Logo

Current Affairs

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்
All Current Affairs

சாபா - புயலுக்கு தென் கொரியாவில் 6 பேர் பலி

தென் கொரியாவில் "சாபா' புயல் தாக்கியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், நான்கு பேரைக் காணவில்லை. கொரிய தீபகற்பத்தின் தென்கடல் பகுதியில் உருவாகிய சாபா புயல் காரணமாக கனமழை, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பூசான் துறைமுகம், உல்ஸான் நகரம் ஆகியவை கடும் பாதிப்புக்குள்ளாகின.
சாபா புயலுக்கு இதுவரையில் 6 பேர் பலியாகினர். மேலும், காணாமல் போன 4 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2.30 லட்சம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பின்னர் நிலைமை சீரானது. புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு நடவடிக்கைள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Reviews


 

மாத்யூ புயல் பாதிப்பு

கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹெய்ட்டியை "மாத்யூ புயல்" தாக்கியுள்ளது. இந்த புயலில் சிக்கி இதுவரை 102 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
Reviews


 

ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் சேலம், மதுரை, தஞ்சை, வேலூர்

மத்திய அரசின் நகர்ப்புற கட்டமைப்பு மேம்பாட்டு திட்ட பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த சேலம், மதுரை, தஞ்சை, வேலூருக்கு இடம் கிடைத்தது. இதனை மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் நகர் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி பல்வேறு போட்டிகள் மத்தியில் நகரங்கள் தேர்வு செய்யப்படும். ஏற்கனவே பல்வேறு நகரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று 3 வது பட்டியல் வெளியானது. 

இதில் உத்திரபிரதேசம், அசாம், தமிழகம், மத்தியபிரதேசம், ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட 12 மாநிலங்களில் 67 நகரங்கள் போட்டியிட்டதில் தற்போது 27 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் சேலம், மதுரை, தஞ்சை, வேலூர், திருப்பதி, மங்களூரு, அமிர்தசரஸ், குவாலியர், ஆகியன தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 
Reviews


 

சார்லி சாப்ளின் அருங்காட்சியகம் சுவிஸ்ஸில் திறப்பு

பிரபல பிரிட்டிஷ் நடிகர் சார்லி சாப்ளினின் வாழ்க்கையையும், பணியையும் போற்றும் வகையிலான அருங்காட்சியகம் இன்று சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டுள்ளது.

ஞாயிறன்று திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், ஜெனீவா ஏரியின் கரைப்பகுதியில் அவர் கடைசி 25 வருடங்கள் வாழ்ந்த பரந்துவிரிந்த மெனோர் டெ பான் தோட்டத்தில் அமைந்துள்ளது.

பேசாப்படக் காலத்தில் நடித்து உலகப் புகழ்பெற்ற சாப்ளின் அந்தப் பெருந்தோட்டத்தில் தனது மனைவி ஊனா மற்றும் எட்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார்.

இந்த அருங்காட்சியகத்தில் அவர் பயன்படுத்திய தொப்பி மற்றும் பிரம்புத்தடி உட்பட அவரது படைப்புகளுடன் தொடர்புடைய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 1960ஆம் ஆண்டுகளில் அவர் அமெரிக்காவிலிருந்து தப்பி சுவிட்சர்லாந்து வந்தார்.

அவர் கம்யூனிஸ் இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், அமெரிக்காவிலிருந்து வெளியேறி சுவிட்சர்லாந்து வந்தார்.

Reviews


 

கங்கை சுத்திகரிப்புத் திட்டத்தின் பலன்கள் விரைவில் கிடைக்கும்

மத்திய அரசின் மகத்தான திட்டமான கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் பலன்கள், வரும் அக்டோபர் மாதத்தில் மக்களுக்கு கிடைக்கும் என மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்தார். கான்பூரில் பாயும் கங்கை நதி கழிவுநீராலும், தொழிற்சாலைக் கழிவுகளாலும் கடுமையாக மாசடைந்துவிட்டது. கங்கையை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை வரும் அக்டோபர் மாதம் முடிவடையும். கங்கை தூய்மையடைந்த பிறகு, அதன் பலன்கள்ளை மக்கள் பெறுவர் என்றார்.
Reviews