Logo

Current Affairs

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்
All Current Affairs

விண்வெளியில் நீண்ட நேரம் நடந்து வீரர்கள் சாதனை

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, ஜப்பான், கனடா, உள்ளிட்ட 17 ஐரோப்பிய நாடுகளின் விண்வெளிகழகமும் இணைந்து, 150 பில்லியன் டாலர் செலவில் பூமிக்கு மேல் 400 மைல் தொலைவில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்கி வருகிறது. இங்கு 6 மாதத்துக்கு ஒரு முறை 3 வீரர்கள் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், தற்போது ரஷியாவை சேர்ந்த அலெக்சாண்டர் மிசுர்கின், ஆன்டன் ஸ்காப்லெரோவ் என்ற 2 வீரர்கள் விண்வெளி ஆய்வகத்தில் தங்கி கட்டுமான பணிகளை செய்து வருகின்றனர். நேற்று வீரர்கள் 2 பேரும் ஆய்வகத்தைவிட்டு வெளியே வந்து விண்வெளியில் நடந்தனர். இந்திய நேரப்படி இரவு 9.04 மணிக்கு தொடங்கி அதிகாலை 5.17 மணிவரை என மொத்தம், 8 மணி 13 நிமிட நேரம் விண்வெளியில் நடந்தனர். இதன்மூலம் வீரர்கள் இருவரும், விண்வெளியில் நீண்ட நேரம் நடந்தவர்கள் என்ற சாதனை படைத்தனர்.
Reviews


 

உலகத்திலேயே பெரிய ராக்கெட்

நாசாவால் விண்ணில் ஏவ முடியாத ராக்கெட்டை தற்போது ஒரு தனியார் நிறுவனம் செய்துமுடித்துள்ளது. அந்த வகையில் ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் மிக சிறப்பான பணிகளை செய்து வருகிறது. அமெரிக்காவில் இருக்கும் கோடிஸ்வரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் என்பவரின் நிறுவனம் இது. இந்த நிறுவனம் உலகத்திலேயே பெரிய ராக்கெட்டை ஏவ இருக்கிறது. இந்த ராக்கெட் இன்று மதியம் 12 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டுக்கு ஃபல்கான் ஹெவி என்று பெரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ராக்கெட்டுக்கு 18 போயிங் விமானங்களுக்கு இணையான சக்தியும், 747 ஜெட் விமானங்களுக்கு இணையான வேகத்தை கொண்டது. மேலும் இந்த ராக்கெட் மூலம் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடியும். மேலும் இதன் மூலம் 64 மெட்ரிக் டன் எடையை பூமியின் சுற்றுப்பாதயிலும் , 16 மெட்ரிக் டன் எடையை செவ்வாய் கிரகத்திலும் நிறுத்த முடியும். நாசா 1970 களில் விண்ணில் ஏவிய சார்ட்ரன் வி ராக்கெட்டை விட இது பல மடங்கு பெரியது. இந்த ராக்கெட் தற்போது எந்த காரணத்திற்காகவும் ஏவப்படவில்லை . ஆனால் எதிர்காலத்தில் இதை குறிப்பிட்ட காரணங்களுக்காக அனுப்ப திட்டம் இருக்கிறது.
Reviews


 

நாட்டிலேயே அதிக திறன்வாய்ந்த சிறப்புக் கணினியை ஐ.ஐ.டி கௌஹாத்தி இன்று பெறும்.

நாட்டிலேயே அதிக திறன்வாய்ந்த சிறப்புக் கணினியை ஐ.ஐ.டி கௌஹாத்தி இன்று பெறும். PARAM ISHAN என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சிறப்புக் கணினியை, கௌஹாத்தியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் இன்று இயக்கி வைப்பார். Centre for Development of Advanced Computing என்ற மையத்துடன் இணைந்து, ஐ.ஐ.டி கௌஹாத்தி இந்த திறன்மிக்க கணினியை வடிவமைத்துள்ளது. வினாடிக்கு சுமார் 250 டிரில்லியன் புள்ளிகள் என்ற அளவில் செயல்படும் இந்த கணினி, 300 TB அளவிலான தரவுகளை சேமிக்கும் திறன் கொண்டது. இந்த சிறப்பு கணினியினால், ஐ.ஐ.டி கௌஹாத்தி கல்வி நிறுவனத்தின் மாணவர்களும், ஆசிரியர்களும் பயனடைவார்கள்.
Reviews


 

ஆக்சிஜனை கொண்டு இயங்கும் ராக்கெட் இயந்திர சோதனை வெற்றி

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 6 மணியளவில்   ஆக்சிஜனை கொண்டு இயங்கும் ராக்கெட் இயந்திரத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றகரமாக சோதனை செய்தனர்.

ராக்கெட் ஏவப்பட்ட 55 விநாடிகளில் சோதனை வெற்றி அடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானி சிவன் கூறுகையில்,  ராக்கெட் இன்ஜின் சோதனை இஸ்ரோவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவான மறுபயன்பாட்டு ராக்கெட் இதுவாகும்.

இந்த ராக்கெட் இயந்திர சோதனை வெற்றி அடைந்ததன் மூலம் இனி ராக்கெட் ஏவுவதற்கான செலவு 10 மடங்கு குறையும். பொதுவாக ராக்கெட்கள் ஆக்சிஜன் மற்றும் எரிபொருளை தாங்கிச் செல்லக் கூடியவை. ஆனால் இந்த ராக்கெட் இயந்திரம் வளிமண்டல ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு அதன் மூலம் இயங்குவதால், ராக்கெட் எடை குறைவாக, அதே சமயம் திறன் அதிகம் கொண்டதாக இருக்கும். என அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன் இத்தகைய ராக்கெட் என்ஜினை அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா மட்டுமே சோதனை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Reviews


 

பால் வீதியில் சூரியனை விட அதிக எடையுள்ள நட்சத்திரம் கண்டுபிடிப்பு

சூரியனை விட அதிக எடை யுள்ள நட்சத்திரத்தை விஞ் ஞானிகள் கண்டுபிடித் துள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள கேம் பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு பால் வீதியை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதன் பலனாக சூரியனை விட அதிக எடை யுள்ள இளம் நட்சத்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அந்த நட்சத்திரம் பூமியில் இருந்து 11 ஆயிரம் ஒளி ஆண்டுக்கு அப்பால் உள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், சூரியனை விட 30 மடங்கு நிறை கொண்டதாக அந்த இளம் நட்சத்திரம் உள்ளது. இந்த நட்சத்திரத்தை தொடர்ந்து ஆய்வு செய்தால், பால் வீதியில் பெரிய பெரிய நட்சத்திரங்கள் எப்படி உருவாயின என்பது தெரிய வரும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஏனெனில், அந்த இளம் நட்சத்திரம் தன் பகுதியில் உள்ள மூலக்கூறுகளை எல்லாம் ஈர்த்து தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அப்படி அந்த இளம் நட்சத்திரம் முழுமை அடையும் போது மிகப்பெரிய நட்சத்திர மாக மாறும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித் துள்ளனர்.

நமது பால் வீதியில் உள்ள பெரும்பாலான இளம் நட்சத் திரங்கள் மிக விரைவாக வளர்ந்து குறைந்த காலத்தி லேயே எரிந்து ஒன்றுமில்லாமல் போய் விடும். எனவே, அவற்றை ஆய்வு செய்வது மிகவும் கடினம். இந்த நட்சத்திரம் தொடர் பான ஆய்வு கட்டுரை, ‘ராயல் ஆஸ்டிரோனாமிக்கல் சொசைட்டி’ மாத இதழில் வெளியாகி உள்ளது.

Reviews