயதிலேயே நண்பர்களுடன் இணைந்து கணித கோட்பாடுகளை தீர்ப்பதற்கான கணினி ஒன்றை உருவாக்கி சாதித்தார். அண்டவியலில் ஆய்வு செய்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற இவர், அந்த பல்கலைக்கழகத்திலேயே கணித பேராசிரியராக தனது பணியை தொடங்கினார். இவரது 21-வது வயதில் மிகவும் அரிதான ‘அமியோட்ராபிக் லேட்டரல் ஸ்கிலிராசிஸ்’ என்ற நரம்பியல் நோய், ஹாங்கிங்கை தாக்கியது. இதனால் கை, கால்கள் உள்ளிட்ட உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததுடன், வாழ்க்கை முழுவதும் சக்கர நாற்காலியிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. நரம்பியல் நோயால் உடலியக்கம் பாதிக்கப்பட்ட நிலையிலும், விஷேசமாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார். குவாண்டம் கோட்பாடு, அண்டவியல், கருந்துளை ஆராய்ச்சியில் அவரது பங்கு முக்கியமானது. பல்வேறு அறிவியல் மாநாட்டில் பங்கேற்று மக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியாக திகழ்ந்த, ஸ்டீபன் ஹாக்கிங், கடந்த மார்ச் 14-ம் தேதி அதிகாலை தனது 76-வது வயதில் காலமானார். லண்டன் கேம்பிரிட்ஜில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்தது. வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியிலுள்ள அறிவியலாளர் ஐசக் நியூட்டனின் கல்லறைக்கு அருகே ஹாக்கிங்கின் சாம்பல் ஜூன் 15-ம் தேதி அடக்கம் செய்யப்படும். கடந்த 1727ஆம் ஆண்டு இறந்த சர் ஐசக் நியூட்டன் உடலும், அதற்குப் பின்னர் 1882ல் உயிரிழந்த சார்லஸ் டார்வின் உடலும் வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் அடக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Reviews


 

ஐ.நா. பொதுச் செயலராக குட்டெரெஸ் நியமனம்

போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் அண்டோனியோ குட்டெரெஸ் (67), ஐ.நா.சபையின் பொதுச் செயலராக வியாழக்கிழமை தேர்வு செய்யப்பட்டார். ஐ.நா. சபையின் பொதுச் செயலரான பான்-கீ-மூனின் பதவிக் காலம் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த ஆண்டு (2017) ஜனவரி 1-ஆம் தேதி ஐ.நா.வின் புதிய பொதுச் செயலராக குட்டெரெஸ் பதவியேற்பார்.
முன்னதாக, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் அங்கம் வகிக்கும் 15 நாடுகள், பொதுச் செயலர் பதவிக்கு குட்டெரெஸை ஒரு மனதாக தேர்வு செய்து, 193 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐ.நா. பொதுச் சபைக்கு அவரது பெயரை கடந்த வாரம் பரிந்துரைத்தது. அதன்படி, குட்டெரெஸை பொதுச் செயலராக நியமிக்க 193 நாடுகளும் வியாழக்கிழமை இசைவு தெரிவித்தன.
இதன்மூலம், அந்தப் பதவிக்கு அவர் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். போர்ச்சுகல் பிரதமராக கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் 2002-ஆம் ஆண்டு வரை குட்டெரெஸ் பதவி வகித்தார். அதன்பிறகு, 2005-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2015-ஆம் ஆண்டு டிசம்பர் வரை அகதிகளுக்கான ஐ.நா. தூதராக அவர் சிறப்பாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Reviews


 

புதிய ஐ.நா. பொதுச் செயலர்: குட்டெரெஸுக்கு பான் கி-மூன் வாழ்த்து

ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்டோனியோ குட்டெரெஸுக்கு தற்போது அப்பதவியை வகித்து வரும் பான் கி-மூன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
வாடிகனி இறை நம்பிக்கையும் விளையாட்டும் குறித்து நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை தெரிவித்ததாவது: அன்டோனியோ குட்டெரெஸை நான் நன்கு அறிவேன். அவர் போர்ச்சுகலின் பிரதமராக இருந்த அனுபவசாலி. உலக அரசியல், சமூக விவகாரங்களில் அவர் சிறந்த அறிவாளி. ஐ.நா. அகதிகள் நல ஆணையராகப் பணியாற்றிய காலத்தில் அவருடைய மனித நேயப் பண்புகள் சிறப்புற வெளிப்பட்டன.
ஐ.நா.வின் பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்ட அவருக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று பான் கி-மூன் தெரிவித்தார்.

Reviews


 

இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழுத் தலைவராக எம்.எஸ்.கே.பிரசாத் நியமனம்

முன்னாள் விக்கெட் கீப்பரும் ஆந்திராவைச் சேர்ந்தவருமான எம்.எஸ்.கே. பிரசாத், சந்தீப் பாட்டீலுக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ-யின் 87-வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் மும்பையில் இன்று இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. 

சந்தீப் பாட்டீல் தலைமை முந்தைய தேர்வுக்குழுவில் பிரசாத் பணியாற்றினார். தற்போது இவர் தலைவராக நியமிக்கப்பட, சரந்தீப் சிங், ககன் கோடா, தேவங் காந்தி, ஜதின் பராஞ்பே ஆகியோர் 5 நபர் தேர்வுக்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  இந்தத்தேர்வு குழு இங்கிலாந்துக்கு எதிராக நவம்பர் 9-ம் தேதி தொடங்கும் 5 டெஸ்ட் போட்டிகளுக்கான தொடரில் விளையாடும் இந்திய அணியைத் தேர்வு செய்து பணியைத் தொடங்குகின்றனர். 
Reviews


 

எல்.ஐ.சி. தலைவராக வி.கே. சர்மா பொறுப்பேற்பு

பொதுத் துறையைச் சேர்ந்த மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் தலைவராக வி.கே. சர்மா கூடுதல் பொறுப்பேற்றார். எல்.ஐ.சி. நிறுவனத்தின் தலைவராக இருந்த எஸ்.கே. ராய் வெள்ளிக்கிழமை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, தற்போது நிர்வாக இயக்குநர் பொறுப்பில் உள்ள வி.கே. சர்மா, கூடுதல் பொறுப்பாக தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார் என்று எல்.ஐ.சி. அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பணிக்காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே, எஸ்.கே.ராய் கடந்த ஜூன் மாதத்தில் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதனை மத்திய அரசு அப்போது ஏற்கவில்லை. இந்நிலையில் தற்போது அவர் எல்.ஐ.சி. தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எல்.ஐ.சி நிறுவனத்தின் தலைவராக கூடுதல் பொறுப்பேற்றுள்ள வி.கே.சர்மா, கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

Reviews