Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 01-June-2018 to 01-June-2018
 • 1. ஐசிசி தரவரிசையில் புதிதாக இணைந்துள்ள அணி?
  • A) நெதர்லாந்து
  • B) ஆப்கானிஸ்தான்
  • C) அயர்லாந்து
  • D) கனடா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
  ஐசிசி தரவரிசையில் இன்று (ஜூன் 1) முதல் நேபாளம், ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, யுஏஇ (யுனெடட் அரபு எமிரேட்ஸ்) ஆகிய நான்கு அணிகளும் புதிதாக இணைந்துள்ளன.

 • 2. எந்த நாடு சமூக வலைதளத்தில் தவறான தகவல்களைப் பதிவிட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது?
  • A) ஈரான்
  • B) துருக்கி
  • C) ஈராக்
  • D) சவுதி அரேபியா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
  சவுதி அரேபியாவில் சமூக வலைதளத்தில் தவறான தகவல்களைப் பதிவிட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது அந்நாட்டு நீதிமன்றம்.

 • 3. ’பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா’ திட்டத்தின் கீழ் கிராமப்புற சாலைக் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள கடன் வழங்கும் வங்கி?
  • A) ஆசிய வளர்ச்சி வங்கி
  • B) ஆசிய முதலீட்டு வங்கி
  • C) உலக வங்கி
  • D) பன்னாட்டு நிதியம்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer C
  ’பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா’ திட்டத்தின் கீழ் கிராமப்புற சாலைக் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சாலைக் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள உலக வங்கியிடம் இந்தியா கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மே 31ஆம் தேதி கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தில் கிராமப்புற சாலைத் திட்டங்களுக்காக ரூ.3,371 கோடி கூடுதலாகக் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கடன் தொகை மூன்று ஆண்டுக் காலச் சலுகையுடன் வழங்கப்படுவதாக நிதியமைச்சகம் கூறியுள்ளது.

 • 4. மல்ட்டிப்பிள் ஸ்களீரோசிஸ் (Multiple sclerosis) எனப்படும் நோயில் பாதிக்கப்படுபவர்களுக்குச் சேவை செய்துவரும் மகேஸ்வரி என்பவரைப் பாராட்டி, தன்னம்பிக்கை சாதனையாளர் விருது வழங்கியுள்ள மாநிலம் ?
  • A) கேரளா
  • B) தெலுங்கானா
  • C) தமிழ்நாடு
  • D) ஆந்திரா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer C
  மல்ட்டிப்பிள் ஸ்களீரோசிஸ் (Multiple sclerosis) எனப்படும் கொடிய நரம்பு அழற்சி நோயிலிருந்து போராடி மீண்டு அதே நோயில் பாதிக்கப்படுபவர்களுக்குச் சேவை செய்துவரும் மகேஸ்வரி என்பவரைப் பாராட்டி, தமிழக அரசு தன்னம்பிக்கை சாதனையாளர் விருது வழங்கியுள்ளது. சென்னை ராஜாஜி மருத்துவமனையில் உலக மல்ட்டிப்பிள் ஸ்களீரோசிஸ் நாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் தமிழக சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கரால் இந்த விருது வழங்கப்பட்டது.

 • 5. பொது இடங்களில் பர்தா போன்ற முகத்தை மறைக்கும் ஆடைகளுக்குத் தடை விதித்துள்ள நாடு ?
  • A) சவுதிஅரேபியா
  • B) டென்மார்க்
  • C) கனடா
  • D) நேபாளம்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer B
  டென்மார்க் அரசு பொது இடங்களில் பர்தா போன்ற முகத்தை மறைக்கும் ஆடைகளுக்குத் தடை விதித்துள்ளது. இது தொடர்பான தடை குறித்த சட்ட முன்வரைவை நேற்று அந்நாட்டு அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. 75 உறுப்பினர்கள் இந்தத் தடைச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

 • 6. அதிக வருவாய் ஈட்டிய பொதுத் துறை நிறுவனங்களுக்கான பட்டியலில் எது முதலிடம் பிடித்துள்ளது?
  • A) ONGC
  • B) IOC
  • C) BPCL
  • D) HPCL
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer B
  மார்ச் 31ஆம் தேதி நிறைவடைந்த 2017-18 நிதியாண்டுக்கான வருவாய் விவரங்களை இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் 12 சதவிகித உயர்வுடன் ரூ.21,346 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஓஎன்ஜிசி நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி அதிக வருவாய் ஈட்டிய பொதுத் துறை நிறுவனங்களுக்கான பட்டியலில் இந்தியன் ஆயில் கார்பரேசன் முதலிடம் பிடித்துள்ளது.

 • 7. ஒரு லட்சம் பசுக்களை கொல்ல திட்டமிட்டுள்ள நாடு ?
  • A) அர்ஜென்டினா
  • B) நியூசிலாந்து
  • C) இந்தியா
  • D) பாகிஸ்தான்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer B
  மைக்கோபிளாஸ்மா போவிஸ் எனப்படும் பாக்டீரியா நோயை தடுக்கும் விதமாக ஒரு லட்சம் பசுக்களை கொல்ல நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 • 8. யாருடைய வாழ்க்கை வரலாறு குல் மக்காய் என்ற பெயரில் திரைப்படமாகிறது?
  • A) ஒசாமா பின்லேடன்
  • B) நவாஸ்செரீப்
  • C) ஸ்ரீதேவி
  • D) மலாலா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
  அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மலாலாவின் வாழ்க்கை வரலாறு குல் மக்காய் என்ற பெயரில் திரைப்படமாகிறது.

 • 9. சமீபத்தில் காலமான ஆலன் பீன் எந்த துறையை சேர்ந்தவர் ?
  • A) மருத்துவம்
  • B) சினிமா
  • C) விளையாட்டு
  • D) விண்வெளி
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
  முன்னாள் அமெரிக்க விண்வெளி வீரர் ஆலன் பீன் காலமானார். நிலவில் காலடி பதித்த நான்காவது நபர் ஆலன் பீன். இவரது இழப்பை ஈடு செய்யமுடியாது என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 • 10. கடுமையான கருக்கலைப்பு தடைச்சட்டத்தை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ள நாடு ?
  • A) இங்கிலாந்து
  • B) பிரான்ஸ்
  • C) ஸ்பெயின்
  • D) அயர்லாந்து
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
  அயர்லாந்தில் கருக்கலைப்பு தடைச்சட்டத்தில் மாற்றம் மாற்றம் கொண்டு வருவது தொடர்பான பொது வாக்கெடுப்பில் 66.4 சதவீத மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். கடுமையான கருக்கலைப்பு தடைச்சட்டத்தை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதனையடுத்து கருவில் இருக்கும் குழந்தைக்கும் உயிர்வாழ சம உரிமை உண்டு என்று கூறும் 8-வது பிரிவு கருக்கலைப்பு சட்டத்தில் இருந்து நீக்கப்படுகிறது. புதிய சட்டம் இயற்றப்பட்டவுடன் கருத்தரித்து 12 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்.