Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 06-June-2018 to 06-June-2018
  • 1. அனைத்து மாநில ஆளுநர்களின் 49 வது மாநாடு எங்கு தொடங்கியது?
    • A) மீரட்
    • B) டெல்லி
    • C) பானிபட்
    • D) சண்டிகர்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    அனைத்து மாநில ஆளுநர்களின் 49 வது மாநாடு இன்று (ஜூன் 4) குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் தொடங்கியது. நாளை வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. ஆறு அமர்வுகளாக நடைபெறும் இந்த அமர்வை இன்று காலை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்வில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்றனர்.

  • 2. எந்த நாட்டில் பியூகோ எரிமலை உள்ளது ?
    • A) பெரு
    • B) மெக்ஸிகோ
    • C) கவுதமாலா
    • D) கொலம்பியா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    கவுதமாலா நாட்டில் தலைநகா் கவுதமாலா சிட்டிக்கு 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பியூகோ எரிமலை திடீரென வெடித்து சிதறியது. அதில் இருந்து பல கி.மீ. தொலைவிற்கு 700 டிகிாி செல்சியஸ் வரை வெப்பம் மிகுந்த நெருப்பு குழம்பு (லாவா) வெளியேறி வருகிறது.

  • 3. முதன்முறையாகப் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ள நாடு ?
    • A) ஈரான்
    • B) ஈராக்
    • C) சவுதிஅரேபியா
    • D) ஜோர்டான்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    பெண்கள் வாகனம் ஓட்டலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சவூதியில் முதன்முறையாகப் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது

  • 4. இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்.?
    • A) ராஜிவ் குமார்
    • B) சுபாஷ் சந்திரா கார்க்கி
    • C) அசோக் குலட்டி
    • D) எம்.கே.ஜெயின்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக, ஐடிபிஐ வங்கி மேலாண் இயக்குநர் எம்.கே.ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • 5. வாஸ்ப்-127பி என்பது என்ன ?
    • A) நட்சத்திரம்
    • B) கோள்
    • C) துணைக்கோள்
    • D) வால் நட்சத்திரம்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    சூரிய குடும்பத்திற்கு வெளியே, வியாழன் கோளை விட 1.4 மடங்கு அகலம் அதிகம் உள்ள வாஸ்ப்-127பி என்ற கோளில் தண்ணீர் மற்றும் உலோகங்கள் உள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

  • 6. ‘கோபென்-6’ செயற்கை கோள் எந்த நாட்டை சேர்ந்தது ?
    • A) பாகிஸ்தான்
    • B) ஜப்பான்
    • C) அமெரிக்கா
    • D) சீனா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    சீனா புவி கண்காணிப்பு செயற்கை கோளான ‘கோபென்-6’ செயற்கை கோளை லாங் மார்ச் 2டி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.

  • 7. எந்த நாட்டின் புதிய பிரதமராக பெட்ரோ சன்ஷெஸ் பதவியேற்றுள்ளார்?
    • A) பிரான்ஸ்
    • B) போர்ச்சுகல்
    • C) ஸ்பெயின்
    • D) பல்கேரியா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    ஸ்பெயின் புதிய பிரதமராக பெட்ரோ சன்ஷெஸ் பதவியேற்றுள்ளார்.

  • 8. கமோவ் Ka – 226T ஹெலிகாப்டர்களை எந்த நாட்டுடன் இணைந்து தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?
    • A) அமெரிக்கா
    • B) இஸ்ரேல்
    • C) ரஷ்யா
    • D) பிரான்ஸ்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    இந்திய இராணுவத்திற்காக கமோவ் Ka – 226T ஹெலிகாப்டர்களை ரஷ்யாவுடன் இணைந்து தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளது.

  • 9. ப்ளு ஃப்ளாக் எனப்படும் சர்வதேச தரச்சான்றிதழ் பெறும் இந்திய கடற்கரை?
    • A) தமிழ்நாடு
    • B) ஒடிஸா
    • C) ஆந்திரா
    • D) கேரளா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    ப்ளு ஃப்ளாக் எனப்படும் சர்வதேச தரச்சான்றிதழ் பெறும் வகையில், ஆசியாவில் முதல் முறையாக இந்தியாவைச் சேர்ந்த 13 கடற்கரைகள்(ஒடிஸா, மகாராஷ்டிரம், புதுச்சேரி, கோவா, டாமன்-டையூ, லட்சத்தீவுகள், அந்தமான்-நிகோபார் தீவுகள்) சேர்க்கப்பட்டுள்ளது.

  • 10. அண்டான் ஷ்காப்லெவ் மற்றும் ஒலே ஆர்டேமிவ், எந்த நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர்கள்?
    • A) அமெரிக்கா
    • B) சீனா
    • C) ரஷ்யா
    • D) பிரான்ஸ்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    ஃபிபா உலகக் கோப்பை போட்டியை விளம்பரப்படுத்தும் விதமாக, ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள்(அண்டான் ஷ்காப்லெவ் மற்றும் ஒலே ஆர்டேமிவ்) விண்வெளியில் கால்பந்தாடி அசத்தியுள்ளனர்.