Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 02-June-2018 to 02-June-2018
 • 1. ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், வைபர் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோருக்கு வரி விதிக்க திட்டமிட்டுள்ள நாடு ?
  • A) தான்சானியா
  • B) கென்யா
  • C) உகாண்டா
  • D) ருவாண்டா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer C
  உகாண்டாவில் உள்நாட்டு வருமானத்தை அதிகரிக்கவும், போலிச் செய்திகளை ஒழிக்கவும் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், வைபர் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோருக்கு வரி விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

 • 2. மகப்பேறு மற்றும் சிசு தொடர் கண்காணிப்பு மதிப்பீட்டுக்கான பிக்மி (Picme ) என்ற இணையதளத்தைத் தொடங்க உள்ள மாநிலம் ?
  • A) தெலுங்கானா
  • B) கர்நாடகா
  • C) கேரளா
  • D) தமிழ்நாடு
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
  தமிழக பொது சுகாதாரத் துறை சார்பில் மகப்பேறு மற்றும் சிசு தொடர் கண்காணிப்பு மதிப்பீட்டுக்கான பிக்மி (Picme ) என்ற இணையதளத்தைத் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. பேறு காலத்திலும், குழந்தை பிறப்புக்குப் பின்னரும் தாய்-சேய் பராமரிப்பை முழுமைப்படுத்தும் வகையில், அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. தற்போது, பிக்மி என்ற இணையதளத்தைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்மூலம், தமிழகம் முழுவதும் உள்ள கருவுற்ற பெண்கள் மற்றும் பிறக்கும் குழந்தைகளின் சுகாதாரத்தை முழுமையாகக் கண்காணித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகள் அளிக்கப்படும்.

 • 3. எந்த நாட்டில் இந்தியாவின் பீம், ரூபே மற்றும் எஸ்பிஐ செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டன?
  • A) இந்தோனேஷியா
  • B) தாய்லாந்து
  • C) சிங்கப்பூர்
  • D) மலேஷியா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer C
  சிங்கப்பூரில் நடந்த வணிக நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட மோடி, மூன்று இந்திய செயலிகளை அறிமுகப்படுத்தினார். பீம், ரூபே மற்றும் எஸ்பிஐ செயலிகளைப் பயன்படுத்தி, சிங்கப்பூரில் வாழ்ந்துவரும் இந்தியர்கள் தங்களது உறவினர்களுக்குப் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

 • 4. வெகுமதி திட்டம் 2018’ எதனோடு தொடர்புடையது ?
  • A) கறுப்புப் பணம் மற்றும் பினாமி சொத்துகள்
  • B) பெண் குழந்தைகள் மேம்பாடு
  • C) நேர்மையான அரசு ஊழியர்கள்
  • D) சமூக சேவை
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
  சட்ட விரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் மற்றும் பினாமி சொத்துகள் குறித்து வருமானத் வரித் துறைக்குத் தகவல் தெரிவிப்போருக்கு ரூ.5 கோடி வரை சன்மானம் வழங்கப்படும் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. வரி ஏய்ப்பைத் தடுக்கவும், கறுப்புப் பணத்தை ஒழிக்கவும் மத்திய அரசும் வருமான வரித் துறையும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன. அதில், மக்களுடைய பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காக மக்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது ‘பினாமி சொத்துகள் பரிவர்த்தனை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி திட்டம் 2018’ என்ற தலைப்பில் வருமான வரித் துறை புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

 • 5. டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் எங்குள்ளது ?
  • A) கன்னியாகுமாரி
  • B) மாதவரம்
  • C) நாகப்பட்டினம்
  • D) தூத்துக்குடி
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer C
  தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் இனி, டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது.

 • 6. எந்த நாட்டில் நரேந்திர மோடி தோட்டம் உள்ளது ?
  • A) மலேசியா
  • B) இந்தோனேஷியா
  • C) சிங்கப்பூர்
  • D) தாய்லாந்து
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer C
  மோடியின் வருகைக்குப் பிறகு, சிங்கப்பூர் தோட்டத்துக்கு நரேந்திர மோடி என்று பெயர் சூட்டப்பட்டது.

 • 7. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துகான உறுப்பினராக யாரை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது?
  • A) குமரகுருபரன்
  • B) பிரபாகர்
  • C) ராம்குமார்
  • D) ரமேஷ் சந்த் மீனா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer B
  காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துகான 2 உறுப்பினர்களின் பெயர்களை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. தற்போது தமிழகத்தின் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றி வரும் எஸ்.கே. பிரபாகர், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கான உறுப்பினராக தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. அதேபோல நீர்வளத்துறை தலைமை பொறியாளராக பணியாற்றி வரும் செந்தில் குமாரை காவிரி நீர் ஒழுங்காற்று குழு உறுப்பினருக்காக தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு மொத்தம் 10 உறுப்பினர்களின் தேவை உள்ளது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி என ஒவ்வொரு மாநிலங்களிலிருந்து ஒருவர் உறுப்பினராக தேர்வு செய்யப்படவுள்ளார்கள்.

 • 8. சிங்கப்பூர் ‘ஷாங்கரி லா’ உரையாடலில் பங்கேற்று பேசும் முதல் இந்திய பிரதமர் ?
  • A) இந்திராகாந்தி
  • B) ராஜிவ் காந்தி
  • C) நேரு
  • D) நரேந்திரமோடி
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
  பிரதமர் மோடி, சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூபை சந்தித்து பேசினார். பின்னர் ‘ஷாங்கரி லா’ உரையாடலில் மோடி பங்கேற்று பேசுகிறார். அதில் முக்கியமான ’சாகர்மாலா’ திட்டம் குறித்து பேசவுள்ளார். ‘ஷாங்கரி லா’ உரையாடலில் பங்கேற்று பேசும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

 • 9. முதன்முறையாக மதுபானத் தயாரிப்பில் களமிறங்கியுள்ள குளிபான தயாரிப்பு நிறுவனம் ?
  • A) காளிமார்க்
  • B) மிராண்டா
  • C) கோகோ கோலா
  • D) பெப்சி
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer C
  உலகளவில் மிக பழமையான குளிபான தயாரிப்பு நிறுவனமான கோகோ கோலா முதன்முறையாக மதுபானத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. குளிர்பானங்கள் தயாரித்து விற்பனை செய்து வரும் கோகோ-கோலா நிறுவனம் தன் முதல் மதுபானத்தை அறிமுகம் செய்துள்ளது. ஜப்பானின் சூ கி (Chu Hi) நிறுவனத்துடன் இணைந்து மதுபான விற்பனையை துவக்கியுள்ளது கோகோ கோலா.

 • 10. ஆளில்லா விமானம் மூலம் உணவுப் பொருட்களை டெலிவரி செய்யும் வசதி எந்த நாட்டில் அறிமுகமாகியுள்ளது?
  • A) சீனா
  • B) அமெரிக்கா
  • C) ஜப்பான்
  • D) இந்தியா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
  சீனாவில் ஆளில்லா விமானம் மூலம் உணவுப் பொருட்களை டெலிவரி செய்யும் வசதி அறிமுகமாகியுள்ளது. பிட்சா உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாடிக்கையாளர்களின் வீடுகளில் டெலிவரி செய்ய ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் சீனாவில் நடைமுறைக்கு வந்துள்ளது.