Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 08-June-2018 to 08-June-2018
  • 1. EPIC 211945201b or K2-236b என்று பெயரிடப்பட்டுள்ள புதிய கிரகத்தை கண்டுபிடித்த நாடு ?
    • A) இந்தியா
    • B) அமெரிக்கா
    • C) சீனா
    • D) ரஷ்யா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் Physical Research Laboratory (PRL) எனும் வானியல் ஆராய்ச்சி ஆய்வக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த புதிய கிரகத்துக்கு EPIC 211945201b or K2-236b என்று பெயரிடப்பட்டுள்ளது. EPIC 211945201 or K2-236 என்ற நட்சத்திரத்தைச் சுற்றி வரும் இந்த புதிய கிரகம், பூமியைப் போன்று ஆறு மடங்கு ஆரத்தில் பெரியதாகவும் 27 மடங்கு எடை கொண்டுள்ளாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அபு மலையில் நிறுவப்பட்டுள்ள ஸ்பெக்ட்ரோகிராப் தொலைநோக்கி மூலம் (நிறமாலையைப் பயன்படுத்தி பொருட்களை கண்டறியும் கருவி) இந்த புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • 2. புவியில் நாள் ஒன்றுக்கு 25 மணி நேரமாக மாறும் என்று எந்த நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்?
    • A) இந்தியா
    • B) அமெரிக்கா
    • C) சீனா
    • D) ரஷ்யா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    புவியில் நாள் ஒன்றுக்கு 24 மணி நேரம் என கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் 24 மணி நேரம் போதவில்லை என்று கூறுவர். அவர்களின் விருப்பம் நிறைவேறும் வகையில், நாள் ஒன்றுக்கு 25 மணி நேரமாக மாறும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய அமெரிக்காவின் விஸ்கான்சின் - மேடிசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் மேயர்ஸ், 140 கோடி ஆண்டுகளுக்கு முன், புவிக்கு அருகில் நிலவு இருந்தது. ஒரு நாளைக்கு வெறும் 18 மணி நேரம் மட்டுமே. தற்போது நிலவு 44,000 கி.மீ விலகிச் சென்றுள்ளது. மேலும் ஒரு நாளைக்கு 24 மணி நேரமாக உள்ளது. புவியில் இருந்து நிலவு, ஆண்டிற்கு 3.82 செ.மீ அளவிற்கு தொடர்ந்து விலகிச் செல்கிறது.

  • 3. எந்த நாட்டு இராணுவத்தில் விரைவில் எல்லா துறைகளிலும் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது?
    • A) இந்தியா
    • B) அமெரிக்கா
    • C) ஜப்பான்
    • D) சீனா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    அமெரிக்க இராணுவத்தில் விரைவில் எல்லா துறைகளிலும் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நாட்டு இராணுவத்துறை வெளியிட்டுள்ளது.

  • 4. ஒரே நாளில் ஒரே ஓடுபாதையில் ஆயிரம் விமானங்களைக் கையாண்டு சாதனைப் படைத்துள்ள விமான நிலையம் ?
    • A) மும்பை விமான நிலையம்
    • B) டெல்லி விமான நிலையம்
    • C) பெங்களூரு விமான நிலையம்
    • D) சென்னை விமான நிலையம்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    மும்பை விமான நிலையம் ஒரே நாளில் ஒரே ஓடுபாதையில் ஆயிரம் விமானங்களைக் கையாண்டு சாதனைப் படைத்துள்ளது.

  • 5. விபத்தில் சிக்கியவர்களுக்கு 48 மணி இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள மாநிலம் ?
    • A) மஹாராஷ்டிரா
    • B) டெல்லி
    • C) பஞ்சாப்
    • D) கேரளா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    கேரளாவில், விபத்தில் சிக்கியவர்களுக்கு 48 மணி இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என தனியார் மருத்துவமணைகளுக்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

  • 6. மேடம் துஸ்சாட்ஸ் அருங்காட்சியகத்தில் யாருக்கு மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது?
    • A) பிரியங்கா சோப்ரா
    • B) அமீர்கான்
    • C) விராட் கோலி
    • D) ரோஹித் சர்மா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    லண்டனின் புகழ் பெற்ற மேடம் துஸ்சாட்ஸ் அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது.

  • 7. செல்போன் மூலம் வாக்களிக்கும் செயலியை கண்டுபிடித்துள்ள குருசாமி எந்த நகரை சேர்ந்தவர்?
    • A) நாகர்கோயில்
    • B) சிவகாசி
    • C) விழுப்புரம்
    • D) சென்னை
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த குருசாமி என்ற பொறியியல் பட்டதாரி செல்போன் மூலம் வாக்களிக்கும் செயலியை கண்டுபிடித்துள்ளார்.

  • 8. காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
    • A) பாலமுருகன்
    • B) எஸ்.மசூத்
    • C) இளங்கோவன்
    • D) பரேஷ் ரவல்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக எஸ்.மசூத்(மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவா) நியமிக்கப்பட்டுள்ளார்.

  • 9. ஷார்ஜா அரசின் விருது வழங்கப்பட்ட ஆதித்ய ஷர்மா எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ?
    • A) கேரளா
    • B) மஹாராஷ்டிரா
    • C) குஜராத்
    • D) தமிழ்நாடு
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    அபாகஸ் கணிதத்தில் சிறந்து விளங்கியதற்காக தமிழ் மாணவர் ஆதித்ய ஷர்மாவுக்கு, ஷார்ஜா அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது.

  • 10. வாஷிங்டன் நகரில் உள்ள நியூசியம் என்னும் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ள இந்திய பத்திரிக்கையாளர்?
    • A) கிஷோர் டேவ்
    • B) சந்தனு போவ்மிக்
    • C) நவீன் நிஷ்சனால்
    • D) சுதீப் தத்தா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    அமெரிக்காவில், வாஷிங்டன் நகரில் உள்ள நியூசியம் என்னும் அருங்காட்சியகத்தில்(பத்திரிக்கையாளர்கள் நினைவகம்), 2 இந்திய பத்திரிக்கையாளர்கள்(கௌரி லங்கேஷ், சுதீப் தத்தா) இடம் பெற்றுள்ளனர்.