Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 04-June-2018 to 04-June-2018
 • 1. கர்நாடகா மாநிலத்தில் கன்னட நடிகர் தர்ஷன் எதற்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்?
  • A) வனத்துறை
  • B) குழந்தைகள் நலம்
  • C) நிபா விழிப்புணர்வு
  • D) நீர் மேலாண்மை
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
  ஜுன் 15ம் தேதி உலக சுற்றுச்சுழல் தினம் கடைப்பிடிக்கப்படுவதால், கர்நாடகா மாநிலத்தில் கன்னட நடிகர் தர்ஷன் வனத்துறை தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 • 2. உலக தமிழ்ப் பண்பாட்டு மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
  • A) சென்னை
  • B) பெங்களுரு
  • C) திருவனந்தபுரம்
  • D) அமராவதி
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer B
  பெங்களுருவில் ஜுன் 16, 17ம் தேதிகளில் உலக தமிழ்ப் பண்பாட்டு மாநாடு நடைபெற உள்ளது.

 • 3. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்த யார் தலைமையிலான ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது ?
  • A) நீதிபதி ஆறுமுகசாமி
  • B) நீதிபதி அருணா ஜெகதீசன்
  • C) நீதிபதி ரகுராம்
  • D) நீதிபதி இந்திரா பானெர்ஜி
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer B
  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் இன்று (ஜூன் 4) விசாரணையைத் தொடங்கியது.

 • 4. அதிக தூரம் பயணிக்கக் கூடிய நேரடி விமான சேவையை எந்த நாடு அறிமுகப்படுத்த உள்ளது?
  • A) சவுதிஅரேபியா
  • B) அமெரிக்கா
  • C) இந்தியா
  • D) சிங்கப்பூர்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
  சிங்கப்பூரில் அதிக தூரம் பயணிக்கக் கூடிய நேரடி விமான சேவையை வரும் அக்டோபர் முதல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

 • 5. அமெரிக்காவின் ஸ்பெல் செக் எனப்படும் கடினமான சொற்களை உச்சரிக்கும் போட்டியில் முதல் பரிசு வென்றவர்?
  • A) கார்த்தி நெம்மானி
  • B) ஆகாஷ் விகொட்
  • C) சினிஃத நந்திபதி
  • D) அனன்யா வினய்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
  அமெரிக்கா ஹூஸ்டன் நகரில் ஸ்பெல் செக் எனப்படும் கடினமான சொற்களை உச்சரிக்கும் தேசிய அளவிலான போட்டி நடை பெற்றது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கார்த்தி நெம்மானி(14) முதல் பரிசு வென்றார். 11 ஆண்டுகளாக நடைபெறும் இந்த போட்டியில் இந்திய வம்சாவளியினரே தொடர்ந்து வெற்றி பெறுவதாக தெரிய வருகிறது.

 • 6. அரசு சேவைகள் மக்களின் வீடு தேடி வருவதற்கான புதிய திட்டத்தை அறிவித்துள்ள மாநிலம் ?
  • A) பீகார்
  • B) கேரளா
  • C) டெல்லி
  • D) தெலுங்கானா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer C
  டெல்லி மாநில அரசு, சாதி, பிறப்பு, இறப்பு, பென்சன் மற்றும் வருவாய், ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு மாற்றம் செய்தல், திருமண சான்றிதழ், குடிநீர், கழிவுநீர் இணைப்பு ஆகிய 40 வகையான அரசு சேவைகள் மக்களின் வீடு தேடி வருவதற்கான புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

 • 7. பத்திரிக்கையாளர்களுக்காக மருத்துவ காப்பீடு திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் ?
  • A) பீகார்
  • B) கேரளா
  • C) ஒடிஸா
  • D) ஹரியானா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer C
  ஒடிஸா மாநிலத்தில் பணியாற்றி வரும் பத்திரிக்கையாளர்களுக்காக மருத்துவ காப்பீடு திட்டத்தை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது.

 • 8. ராணி ராம்பால் எந்த விளையாட்டோடு தொடர்புடையவர் ?
  • A) ஹாக்கி
  • B) டென்னிஸ்
  • C) கால்பந்து
  • D) கபடி
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
  இந்திய மகளிர் ஹாக்கி அணியில் கேப்டனாக ராணி ராம்பால் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

 • 9. சமீபத்தில் செய்தியில் இடம்பெற்ற இளந்திரையன் எந்த துறை சேர்ந்தவர் ?
  • A) விஞ்ஞானி
  • B) இலக்கியவாதி
  • C) பொறியாளர்
  • D) நீதிபதி
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
  சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய நீதிபதிகளை(குமாரி பி.டி ஆஷா, நிர்மல் குமார், சுப்பிரமணியம் பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சரவணன்) நியமிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

 • 10. எந்த மாநிலத்தில் ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை அளிக்க உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது?
  • A) பஞ்சாப்
  • B) கேரளா
  • C) உத்திரபிரதேசம்
  • D) அரியானா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
  அரியானா மாநிலத்தில் ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை அளிக்க உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உத்தரவில், பிறந்த குழந்தையை முதல் 15 நாட்களுக்கு தாயால் மட்டும் பராமரிப்பது கடினம். எனவே அரசுத் துறையில் பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கு 15 நாட்கள் மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுவதாக முதலமைச்சர் மனோகர் லால் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த சலுகை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.