Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 05-June-2018 to 05-June-2018
  • 1. நீட் தேர்வு முடிவில் தேசியளவில் முதலிடம் பிடித்த கல்பனா குமாரி எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
    • A) டெல்லி
    • B) மஹாராஷ்டிரா
    • C) ஹரியானா
    • D) கேரளா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    நாடு முழுவதும் வெளியிடப்பட்ட நீட் தேர்வு முடிவில் 720க்கு 691 மதிப்பெண்கள் பெற்ற டெல்லியை சேர்ந்த கல்பனா குமாரி தேசியளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

  • 2. KAVALAN Dial 100, KAVALAN SOS என்ற புதிய மொபைல் ஆப்ஸ் அறிமுகம் செய்த மாநிலம் ?
    • A) கேரளா
    • B) கர்நாடகா
    • C) தெலுங்கானா
    • D) தமிழ்நாடு
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    பொதுமக்கள் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள இரண்டு புதிய மொபைல் அப்ளிகேஷன்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிமுகம் செய்தார். KAVALAN Dial 100, KAVALAN SOS என்ற புதிய மொபைல் ஆப்ஸ் மூலம் பொதுமக்கள் காவல்துறையை விரைவில் தொடர்புகொண்டு அவசர கால உதவியைப் பெறலாம். இந்த ஆப் மூலம் எளிதாகவும் நேரடியாகவும் மாநில தகவல் தலைமை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு பேசலாம்.

  • 3. உலகில் அதிக நேரம் உழைப்பவர்கள் எந்த நகரை சேர்ந்த தொழிலாளர்கள்?
    • A) ஹனோய்
    • B) டெல்லி
    • C) சென்னை
    • D) மும்பை
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    சுவிசர்லாந்து நாட்டைச் சேர்ந்த வங்கி ஒன்று, உலகில் அதிக நேரம் உழைப்பவர்கள் யார் என்பதைக் கண்டறிய பல்வேறு உலக நாடுகளிடம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் மும்பையை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக நேரம் உழைப்பதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி, மும்பை நகரைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகபட்சமாக ஒரு ஆண்டில் 3,314.7 மணி நேரம் வேலை பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் தலைநகரான டெல்லி இந்த வரிசையில் 4வது இடத்தில் உள்ளது. டெல்லியை சேர்ந்தவர்கள் ஒரு ஆண்டிற்கு 2511.4 உழைப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக நேரம் உழைக்கும் மனிதர்கள் பட்டியலில், ஹனோய் இரண்டாவது இடத்திலும், மெக்சிகோ சிட்டி மூன்றாவது இடத்திலும் உள்ளன.

  • 4. 2019ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்த மாநிலம் ?
    • A) கர்நாடகா
    • B) சிக்கிம்
    • C) கேரளா
    • D) தமிழ்நாடு
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 5) அறிவித்தார். உலகச் சுற்றுச்சூழல் தினமான இன்று (ஜூன் 5) முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பால், எண்ணெய், மருத்துவம், தயிர் போன்றவை தவிர்த்து வேறு எதற்கும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தத் தடை விதிப்பதாகத் தெரிவித்தார்.

  • 5. இணையதளத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டால் ஏழு ஆண்டு வரை சிறைத் தண்டனை கொடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ள அமைப்பு ?
    • A) உள்துறை அமைச்சகம்
    • B) தேசிய மகளிர் ஆணையம்
    • C) மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு ஆணையம்
    • D) மக்கள் நல்வாழ்வு அமைச்சகம்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    இணையதளத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டால் ஏழு ஆண்டு வரை சிறைத் தண்டனை கொடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது.

  • 6. சர்வதேச அளவில் அதிக மின்னணுக் கழிவுகளை உருவாக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது.
    • A) இரண்டாவது
    • B) மூன்றாவது
    • C) நான்காவது
    • D) ஐந்தாவது
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    அசோசேம் கூட்டமைப்பும், என்.இ.சி. நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீனா, அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளைத் தொடர்ந்து சர்வதேச அளவில் அதிக மின்னணுக் கழிவுகளை உருவாக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. 2016ஆம் ஆண்டில் சர்வதேச மின்னணுக் கழிவுகளின் அளவு 44.7 மில்லியன் டன்னாக இருந்தது. இது 2021ஆம் ஆண்டுக்குள் 20 சதவிகித உயர்வுடன் 52.2 மில்லியன் டன்னாக அதிகரிக்கும். 2016ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மொத்த மின்னணுக் கழிவுகளில் வெறும் 20 சதவிகிதக் கழிவுகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.

  • 7. உலக சுற்றுச்சூழல் தினம் எந்த நாள் அனுசரிக்கப்படுகிறது ?
    • A) ஜூன் 4
    • B) ஜூன் 5
    • C) ஜூன் 6
    • D) ஜூன் 7
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஐநா சுற்றுச்சூழல் அமைப்பும், ஈஷா அறக்கட்டளையும் இணைந்து பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக இந்தியாவில் இன்று 250க்கும் மேற்பட்ட இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளன. இந்தாண்டு ஐநாவால் ‘பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுப்போம்’ என்பது கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (05.06.2018): இன்று சுற்றுச்சூழல் தினம்

  • 8. கிலாவேயா எரிமலை எங்குள்ளது ?
    • A) இந்தோனேஷியா
    • B) இத்தாலி
    • C) பெரு
    • D) ஹவாய்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    ஹவாயில் கிலாவேயா எரிமலை மீண்டும் வெடித்ததால் ஒரே நாளில் அடுத்தடுத்து 500 முறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிலாவேயா எரிமலை கடந்த மே 3ஆம் தேதி வெடிக்கத் தொடங்கிய நிலையில் அந்நாட்டு அரசு அப்பகுதியில் இருந்து 2,000 பேரை வெளியேற்றியுள்ளது.

  • 9. முதன் முதலாக தண்ணீருக்கான ஏடிஎம்கள் முதல் கட்டமாக எங்கு வைக்கப்பட்டுள்ளது?
    • A) சென்னை
    • B) டெல்லி
    • C) மும்பை
    • D) கொல்கத்தா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    முதன் முதலாக தண்ணீருக்கான ஏடிஎம்கள் ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் முதல் கட்டமாக மும்பையில் சத்ரபதி சிவாஜி மகராஜ் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் இந்த வாட்டர் ஏடிஎம் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம்களில் 300 மி.லி தண்ணீருக்கு 1 ரூபாய் எனவும், 500 மிலி்க்கு 3ரூபாய் எனவும், 1 லிட்டருக்கு 5 ரூபாய் எனவும், 1 லிட்டர் வாட்டர் பாட்டிலுடன் 8 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற 178 ஏடிஎம்கள் 100மும்பை ரயில் நிலையங்களிலும் புற நகர் ரயில் நிலையங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.

  • 10. பிரிக்ஸ் நாடுகளின் அமைதிக்கான விருது யாருக்கு வழங்கப்பட்டது ?
    • A) ஜிதேந்திர சிங்
    • B) அப்துல் பாசித்
    • C) ஸ்ரீதேவி
    • D) தில்ஜித் சிங் ராணா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, சௌத் ஆப்பிரிக்கா(பிரிக்ஸ்) ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல சர்வதேச நாடுகளின் அமைச்சர்கள், தூதுவர்கள், தலைவர்கள் பங்குகொண்ட மூன்று நாள் சர்வதேச வர்த்தக மாநாடு டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் கடந்த மே 21ஆம் தேதி முதல் மே 23ஆம் தேதி வரை நடைபெற்றது. மாநாட்டின் நிறைவில் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட தற்போது லண்டனில் வசிக்கும் அப்துல் பாசித்துக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பிரிக்ஸ் நாடுகளின் அமைதிக்கான விருது மற்றும் பட்டயத்தை வழங்கிக் கவுரவித்தார். மேலும் இந்த விழாவில் இந்தியாவில் பிறந்த லண்டன் பாராளுமன்ற உறுப்பினர் லார்ட் தில்ஜித் சிங் ராணா MBE மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகிய இருவருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.