Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 03-June-2018 to 03-June-2018
  • 1. நாட்டின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் எங்கு அமைக்கப்படவுள்ளது?
    • A) இம்பால்
    • B) அகர்தலா
    • C) கோஹிமா
    • D) ஐஸ்வால்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    நாட்டின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படவுள்ளது. மணிப்பூர் மாநிலம் இம்பாலில், நாட்டின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் அமையவுள்ளது. விளையாட்டு அறிவியல், விளையாட்டு தொழில்நுட்பம், விளையாட்டு மேலாண்மை, விளையாட்டு பயிற்சி உள்ளிட்ட துறைகளை வளர்ச்சி பெறச் செய்ய பல்கலைக்கழகம் உதவுகிறது.

  • 2. முதன் முறையாக போக்குவரத்துத்துறை சார்பில் வாகனங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறை எங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?
    • A) டெல்லி
    • B) புதுச்சேரி
    • C) மஹாராஷ்டிரா
    • D) கேரளா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    புதிய வாகனங்களை வாங்குவோர் அதனை பதிவு செய்ய போக்குவரத்துத்துறைக்கு நேரில் சென்று தான் விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இதனைப் போக்கும் வகையில், புதுச்சேரியில், முதன் முறையாக போக்குவரத்துத்துறை சார்பில் வாகனங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  • 3. படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படவுள்ள மாநிலம் ?
    • A) ஆந்திரா
    • B) கர்நாடகா
    • C) ஜம்மு காஸ்மீர்
    • D) கேரளா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    ஆந்திராவில் படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

  • 4. பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் எந்த நாட்டில் நடைபெறுகிறது?
    • A) பிரான்ஸ்
    • B) உக்ரைன்
    • C) ரஷ்யா
    • D) பிரேசில்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    பிபா உலக கோப்பை கால்பந்து தொடர், ஜுன் 14ம் தேதி முதல் ஜுலை 15ம் தேதி வரை ரஷ்யாவில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான அதிகாரப்பூர்வ சின்னம் ‘ஸாபிவாகா’ ஓநாயாகும்.உலக கோப்பை கால்பந்து போட்டியில் 41 போட்டிகளை இலவசமாக ஒளிபரப்ப மலேசிய அரசு ஒளிபரப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

  • 5. ஐ.நா அமைதி படையில் உயிர் தியாகம் செய்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு ?
    • A) இந்தியா
    • B) அமெரிக்கா
    • C) சீனா
    • D) பாகிஸ்தான்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    ஐ.நா அமைதி படையில் உயிர் தியாகம் செய்தவர்கள் பட்டியலில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். ஐ.நா அமைதி படைக்கு அதிக வீரர்களை அனுப்பிய நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.

  • 6. பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்பவர்களுக்கு அதிக பட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க உள்ள நாடு ?
    • A) ஈரான்
    • B) இந்தியா
    • C) பாகிஸ்தான்
    • D) சவுதிஅரேபியா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்பவர்களுக்கு அதிக பட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 3 லட்சம் ரியால்கள்(ரூ.54 லட்சம்) அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்தை சவுதி அரேபிய அரசு இயற்றியுள்ளது.

  • 7. ஏர்பஸ் நிறுவனம் எந்த நாட்டில்; உள்ளது ?
    • A) அமெரிக்கா
    • B) பிரான்ஸ்
    • C) ஜப்பான்
    • D) இங்கிலாந்து
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    ஃபிரான்ஸ் நாட்டுக்குச் சென்றுள்ள சுரேஷ் பிரபு தவ்லவ்ஸில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்தின் ஆலைக்குச் சென்று பார்வையிட்டார். அப்போது அந்நிறுவனத்திடம் ’மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் இந்தியாவில் விமான உற்பத்தியில் ஏர்பஸ் நிறுவனம் ஈடுபட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் ஏர்பஸ் நிறுவனம் விமான உற்பத்தியில் ஈடுபட்டால் விமான உற்பத்தித் துறை விரிவடைவது மட்டுமின்றி இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

  • 8. நெய்பர்ஹூட் எனும் புது அப்ளிகேசனை அறிமுகம் செய்துள்ள நிறுவனம் ?
    • A) ஆப்பிள்
    • B) மைக்ரோசாப்ட்
    • C) கூகுல்
    • D) முகநூல்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    கூகுல் இந்தியா, நெய்பர்ஹூட் எனும் புது அப்ளிகேசனை பீடா வெர்சனில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அப்ளிகேசனில் அருகில் செல்ல வேண்டிய இடங்கள் குறித்து எளிமையாகக் கண்டுபிடிப்பதுடன் அந்த ஏரியா வாசிகளிடன் மேலதிக தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். உதாரணமாக அருகில் பூங்கா எங்கே உள்ளது எனத் தேடினால், அதன் முகவரி கிடைப்பதுடன் எந்த பூங்கா சிறப்பாக இருக்கும் அதன் நிறை குறைகள் என்ன போன்ற தகவல்களை அந்த ஏரியா வாசிகள் மூலமாக அறியலாம்.

  • 9. அமெரிக்காவில் நடைபெறும் பேஸ்பால் விளையாட்டை துவக்கி வைக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் ?
    • A) சச்சின்
    • B) தோனி
    • C) ரோஹித் சர்மா
    • D) விராட்கோலி
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    அமெரிக்காவில் நடைபெறும் பேஸ்பால் விளையாட்டை இந்திய கிரிக்கெட் ரோஹித் சர்மா துவக்கி வைக்கிறார். அமெரிக்காவில் மேஜர் லீக் பேஸ்பால் விளையாட்டுத் தொடர் தொடங்கவிருக்கிறது. இதன் முதல் போட்டியில் சீட்டில் மரினர்ஸ் மற்றும் தம்பா பே ராய்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்த போட்டியை ஃபர்ட்ஸ்ட் பிட்ச் எனும் முறையில் பந்தை எறிந்து துவக்கி வைக்கிறார் ரோஹித் சர்மா. மேஜட் லீக் பேஸ்பாலின் துவக்க விழாவில் இதுபோல பிரபலங்கள் வந்து பந்தை எறிந்து துவக்கி வைப்பது வழக்கம். அந்த வகையில் இம்முறை ரோஹித் சர்மா சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருக்கிறார். இந்தக் கெளரவத்தைப் பெறும் முதலாவது இந்தியர் எனும் பெருமையையும் ரோஹித் சர்மா பெறுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.

  • 10. அக்னி 6 ஏவுகணை எவ்வளவு தூரத்துக்கு சென்று தாக்கக்கூடியது.
    • A) 6.000 முதல் 7,000 கிலோ மீட்டர் வரை
    • B) 7.000 முதல் 8,000 கிலோ மீட்டர் வரை
    • C) 8.000 முதல் 10,000 கிலோ மீட்டர் வரை
    • D) 10.000 முதல் 12,000 கிலோ மீட்டர் வரை
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    அக்னி 5 ஏவுகணை இன்று ஒடிஸாவில் உள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 17 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்ட இந்த ஏவுகணை ஒரு டன்னுக்கும் அதிகமான எடை கொண்டது. சராசரியாக 5,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்று தாக்கக்கூடியது. மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் அக்னி 5 ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 8.000 முதல் 10,000 கிலோ மீட்டர் வரை சென்று துல்லியமாகத் தாக்கக்கூடிய வகையில் அக்னி 6 ஏவுகணையை தயாரிக்கும் பணியில் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டுள்ளது.