Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 07-June-2018 to 07-June-2018
 • 1. ஆப்பிள் டிசைன் விருதை பெற்ற ராஜா விஜயராம் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ?
  • A) தெலுங்கானா
  • B) ஆந்திரா
  • C) கேரளா
  • D) தமிழ்நாடு
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
  அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் ஆப்பிள் மென்பொருள் வடிவமைப்பாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் ஆப்பிள் டிசைன் விருதை தமிழகத்தைச் சேர்ந்த ராஜா விஜயராம் என்ற மெக்கானிக்கல் இஞ்சினியர் பெற்றிருக்கிறார். சிறந்த ஐபோன் அப்ளிகேஷன் வடிமைப்புக்காக அளிக்கப்படும் இந்த விருதை பெற்றுள்ள ராஜா வித்தியாசமான கால்குலேட்டரை வடிவமைத்து விருதைத் தட்டிச்சென்றிருக்கிறார். Calzy 3 என்ற பெயரில் உள்ள இந்த கால்குலேட்டர் மற்ற மொபைல் கால்குலேட்டர்கள் போல இல்லாமல் அழகிய வடிவமைப்புடன் வந்திருக்கிறது. மெமரி ஃபங்ஷன்களை ட்ராக் அன்ட் ட்ராப் மூலம் மூலம் மாற்றி அமைத்திருக்கிறார். சைன்டிஃபிக் கால்குலேட்டரும் உள்ளது.

 • 2. முதல் முறையாக வாட்ஸ்அப் மூலம் வங்கி சேவையை வழங்க உள்ள வங்கி?
  • A) கனரா
  • B) இந்தியன்
  • C) கொடக்
  • D) ஆக்ஸிஸ்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer C
  கொடக் மற்றும் ஐசிசிஐ வங்கிகள் முதல் முறையாக வாட்ஸ்அப் மூலம் வங்கி சேவையை வழங்க உள்ளன.

 • 3. அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரா்கள் பட்டியலில் இடம் பிடித்த இந்திய வீரா்?
  • A) டோனி
  • B) விராட் கோலி
  • C) சச்சின்
  • D) ரோஹித் சர்மா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer B
  பிரபல போா்ப்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரா்கள் பட்டியலில் இந்திய வீரா்களில் விராட் கோலி மட்டும் இடம் பிடித்துள்ளாா். மேலும் வேறு எந்த வீரரும் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவைச் சோ்ந்த பிரபல குத்துச்சண்டை வீரா் மேவெதா்(41) முதல் இடம் பிடித்துள்ளாா். இவா் ஆண்டு ஒன்றுக்கு 285 மில்லியன் அமொிக்க டாலா்களை வருமானமாக ஈட்டுவதாக போா்ப்ஸ் நிறுவனம் தொிவித்துள்ளது. மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இந்த பட்டியலில் 24 மில்லியன் அமெரிக்க டாலா்களை சம்பாதித்து 83வது இடம் பிடித்துள்ளாா்.

 • 4. ‘பாலி உம்ரிகர்’ விருதுக்கு யார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • A) விராட் கோலி
  • B) சச்சின்
  • C) தோனி
  • D) ரோஹித் சர்மா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
  பிசிசிஐயின் மதிப்புமிக்க விருதான ‘பாலி உம்ரிகர்’ விருதுக்கு விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெங்களூரில் 12ஆம் தேதியன்று பிசிசிஐ சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. 2016-17, 2017-18 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, மிகவும் உயரிய விருதான பாலி உம்ரிகர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 2017-18 வரையில் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்றுவிதமான ஆட்டங்களிலும் சேர்த்து கோலி 1,847 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல் மகளிர் கிரிக்கெட் அணியிலிருந்து ஹர்மன்பிரீத் கவுர் (2016-17) மற்றும் ஸ்மிரிதி மந்தனா (2017-18) ஆகியோரும் இவ்விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 • 5. இந்திய கிரிக்கெட்டில் டி20 வரலாற்றில் 2000 ரன்களைக் கடந்த முதல் பெண்மணி என்ற சாதனையை மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் படைத்துள்ளார்.
  • A) அஞ்சும் சோப்ரா
  • B) ஜூலன் கோஸ்வாமி
  • C) மிதாலி ராஜ்
  • D) ஹேமலதா காலா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer C
  இந்திய கிரிக்கெட்டில் டி20 வரலாற்றில் 2000 ரன்களைக் கடந்த முதல் பெண்மணி என்ற சாதனையை மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மிதாலி ராஜ் படைத்துள்ளார்.

 • 6. எந்த நதியில் பாலம் கட்டப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?
  • A) நர்மதா
  • B) கங்கை
  • C) ஹூக்ளி
  • D) கோசி
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer B
  'அலகாபாத்தில் உள்ள கங்கை நதியில் பாலம் கட்டப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டப்படும் இந்தப் பாலத்திற்கு ரூ.1,948 கோடி செலவிட ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது’ என்று கூறியுள்ளது. 2021 டிசம்பருக்குள் இந்தப் பணிகள் முடிவடையும். இந்தப் பாலத்தின் மூலம் போக்குவரத்து நெருக்கடிகள் சீராவதோடு, இப்பகுதியின் சுற்றுலாவும் மேம்படும். பயணங்களும் எளிதாகும். மத்தியப் பிரதேசத்திலிருந்து லக்னோ அல்லது ஃபைசாபாத் செல்வோருக்கு இந்தப் பாலம் மிகப் பயனுள்ளதாய் இருக்கும்' என்று கூறியுள்ளது.

 • 7. ரயில் நிலையத்தில் தண்ணீர் பாட்டில்கள் நொறுக்கும் எந்திரம் எங்கு பொருத்தப்பட்டது?
  • A) மும்பை
  • B) அகமதாபாத்
  • C) வதோதரா
  • D) டெல்லி
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer C
  பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களைக் குறைக்கும் முயற்சியில் இந்திய ரயில்வே புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில், வதோதரா ரயில் நிலையத்தில் தண்ணீர் பாட்டில்கள் நொறுக்கும் எந்திரம் பொருத்தப்பட்டது. இந்த எந்திரத்தில் காலி பாட்டில்களை உள்ளே செலுத்தினால் பாட்டில் நொறுங்கிவிடும். ஒரு பாட்டிலை நொறுக்கினால் ரூ.5 பரிசாக வழங்கப்படும். அதற்கு முன்பு, பயணிகள் தங்கள் செல்போன் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். செல்போன் எண்ணுடன் இணைக்கப்பட்ட பேடிஎம் கணக்கில் ரூ.5 வந்து சேரும். இந்தப் புதிய திட்டம் சுற்றுச்சூழல் தினத்தை (ஜூன் 5) முன்னிட்டு தொடங்கி வைக்கப்பட்டது. பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களைக் குறைப்பதுதான் இந்தாண்டின் கருப்பொருளாகும்.

 • 8. 'பிரதன் மந்த்ரி பார்திய ஜனுஸாதி பரி யோஜனா திட்டம்' எதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது?
  • A) மருத்துவம்
  • B) விவசாயம்
  • C) போக்குவரத்து
  • D) வறுமை ஒழிப்பு
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
  “ ஏழைகள் குறைந்த விலையில் மருந்துகளைப் பெறவேண்டும் என்பதாலேயே, 'பிரதன் மந்த்ரி பார்திய ஜனுஸாதி பரி யோஜனா திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் பல்வேறு தரப்பு மக்களும் பயனடைந்துள்ளனர்”

 • 9. கியா மோட்டார்ஸ் நிறுவனம் எந்த நாட்டை சேர்ந்தது ?
  • A) ஜப்பான்
  • B) ஜேர்மனி
  • C) அமெரிக்கா
  • D) தென்கொரியா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
  தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா மோட்டார்ஸ் இந்தியாவில் கார் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் ஏற்கெனவே இந்தியச் சந்தையில் கார் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு இந்நிறுவனம் போட்டியாக உருவெடுக்கிறது. கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆந்திராவில் ஆலை அமைத்து கார் உற்பத்தியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 • 10. ‘இந்தியாவின் இளம் எழுத்தாளர்’ என்ற விருதைப் பெறும் அயன் கோகோய் கோஹன் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
  • A) பீகார்
  • B) அசாம்
  • C) சிக்கிம்
  • D) டெல்லி
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer B
  அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அயன் கோகோய் கோஹன் என்ற நான்கு வயது சிறுவன் ‘இந்தியாவின் இளம் எழுத்தாளர்’ என்ற விருதைப் பெற்றிருக்கிறார். அயன் கடந்த ஜனவரி மாதம் ‘தேன்கூடு’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார், புத்தகத்தின் விலையானது 250 ரூபாய் ஆகும்.